திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 978 | பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீதேவி பூதேவிகட்காக அரிய பெரிய காரியஞ்செய்த மஹாநுபாவன் எழுந்தருளியிருக்குமிடம் ஸ்ரீபதரிகாச்ரமம் என்கிறார்.) 1 | ஏனம் முனாகி யிரு நிலம் இடந்து அன்று இணை யடி யிமையவர் வணங்க
தான வனாகம் தரணியில் புரளத் தடஞ்சிலை குனித்த வென் தலைவன்
தேனமர் சோலைக் கற்பகம் பயந்த தெய்வ நன்னறு மலர் கொணர்ந்து
வானவர் வணங்கும் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –1-4-1 | பதவுரை Show / Hideமுன் அன்று, Mun Anru - முன்னொரு காலத்தில் இணை அடி, Inai Adi - (தனது) உபய பாதங்களைத் இமையவர் வணங்க, Imaiyavar Vananga - தேவர்கள் வந்து வணங்குமாறு ஏனம் ஆகி, Enam Aagi - மஹாவராஹரூபியாகி இரு நிலம் இடந்து, Iru Nilam Idanthu - விசாலமான பூ மண்டலத்தைக் கோட்டு நுனியாற் குத்தி யெடுத்தவனாயும், தானவன் ஆகம், Thanavan Aagam - இராவணணுடைய சரீரமானது தரணியில் புரள, Tharaniyil Purala - பூமியிலே (செத்துப்) புரளும்படி தடசிலை குனித்த, Thadasilai Kunitha - பெரிய வில்லை வளைத்தவனாயுமிருக்கிற என் தலைவன், En Thalaivan - அஸ்மத் ஸ்வாமி வானவர், Vaanavar - தேவர்கள், தேன் அமர் சோலை கற்பகம் பயந்த, Then Amar Solai Karppagam Payantha - தேன் நிறைந்த நந்தனவனத் திலேயுள்ள கல்ப வ்ருக்ஷங்கள் கொடுத்த தெய்வம் நல் நறு மலர், Deivam Nal Naru Malar - திவ்யமாய் நல்ல மணம் மிக்க பூக்களை கொணர்ந்து, Konarnthu - கொண்டு வந்து ஸமர்ப்பித்து வணங்கும், Vanangum - வணங்குமிடமாய் கங்கையின் கரை மேல், Gangaiyin Karai Mel - கங்கையின் கரையிலுள்ள தான வதரி ஆச்சிரமத்து, Vadhari Aachiramatthu - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே உள்ளான், Ullaan - எழுந்தருளியிருப்பவன்.—— |
| 979 | பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பெருமாளையும் பிராட்டியையும் பிரிப்பதற்கு மாயமான் வடிவுகொண்டு வந்த மாரீசனை ஒழித்தபடியையும், ஆச்ரிதனான ஸுக்ரீவனுக்கு விரோதியான வாலியை ஒழித்தபடியையும் முன்னடிகளில் அருளிச் செய்கிறார்.) 2 | கானிடை யுருவைச் சுடுசரம் துரந்து கண்டு முன் கொடும் தொழில் உரவோன்
ஊனுடை யகலத்தடு கணை குளிப்ப உயிர் கவர்ந்துகந்த வெம் மொருவன்
தேனுடைக் கமலத் தயனொடு தேவர் சென்று சென்று இறைஞ்சிட பெருகு
வானிடை முது நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யா ச்சிராமத்துள்ளானே –1-4-2 | பதவுரை Show / Hideகானிடை, Kaanidai - காட்டிலே உருவை, Uruvai - (மாரீசனாகிய) மாயா மிருகததை முன் கண்டு, Mun Kandu - கண்ணெதிரில் பார்த்து சுடு சரம் துரந்து, Sudu Saram Thurandhu - (அதன் மேல்) தீக்ஷ்ணமான பாணத்தைப் பிரயோகித்தவனும் கொடு தொழில் உரவோன், Kodu Thozhil Uravon - கொடுமையான தொழிலை யுடையனாய் பலசாலியான வாலியினுடைய ஊன் உடை அகலத்து, Oon Udai Akalathu - மாம்ஸமான மார்விலே அடு கணை குளிப்ப, Adu Kanai Kulippa - தீக்ஷ்ணமான பாணத்தை அழுத்தி உயிர் கவர்ந்து, Uyir Kavarndhu - (அவனது பிராணனை அபஹரித்து உகந்த, Ugantha - மகிழ்ந்தவனுமான எம் ஒருவன், Em Oruvan - விலக்ஷணனான அஸ்மத்ஸ்வாமி (எவ்விடத்திலுள்ளா னென்றால்) தேன் உடை கமலத்து அயனொடு, Then Udai Kamalathu Ayanodu - தேனையுடைய(திருநாபிக்) கமலத்தில் பிறந்த பிரமனோடு கூட தேவர், Thevar - மற்றுமுள்ள தேவர்களும் சென்று சென்று, Sendru Sendru - பலகால் வந்து இறைஞ்சிட, Iraichida - வணங்கப் பெற்றதும் பெருகு வானிடை முது நீர் கங்கையின் கரைமேல், Perugu Vaanidai Muthu Neer Gangaiyin Karameel - பெருகுகின்ற புராதனமாக ஆகாசகங்கைக் கரைமீது உள்ளதுமான வதரி ஆச்சிராமத்து, Vadhari Aachiramaathu - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே உள்ளான், Ullaan - எழுந்தருளியிருக்கிறான். |
| 980 | பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒருவரால் அழிக்க வொண்ணாத லங்கா புரியும் அதற்கும் அகழாகி ரக்ஷகமாயிருந்த தெற்கு ஸமுத்ரமும், இராவணனும், அவனுக்குத் துணையாயிருந்த ராக்ஷஸஜாதியடங்கலும் நாசமடையும்படி தனது கொடுமையான பராக்கிரமத்தைச் செலுத்திக் காரியஞ்செய்த ராஜாதி ராஜன் எழுந்தருளியிருக்குமிடம் வதரியாச்சிரமம்.) 3 | இலங்கையும் கடலும் அடலருந்திப் பின் இரு நிதிக் கிறைவனும் அரக்கர்
குலங்களும் கெட முன் கொடும் தொழில் புரிந்த கொற்றவன் கொழும் சுடர் சுழன்ற
விலங்கலில் உரிஞ்சி மேல் நின்ற விசும்பில் வெண் துகில் கொடி யென விரிந்து
வலம் தரு மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –1-4-3 | பதவுரை Show / Hideமுன், Mun - ஸ்ரீராமாவதாரத்தில் இலங்கையும், Ilankaiyum - லங்காபுரியென்ன கடலும், Kadalum - (அதற்கு அகழான) தெற்கு ஸமுத்ரமென்ன அடல் அருதுப்பின் இரு நிதிக்கு இறைவனும், Adal Aruthuppin Iru Nidhikku Iraivanum - ஒருவராலும் வெல்ல முடியாத பலத்தையுடையனாய்ப் பெரிய நிதிகளுக்கு ஸ்வாமியான ராவணனென்ன அரக்கர் குலங்களும் கெட, Arakkar Kulangalum Keda - ராக்ஷஸஜாதியென்ன ஆகிய இவையெல்லாம் ஒழியும்படியாக கொடுதொழில் புரிந்த கொற்றவன், Koduthozhil Purindha Kotravan - கடுமையான காரியங்களைச் செய்தருளின மஹாப்ரபு (எவ்விடத்திலுள்ளா னென்றால்) கொழு சுடர் சுழன்ற விலங்கவில் உரிஞ்சி, Kozhu Sudar Suzhandra Vilangavil Urinji - ஸூர்யன் சுழன்று வரப்பெற்ற (மேரு) மலை வரைக்கும் சென்று முட்டி மேல் நின்ற விசும்பில், Mel Nindra Visumbil - மேலேயிருக்கிற ஆகாசத்திலே வெண் கொடி துகில் என விரிந்து, Ven Kodi Thugil Ena Virinthu - வெளுத்த த்வஜபடமென்ன லாம்படி பரந்து வலந்தரும், Valantharum - (வேகத்தாலே) மிடுக்கையுடையதும் மணி நீர், Mani Neer - அழகிய தீர்த்தத்தை யுடையதுமான கங்கையின், Gangaiyin - கங்கைநதியினுடைய கரை மேல், Karai Mel - கரையின்மேலுள்ள வதரியாச்சிராமத்து, Vathariyachiramatthu - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே உள்ளான், Ullaan - எழுந்தருளியிருப்பவன். |
| 981 | பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெஞ்சே! இப்போது உனக்கு உறுதியாக ‘ஒரு நல்வார்த்தை சொல்லுகிறேன் கேள். அதுயாதெனில்; தொண்டர்களுடைய ‘விரோதியைப் போக்கிப் பரமபதத்தை அளிக்கின்ற பேரருளாளன் ஸ்ரீ பதரிகாச்ரமத்தில் எழுந்தருளியிராநின்றான்; அங்கே சென்று அவனை நீ வணங்கி உஜ்ஜீவிக்கக்கடவை ; இதுவே உனக்கு நான் உரைக்கும் உறுதிச்சொல்.) 4 | துணி வினி யுனக்குச் சொல்லுவன் மனமே தொழுது எழு தொண்டர்கள் தமக்கு
பிணி யொழித்தமரர் பெரு விசும்பு அருளும் பேரருளாளன் எம்பெருமான்
அணி மலர்க் குழலாரரம்பையர் துகிலும் ஆரமும் வாரி வந்து அணி நீர்
மணி கொழித்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே –1-4-4 | பதவுரை Show / Hideமனமே, Maname - நெஞ்சமே!, இனி உனக்கு துணிவு சொல்லுவன், Ini Unakku Thunivu Solluvan - இதுமுதலாக உனக்கு இருக்க வேண்டிய உறுதியைச் சொல்லுகிறேன் (கேள்); தொண்டர்கள் தமக்கு, Thondargal Thamakku - ஆச்ரிதர்களுக்கு பிணிஒழித்து, Pinizhil - வியாதிகளைப்போக்கி அமரர் பெரு விசும்பு அருளும், Amarar Peru Visumbu Arulum - நித்ய ஸூரிகளுடையதான பரமபதத்தை (அவர்கட்கு) அளித்தருளாநின்ற பேர் அருள் ஆளன், Per Arul Alan - பரமதயாளுவான எம்பெருமான், Emperuman - ஸர்வேச்வரனை தொழுது எழு, Thozhudhu Ezhuthu - வணங்கி உஜ்ஜீவிக்கக் கடவை; அணி நீர், Ani Neer - (கங்கையிலுள்ள) அழகிய ஜலமானது மலர் அணி குழலார் அரம்பையர், Malar Ani Kuzhalar Arampaiyar - புஷ்பங்களை யணிந்த கூந்தலையுடைய அப்ஸரஸ் ஸ்த்ரீகளினுடைய துகிலும், Thugilum - சேலைகளையும் ஆரமும், Aaramum - ஹாரங்களையும் வாரி வந்து, Vaari Vandu - திரட்டிக்கொண்டுவந்தும் மணி கொழித்து, Mani Kozhithu - ரத்னங்களைத் தள்ளிக்கொண்டு வந்தும் இழிந்த, Izhintha - ப்ரவஹிக்கப்பெற்ற கங்கையின், Gangaiyin - கங்காநதியினுடைய கரை மேல், Karai Mel - கரைமேலுள்ள வதரி ஆச்சிரமத்து, Vadhari Aachiramatthu - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே உள்ளான், Ullaan - எழுந்தருளியிருக்கிறான். |
| 982 | பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழ்ப்பாட்டில் “ அணிமலர்க்குழலாராம் பையர் துகிலும் ஆரமும் வாரிவந்து ” என்ற சொற்போக்கில் கண்ணபிரானுடைய திருவிளையாடல் ஆழ்வார்க்கு நினைவுக்கு வாவே, மற்றொரு க்ருஷ்ண சேஷ் டித்த்தை ஸ்மரித்துப்பேசுகிறார் இதில்) 5 | பேய் இடைக்கிருந்து வந்த மற்றவள் பெரு முலை சுவைத்திட பெற்ற
தாய் இடைக்கிருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த வென் தலைவன்
சேய் முகட்டுச்சி யண்டமும் சுமந்த செம் பொன் செய் விலங்கலில் இலங்கு
வாய் முகட்டிழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –1-4-5 | பதவுரை Show / Hideவந்த, Vandha - (யசோதையின் வேஷங்கொண்டு)வந்தவளான பேய், Pei - பூதனையினுடைய இடைக்கு இருந்து, Idaikku Irundhu - இடுப்பிலேயிருந்துகொண்டு அவள்தன், Avalthan - அப்பேய்மகளுடைய பெரு முலை, Peru Mulai - பெரிய முலையை சுவைத்திட, Suvaiththida - ருசிபார்த்து உண்ண பெற்ற தாய், Petra Thaai - (அதைக்கண்ட) யசோதையானவள் இடைக்கு இருத்தல்அஞ்சுவன் என்று தளர்ந்திட, Idaikku Iruththal Anjuvan Endru Thalarndhida - (‘நான் இனி இவனை) இடுப்பிலே எடுத்துக் கொள்ள அஞ்சுகிறேன்’ என்று சொல்லிக் கூசும்படியாக வளர்ந்த, Valarntha - வளர்ந்தவனான எம் தலைவன், Em Thalaivan - அஸ்மத் ஸ்வாமி சேய் முகடு உச்சி, Seyy Mugadu Uchi - உயர்ந்த கொடுமுடியின் உச்சியிலே அண்டம் சுமந்த, Andam Sumandha - அண்டத்தைச் சுமக்கிற செம் பொன் செய்விலங்கலில், Sem Pon Seyvilangalil - மேரு பர்வதத்திலே இலங்கு, Ilangu - விளங்குகின்ற வாய்முகடு, Vaay Mugadu - விசாலமான சிகரத்தில் நின்றும் முன் இழிந்த, Mun Izhintha - ப்ரவஹிக்கின்ற கங்கையின், Gangaiyin - கங்கைநதியினுடைய கரை மேல், Karai Mel - கரைமீதுள்ள வதரியாச்சிராமத்து, Vathariyachiramatthu - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே உள்ளான், Ullaan - எழுந்தருளியிருப்பவன். |
| 983 | பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கண்ணபிரான் தொட்டிற்பருவத்திற் செய்த சேஷ்டித் மொன்றைக் கீழ்ப்பாட்டி லருளிச்செய்தார்; யௌவனப்பருவத்திற் செய்ததோர் செயலைச் சொல்லுகிறாரிதில்.) 6 | தேரணங்கல்குல் செழும் கயல் கண்ணி திறத்து ஒரு மறத் தொழில் புரிந்து
பாரணங்கிமிலேறேழு முன்னடர்த்த பணி முகில் வண்ணன் எம்பெருமான்
காரணம் தன்னால் கடும் புனல் கயத்த கரு வரை பிள வெழக் குத்தி
வாரணம் கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –1-4-6 | பதவுரை Show / Hideதேர் அணங்கு அல்குல், Ther Anangu Alkul - தேர்போன்று அழகிய நிதம்பத்தை யுடையளும் செழுகயல் கண்ணி திறத்து, Sezhugayal Kanni Thirathu - அழகிய கயல்போன்ற கண்களையுடையளுமான நப்பின்னைக்காக ஒரு மறத்தொழில் புரிந்து, Oru Marathozhil Purinthu - கோபம் மிக்க செயலைச்செய்து பார் அணங்குஇமில், Paar Anangumil - பூமியிலுள்ளாரெல்லாரும் நடுங்கும்படியான முசுப்பையுடைய ஏறு ஏழும் முன் அடர்த்த, Eru Ezhum Mun Adarttha - ஏழு எருதுகளையும் கண்முன்னே வலியடக்கின பனி முகில் வண்ணன், Pani Mukil Vannan - குளிர்ந்த மேகம்போன்ற வடிவையுடையனான எம்பெருமான், Emperuman - எம்பெருமான் (எங்கே எழுந்தருளியிருக்கிறானென்றால்) காரணம் தன்னால், Kaaranam Thannal - பகீரதப்ரயத்நமாகிற காரணத்தினால் கடு புனல் கயத்த, Kadu Punal Kayattha - வேகமாகப் பெருகுகின்ற ஜலம் நிறைந்த பள்ளங்களையுடையதும் கரு வரை பிளவுஎழ குத்தி, Karuvarai Pilavuezha Kuththi - பெரியதொருமலைபிளந்துபோம்படி (அம்மலையை) உடைத்துக்கொண்டு வாரணம் கொணர்ந்த, Vaaranam Konarntha - (அங்குள்ள) யானைகளைத் தள்ளிக் கொண்டுவந்து ப்ரவஹித்ததுமான கங்கையின், Gangaiyin - கங்காநதியினுடைய கரைமேல், Karaimeel - கரையின்மீதுள்ள வதரியாச்சிராமத்து உள்ளான், Vathariyachiramaithu Ullaan - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே உள்ளான். |
| 984 | பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருமால் தேவர்களின் பிரார்த்தனைக் கிணங்கிக் கடல்கடைந் தருளின காலத்து, கடையப்பட்ட அக்கடலினின்று ஐராவதயானை, உச்சைச்ச்ரவஸ் என்னுங் குதிரை, விஷம், சந்திரன், கல்ப வ்ருக்ஷம், அமுதம் முதலியன உண்டாயினவென்று புராணங்கள் கூறும். அவற்றில் தேவேந்திரனுக்கு ஐராவதயானையையும் அமிருதத்தையும் தேவர்கட் குத் தலைவனாயிருக்கும் ஸாம்ராஜ்யத்தையும் கொடுத்தருளி, அந்தரங்க அடியவர்களான நமக்குத் தன்னையே கொடுத்தருளி உபகரித்த எம்பெருமான் வதரி யாச்சிரமத்துள்ளான்;) 7 | வெந்திறல் களிறும் வேலை வாய் அமுதும் விண்ணோடு விண்ணவர்க்கு அரசும்
இந்திரர்க்கு அருளி எமக்கும் ஈந்து அருளும் எந்தை எம்மடிகள் எம்பெருமான்
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிர முகத்தினால் அருளி
மந்தரத்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே –1-4-7 | பதவுரை Show / Hideவேலை வாய் வெம்திறல் களிறும், Velaivai Vemthiral Kalirum - கடலில் நின்றுமுண்டான மிக்க மிடுக்கையுடைய ஐராவதமென்கிற யானையையும் அமுதும், Amudhum - அம்ருதத்தையும் விண்ணொடு, Vinnodu - ஸ்வர்க்கலோகத்தையும் விண்ணவர்க்கு அரசும், Vinnavarkku Arasum - தேவர்களுக்கெல்லாம் அரசனாயிருக்குந் தன்மையையும் இந்திரற்கு அருளி, Indhirarku Aruli - இந்திரனுக்குக் கொடுத்தருளி எமக்கும் ஈந்தருளும், Emakkum Eendharulum - நமக்கும் வேண்டிய அருளைச் செய்கிற எந்தை எம் அடிகள் எம்பெருமான், Endhai Em Adigal Emperumaan - ஸர்வேச்வரன் (எங்கே எழுந்தருளியிருக்கிறானென்னில்) அந்தரத்து அமரர், Andharathu Amarar - ஸ்வர்க்கத்திலுள்ள தேவர்களெல்லோரும் அடி இணை வணங்க ஸேவித்துப், Adi Inai Vananga Seviththu - எம்பெருமானுடைய திருவடிகளை ஸேவித்துப் பிரார்த்திக்க ஆயிரம் முகத்தினால் அருளி, Aayiram Mukathinaal Aruli - (அவர்களது வேண்டுகோளின்படி) பலமுகமாகப் பிரவஹிக்கும்படி (கங்கையை நோக்கி) நியமித்தருள மந்தரத்து இழிந்த, Mandarathu Izhintha - (அவ்வண்ணமாகவே) மந்தர மலையினின்றும் பெருகின கங்கையின் கரை மேல், Gangaiyin Karai Mel - கங்கையின் கரைமீதுள்ள வதரியாச்சிராமத்து உள்ளான், Vathariyachiramaithu Ullaan - ஸ்ரீபதரிகாச்ரமத்திலே உள்ளவன்.’ |
| 985 | பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மாரீசனாகிற மாயமான் மேலே அம்பு எய்து அதனை முடித்தவனும், பரமபக்தனான ப்ரஹ்லாதனுக்குக் கொடுமையியற்றி மஹாத்ரோஹியான ஹிரண்யகசிபுவின் மார்பைப் பிளந்தொழித்தவனும், பிரமனால் சிவனுக்கு நேர்ந்த ப்ரஹ்மஹத்திசாபத்தைத் தொலைத்தருளினவனுமான எம்பெருமான் வதரியாச்சிரமத்துள்ளான்.) 8 | மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த மன்னவன் பொன்னிறத்து உரவோன்
ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து அயன் அரனைத்
தான் முனிந்திட்ட வெந்திறல் சாபம் தவிர்த்தவன் தவம் புரிந்து உயர்ந்த
மா முனி கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானே –1-4-8 | பதவுரை Show / Hideஒருகால், Orukal - (பஞ்சவடியில் எழுந்தருளியிருந்த) ஒரு ஸமயத்தில் மான் முனிந்து, Maan Muninthu - மாரிசமாயமானின் மேற் சீறி வரி சிலை வளைத்த மன்னவன், Vari Silai Valaitha Mannavan - அழகிய வில்லை (அந்த மான் மேலே) வளைத்தெறிந்த செருக்கனாயும் பொன் நிறத்து உரவோன், Pon Nirathu Uravon - பொன்போன்ற நிறத்தையுடைய ஹிரண்யனென்னுமொரு பலிஷ்டனுடைய ஊன் முனிந்து, Oon Muninthu - உடலை ஒழித்து விடுவதாகச் சீற்றங்கொண்டு அவனது உடல் இரு பிளவு ஆ, Avanathu Udal Iru Pilavu Aa - அவ்வசுரனுடைய சரீரம் இரண்டு பிளவாம்படி உகிர் நுதி மடுத்து, Ukir Nuthi Maduthu - நகங்களின் நுனியை (அவ்வுடலில்) அழுத்தினவனாயும், அயன் தான் அரனை முனிந்து, Ayan Thaan Aranai Muninthu - நான்முகக் கடவுள் சிவன் மேல் சீறி இட்ட, Itta - (அவனுக்குக்) கொடுத்த வெம் திறல் சாபம் தவிர்த்தவன், Vem Thiral Saapam Thavirnthavan - மிகவும் க்ரூரமான சாபத்தைப் போக்கினவனாயுமுள்ள எம் பெருமான் (எங்குள்ளானெனில்;) தவம் புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த, Thavam Purinthu Uyarndha Maa Muni Konarntha - தபஸ்விகளில் தலைவரான பகீரதர் கொண்டுவந்த கங்கையின் கரைமேல், Gangaiyin Karameel - கங்கையின் கரைமீதுள்ள வதரியாச்சிராமத்து உள்ளான், Vathariyachiramaithu Ullaan - ஸ்ரீபதரிகாச்ரமத்திலுளன். |
| 986 | பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸகல பதார்த்தங்களையும் பிரளயங் கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்து நோக்கினவனும் உபயவிபூதி நாதனு மான எம்பெருமான் வதரியாச்சிரமத்துள்ளான்.) 9 | கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர்க் குரை கடல் உலகுடன் அனைத்தும்
உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த உம்பரும் ஊழியும் ஆனான்
அண்டமூடறுத்து அன்று அந்தரத்து இழிந்து அங்கவனி யாளலமர பெருகு
மண்டு மா மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிரமத்துள்ளானே –1-4-9 | பதவுரை Show / Hideகொண்டல், Kondal - மேகங்களையும் மாருதங்கள், Marudhangal - வாயுஸமூஹத்தையும் குலம் வரை, Kulam Varai - குலபர்வதங்களையும் தொகு நீர் குரை கடல், Thogu Neer Kurai Kadal - நீர் நிறைந்து கோஷம் செய்கிற கடல்களையும் உலகு அனைத்தும், Ulaku Anaithum - மற்றுமெல்லா வுலகங்களையும் உடன் உண்ட மா வயிற்றோன், Udan Unda Maa Vayittron - ஏககாலத்தில் அமுதுசெய்த பெரிய திருவயிறுடையனும், ஒண் சுடர் ஏய்ந்த உம்பரும் ஊழியும் ஆனான், On Sudar Ayndha Umbarum Oozhiyum Aanaan - சந்திரஸூர்யர்கள் பொருந்தியிருக்கிற மேலுலகத்திற்கும் காலம் முதலிய ஸகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகனுமான எம்பெருமான் (எங்குளன் எனில்) அன்று, Anru - பகீரதன் கங்கையை அவதரிப்பித்த அப்போது அண்டம் ஊடு அறுத்து, Andam Oodu Aruththu - ப்ரஹ்மலோகத்தை இடைவெளி யாக்கிக்கொண்டு அந்தரத்து இழிந்து, Antharathu Izhindhu - ஆகாசத்தில் வந்திழிந்து அங்கு, Angu - அங்கு நின்றும் அவனியாள் அலமர பெருகும், Avaniyal Alamara Perugum - பூமி நடுங்கும்படியாக (பூமியிலே) ப்ரவஹித்ததும் மண்டு மா மணி நீர், Mandhu Maa Mani Neer - நெருங்கி நிறைந்து தெளிந்த ஜலத்தை யுடையதுமான கங்கையின் கரை மேல், Gangaiyin Karai Mel - கங்கையின் கரைமேலுள்ள வதரியாச்சிராமத்து உள்ளான், Vathariyachiramaithu Ullaan - ஸ்ரீபதரிகாச்ரமத்திலுள்ளான். |
| 987 | பெரிய திருமொழி || (ஏனம் முனாகி) - -(திருவதரியாச்சிராமம் ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டும் பாசுரம் இது.) 10 | வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரை மேல் வதரி யாச்சிராமத்துள்ளானை
கரும் கடல் முந்நீர் வண்ணனை எண்ணிக் கலியன் வாயொலி செய்த பனுவல்
வரம் செய்த வைந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகுடன் மருவி
இரும் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ் இமையவராகுவர் தாமே –1-4-10 | பதவுரை Show / Hideவரும் திரை மணி நீர் கங்கையின் கரை மேல், Varum Thirai Mani Neer Gangaiyin Karai Mel - (பெரிய வேகத்தோடு) வருகிற அலைகளை யுடைத்தாய் தெளிந்த ஜலத்தை யுடைத்தான கங்கையின் கரை மேல், Gangaiyin Karai Mel - கங்கையின் கரை மேலே வதரியாச்சிராமத்து உள்ளானை, Vathariyachiramaithu Ullanai - ஸ்ரீபதரிகாச்ரமத்தில் எழுந்தருளியிருக்கிற கரு முந்நீர் கடல் வண்ணனை, Karum Munneer Kadal Vannana - கறுத்த மூன்று வகைப்பட்ட நீரையுடைய கடல் போன்ற நிறத்தனான ஸ்ரீமந் நாராயனனை. எண்ணி, Enni - அநுஸந்தித்து கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார் வாய் ஒலி செய்த, Vaai Oli Seitha - திருவாய்மலர்ந்தருளிய பனுவல், Panoval - பாசுரமாய் வரம் செய்த, Varam Seitha - சிறந்ததான ஐந்தும் ஐந்தும், Aindhum Aindhum - இப்பத்துப்பாசுரங்களையும் வல்லார்கள் தாம், Vallargal Thaam - ஓதவல்லவர்கள் வெண் குடை கீழ், Ven Kudai Keel - வெண் கொற்றக் குடையின் கீழ் வாழ்ந்து கொண்டு இரு கடல் உலகம் ஆண்டு, Iru Kadal Ulagam Aandu - பெரிய கடல்சூழ்ந்த இப்பூமியை ஆண்டபின் உடன், Udan - அடுத்தபடியாக வானவர் உலகு மருவி, Vaanavar Ulagu Maruvi - ப்ரஹ்மலோக நிர்வாஹகராக இருந்து இமையவர் ஆகுவர், Imaiyavar Aaguvar - (அதன் பிறகு) நித்யசூரியளாகவும் ஆவர்கள். |