| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 966 | பெரிய திருமொழி || (1-2-வாலி மாவலத்து) (ஆயிரந் திருநாமங்களையும் வாயாலே சொல்லி அவற்றி துடைய அர்த்தங்களையும் அநுஸந்திப்பவர்களுக்கு எவ்விதமான துன்பமும் வந்து சேராத படியாக நித்யாநந்தத்தைக் கொடுத்து அருள் செய்கின்ற பரம புருஷன் எழுந்தருளியிருக்கப்பெற்ற இமயமலையின்கண் தாதுகள் நிறைந் திருக்கிற அசோகமலர் விகத்தால் அப்போ துண்டாகு மழகு நெருப்பு ஜ்வலிக்கிறாப்போலிருக்கும். வண்டுகளானவை அப்புஷ்பவிகாஸ சோபையைப் பார்த்து ‘இவை அசோகமலர்’ என்பதை மறந்து ‘இது நெருப்பு’ என்று ப்ரமிக்கும். அவற்றுக்கு இந்த ப்ரமம் நித்தியப்படியாகச் செல்லும். முதல் நாள் ‘இது நெருப்பு’ என்று ப்ரமித்து, பிறகு ஆராய்ந்து ‘நெருப்பு அல்ல, அசோகமலராமிவை’ என்று நிச்சயித்து அதிலே போயி ருந்தும் மறுநாளும் பழையபடியே ப்ரமித்து அதனருகு செல்ல அஞ்சியிருக்கும். இப்படி அச்சமும் அச்சங்கழிதலும் மாறாமல் செல்லப்பெற்ற திருப்பிரிதியைச் சென்று சேர் நெஞ்சே!) 9 | ஓதி யாயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறு துயர் அடையாமல் ஏதும் இன்றி நின்று அருளும் நம் பெரும் தகை இருந்த நல்லிமயத்து தாது மல்கிய பிண்டி விண்டலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-9 | நெஞ்சே, Nenje - மனமே! ஆயிரம் நாமங்கள், Aayiram Naamangal - ஸஹஸ்ர நாமங்களை ஓதி, Odhi - எப்போதும் சொல்லிக் கொண்டு உணர்ந்தவர்க்கு, Unarnthavarkku - (அத்தாலே, ஸர்வேச்வரனே ரக்ஷகனென்று) விவேகம் பெற்றவர்களுக்கு உறுதுயர் அடையாமல், Uruthuyar Adaiyaamal - உண்டாகக்கூடிய துன்பமொன்றும் உண்டாகாதபடியாகவும் ஏதம் இன்றி, Aedham Inri - பாவமொன்றும் இல்லாதபடியாகவும் நின்று அருளும், Nindru Arulum - எப்போதும் க்ருபை செய்கின்ற நம் பெருந்தகை, Nam Perunthagai - நம் ஸ்வாமியானவன் இருந்த, Irundha - எழுந்தருளி யிருக்குமிடமான நல் இமயத்து, Nal Imayathu - நல்ல இமயமலையின் கண் தாது மல்கிய, Thaathu Malkiya - தாதுகள் மிக்கிருக்கிற போதுண்டான பிண்டி, Pindi - அசோக மலர்கள் விண்டு அலர்கின்ற, Vindu Alargindra - விரிந்து அலருகிற தழல்புரை எழில், Thazhalpurai Ezhil - நெருப்புப் போன்ற அழகை பேதை வண்டுகள் நோக்கி, Pedhai Vandugal Nokki - அறிவில்லாத வண்டுகள் பார்த்து எரி என, Eri Ena - நெருப்பென்று நினைத்து வெருவரு, Veruvaru - பயப்படுமிடமான பிரிதி, Pridhi - திருப்பிரிதியை சென்று அடை, Sendru adai - சென்று சேர்வாயாக |