| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 964 | பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (இமயமலையின் தாழ்வரைகளிலே மேக மண்டலத்தளவும் ஓங்கி வளர்ந்த வேங்கைமரங்கள் மிளகு கொடிகளாலே தழுவப்பெற்றுநிற்கும்; வெளி நிலங்களிலுள்ள சிறு மலைகளிலே கொடிய வேங்கைப் புலிகள் திரியாநிற்கும். இப்படி எங்கும் வேங்கை மயமாகவேயிராநின்ற இமய மலையின் கண் தேவர்கள் வந்து செங்கழுநீர் செண்பகம் இருவாட்சி பாதிரி புன்னை குருக்கத்தி கருமுகை தாமரை என்னப்படுகிற எண்வகைப் புஷ்பங்களையும் தடாகங்களிலிருந்து கொணர்ந்து ஸமர்ப்பித்து ஸஹஸ்ரநாமங்களைச் சொல்லிக்கொண்டே நமஸ்கரிக்குமிடமாகிய திருப்பிரிதியைச் சென்று சேர் நெஞ்சே) 7 | கார்கொள் வேங்கைகள் கனவரை தழுவிய கறி வளர் கொடி துன்னி போர் கொள் வேங்கைகள் புனவரை தழுவிய பூம் பொழில் இமயத்துள் ஏர் கொள் பூஞ்சுனைத் தடம் படிந்து இனமலர் எட்டும் இட்டு இமையோர்கள் பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-7 | நெஞ்சே, Nenje - மனமே! கனம் வரை, Kanam varai - அழகிய தாழ்வரைகளில் கார்கொள் வேங்கைகள், Kaarkol vengaikal - மேக மண்டலத்தை ஆகரமித்து வளர்ந்த வேங்கை மரங்களை தழுவிய, Thazhuviya - தழுவிக்கொண்டிரா நின்ற கறிகொடி, Karikodi - மிளகுகளின் கொடிகளானவை துன்னி வளர், Thunni valar - நெருங்கிப் படரப்பெற்றதும் புனம் வரை, Punam varai - கொல்லை நிலங்களிலுள்ள சிறுமலைகளிலே போர்கொள் வேங்கைகள் தழுவிய, Porkol vengaikal thazhuviya - யுத்தத்திற்கு ஸித்தமான வேங்கைப் புலிகள் ஸஞ்சரிக்கப்பெற்றதுமாய் பூ பொழில், Poo pozhil - அழகிய சோலைகளை யுடையதான இமயத்துள், Imayathul - இமயமலையின் கண் இமையோர்கள், Imaiyorkal - தேவர்கள் ஏர் கொள் பூ சுனை தடம் படிந்து, Er kol poo sunai tadam padinthu - அழகிய புஷ்பங்களையுடைய தடாகங்களின் துறைகளிலே தீர்த்தமாடி இனம் மலர் எட்டும் இட்டு, Inam malar ettum ittu - சிறந்த எட்டுவகைப் பூக்களையும் கொண்டு ஸமர்ப்பித்து பேர்கள் ஆயிரம், Perkal aayiram - ஸஹஸ்ர நாமங்களையும் பரவி நின்று, Paravi ninru - வாய்வந்தபடி சொல்லி அடி தொழும், Adi thozhum - எம்பெருமான் திருவடிகளைப் பணியுமிடமான பிரிதி, Pridhi - திருப்பரிதியை சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக |