| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 968 | பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) (முற்றமுத்து.) சரீரத்துக்கு எவ்வளவு கிழத்தனம் வரக்கூடுமோ அவ்வள வும் வந்து, நடந்து செல்லமாட்டாமல் ஒரு கோலைக் கையிலே அவலம்ப மாகப் பிடித்துக்கொண்டு முதுகு கூனிட்டுப் போகவே முன்னடியை நோக்கி வளைந்து, முறிந்துபோன காலைக்கொண்டு நடக்கமுடியாதது போல ஓரடி யும் எடுத்து வைக்கமாட்டாமல் தடுமாறி, தடி பிடித்துக்கொண்டும் நடக்க மாட்டாமல் திடீரென்று தரையிலே விழுந்திருந்துகொண்டு பெருமூச்சு விட்டு இப்படியாக ச்ரமப்படுகிற காலம் வந்துவிட்டால் பதரிகாச்ர மயாத்ரையை நெஞ்சால் நினைக்கவும் முடியாதே; ஆகையால் அப்படிப்பட்ட கெட்ட நிலைமை வருவதற்கு முன்னே ஸ்ரீபதரியைச் சென்று வணங்குவோம் வாருங்க ளென்று அன்பர்களை அழைக்கிறார் போலும். 1 | முற்ற மூத்துக் கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன் பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை யூடு உயிரை வற்ற வாங்கி யுண்ட வாயான் வதரி வணங்குதுமே –1-3-1 | முற்ற மூத்து, Mutra Moothu - பூர்த்தியாகக் கிழத்தனமடைந்து கோல் துணை ஆ, Kol Thunai Aa - ஊன்றுகோலை ஸஹாயமாகக் கொண்டு கூன் முதுகிட்டு முன் அடி நோக்கி வளைந்து, Mun Adi Nookki Valaindhu - முன்காலைக் கவிழ்ந்து நோக்குமாபோலே இற்ற கால்போல் தள்ளி, Itra Kaalpol Thalli - முறிந்த கால்போலே தடுமாறி மெள்ள இருந்து, Mella Irundhu - மஹாப்ரயாஸத்தோடே உட்கார்ந்து இளையா முன், Ilaiyaa Mun - இவ்விதமாகக் கஷ்டங்களையடைவதற்கு முன்னே, பெற்ற தாய்போல் வந்த, Petra Thaaypol Vanda - பெற்ற தாயான யசோதையின் வடிவுகொண்டு (தன்னைக் கொல்ல) வந்த பேய்ச்சி, Peychchi - பூதனையினுடைய பெரு முலை ஊடு, Peru Mulai Oodu - பெரிய முலையின் வழியாக உயிரை, Uyirai - அவளது உயிரை வற்ற வாங்கி உண்டவாயன், Vattu Vaangi Undavayan - நிச்சேஷமாக உறிஞ்சி உண்ட திருப்பவளத்தை யுடையனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற வதரி, Vadhari - ஸ்ரீபதரியை வணங்குதும், Vananguthum - வணங்குவோம். |