Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 937 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
937கண்ணிநுண்சிறுத்தாம்பு || 1
கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணி யபெரு மாயன்என் னப்பனில்
நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்
அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே.
கண்ணி, Kanni - (உடம்பிலே உறுத்தும்படி பல) முடிகளையுடைத்தாய்
நுண், Nun - (உடம்பிலே அழுந்தும்படி நுட்பமாய்
சிறு, Siru - (நீளம்போராதபடி) சிறியதாயிருக்கிற
தாம்பினால், Thaambinaal - கயிற்றினால்
கட்டுண்ண பண்ணிய, Kattunna Panniya - யசோதைப்பிராட்டி தன்னைக்கட்டும்படி பண்ணுவித்துக்கொண்ட
பெருமாயன், Perumayan - விசேஷ ஆச்சரிய சக்தியையுடையனாய்
என் அப்பனில், En Appanil - எனக்கு ஸ்வாமியான ஸர்வேச்வரனைவிட்டு
நண்ணி, Nanni - (ஆழ்வாரைக்) கிட்டி ஆச்ரயித்து
தென் குருகூர் நம்பி என்றக்கால், Then Kurugoor Nambi Endrakkal - தெற்குத் திசையிலுள்ள (ஆழ்வார் திருநகரியென்னும்) குருகூர்க்கு நிர்வாஹகாரன ஆழ்வார் என்று (அவரது திரு நாமத்தைச்) சொன்னால்
அண்ணிக்கும், Annikkum - பரமபோக்யமாயிருக்கும் இனிதாயிருக்கும்
என் நாவுக்கே, En Naavukke - என் ஒருவனுடைய நாவுக்கே
அமுது ஊறும், Amudhu Oorum - அம்ருதம் ஊறா நிற்கும்