| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 926 | திருப்பள்ளியெழுச்சி || 10 | கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா! தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி என்னும் அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட் படுத்தாய் பள்ளி எழுந்து அருளாயே | புனல் சூழ், punal soozh - திருக் காவேரி தீர்த்தத்தாலே சூழப்பட்ட அரங்கா, Arangaa - ஸ்ரீ ரங்கத்தில் கண் வளர்ந்தருளுமவனே! கடி, kadi - பரிமளமுடைய கமலம் மலர்கள், Kamalam Malar - தாமரைப் பூக்களானவை மலர்ந்தன, Malarndhana - (நன்றாக) மலர்ந்து விட்டன; கதிரவன், Kathiravan - (தாமரையை மலர்த்தவல்ல) ஸூர்யனானவன் கனை கடல், Kanai Kadal - கோஷஞ் செய்கையையே இயல்வாக வுடைய கடலிலே முளைத்தனன், Mulaidhanan - உதய கிரிலே வந்து தோன்றினான்; துடி இடையார், Thudi Idaiyar - உடுக்கை போன்ற (ஸூக்ஷ்மமான) இடையை யுடைய மாதர் சுரி குழல், Suri Kuzhal - (தமது) சுருண்ட மயிர் முடியை பிழிந்து உதறி, Pizhindhu Udari - (நீர்ப் பசையறப்) பிழிந்து உதறி விட்டு துகில் உடுத்து, Thugil Uduthu - (தம் தம்)ஆடைகளை உடுத்துக் கொண்டு ஏறினர், Aerinar - கரையேறி விட்டார்கள்; தொடை ஒத்த, Todai Ottha - ஒழுங்காகத் தொடுக்கப்பெற்ற துளவமும், Thulavamum - திருத் துழாய் மாலையும் கூடையும், Koodaiyum - பூக் குடலையும் பொலிந்து தோன்றிய, Polindhu Thondriya - விளங்கா நிற்கப் பெற்ற தோள், Thol - தோளை யுடைய தொண்டரடிப்பொடி யென்னும், Thondaradippodi Yennum - ‘தொண்டரடிப் பொடி’ என்ற திருநாமமுடைய அடியனை, Adiyanai - தாஸனை அளியன் என்று அருளி, Aliyan Endru Aruli - ‘கிருபை பண்ணுகைக்கு உரிய பாத்திரம்’ என்று திருவுள்ளம் பற்றி அங்கீகரித்தருளி உன் அடியார்க்கு, Un Adiyarku - தேவரீருடைய நித்ய கிங்கரர்களான பாகவதர்களுக்கு ஆள் படுத்தாய், Aal Paduthaai - ஆளாக்க வேணும் பள்ளி எழுந்தருளாய், Palli ezhuntharulay - திருப்பள்ளியை விட்டு எழுந்தருள வேணும் |