திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 999 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
999பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எம்பெருமான் பக்கல் வந்துசேர்ந்தவுடனே, கீழ்க்கழிந்த காலத்துக்கு அநுதாபம் பிறப்பது வழக்கம். இப்படி பகவத் விஷயத்திலீடுபட்டு ஆநந்தமயமாகப் போது போக்க வேண்டியிருக்க, அந்தோ! விஷயாந்தரங்களில் ஈடுபட்டுத் தருமத்தை அடியோடு மறந்து எவ்விதத்திலாவது இந்திரியங்களுக்கு திருப்தியை உண்டாக்குவதே வேண்டியது என்று கொண்டு அருமந்த காலத்தை அநியாயமாகப் போக்கினேனே! என்று கழிவிரக்கங் காட்டுகின்றார் முன்னடிகளில்.) 2
சிலம்படி யுருவில் கரு நெடும் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து புலம்படிந்து உண்ணும் போகமே பெருக்கிப் போக்கினேன் பொழுதினை வாளா அலம் புரி தடக்கை யாயனே மாயா வானவர்க்கு அரசனே வானோர் நலம் புரிந்து இறைஞ்சுன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-2
பதவுரை Show / Hide
சிலம்பு அடி உருவின், Silambu Adi Uruvin - சிலம்புகளை அணிந்த கால்கள் அழகாயிருக்கப் பெற்றவர்களும்
கருநெடு கண்ணார் திறத்தன் ஆய், Karunedu Kannaar Thiraththan Aay - கறுத்து நீண்ட கண்களையுடையவர்களுமான மாதர்களிடத்திலேயே ஆஸக்தனாய்
அறத்தையே மறந்து, Araththaye Maranthu - தருமங்களை மறந்து
புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி, Pulan Padinthu Unnum Pogame Perukki - இந்திரியங்கள் பொருந்தி அநுபவிக்கிற விஷய போகங்களையே மேன் மேலும் அதிகப்படுத்திக்கொண்டு
பொழுதினை வாளா போக்கினேன், Pozhudhinai Valaapo Kkinen - வாழ்நாளை வீணாகக் கழித்தேன்;
அலம் புரி தடகை, Alam Puri Thadakai - போதும் போதுமென்று சொல்லும்படியாக தாநஞ்செய்கிற பெரிய திருக்கையையுடைய
ஆயனே, Aayaney - கோபால க்ருஷ்ணனே!
மாயா, Maayaa - ஆச்சரியமான செய்கைகளையுடையவனே!
வானவர்க்கு அரசனே, Vaanavarkku Arasane - தேவாதிதேவனே!
வானோர், Vaanor - நித்யஸூரிகள்
நலம் புரிந்து இறைஞ்சு, Nalam Purinthu Irainju - அன்பு புண்டு ஆக்ரயிக்கப்பெற்ற
உன் திரு அடி அடைந்தேன், Un Thiru Adi Adaindhen - உன் திருவடிகளிலே இன்று வந்து கிட்டப்பெற்றேன்.