| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 985 | பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) (மாரீசனாகிற மாயமான் மேலே அம்பு எய்து அதனை முடித்தவனும், பரமபக்தனான ப்ரஹ்லாதனுக்குக் கொடுமையியற்றி மஹாத்ரோஹியான ஹிரண்யகசிபுவின் மார்பைப் பிளந்தொழித்தவனும், பிரமனால் சிவனுக்கு நேர்ந்த ப்ரஹ்மஹத்திசாபத்தைத் தொலைத்தருளினவனுமான எம்பெருமான் வதரியாச்சிரமத்துள்ளான்.) 8 | மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த மன்னவன் பொன்னிறத்து உரவோன் ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து அயன் அரனைத் தான் முனிந்திட்ட வெந்திறல் சாபம் தவிர்த்தவன் தவம் புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே –1-4-8 | ஒருகால், Orukal - (பஞ்சவடியில் எழுந்தருளியிருந்த) ஒரு ஸமயத்தில் மான் முனிந்து, Maan Muninthu - மாரிசமாயமானின் மேற் சீறி வரி சிலை வளைத்த மன்னவன், Vari Silai Valaitha Mannavan - அழகிய வில்லை (அந்த மான் மேலே) வளைத்தெறிந்த செருக்கனாயும் பொன் நிறத்து உரவோன், Pon Nirathu Uravon - பொன்போன்ற நிறத்தையுடைய ஹிரண்யனென்னுமொரு பலிஷ்டனுடைய ஊன் முனிந்து, Oon Muninthu - உடலை ஒழித்து விடுவதாகச் சீற்றங்கொண்டு அவனது உடல் இரு பிளவு ஆ, Avanathu Udal Iru Pilavu Aa - அவ்வசுரனுடைய சரீரம் இரண்டு பிளவாம்படி உகிர் நுதி மடுத்து, Ukir Nuthi Maduthu - நகங்களின் நுனியை (அவ்வுடலில்) அழுத்தினவனாயும், அயன் தான் அரனை முனிந்து, Ayan Thaan Aranai Muninthu - நான்முகக் கடவுள் சிவன் மேல் சீறி இட்ட, Itta - (அவனுக்குக்) கொடுத்த வெம் திறல் சாபம் தவிர்த்தவன், Vem Thiral Saapam Thavirnthavan - மிகவும் க்ரூரமான சாபத்தைப் போக்கினவனாயுமுள்ள எம் பெருமான் (எங்குள்ளானெனில்;) தவம் புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த, Thavam Purinthu Uyarndha Maa Muni Konarntha - தபஸ்விகளில் தலைவரான பகீரதர் கொண்டுவந்த கங்கையின் கரைமேல், Gangaiyin Karameel - கங்கையின் கரைமீதுள்ள வதரியாச்சிராமத்து உள்ளான், Vathariyachiramaithu Ullaan - ஸ்ரீபதரிகாச்ரமத்திலுளன். |