Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 938 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
938கண்ணிநுண்சிறுத்தாம்பு || 2
நாவினால் நவிற்றின்ப மெய்தினேன்
மேவினேனவன் பொன்னடி மெய்ம்மையே
தேவுமற்றறியேன் குருகூர் நம்பி
பாவினின்னிசை பாடித்திரிவனே
நாவினால், Naavinaal - நாக்கினால்
நவிற்றி, Navitri - (ஆழ்வாரை) ஸ்தோத்திரம் பண்ணி
இன்பம் எய்தினேன், Inbam Eydhinen - ஆநத்தத்தைப் பெற்றேன்
அவன், Avan - அவ்வாழ்வாருடைய
பொன் அடி, Pon Adi - அழகிய திருவடிகளை
மேவினேன், Mevinen - ஆச்ரயிக்கப்பெற்றேன்
மெய்ம்மையே, Meimmaiye - இது ஸத்தியமே
மற்று தேவு அறியேன், Matru Thevu Ariyen - (ஆழ்வாரையொழிய) வேறொரு தெய்வத்தை அறியமாட்டேன்
குருகூர் நம்பி, Kurugoor Nambi - திருநகரிக்கு நிர்வாஹகரான அவ்வாழ்வாருடைய
பாலின், Paalin - அருளிச்செயல்களின்
இன் இசை, In Isai - இனிய இசையையே
பாடி, Paadi - பாடிக்கொண்டு
திரிவன், Thirivan - திரியக்கடவேன்