திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 997 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
997பெரிய திருமொழி || (கலையும் கரியும்) - -(திருச்சாளக்கிராமம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தாராவாரும்.) எம்பெருமானுடைய ஸஹஸ்ரநாமங்களை ஸங்கீர்த்தனம் பண்ணுவதும் இந்தத் திருமொழியைக் கற்பதும் துல்ய பலமென்கிறார். 10
தாராவாரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத் தடிகளை காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை ஆரார் உலகத்தறிவுடையார் அமரர் நன்னாட்டரசு ஆள பேர் ஆயிரமும் ஒதுமின்கள் அன்றி யிவையே பிதற்றுமினே –1-5-10
பதவுரை Show / Hide
உலகத்து, Ulagaththu - இவ்வுலகத்திலே
அறிவு உடையார் ஆரார், Arivu Udaiyaar Aaraar - விவேகமுள்ளவர்கள் ஆரார் இருக்கிறீர்களோ(அவர்களெல்லீரும்)
அமரர் நல் நாடு அரசு ஆள, Amarar Nal Naadu Arasu Aala - நித்யஸூரிகளுடைய வில க்ஷணமான ஸ்ரீவைகுண்டத்தை அரசாளும் படியாக
பேர்ஆயிரமும் ஓதுமின்கள், Peraayiramum Othuminngal - (ஸ்ரீ வைகுண்டநாதனுடைய) ஆயிரந் திரு நாமங்களையும் ஓதுங்கள்:
அன்றி, Andri - அல்லது,
கார் ஆர் புறவில் மங்கை வேந்தன் கலியன், Kaar Aar Puravil Mangai Vendan Kalyan - மேகங்கள் படிந்துள்ள தோட்டங்களையுடைய திருமங்கை நாட்டுக்குத் தலைவரான திருமங்கையாழ்வார்
தாரா ஆரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத்து அடிகளை, Tharaa Aarum Vayal Soozhntha Saalakkiraamathu Adigalai - ஸாரஸபக்ஷிகள் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட ஸ்ரீஸாளக்ராமத்திலே எழுந்தருளியிருக்கு மெம்பெருமான் விஷயமாக
ஒலி செய், Oli Sei - அருளிச்செய்த
தமிழ்மாலை இவையே, Thamizhmaalai Ivaiye - தமிழ் மாலையாகிய இப்பாசுரங்களையே
பிதற்றுமின், Pithatrumin - வாய்வந்தபடி சொல்லுங்கள்.