Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 942 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
942கண்ணிநுண்சிறுத்தாம்பு || 6
இன்று தொட்டு மெழுமையு மெம்பிரான்
நின்று தன் புகழேத்த வருளினான்
குன்ற மாடத் திருக் குருகூர்நம்பி
என்றுமென்னை யிகழ்விலன் காண்மினே
இன்று தொட்டும், Indru Thottum - இன்று முதலாக
எழுமையும், Ezhumaiyum - மேலுள்ள காலமெல்லாம்
நின்று, Nindru - (நான்) அத்யவஸாயம் நிலைக்கப் பெற்று
தன் புகழ், Than Pugazh - தம்முடைய (ஆழ்வாருடைய) திருப்புகழ்களை
ஏத்த, Eetha - துதிக்கும்படி
எம் பிரான் அருளினான், Em Piraan Arulinan - எம் ஸ்வாமியான ஆழ்வார் க்ருபை பண்ணினார்
குன்றம் மாடம், Kunram Maadam - மலை போன்ற மாடங்களையுடைய
திருகுருகூர் நம்பி, Thiru Kurugoor Nambi - திருநகரிக்குத் தலைவரான அவ்வாழ்வார்
என்றும், Endrum - (இனி) எக்காலத்திலும்
என்னை, Ennai - என் விஷயத்தில்
இகழ்வு இவன், Igazhvu Ivan - அநாதரமுடையவராகஇருக்க மாட்டார்
காண்மின், Kaanmin - (இதனை அநுபவத்தில்) கண்டு கொள்ளுங்கள்