| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 993 | பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) (கண்ணபிரானுக்குத் தயிர் பால் வெண்ணெய் முதலியன எப்படி போக்யமாயிருந்தனவோ, அப்படியே, தன்னைக் கொல்ல வந்த பூதனையின் உயிரும் போக்யமாயிருந்ததென்பது தோன்ற அருளிச் செய்கிற அழகு காண்மின்.) 6 | தாயாய் வந்த பேய் உயிரும் தயிரும் விழுதும் உடன் உண்ட வாயான் தூய வரி யுருவில் குறளாய்ச் சென்று மா வலியை ஏயான் இரப்ப மூவடி மண்ணின்றேதா வென்று உலகு ஏழும் தாயான் காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே –1-5-6 | தாய் ஆய் வந்த பேய் உயிரும், Thaai Aay Vandha Pei Uyirum - தாய்வடிவு கொண்டு வந்த பூதனையின் உயிரையும் தயிரும் விழுதும், Thayirum Vizhudhum - தயிரையும் வெண்ணெயையும் உடன் உண்ட வாயான், Udan Unda Vaayaan - ஒன்றுசேர்த்து அமுதுசெய்தவனும், ஏயான், Eayaan - (யாசிப்பதற்குத்) தகாதவனானதான் தூய வரி உருவின் குறள் ஆய்மாவலியை சென்று, Thuya Vari Uruvin Kural Aaymaavaliyai Sendru - பரிசுத்தமும் ஸுந்தரமுமான ரூபத்தையுடையவாமநனாகி மாவலியிடம் சென்று இன்றே மூ அடி மண் தா என்று இரப்ப, Indrae Moo Adi Mann Thaa Endru Irappa - இப்போதே (எனக்கு) மூன்றடி நிலம் கொடுஎன்று யாசிக்க, உலகு ஏழும் தாயான், Ulaku Ezhum Thaayaan - எல்லாவுலகங்களையும் தாவியளந்து கொண்டவனும் காயா மலர் வண்ணன் சாளக்கிராமம், Kaaya Malar Vannan Chaalakkiraamam - காயாம்பூப்போன்ற நிறமுடையனுமான எம்பெருமான் எழுந்தரு ளியிருக்கிற ஸாளக்கிராமத்தை |