திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 976 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
976பெரிய திருமொழி || (முற்ற மூத்து) - -(திருவதரி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கருமேந்திரியங்களென்றும் ஜ்ஞானேந்திரியங்க ளென்றும் இந்திரியங்கள் இருவகைப்படும். வாய் கை கால் குதம் குறி என்பன கருமேந்திரியங்கள்; நாக்கு மூக்கு கண் காது உடல் என்பன ஞானேந்திரியங்கள். இவை யெல்லாம் சிதிலமாவது கிழத்தனத்தில். கண் தெரியாதபடியும் காது கேளாதபடியும் அடியெடுத்து வைக்க முடியாதபடியும் கிழத்தனம் அதி கரித்து ஒரு மூலையிலே கிடந்து கண்டபடி பிதற்ற நேருங்காலத்தில் வதரியை ஸ்மரிக்கத்தான் யோக்யதை ஏது? அப்போதைக் கிப்போதே வதரிவணங்குதல் நன்று .) 9
புலன்கள் நைய மெய்யில் மூத்துப் போந்திருந்த உள்ளம் எள்கி கலங்க  வைககள் போத உந்திக் கண்ட பிதற்றா முன் அலங்கலாய தண் துழாய் கொண்டு ஆயிர நாமம் சொல்லி வலம் கொள் தொண்டர் பாடி யாடும் வதரி வணங்குதுமே –1-3-9
பதவுரை Show / Hide
மெய்யில், Meiyil - சரீரத்தில்
புலன்கள் நெய்ய, Pulangkal Neyya - செவி வாய் கண் முதலிய இந்திரியங்களெல்லாம் சிதிலமாம்படி
மூத்து, Moothu - கிழத்தன மடைந்து
போந்து இருந்து, Pondhu Irundhu - (நால்வரிருக்குமிடத்தில் தலை காட்டக்கூசி ஏகாந்த ஸ்தலத்திலே) போயிருந்து
உள்ளம் எள்கி கலங்க, Ullam Elgi Kalanga - நெஞ்சு விகாரப்பட்டுக் கலங்க
ஐக்கள் போத உந்தி, Aikkal Podha Unthi - கோழைகளை அதிகமாக உமிழ்ந்து கொண்டு
கண்ட, Kanda - நெஞ்சில் தோன்றின வற்றை யெல்லாம்
பிதற்றா முன், Pithatra Mun - பிதற்றுவதற்கு முன்னே,-
வலம் கொள் தொண்டர், Valam Kol Thondar - சிறந்த பக்தர்கள்
அலங்கல் ஆய தண் துழாய் கொண்டு, Alangal Aaya Than Thuzhai Kondu - மாலையாகத் தொடுக்கப்பட்ட குளிர்ந்த திருத்துழாயைக் கையிற் கொண்டு
ஆயிரம் நாமம் சொல்லி, Aayiram Naamam Solli - ஸஹஸ்ரநாமங்களை அநுஸகத்தித்துப்
பாடி ஆடும், Paadi Aadum - பாடுதலும் ஆடதலும் செய்யப்பெற்ற,
வதரி வணங்குதும், Vadhari Vananguthum - ஸ்ரீபதரியை வணங்குவோம்