திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 953 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
953பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருமந்திரத்தின் அர்த்தத்தை ஒருபடி அநு ஸந்திப்பதாயிருக்கும் இப்பாட்டு. மாதா பிதா ப்ராதா நிவாஸச் சரணம் ஸுஹ்ருத் கதிர் நாராயண என்று ஸுபாலோபநிஷத்திலே சொன்ன அர்த்தத்தை அநுஸந்திக்கிறார். எனக்குப் பல உபகாரங்கள் பண்ணினவனும், எனக்குத் தந்தையும், எனக்கு எல்லா உறவுமுறையும், விரோதிகளைப் போக்கி என்னை ஆண்டவனும், என்னுடைய ஜீவித ஸர்வஸ்வமும், ஸங்கல்பத்தாலல்லாமல் சரமாரி பொழிந்து ராக்ஷஸவர்க்கங்களைக் கிழங்கெடுத்தவனுமான ஸர்வஸ்வாமி எழுந்தருளியிருக்கிற பரமபோக்யமான தஞ்சைமாமணிக்கோயிலைத் தொழுது ‘ஸர்வவித பந் துவும் அவனே” என்கிற அர்த்தத்துக்கு வாசகமான திருநாமத்தைக் காணப் பெற்றேன் என்றாராயிற்று.) 6
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கரசு என்னுடை வாணாள் அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவருயிர் செகுத்த வெம் மண்ணல் வம்புலாம் சோலை மா மதிள் தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம் –1-1-6
பதவுரை Show / Hide
நம்பிகாள், Nambikaal - பகவத் குணாநுபவத்தால் நிறைந்திருக்கின்ற பாகவதர்களே!
எம்பிரான், Embiraan - எமக்கு உபகாரகனும்
எந்தை, Enthai - எமக்குத் தந்தையும்
என்னுடைய சுற்றம், Ennudaiya sutram - எனக்கு ஸகலவித பந்துவும்
எனக்கு அரசு, Enakku arasu - என்னை ஆண்டவனும்
என்னுடைய வாழ்நாள், Ennudaiya vaazhnaal - என்னுடைய ப்ராண பூதனும்
அரக்கர் வெருக்கொள அம்பினால், Arakkar verukkola ambinaal - ராக்ஷஸர் அஞ்சும்படியாக அம்புகளினால்
நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல், Nerukki avar uyir sekutha em annal - தகர்த்து அவர்களது உயிரைமுடித்த அஸ்மத்ஸ்வாமியுமான ஸர்வேச்ரனுடைய
வம்பு உலாம் சோலை, Vambu ulaam solai - பரிமளம் வீசுகின்ற சோலைகளையும்
மாமதிள், Maamadhil - பெரிய மதிள்களையும் உடைத்தான
தஞ்சை மாமணிக்கோயிலே வணங்கி, Thanjai maa manikkoyile vanangi - தஞ்சை மாமணிக் கோயிலையே ஸேவித்து
நான் உய்ய, Naan uyya - (உங்களைப் போலே) நானும் உஜ்ஜீவிக்கும் படியாக
நாராயணா என்னும் நாமம் கண்டு கொண்டேன், Narayana enum naamam kandu konden - நாராயணா என்னும் நாமம் கண்டு கொண்டேன்