திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 971 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
971பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பீளைசோர.)கிழத்தனத்தில் கண்கள் சுருங்கிப்போய் அவற்றில் நின்று பிளிச்சை பெருகவும், பித்தம் மேலிட்டுத் தலைசுற்றித் தள்ளம்பாறி நடக்கவும் நேர்தல் இயல்வு. அப்படி நேர்ந்தகாலத்து வதரி வணங்குதல் முடி யாத காரியமா தலால் அப்படி நேருவதற்கு முன்னமே அதனை வணங்குதல் நன்று . . 4
பீளை சோர கண் இடுங்கி பித்தெழ முத்து இருமி தாள்கள் நோவ தம்மில் முட்டி தள்ளி நடவா முன் காளையாகி கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான் பாளை பாயும் தண் தடம் சூழ் வதரி வணங்குதுமே –1-3-4
பதவுரை Show / Hide
கண் இடுங்கி பீளை சோர, Kan Idungi Peelai Soora - கண்கள் பசையற்றுப் பிளிச்சை பெருகவும்
பித்து எழ, Piththu Ezh - பித்தம் மேலிடும்படியாகவும்
மூத்து, Moothu - கிழத்தனமடைந்து
இருமி, Irumi - (க்ஷயரோகத்தாலே) இருமிக் கொண்டு
தாள்கள் தம்மில் முட்டி நோவ, Thaalgal Thammil Mudi Nova - கால்கள் ஒன்றோடொனறு தாக்கி நோகும்படியாக
தள்ளி நடவாமுன், Thalli Nadava Mun - தடுமாறி நடப்பதற்கு முன்னே-,
அன்று, Anru - முன்னொரு காலத்தில்
காளை ஆகி, Kaalai Aagi - இளம்பிள்ளையா யிருந்துகொண்டு
கன்று மேய்த்து, Kandru Meyththu - கன்றுகளை மேய்த்து
குன்று எடுத்து நின்றான், Kundru Eduthu Nindraan - (அவற்றுக்கு நேர்ந்த மழைத் தீங்கை யொழிப்பதற்குக்) கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்து நின்ற எம்பெருமானது
வாளை பாயும் தண்தடம் சூழ்ந்த, Vaalai Paayum Thanthadam Soozhntha - வாளை மீன்கள் குதித்துப் பாய்கின்ற குளிர்ந்த குளங்கள் சூழ்ந்த
வதரி, Vadhari - ஸ்ரீபதரியை
வணங்குதும், Vananguthum - வணங்குவோம்.