திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 973 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
973பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கிழத்தனத்தில் ஒருவார்த்தை சொல்ல ஆரம்பிக்கும்போதே தட்டித் தடுமாறிக் குதலைச் சொல்லாக வரும் ; அத்தோடு கூடவே கபமும் வந்து விழும் ; கூடவே இருமலும் வந்து சேரும் ; ஆக இவ் வளவால் சரீரமானது இன்னமும் அதிகமாக பலஹீனப்பட்டுவிடும்.) 6
எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி இருமி இளைத்து உடலம் பித்தர் போலே  சித்தம் வேறாய் பேசி அயரா முன் அத்தன் எந்தை யாதி மூர்த்தி ஆழ் கடலைக் கடைந்த மைத்த சோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே –1-3-6
பதவுரை Show / Hide
எய்த்த சொல்லோடு, Eyththa Sollodu - பலஹீனமான பேச்சுடனே
ஈளை ஏங்கி, Eilai Aengi - கோழைவந்து தங்கப் பெற்று
இருமி, Irumi - இருமி
உடலம் இளைத்து, Udalam Ilaitthu - சரீரம் மெலிந்து
பித்தர் போல, Piththar Poala - பைத்தியம்பிடித்தவர்கள்போல
வேறு சித்தம் ஆய் பேசி, Veeru Siththam Aayi Paesi - விகாரப்பட்ட மனமுடையராய் வார்த்தை சொல்லி
அயரா முன், Ayara Mun - தளருவதற்கு முன்னே-,
அத்தன், Aththan - ஸர்வஸ்வாமியாய்
எந்தை, Endhai - எமக்குத் தந்தையாய்
ஆதிமூர்த்தி, Aadhimurthi - உலகத்திற்கு மூலக்கடவுளாய்
ஆழ் கடலை கடைந்த, Aazh Kadalai Kadaindha - (ஒரு காலத்தில் தேவர்களுக்காக) ஆழ்ந்த கடலைக் கடைந்தவனாய்
மைத்த ஜோதி, Maiththa Jothi - மைபோல் சாமமான புகரையுடையனான
எம்பெருமான், Emperumaan - எம்பெருமானுடையதான
வதரி  வணங்குதும், Vadhari Vanangudhum - ஸ்ரீபதரியை வணங்குவோம்.