திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 954 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
954பெரிய திருமொழி || (1-1-வாடினேன்வாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நூல்களைக் கற்றுக் கவிபாடும் வல்லமை பெற்றவர்கள் உபயோகமற்றக்ஷத்ர மநுஷ்யர்களை வீணேசிறப்பித்துக்கூறிக் கவிபாடுவதுண்டே; அன்னவர்களை நோக்கி வெறுத்து, ஐயோ! நீங்கள் வாக்குப்படைத்ததற்கு இதுவோ ப்ரயோஜனம்; க்ருபணனைக் கல்பவ்ருக்ஷமென்பதும், நிரக்ஷரகுக்ஷியான மூடனை ப்ருஹஸ்பதியென்பதும், தெருத்திண்ணையில் தங்கவும் இடந்தராமல் துரத்தித்தள்ளுமவனை ஸர்வரக்ஷகனென்பதும் ஆகவிப்படி பொய்யுரை கூறுவதேயோ நீங்கள் கற்ற கல்விக்குப் பயனாவது!; கவிபாடுகைக்குப் பாங்கான ஊரும் ஆறும் பேருமுடையனான பெருமானை நான் காட்டித் தருகிறேன், வாருங்கள்; திருக்குடந்தையாராவமுதனை வாயாரப் புகழ்ந்து உஜ்ஜீவித்துப் போங்கள்; இதுவே உங்களுக்கு நான் உபதேசிக்கும் சிறந்த அர்த்தம் - என்கிறார்.) 7
இற்பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னதோர் தன்மை என்று உணரீர் கற்பகம் புலவர் களைகண் என்று வுலகில் கண்டவா தொண்டரைப் பாடும் சொற் பொருளாளீர் சொல்லுகேன் வம்மின் சூழ் புனல் குடந்தையே தொழுமின் நற்பொருள் காண்மின் பாடி நீர் உய்ம்மின் நாராயணா வென்னும் நாமம் –1-1-7
பதவுரை Show / Hide
இல் பிறப்பு அறியீர், Il pirappu ariyeer - இல்வாழ்க்கை நடத்துகிறபடியையும் குடிப்பிறப்பையும் அறியாதவர்களாயும்
இவர் அவர் என்னீர், Ivar avar enneer - இப்போது ஸம்பந்நராயிருக்கும் இவர்கள் முன்பு தரித்ரராயிருந்தவர்கள் என்று அறியாதவர்களாயும்
இன்னது ஓர் தன்மை என்று உணரீர், Innadhu or thanmai endru unareer - ‘இவர்களுடைய தன்மை இப்படிப் பட்டது’ என்று அறியாதவர்களாயும்
உலகில் தொண்டரை, Ulagil thondarai - உலகில் பிறர்க்கு இழிதொழில் செய்து ஜீவிக்கும் நீசர்களை
கற்பகம் என்று, Karpagam endru - கல்ப வ்ருக்ஷம்போல் ஸர்வஸ்வதானம் செய்பவரென்றும்
புலவர் என்று, Pulavar endru - ஸர்வஜ்ஞரென்றும்
களைகண் என்று, Kalaikan endru - ரக்ஷகர் என்றும் (ஆகவிப்படி)
கண்டவா பாடும், Kandavaa paadum - மனம் போனபடி (சிறப்பித்துக்கூறிக்) கவிபாடுகின்ற
சொல்பொருள் ஆனீர், Solporul aaneer - சொல்லும் பொருளும் நன்கறிந்த மஹாகவிகளே!
சொல்லுகேன், Solluken - உங்களுக்கு ஹிதஞ்சொல்லுகிறேன்
வம்மின், Vammin - நீசரைக் குறித்துக் கவிபாடுவதை விட்டு இப்படி வாருங்கள்
புனல் சூழ் குடந்தையே தொழுமின், Punal soozh Kudanthaiye thozhumin - நீர் சூழ்ந்த திருக்குடந்தையை ஸேவியுங்கள்
நாராயணா என்னும் நாமம் பாடி நீர் உய்ம்மின், Narayana enum naamam paadi neer uymin - நாராயணா நாமத்தைப் பாடி நீங்கள் உஜ்ஜீவித்துப் போங்கள்
நல் பொருள் காண்மின், Nal porul kaanmin - உங்களுக்கு நான் உபதேசிக்கும் சிறந்த அர்த்தம் இதுவே காணுங்கள்