Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 939 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
939கண்ணிநுண்சிறுத்தாம்பு || 3
திரிதந்தாகிலும் தேவபிரானுடைக்
கரியகோலத் திருவுருக்காண்பன்நான்
பெரிய வண் குருகூர்நகர் நம்பிக்கா
ஹரியனாபடியேன்பெற்ற நன்மையே
திரிதந்தாகிலும், Thiridhandaagilum - (ஆழ்வாரை விட்டு) மீண்டாகிலும்
தேவபிரானுடை, Devapiraanudaiya - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானுடைய
கரிய, Kariya - (நீலமேகம்போற்) கறுத்ததாய்
கோலம், Kolam - அழகியதான
திருவுரு, Thiruvuru - பிராட்டியோடு கூடிய திவ்ய ரூபத்தை
நான் காண்பன், Naan Kaanpan - நான் ஸேவிப்பேன்
பெரியவண் குருகூர்நகர் நம்பிக்கு, Periyavan Kurugoor Naga Nambikku - பெருமையும் ஒளதார்யமுமுடைய ஆழ்வார்க்கு
உரிய ஆள் ஆய், Uriya Aal Aay - அந்ந்யார்ஹ சேஷ பூதனாயிருந்து வைத்து
அடியேன் பெற்ற நன்மை, Adiyen Petra Nanmai - அடியேன் பெற்றபேறு இது காணீர்