| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 0 | கண்ணிநுண்சிறுத்தாம்பு - தனியன் || 38 | १. अविदितविषयान्तरः शठारेरुपनिषदामुपगानमात्रभोगः । अपि च गुणवशात्तदेकशेषी मधुरकविहृदये ममाविरस्तु ॥ 1. அவிதிதவிஷயாந்தரச்டாரே ருபநிஷதாமுயகாநமாத்ரபோக : | அபிச குணவமாத்ததேகஜீே மதுரகவிர்ஹ்ருதயே மமாவிரஸ்து || | அவிதிதவிஷயாந்தர: , Avithithavishayandhara - நம்மாழ்வாரைத் தவிர வேறொரு விஷயத்தையுமறியாதவரும் சடாரே: , Chadare - நம்மாழ்வாருடைய (திவ்ய ஸூக்திகளாகிய) உபநிஷதாம் , Upanishatham - திவ்யப்ரபந்தங்களை உபகாநமாத்ர போக: , Upaganamadhra Boga - இசைபாடுவது ஒன்றையே பேரின்பமாகக் கொண்டவரும் குணவாதபிச , Gunavadhapicha - குணமடியாகவும் ததேகளே , Thadhekale - அந்த நம்மாழ்வாரொருவரையே தமக்கு ரோஷியாகக்கொண்டவருமான மதுரகவி , Madhurakavi - மதுரகவியாழ்வார் மம ஹ்ருதயே , Mama Hrudhaye - என் நெஞ்சில் ஆவிரஸ்து , Aavirasthu - ஆவிர்ப்பவிக்கக்கடவர் |
| 0 | கண்ணிநுண்சிறுத்தாம்பு - தனியன் || 39 | வேறு ஒன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் வண் குருகூர் -ஏறு எங்கள் வாழ்வாம் என்று ஏத்தும் மதுரகவியார் எம்மை ஆள்வார் அவரே அரண் | வேறு ஒன்றும் நான் அறியேன் , Veru Ondrum Naan Ariyen - நம்மாழ்வார் தவிர வேறொரு பொருளும் நான் அறியமாட்டேன் வேதம் தமிழ் செய்த , Vedham Tamil Seidha - வேதார்த்தங்களைத் தமிழாக அருளிச்செய்த மாறன் , Maaran - மாறனென்னும் நாமத்தையுடையவரும் வண் குருகூர் ஏறு , Van Kurugoor Eru - அழகிய திருக்குருகூர் நகர்க்குத்தலைவருமான சடகோபன் , Sadagopan - நம்மாழ்வார் எங்கள் வாழ்வு ஆம் என்று , Engal Vaazhvu Aam Endru - எமக்கு உஜ்ஜீவநராவர் என்று ஏத்தும் , Ethum - தோத்திரஞ் செய்தருளின மதுரகவியார் , Madhurakaviyar - மதுரகவியாழ்வார் எம்மை ஆள்வார் , Emmai Aalvar - நம்மை ஆள்பவர் அவரே , avare - அந்த மதுரகவிகளே அரண் , Aran - (ப்ரபந்நகுலத்துக்கு) காவலாயிருப்பவர் |
| 937 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — ஆழ்வார் உடைய நிரதிசய போக்யதையை -சொல்லுகிறது – கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் – ப்ராப்ய காஷ்டையான ஆழ்வாரைப் பற்றுகிற இவர் -ப்ரதம அவதியான பகவத் விஷயத்தில்-இழிவான் என் -என்னில் – ஆழ்வார் உடைய போக்ய அதிசயம் தோற்றுகைக்காகவும் – ஆழ்வார் உடைய முக முலர்த்திக்காகவும் – அவர் உகக்கும் பகவத் விஷயம் -ஆகையாலும் –பேசுகிறார் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எழில் எத்திறம் -என்றும் – பிறந்தவாறும் -வளர்ந்தவாறும் -என்றும் – பையவே நிலையும் -என்றும் ஆழ்வார் ஆழம் கால் பட்ட விஷயம் ஆகையாலும் அத்தைப் பேசுகிறார் 1 | கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணி யபெரு மாயன்என் னப்பனில் நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால் அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே. | கண்ணி, Kanni - (உடம்பிலே உறுத்தும்படி பல) முடிகளையுடைத்தாய் நுண், Nun - (உடம்பிலே அழுந்தும்படி நுட்பமாய் சிறு, Siru - (நீளம்போராதபடி) சிறியதாயிருக்கிற தாம்பினால், Thaambinaal - கயிற்றினால் கட்டுண்ண பண்ணிய, Kattunna Panniya - யசோதைப்பிராட்டி தன்னைக்கட்டும்படி பண்ணுவித்துக்கொண்ட பெருமாயன், Perumayan - விசேஷ ஆச்சரிய சக்தியையுடையனாய் என் அப்பனில், En Appanil - எனக்கு ஸ்வாமியான ஸர்வேச்வரனைவிட்டு நண்ணி, Nanni - (ஆழ்வாரைக்) கிட்டி ஆச்ரயித்து தென் குருகூர் நம்பி என்றக்கால், Then Kurugoor Nambi Endrakkal - தெற்குத் திசையிலுள்ள (ஆழ்வார் திருநகரியென்னும்) குருகூர்க்கு நிர்வாஹகாரன ஆழ்வார் என்று (அவரது திரு நாமத்தைச்) சொன்னால் அண்ணிக்கும், Annikkum - பரமபோக்யமாயிருக்கும் இனிதாயிருக்கும் என் நாவுக்கே, En Naavukke - என் ஒருவனுடைய நாவுக்கே அமுது ஊறும், Amudhu Oorum - அம்ருதம் ஊறா நிற்கும் |
| 938 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — முதல் -பாட்டில் ஆழ்வார் -என்றால் தமக்கு ரசிக்கிற படியை சொன்னார் – -இப்பாட்டில் அவருடைய பாசுரமே தேக யாத்ரையாம் படி-தாரகமான படியை சொல்லுகிறார் 2 | நாவினால் நவிற்றின்ப மெய்தினேன் மேவினேனவன் பொன்னடி மெய்ம்மையே தேவுமற்றறியேன் குருகூர் நம்பி பாவினின்னிசை பாடித்திரிவனே | நாவினால், Naavinaal - நாக்கினால் நவிற்றி, Navitri - (ஆழ்வாரை) ஸ்தோத்திரம் பண்ணி இன்பம் எய்தினேன், Inbam Eydhinen - ஆநத்தத்தைப் பெற்றேன் அவன், Avan - அவ்வாழ்வாருடைய பொன் அடி, Pon Adi - அழகிய திருவடிகளை மேவினேன், Mevinen - ஆச்ரயிக்கப்பெற்றேன் மெய்ம்மையே, Meimmaiye - இது ஸத்தியமே மற்று தேவு அறியேன், Matru Thevu Ariyen - (ஆழ்வாரையொழிய) வேறொரு தெய்வத்தை அறியமாட்டேன் குருகூர் நம்பி, Kurugoor Nambi - திருநகரிக்கு நிர்வாஹகரான அவ்வாழ்வாருடைய பாலின், Paalin - அருளிச்செயல்களின் இன் இசை, In Isai - இனிய இசையையே பாடி, Paadi - பாடிக்கொண்டு திரிவன், Thirivan - திரியக்கடவேன் |
| 939 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — தேவு மற்று அறியேன் -என்று -புருஷார்தங்களோடே கூட பகவத் விஷயத்தையும் காற் கடைக் கொள்ளக் கடவீரோ -என்ன – எனக்கு அபுருஷார்த்தம் என்னும் அளவாயிற்று காற் கடைக் கொண்டது – ஆழ்வார் உகந்த விஷயம் -என்னும் இவ்வழியாலே -தேவு மற்று அறியிலும் அறிவன் என்கிறார் – 3 | திரிதந்தாகிலும் தேவபிரானுடைக் கரியகோலத் திருவுருக்காண்பன்நான் பெரிய வண் குருகூர்நகர் நம்பிக்கா ஹரியனாபடியேன்பெற்ற நன்மையே | திரிதந்தாகிலும், Thiridhandaagilum - (ஆழ்வாரை விட்டு) மீண்டாகிலும் தேவபிரானுடை, Devapiraanudaiya - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானுடைய கரிய, Kariya - (நீலமேகம்போற்) கறுத்ததாய் கோலம், Kolam - அழகியதான திருவுரு, Thiruvuru - பிராட்டியோடு கூடிய திவ்ய ரூபத்தை நான் காண்பன், Naan Kaanpan - நான் ஸேவிப்பேன் பெரியவண் குருகூர்நகர் நம்பிக்கு, Periyavan Kurugoor Naga Nambikku - பெருமையும் ஒளதார்யமுமுடைய ஆழ்வார்க்கு உரிய ஆள் ஆய், Uriya Aal Aay - அந்ந்யார்ஹ சேஷ பூதனாயிருந்து வைத்து அடியேன் பெற்ற நன்மை, Adiyen Petra Nanmai - அடியேன் பெற்றபேறு இது காணீர் |
| 940 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — என் அப்பனில் -என்று காற் கடைக் கொண்ட விஷயத்தை -ஆழ்வார் உகந்தார் -என்று விரும்புகைக்கு அடி என் என்னில் – என் தண்மையைப் பாராதே -என்னை விஷயீ கரித்த நீர்மையை அனுசந்தித்தால் – அவர் உகந்த விஷயத்தை உகவாது ஒழிவேனோ -என்ன – உம்முடைய தண்மை யேது -அது பாராதே அவர் விஷயீ கரித்த படி என் -என்ன -அத்தைப் பேசுகிறார் 4 | நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் புன்மையாகக் கருதுவரா தலில் அன்னையாயத்தனா யென்னையாண்டிடும் தன்மையான் சடகோபனென் நம்பியே | நன்மையால் மிக்க, Nanmaiyal Mikka - நற்குணத்தால் மேன்மை பெற்றவர்களாய் நால்மறை ஆளர்கள், Naalmarai Aalargal - நான்கு வேதங்களிலும் வல்லவர்களான வைதிகர்கள் புன்மை ஆக கருதுவர் ஆதலில், Punmai Aaga Karuthuvar Aadhalil - (என்னை) அடியேனை தாழ்வே ஒரு வடிவு கொண்ட தென்றெண்ணி உபேக்ஷித்திருப்பெரென்பதுவே காரணமாக அன்னை ஆய், Annai Aay - மாதாவாயும் அத்தன் ஆய், Athan Aay - பிதாவாயும் என்னை ஆண்டிடும் தன்மையான், Ennai Aanditum Thanmaiyaan - அடியேனைக் கைக்கொண்டருளுமியல் வினரான சடகோபன், Sadagopan - நம்மாழ்வார் என் நம்பி, En Nambi - எனக்குத் தலைவர் |
| 941 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — உம்மை புன்மையாகவும் உமக்கு ஆழ்வார் சர்வ பிரகாரத்தாலும் உபகாரகர் ஆகவும் சொன்னீர் உம்முடைய புன்மையையும் – உமக்கு ஆழ்வார் உபகரித்த நன்மையையும் சொல்லிக் காணீர் –என்ன சொல்லுகிறார் 5 | நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன் மடவாரையும் முன்னெல்லாம் செம் பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக் கன்பனாய் அடி யேன் சதிர்த் தேனின்றே | அடியேன், Adiyen - (இன்று அடியேன் என்று சொல்லும்படி திருந்தின) நான் முன் எலாம், Mun Elaam - (ஆழ்வாருடைய விஷயீகாரம் பெறுவதற்கு) முன்பெல்லாம் பிறர், Pirar - அயலாருடைய நல் பொருள் தன்னையும், Nal Porul Thannaiyum - நல்ல பொருள்களை நம்பினேன், Nambinen - ஆசைப் பட்டுக் கிடந்தேன் மடவாரையும், Madavaaraiyum - பிறருடைய ஸ்த்ரீகளையும் நம்பினேன், Nambinen - விரும்பிப் போந்தேன் இன்று, Indru - இப்போதோ வென்றால் செம் பொன் மாடம், Sem Pon Maadam - செவ்விய பொன்னாற் சமைந்த மாடங்களை யுடைய திரு குருகூர் நம்பிக்கு, Thiru Kurugoor Nambikku - திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்க்கு அன்பன் ஆய், Anban Aay - பக்தனாகப் பெற்று சதிர்த்தேன், Sathirthen - சதிரையுடையேனானேன் (சமத்தனாய் விட்டேன்) |
| 942 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — ஆழ்வார் இப்போது இங்கே விஷயீ கரித்தாலும் -நீர் தாம் அநாதி காலம் வாசனை பண்ணிப் போந்த-விஷயம் ஆகையாலே மறுவல் இடிலோ -என்ன – அங்கன் மறுவல் இடும்படியாயோ ஆழ்வார் பிரசாதம் என் பக்கல் இருப்பது -என்கிறார். 6 | இன்று தொட்டு மெழுமையு மெம்பிரான் நின்று தன் புகழேத்த வருளினான் குன்ற மாடத் திருக் குருகூர்நம்பி என்றுமென்னை யிகழ்விலன் காண்மினே | இன்று தொட்டும், Indru Thottum - இன்று முதலாக எழுமையும், Ezhumaiyum - மேலுள்ள காலமெல்லாம் நின்று, Nindru - (நான்) அத்யவஸாயம் நிலைக்கப் பெற்று தன் புகழ், Than Pugazh - தம்முடைய (ஆழ்வாருடைய) திருப்புகழ்களை ஏத்த, Eetha - துதிக்கும்படி எம் பிரான் அருளினான், Em Piraan Arulinan - எம் ஸ்வாமியான ஆழ்வார் க்ருபை பண்ணினார் குன்றம் மாடம், Kunram Maadam - மலை போன்ற மாடங்களையுடைய திருகுருகூர் நம்பி, Thiru Kurugoor Nambi - திருநகரிக்குத் தலைவரான அவ்வாழ்வார் என்றும், Endrum - (இனி) எக்காலத்திலும் என்னை, Ennai - என் விஷயத்தில் இகழ்வு இவன், Igazhvu Ivan - அநாதரமுடையவராகஇருக்க மாட்டார் காண்மின், Kaanmin - (இதனை அநுபவத்தில்) கண்டு கொள்ளுங்கள் |
| 943 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — ஆழ்வார் தம் பக்கலில் பண்ணின நிர்ஹேதுக விஷயீ காரத்தை கண்டு – இவ் விஷயீ காரத்துக்கு யோக்யதை உண்டாய் இருக்க நாட்டார் இழக்கைக்கு அடி என் – என்று அனுசந்தித்து – இவருடைய பெருமையை அறியாமையாலே இருக்கிறார்கள் -என்று எல்லாரும் அறியும்படி சொல்லக் -கடவேன் என்கிறார் . 7 | கண்டு கொண்டென்னைக் காரிமாறப்பிரான் பண்டை வல்வினை பாற்றி யருளினான் எண்டிசையு மறிய வியம்புகேன் ஒண்டமிழ்ச் சடகோப னருளையே | பிரான், Piraan - பரமோபகாரகராய் காரி மாறன், Kaari Maaran - பொற் காரியார் திருக்குமாரரான நம்மாழ்வார் என்னை, Ennai - (தமது பெருமை அறியாத) என்னை கண்டு, Kandu - கடாக்ஷத்து கொண்டு, Kondu - கைக்கொண்டு பண்டைவல்வினை, Pandai Valvinai - அநாதியாய்ப் பிரபலமாயிருந்த பாபங்களை பாற்றி அருளினான், Paatri Arulinan - அழிந்து போம்படி போக்கடித் தருளினார் (ஆதலால்) ஒண் தமிழ் சடகோபன் அருளையே, (Aadhalal) On Thamizh Sadagopan Arulaiye - அழகிய தமிழ்க் கவிகளுக்கு இருப்பிடமான அவ்வாழ்வாருடைய அருளையே எண் திசையும், En Thisaiyum - எட்டுத்திக்கிலுள்ளவர்களும் அறிய, Ariya - அறியும்படி இயம்புகேன், Iyampuken - சொல்லக்கடவேன் |
| 944 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — எண் திசையும் அறிய இயம்புகேன் -என்கைக்கு ஹேது என் -என்னில் – ஆழ்வாருடைய அருள் -சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரயத்தையும் கபளீ கரித்து இருக்கையாலே -என்கிறார் 8 | அருள்கொண்டாடு மடியவரின்புற அருளினானவ் வருமறையின் பொருள் அருள் கொண்டாயிர மின் தமிழ்ப்பாடினான் அருள் கண்டீரிவ்வுலகினில் மிக்கதே | அடியவர், Adiyavar - பக்தர்கள் இன்புற, Inpura - ஆநந்திக்கும்படி அ அரு மறையின் பொருள், A Aru Maraiyin Porul - அந்த அருமையான வேதத்தின் உட்பொருள்களை அருளினான், Arulinan - அருளிச்செய்தவராயும் அருள் கொண்டு, Arul Kondu - பரமக்ருபையாலே இன் தமிழ், In Thamizh - இனிய தமிழ்ப்பாஷையிலே அமைந்த ஆயிரம், Aayiram - திருவாய்மொழியாயிரத்தை பாடினான், Paadinan - பாடினவருமான ஆழ்வாருடைய அருள் கண்டீர், Arul Kandir - க்ருபை ஒன்று மாத்திர மன்றோ இ உலகினில், I Ulaginil - இந்த லோகத்திலே மிக்கது, Mikkaadu - அதிசயித்திருக்கிறது பெரியதாயிருக்கிறது |
| 945 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — ஆழ்வாருடைய அருள் உலகினில் மிக்கது -என்கைக்கு அடி என் என்னில் – என்னுடைய தண்மை பாராதே-சகல வேதங்களின் உடைய ரஹஸ்யார்த்தத்தை பாடி – அத்தை எனக்கு உபகரித்தார் -என்கிறார் -(வேதம் -பொருள் -பகவத் சேஷத்வம் -உட் பொருள் பாகவத சேஷத்வம் )-நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதி -என்று அவ் விஷயத்தில் ஆழ்வார் அருளிச் செய்தத்தை-ஆழ்வார் திருவடிகளிலே இவர் அருளிச் செய்கிறார் 9 | மிக்கவேதியர் வேதத்தினுட் பொருள் நிற்கப் பாடியென் நெஞ்சுள் நிறுத்தினான் தக்கசீர்ச் சடகோபனென்னம்பிக்காள் புக்க காதலடிமைப் பயனன்றே | மிக்க வேதியர் வேதத்தின், Mikka Vethiyar Vethathin - சிறந்த வைதிகர்களால் ஓதப்படுகின்ற வேதத்தினுடைய உள் பொருள், Ul Porul - உள்ளுரை பொருளானது நிற்க, Nirka - நிலை நிற்கும்படி பாடி, Paadi - திருவாய்மொழியைப் பாடி என் நெஞ்சுள், En Nenjul - என்னுடைய ஹ்ருதயத்திலே நிறுத்தினான், Niruthinaan - (அந்த வேதார்த்தங்களை அல்லது திருவாய்மொழியை) ஸ்ப்ரதிஷ்டிதமாக்கி யருளினார் ( ஆழ்வார்) தக்க சீர், Dakka Seer - தகுதியான குணங்களையுடையராய் சடகோபன், Sadagopan - சடகோபனென்ற திருநாமத்தை யுடையரான என் நம்பிக்கு, En Nambikku - (அந்த) ஆழ்வார் விவயத்திலே ஆள் புக்க, Aal Pukka - அடிமை செய்வதற்கு உறுப்பான காதல், Kaadhal - ஆசையானது அன்றே, Andrae - அந்த க்ஷணத்திலேயே அடிமைப் பயன், Adimai Payan - (ஆழ்வார் திருவடிகளில்) கைங்கரியம் செய்வதையே பயனாகவுடைத்தாய்த்து |
| 946 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — ( ஆட் புக்க காதல் அடிமைப்பயன் -சொல்லி உடனே பயன் இல்லை பாங்கு இல்லை என்கிறீரே -அவர் திருத்த திருந்தி உள்ளீர் -பாங்கும் உண்டே -என்னில் தம்மைப் பார்த்தால் இப்படி தின்றும் -அவர் செய்து அருளினை உபகாரம் அனுசந்தித்த வாறே இப்படி தோற்றும் -)ஆழ்வார் தமக்கு உபகரித்த உபகாரத்தை அனுசந்தித்தவாறே தாம் இதுக்கு முன் ஆழ்வார் விஷயத்தில் நின்ற நிலை யடங்க முதலடி இட்டிலராகித் தோற்றுகையாலே –அவர் பண்ணின உபகாரத்தைப் பேசுகிறார் – ஆசார்யன் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் இல்லையோ என்னில் – க்ருத்ஸ்நாம் வாப்ருதிவீம் தத்யான்ன தத் துல்யம் கதஞ்சன -என்கிறபடியே- பஞ்சாசத் கோடி விச்தீர்ணையான பூமியும் சத்ருசமம் அல்ல என்று இ றே சாஸ்திரம் -(பொன்னுலகு ஆளீரோ புவனம் எல்லாம் ஆளீரோ – )அவன் இவனுக்கு உபகரித்தது சர்வாதிகமாய் இருப்பதொரு மிதுனைத்தை யானால்-அப்படியே இருப்பதொரு மிதுனத்தை உபகரித்தால் இ றே இவன் பிரத்யுபகாரம் பண்ணினான் ஆவது – ஆகையால் -ஆச்சார்யர் விஷயத்தில் எல்லாம் செய்தாலும் -அவன் பண்ணின உபகாரத்தைப் பார்த்தால் -ஒன்றும் செய்திலேன் நான் -என்று முகக் குறைவாளனாய் போரும் இத்தனை 10 | பயனன்றாகிலும் பாங்கலராகிலும் செயல்நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் குயில் நின்றார் பொழில்சூழ் குருகூர்நம்பி முயல்கின்றேனுன்றன் மொய்கழற்கன்பையே | பயன் அன்று ஆகிலும், Payan Andru Agilum - (பிறர் திருந்துவதால்) தமக்கொரு பயனில்லாமற் போனாலும் பாங்கு அலர் ஆகிலும், Paangu Alar Agilum - (அவர்கள் திருந்துகைக்குப்) பாங்காக அமையாமற் போனாலும் செயல், Seyal - தமது அநுஷ்டாகத்தாலே நன்றாக திருத்தி, Nandraaga Thiruthi - நன்றாக சிக்ஷித்து பணி கொள்வான், Pani Kolvaaan - (அவர்களை) ஆட்கொள்வதற்காக குயில் நின்று ஆல் பொழில் சூழ் குருகூர் - குயில்களானவை நின்று ஆரவாரஞ் செய்யப் பெற்ற சோலைகளாலே சூழப்பட்ட திருநகரியிலே (எழுந்தருளியிருக்கிற) நம்பி!, Nambi! - ஆழ்வாரே! உன் தன், Un Than - தேவரீருடைய மொய் கழற்கு, Moi Kazharkku - சிறந்த திருவடிகளில் அன்பையே, Anbaiye - அன்பு உண்டாவதைக் குறித்தே முயல்கின்றேன், Muyalkindren - முயற்சி செய்கின்றேன் |
| 947 | கண்ணிநுண்சிறுத்தாம்பு || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — நிகமத்தில் இப்ப்ரபந்தத்தையே தஞ்சமாக நினைத்து இருக்குமவர்களுக்கு வாசபூமி பரமபதம் -என்கிறார். 11 | அன்பன் தன்னை யடைந்தவர் கட்கெல்லாம் அன்பன் தென்குரு கூர்நகர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்னசொல் நம்புவார்ப்பதி வைகுந்தம் காண்மினே | அன்பன் தன்னை, Anban Thannai - ஆச்ரித பக்ஷபாதியான எம்பெருமானை அடைந்தவர்கட்கு எல்லாம், Adainthavarkatku Ellam - ஆச்ரயித்தவர்களான ஸகல பாகவதர் பக்கலிலும் அன்பன், Anban - பக்தியை யுடையரான தென் குருகூர் நகர் நம்பிக்கு, Then Kurugoor Nagar Nambikku - நம்மாழ்வர் விஷயத்திலே அன்பன் ஆய், Anban Ai - பக்தனாயிருந்து கொண்டு மதுரகவி சொன்ன சொல், Madhurakavi Sonna Sol - மதுரகவி அருளிச் செய்த இத் திவ்வியப் பிரபந்தத்தை நம்புவார், Nambuvaar - (தங்களுக்குத் தஞ்சமாகக்) விச்வஸித் திருப்பவர்களுக்கு பதி, Pathi - வாஸஸ்தாநமாவது வைகுந்தம் காண்மின், Vaikundam Kaanmin - பரம பதமாம் |