திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 986 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
986பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸகல பதார்த்தங்களையும் பிரளயங் கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்து நோக்கினவனும் உபயவிபூதி நாதனு மான எம்பெருமான் வதரியாச்சிரமத்துள்ளான்.) 9
கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர்க் குரை கடல் உலகுடன் அனைத்தும் உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த உம்பரும் ஊழியும் ஆனான் அண்டமூடறுத்து அன்று அந்தரத்து இழிந்து அங்கவனி யாளலமர பெருகு மண்டு மா மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –1-4-9
பதவுரை Show / Hide
கொண்டல், Kondal - மேகங்களையும்
மாருதங்கள், Marudhangal - வாயுஸமூஹத்தையும்
குலம் வரை, Kulam Varai - குலபர்வதங்களையும்
தொகு நீர் குரை கடல், Thogu Neer Kurai Kadal - நீர் நிறைந்து கோஷம் செய்கிற கடல்களையும்
உலகு அனைத்தும், Ulaku Anaithum - மற்றுமெல்லா வுலகங்களையும்
உடன் உண்ட மா வயிற்றோன், Udan Unda Maa Vayittron - ஏககாலத்தில் அமுதுசெய்த பெரிய திருவயிறுடையனும்,
ஒண் சுடர் ஏய்ந்த உம்பரும் ஊழியும் ஆனான், On Sudar Ayndha Umbarum Oozhiyum Aanaan - சந்திரஸூர்யர்கள் பொருந்தியிருக்கிற மேலுலகத்திற்கும் காலம் முதலிய ஸகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகனுமான எம்பெருமான் (எங்குளன் எனில்)
அன்று, Anru - பகீரதன் கங்கையை அவதரிப்பித்த அப்போது
அண்டம் ஊடு அறுத்து, Andam Oodu Aruththu - ப்ரஹ்மலோகத்தை இடைவெளி யாக்கிக்கொண்டு
அந்தரத்து இழிந்து, Antharathu Izhindhu - ஆகாசத்தில் வந்திழிந்து
அங்கு, Angu - அங்கு நின்றும்
அவனியாள் அலமர பெருகும், Avaniyal Alamara Perugum - பூமி நடுங்கும்படியாக (பூமியிலே) ப்ரவஹித்ததும்
மண்டு மா மணி நீர், Mandhu Maa Mani Neer - நெருங்கி நிறைந்து தெளிந்த ஜலத்தை யுடையதுமான
கங்கையின் கரை மேல், Gangaiyin Karai Mel - கங்கையின் கரைமேலுள்ள
வதரியாச்சிராமத்து உள்ளான், Vathariyachiramaithu Ullaan - ஸ்ரீபதரிகாச்ரமத்திலுள்ளான்.