Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 943 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
943கண்ணிநுண்சிறுத்தாம்பு || 7
கண்டு கொண்டென்னைக் காரிமாறப்பிரான்
பண்டை வல்வினை பாற்றி யருளினான்
எண்டிசையு மறிய வியம்புகேன்
ஒண்டமிழ்ச் சடகோப னருளையே
பிரான், Piraan - பரமோபகாரகராய்
காரி மாறன், Kaari Maaran - பொற் காரியார் திருக்குமாரரான நம்மாழ்வார்
என்னை, Ennai - (தமது பெருமை அறியாத) என்னை
கண்டு, Kandu - கடாக்ஷத்து
கொண்டு, Kondu - கைக்கொண்டு
பண்டைவல்வினை, Pandai Valvinai - அநாதியாய்ப் பிரபலமாயிருந்த பாபங்களை
பாற்றி அருளினான், Paatri Arulinan - அழிந்து போம்படி போக்கடித் தருளினார்
(ஆதலால்) ஒண் தமிழ் சடகோபன் அருளையே, (Aadhalal) On Thamizh Sadagopan Arulaiye - அழகிய தமிழ்க் கவிகளுக்கு இருப்பிடமான அவ்வாழ்வாருடைய அருளையே
எண் திசையும், En Thisaiyum - எட்டுத்திக்கிலுள்ளவர்களும்
அறிய, Ariya - அறியும்படி
இயம்புகேன், Iyampuken - சொல்லக்கடவேன்