திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 950 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
950பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பகவத் விஷயானுபவத்தாலே மிகவும் இனிதாகச் செல்ல வேண்டிய காலமெல்லாம் பாழாய்க் கழிந்தனவே யென்கிற அநு தாபமே மீண்டும் மேலிட்டு உள்ளடங்காத துக்கந் தோன்றப் பேசுகிறார்) 3
சேமமே வேண்டித் தீ வினை பெருக்கித் தெரிவைமார் உருவமே மருவி ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் ஒழிந்தன கழிந்த வந்நாள்கள் காமனார் தாதை நம்முடை யடிகள் தம்மடைந்தார் மனத்திருப்பார் நாமம் நானுய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-3
பதவுரை Show / Hide
சேமமே வேண்டி, Semame vendi - நன்மையையே அபேக்ஷித்திருந்தும் (அதற்கு உறுப்பாக வினை செய்யாமல்)
தீ வினை பெருக்கி, Thi vinai perukki - துஷ்கருமங்களை அதிகமாகச் செய்து
தெரிவைமார் உருவமே மருவி, Therivaimaar uruvame maruvi - ஸ்திரீகளுடைய வடிவழகையே பேணி
கழிந்த அந்நாள்கள், Kazhintha annaalkal - கீழே கழிந்த நாள்களானவை
ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய் ஒழிந்தன, Oomanar kanda kanavilum pazhudhu aay ozhindhana - ஊமை கண்ட கனவிலுங் காட்டில் வீணாகக் கழிந்து போயின
காமனார் தாதை, Kaamanar thaadhai - மன்மதனுக்குப் பிதாவும்
நம்முடை அடிகள், Nammudai adigal - நமக்கு ஸ்வாமியும்
தம் அடைந்தார் மனத்து இருப்பார், Tham adainthaar manathu iruppaar - தம்மைப் பற்றினவர்களுடைய நெஞ்சில் நீங்காதிருப்பவருமமான பெருமாளுடைய
நாமம், Naamam - திருநாமமாகிய
நாராயணா என்னும் நாமம், Narayana enum naamam - நாராயண நாமத்தை
நான் உய்ய, Naan uyya - நான் உஜ்ஜீவிக்கும்படியாக
நான் கண்டு கொண்டேன், Naan kandu konden - நான் காணப் பெற்றேன்