| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 958 | பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (வாலியை வதை செய்தருளின பெருமான் இனிதாக எழுந்தருளியிருக்குமிடமான இமயமலையினுள் பரம போக்யமாக அமைந்துள்ள திருப்பிரிதியைச் சென்று சேருமாறு நெஞ்சை நோக்கிக் கூறுகின்றார்.) 1 | வாலி மா வலத்தொருவன துடல் கெட வரிசிலை விளைவித்து அன்று ஏல நாறு தண் தடம் பொழில் இடம் பெற இருந்தநல்லிமயத்துள் ஆலி மா முகிலதிர் தர வருவரை அகடுற முகடேறி பீலி மா மயில் நடம் செய்யும் தடம் சுனைப் பிரிதி சென்று அடை நெஞ்சே -1-2-1 | நெஞ்சே, Nenje - மனமே! அன்று, Anru - ஸ்ரீராமாவதாரத்தில், சுக்ரீவன் சரணம் புகுந்தவன்று வாலி, Vaali - வாலி என்னும் பெயரையுடையவனாய் மா, Maa - மிக்க வலம், Valam - பலம் பொருந்திய ஒருவனது, Oruvanathu - ஒப்பற்றவனுடைய உடல், Udal - சரீரம் கெட, Keda - சிதறும்படி வரி, Vari - அழகிய சிலை, Silai - சார்ங்கம் (வில்) வளைவித்து, Valaivithu - சரங்கள் பாயும் படி வளைத்து, (இன்று) ஏலம், Elam - பரிமளம், வாசனை நாறு, Naaru - வீசுகின்ற தண், Than - குளிர்ந்து தடம், Thadam - பரந்த பொழில், Pozhil - தோட்டங்களிலே இடம்பெற இருந்த, Idampera irundha - விசாலமாக ஸர்வேஸ்வரன் எழுந்தருளியிருக்கிற நல் இமயத்துள், Nal Imayathul - விலக்ஷனமான இமாச்சலத்திலே ஆலி மா முகில், Aali maa mugil - சிறு துளிகள் தெரிக்கிற பெரிய மேகங்கள் அதிர்தர, Athirthara - அதிர முழங்கிக்கொண்டு பீலி மா மயில், Peeli maa mayil - கணமான தோகையுடைய பெரிய மயில்களானவை அருவரை, Aruvarai - தாவி ஏற வலிதான மலைகளிலே அகடு உற, Agadu ura - கீழ் வயிறு தழுவும்படியாக முகடு ஏறி, Mugadu eri - அவற்றின் சிகரங்களிலே ஏறி நடம் செய்யும், Nadam seiyum - ஆடா நிற்பதாய் தடம் சுனை, Thadam sunai - பரந்த சுனைகளுடைய பிருதி, Pirudhi - திருப்பிருதி என்கிற திவ்யதேசத்தை சென்று அடை , Sendru adai - சென்று சேர்ந்திடு |