திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 970 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
970பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உறிகள்போல்.)சரீரத்தில் நரம்புகளானவை இளமைப்பருவத்தில் மறைந்து கிடக்கும்; முதுமையில் சரீரம் பசையற உலர்ந்தபடியாலே அந்த நரம்புகள் உறிகள் போலே நீண்ட கொத்துக் கொத்தாகக் கிளம்பி விளங்கும் அதற்குத் தகுதியாக மாம்ஸம் க்ஷணமாகி மனமும் நலிவுபடும். இப்படிப்பட்ட நிலைமையிலும் ஓரிடத்தில் வெறுமனே கிடக்கமாட்டாதே தாம்பும் தடியுமாகப் புறப்பட்டு எங்கேயாவது போகத் தொடங்குவர்கள். 3
உறிகள் போல் மெய்ந்நரம்பு எழுந்து ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி நெறியை நோக்கிக் கண் சுழன்று நின்று நடுங்கா முன் அறிதியாகில் நெஞ்சம் அன்பாய் ஆயிர நாமம் சொல்லி வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே –1-3-3
பதவுரை Show / Hide
மெய் நரம்பு, Mei Narambu - சரீரத்திலுள்ள நரம்புகள்
உறிகள் போல் எழுந்து, Urigal Pol Ezhunthu - உறிகளைப் போலே மேலே கிளம்பித் தோன்றும்படியாக
ஊன் தளர்ந்து, Oon Thalarndhu - மாம்ஸம் கட்டுக்குலைந்து
உள்ளம் எள்கி, Ullam Elgi - நெஞ்சும் சிதிலமாகி
நெறியை நோக்கி கண் சுழன்று, Neriyai Nookki Kan Suzhndru - நடந்து செல்லவேண்டிய வழியை நோக்கினவாறே கண்கள் சுழலமிட்டு
நின்று, Ninru - போகமாட்டாதே ஸ்தம்பித்து நின்று
நடுங்கா முன், Nadunga Mun - நடுங்கும்படியான காலம் வருவதற்கு முன்னே,
நெஞ்சம், Nenjham - ஓ மனமே!
அறிதி ஆகில், Aridhi Aakil - நீ விவேகியாகில்
அன்பு ஆய், Anbu Aayi - பக்தி பூண்டு
ஆயிரம் நாமம் சொல்லி, Aayiram Naamam Solli - (எம் பெருமானது)  திருநாமங்களை யெல்லாம் சொல்லிக் கொண்டு,
வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதும், Veri Kol Vandu Pangkal Paadum Vadhari Vananguthum - பரிமளம் மிக்க வண்டுகள் இசைபாடப்பெற்ற ஸ்ரீபதரியை வணங்குவோம் வா.