Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 946 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
946கண்ணிநுண்சிறுத்தாம்பு || 10
பயனன்றாகிலும் பாங்கலராகிலும்
செயல்நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில்சூழ் குருகூர்நம்பி
முயல்கின்றேனுன்றன் மொய்கழற்கன்பையே
பயன் அன்று ஆகிலும், Payan Andru Agilum - (பிறர் திருந்துவதால்) தமக்கொரு பயனில்லாமற் போனாலும்
பாங்கு அலர் ஆகிலும், Paangu Alar Agilum - (அவர்கள் திருந்துகைக்குப்) பாங்காக அமையாமற் போனாலும்
செயல், Seyal - தமது அநுஷ்டாகத்தாலே
நன்றாக திருத்தி, Nandraaga Thiruthi - நன்றாக சிக்ஷித்து
பணி கொள்வான், Pani Kolvaaan - (அவர்களை) ஆட்கொள்வதற்காக
குயில் நின்று ஆல் பொழில் சூழ் குருகூர் - குயில்களானவை நின்று ஆரவாரஞ் செய்யப் பெற்ற
சோலைகளாலே சூழப்பட்ட திருநகரியிலே (எழுந்தருளியிருக்கிற)

நம்பி!, Nambi! - ஆழ்வாரே!
உன் தன், Un Than - தேவரீருடைய
மொய் கழற்கு, Moi Kazharkku - சிறந்த திருவடிகளில்
அன்பையே, Anbaiye - அன்பு உண்டாவதைக் குறித்தே
முயல்கின்றேன், Muyalkindren - முயற்சி செய்கின்றேன்