திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 972 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
972பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸம்ஸாரிகளுடைய காலக்ஷேபக்ரமத்தைப் பேசுகிறார். உடலில் வலிவு இருந்தகாலத்தில் ஒரு நல்ல காரியம் பண்ணியறியார்கள் ; விஷய போகங்கள் செய்வதற்கு எவ்வளவு நிஷித்த காரியங்கள் செய்ய வேணுமோ அவ்வளவும் செய்து தீருவர்கள்; இப்படியாக யௌவனபருவத் தைக் கழித்துவிட்டுக் கிழத்தனத்தில் வந்தவாறே அப்போதாவது இழந்த நாளைக்கு அநுதாபப்பட்டு ஏதாவது நன்மை தேடிக்கொள்ள விரும்புவார்களோ; அது கிடையாது;) 5
பண்டு காமரர் ஆனவாறும் பாவையர் வாய் அமுதம் உண்டவாறும் வாழ்ந்தவாரும் ஒக்க உரைத்து இருமி தண்டு காலா ஊன்றி ஊன்றித் தள்ளி நடவா முன் வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே –1-3-5
பதவுரை Show / Hide
பண்டு, Pandhu - இளம்பிராயத்தில்
காமர் ஆன ஆறும், Kaamar Aana Aarum - மாதர்கள் விரும்புதற்குத்தாம் உரியராக இருந்தபடியையும்
பாவையர்வாய் அமுதம் உண்ட ஆறும், Paavai Arvaai Amudham Unda Aarum - அம்மாதர்களுடைய வாயமுதத்தைப் பருகினபடியையும்
வாழ்ந்த ஆறும், Vaazhntha Aarum - சிற்றின்பங்களில் அழிந்தபடியையும்
ஒக்க உரைத்து இருமி, Okka Uraiththu Irumi - சொல்லுவது இருமுவது, மறுபடியும் சொல்லுவது இருமுவது ஆக இப்படியாகி
தண்ட காலா, Thanda Kaala - தடியைக் காலாகக்கொண்டு
ஊன்றி ஊன்றி, Oonri Oonri - (அசக்தியினால் ஓரிடத்திலேயே) பலதடவை ஊன்றி
தள்ளி, Thalli - தடுமாறி
நடவாமுன், Nadavaamun - நடக்க நேருவதற்கு முன்னே
வண்டு பாடும் தண் துழாயான், Vandu Paadum Than Thuzhaayaan - (மதுவுக்காக வந்து) வண்டுகள் பாடுகிற திருத்துழாய் மாலையை யுடையனான எம்பெருமானது
வதரி, Vadhari - ஸ்ரீபதரியை
வணங்குதும், Vananguthum - வணங்குவோம்