திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 975 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
975பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (முற்ற மூத்துக் கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து சென்று குறடேறும்போதே, சீ சீ, நட, நட” என்று துரத்தியடிப்பர்கள் ; வாசலை விடமாட்டாத சாபல்யத்தாலே ‘அம்மா! நான் உள்ளே வரவில்லை; தெருத்திண்ணையிலேயே கிடந்து போகிறேன்’ என்று விநயமாகச் சொல்லி உட்காரப் பார்த்தவளவில், ஈங்கிரேல்மின்’ என்று வெருட்டுவர்கள்;) 8
ஈசி போமின் ஈங்கு இரேன் மின் இருமி இளைத்தீர் உள்ளம் கூசி யிட்டீர் என்று பேசும் குவளை யம் கண்ணியர் பால் நாசமான பாசம் விட்டு நன்னெறி நோக்கல் உறில் வாச மல்கு தண் துழாயான் வதரி வணங்குதுமே –1-3-8
பதவுரை Show / Hide
இருமி இளைத்தீர், Irumi Ilaiththir - “(ஐயங்கார்களே!) இருமலும் இளைப்புமாக ஆனீர்கள்;
உள்ளம் கூசியிட்டீர், Ullam Koosiyitthir - நெஞ்சு கூசப் பெற்றீர்கள்;
போமின், Pomin - அப்பால் ஒழிந்து போங்கள்
ஈ சி, Ee See - சீ சீ ;
ஈங்கு இரேல்மின், Eengu Irelmin - இங்கே இருக்கக்கூடாது;”
என்று பேசும், Endru Pesum - என்றிப்படி அவமரியாதையாகப் பேசுகிற
குவளை அம் கண்ணியர் பால், Kuvazhai Am Kanniyar Paal - கருநெய்தல் போன்ற அழகிய கண்ணையுடைய மாதர்களிடத்து
நாசம் ஆன பாசம் விட்டு, Naasam Aana Paasam Vittu - ஸ்வரூபநாசத்தை விளைக்க வல்ல ஆசாபாசத்தை விட்டுத் துலைத்து
நல் நெறி நோக்கல் உறில், Nal Neru Nookkal Uruil - நல்வழி போகப்பார்க்கும் பக்ஷத்தில்
வாசம் மல்கு தண்துழாயான் வதரி வணங்குதும், Vaasam Malku Thanthuzhaiyan Vadhari Vananguthum - பரிமளம் மிக்குக் குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடைய எம்பெருமானது ஸ்ரீபதரியை வணங்குவோம்.