திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 948 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
948பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அநாதிகாலம் விஷயப்ரவணராய் எம்பெருமானை மறந்திருந்த இவ்வாழ்வார், நிர்ஹேதுகமான பகவத்கிருபையால் திருவஷ்டாக்ஷர மஹாமந்திரத்தைப் பெற்று ஸ்வரூபமுணர்ந்து திருந்தினராதலால், அந்த மஹா மந்திரத்தின் (உள்ளீடான ஸ்ரீ நாராயண நாமத்தின்) சிறப்பை விரித்துரைத்துக்கொண்டு, தாம் நெடுங்காலமாக பகவத் விஷயத்தை மறந்து அநர்த்தப்பட்டபடியையும் இப்போது உஜ்ஜீவிக்கப் பெற்றபடியையும் பலருமறியப் பேசுகிறார்) 1
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் துயர் இடும்பையில் பிறந்து கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர் தரும் கலவியே கருதி ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-1
பதவுரை Show / Hide
வாடினேன், Vaadinen - கீழ்க் கழிந்த காலமெல்லாம் வாடிக் கிடந்தேன்;
வாடி, Vaadi - அப்படி வாடியிருந்ததனால்
மனத்தால் வருந்தினேன், Manathal varundhinen - மனவருத்தமடைந்தேன்;
பெரு துயர் இடும்பையில், Peru thuyar idumbaiyil - அளவற்ற துக்கங்களுக்கு இருப்பிடமான ஸம்ஸாரத்திலே
பிறந்து கூடினேன், Pirandhu koodinen - பிறந்து (அந்த ஸம்ஸாரத்திலேயே) பொருந்தப் பெற்றேன்;
கூடி, Koodi - அப்படி ஸம்ஸாரியாய்க் கிடந்ததனால்
இளையவர் தரும் கலவியே கருதி, Ilaiyavar tharum kalaviye karudhi - இளமை தங்கிய பெண்கள் தரக்கூடிய சிற்றின்பத்தை ஆசைப்பட்டு
அவர் தம்மோடு ஓடினேன், Avar thammodu odinen - அந்தப்பெண்கள் போன வழியையே பற்றி ஓடினேன்;
ஓடி, Odi - இப்படி ஓடித்திரியுமிடத்து;
உய்வது ஓர் பொருளால், Uyvadhu or porulal - ஆத்மோஜ்ஜீவநத்துக்கு உறுப்பான எம்பெருமான் திருவருளாலே
உணர்வு எனும் பெரு பதம் திரிந்து, Unarvu enum peru padham thirindhu - ஞானமென்கிற ஒரு சிறந்த ஸ்தானத்தில் அடிவைத்து
நாடினேன், Naadinen - நன்மை தீமைகளை ஆராயப் புகுந்தேன்;
நாடி, Naadi - அப்படி ஆராயுமளவில்
நாராயணா என்னும் நாமம் நான் கண்டு கொண்டேன், Narayana enum naamam naan kandu konden - திருவஷ்டாக்ஷர மஹா மந்த்ரத்தை நான் லபிக்கப்பெற்றேன்.