திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1-8 கொங்கு அலர்ந்த (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1018பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கொங்கலர்ந்த மலர்க்குருந்த மொசித்த கோவலனாய் எம்பிரானாய் சங்கு தங்கு தடங்கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினனாய் பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணனான எம்பெருமானது இருப்பிடமாகிய பொங்கு நீர் செங்கயல் திளைக்குஞ்சுனைத் திருவேங்கடத்தை நெஞ்சமே! அடை என்கிறார்.) 1
கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான் சங்கு தங்கு தடம் கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினன் பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம் பொங்கு நீர்ச் செங்கயல் திளைக்கும் சுனைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே –1-8-1
பதவுரை Show / Hide
கொங்கு அலர் ந்த மலர் குருந்தம் ஒசித்த, Kongu Alar Nda Malar Kurundham Osiththa - பரிமளம் வீசுகின்ற பூக்கள் நிறைந்த குருந்த மரத்தை முறித்தழித்த
கோவலன், Kovalon - கோபால க்ருஷ்ணனாய்
எம்பிரான், Embiran - அஸ்மத்ஸ்வாமியாய்
சங்கு தங்கு தட கடல் துயில் கொண்ட, Sangu Thangu Thada Kadal Thuyil Konda - சங்குகள் தங்கியிருக்கிற பெரிய கடலிலே திருக்கண் வளர்கின்ற
தாமரை கண்ணினன், Thamarai Kanninann - புண்டரீகாக்ஷனாய்,
பொங்கு புள்ளினை வாய் பிளந்த, Pongu Pullinai Vai Pilantha - செருக்குடன் கிளர்ந்து வந்த பகாஸூரன் வாயைக் கிழித்தெறிந்த
புராணர்தம் இடம், Puranartham Idam - புராண புருஷனான ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளியிருக்கு மிடமாயும்
பொங்கு நீர், Pongu Neer - நீர்வளமுடையதாய்
செம் கயல் திளைக்கும், Sem Kayal Thilaikkum - சிவந்த மீன்கள் களித்து வாழப்பெற்ற
சுனை, Sunai - சுனைகளையுடையதாயுமிருக்கிற
திருவேங்கடம், Thiruveengadam - திருமலையை
நெஞ்சமே அடை, Nenjamai Adai - நெஞ்சே! நீ அடைந்திடு.
1019பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கம்ஸனால் ஏவப்பட்டு முலை கொடுக் கிற வியாஜத்தாலே ஸ்ரீ க்ருஷ்ண சிசுவை முடித்திடவேணுமென்று முலையிலே விஷம் தடவிக்கொண்டு தாய்போல வந்த பூதனையென்னும் பேய்ச்சியானவள் கதறும்படியாக அவளுடைய முலையையும் உயிரையும் உறிஞ்சியுண்ட பெருமான், பிரமன் முதலியோர்க்கு முகங்கொடுப்பதற்காகப் பள்ளி கொண்டருளுமிடம் திருப்பாற்கடல்;) 2
பள்ளியாவது பாற் கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை பிள்ளையாய் உயிர் உண்ட வெந்தை பிரானவன் பெருகுமிடம் வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள் தொறும் தெள்ளியார் வணங்கும் மலைத் திரு வேம்கடம் அடை நெஞ்சே –1-8-2
பதவுரை Show / Hide
வன் பேய், Van Pei - கல்நெஞ்சை யுடையளான பூதனை யென்பவள்
இரங்க, Iranga - கதறும்படியாக
முலை, Mulai - (அவளது) முலையை
பிள்ளை ஆய், Pillai Aay - சிறு குழந்தையாயிருக்கச் செய்தே
உயிர், Uyir - உயிருடன்
உண்ட, Unda - உறிஞ்சி அமுதுசெய்த
எந்தை பிரான், Endhai Piraan - ஸ்ரீக்ருஷ்ணபகவான்
பள்ளி ஆவது, Palli Aavathu - பள்ளி கொள்ளுமிடமாவது
பாற்கடல் அரங்கம், Paarkadal Arangam - திருப்பாற்கடலும் திருவரங்கமுமாம்;
அவன், Avan - அப்பெருமான்
பெருகும் இடம், Perugum Idam - வளருகிற இடமாயும்,
தெள்ளியார், Thelliyar - தெளிந்த ஞானிகள்,
வெள்ளியான் கரியான் மணி நிறம் வண்ணன் என்று எண்ணி, Velliyan Kariyan Mani Niram Vannan Endru Enni - (கிருதயுகத்தில்) வெளுத்த நிறத்தனாயும் (கலியுகத்தில்) கறுத்த நிறத்தனாயும் (த்வாபரயு கதில்) சாமநிறத்தனா யுமிருப்பவன் என்று தியானித்துக் கொண்டு
நாள் தொறும், Naal Thorum - ஒவ்வொரு நாளும்
வணங்கும், Vanangum - வணங்கப்பெற்றதாயு முள்ள
திருவேங்கடம் மலை, Thiruveengadam Malai - திருமலையை
நெஞ்சே அடை, Nenje Adai - மனமே! ஆச்ரயி.
1020பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சயனித்தருளும்படியையும் நின்றருளும்படியையும் கீழ்ப்பாட்டில் அநுஸந்தித்தார்; நடந்தருளும்படியை இப்பாட்டில் அநுஸந்திக்கிறார்.) 3
நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான் என்றும் வானவர் கை தொழும் இணைத் தாமரை யடி எம்பிரான் கன்றி மாரி பொழிந்திடக் கடிதாநிரைக் கிடர் நீக்குவான் சென்று குன்றம் எடுத்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-3
பதவுரை Show / Hide
நின்ற, Nindra - பேராமல் நின்று கொண்டிருந்த
மா மருது, Maa Maruthu - பெரிய மருதமரங்களிரண்டும்
இற்று வீழ, Itru Veela - முறிந்து விழும்படியாக
நடந்த, Nadanda - நடைகற்ற
நின்மலன், Ninmalan - நிர்மலனும்,
நேமியான், Nemiyan - திருவாழியை யுடையவனும்,
என்றும், Endrum - எப்போதும்
வானவர், Vaanavar - நித்யஸூரிகள்
கை தொழும், Kai Thozum - ஸேவிக்கப்பெற்ற
தாமரை அடி இணை எம்பிரான், Thamarai Adi Inai Empran - இரண்டு திருவடித் தாமரைகளை யுடைய ஸ்வாமியும்,
கன்றி, Kandri - (இந்திரன்) கோபங்கொண்டு
மாரி, Maari - மழையை
பொழிந்திட, Pozhindida - பெய்வித்தவளவிலே
ஆ நிரைக்கு, A Niraikku - பசுக்கூட்டங்களுக்கு
இடர்நீக்குவான், Idarnikkuvan - துன்பம் தொலைப்பதற்காக
சென்று, Sendru - போய்
குன்றம் எடுத்தவன், Kundram Eduththavan - கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்தவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற
1021பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாண்டவர்களுக்காகப் பாரதயுத்தம் நடத்தி வெற்றி பெற்றவனும், இப்படி ஆச்ரிதர்களுக்காகக் காரியஞ் செய்யப்பெற்றதனால் திருமேனி மிக விளங்கப் பெற்றவனும், இடைச்சிகளோடு ராஸக்ரீடை யென்கிற குரவைக்கூத்து ஆடினவனும், தன்னைத் துதிப்பவர்களின் நெஞ்சை விட்டுப் பிரியாதே யிருப்பவனும், இடவெந்தை யென்கிற திவ்யதேசத்திலே இனிதாக எழுந்தருளி யிருப்பவனுமான எம்பெருமானுடைய தாய், பலபல புண்ய தீர்த்தங்களாலும் பெரிய பூஞ்சோலைகளாலும் சூழப்பட்டதான திரு வேங்கட மலையைச் சென்று சேர் மனமே!) 4
பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர் கோத்தங்காயர் தம் பாடியில் குரவை பிணைந்த வெம் கோவலன் ஏத்துவார் தம் மனத்துள்ளான் இட வெந்தை மேவிய வெம்பிரான் தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-4
பதவுரை Show / Hide
அன்று, Andru - முற்காலத்தில்
பார்த்தற்கு ஆய், Paarttharkku Aay - அர்ஜூநனுக்காக
பாரதம், Bharatham - பாரத யுத்தத்திலே
கை செய்திட்டு, Kai Seidittu - கையும் அணியும் வகுத்து
வென்ற, Vendra - வெற்றிபெற்ற
பரம் சுடர், Param Sudar - பரஞ்சோதியானவனும்,
அங்கு ஆயர்தம் பாடியில், Angu Aayartham Paadiyil - அங்கே திருவாய்ப் பாடியிலே
குரவை கோத்து பிணைந்த, Kuravai Koththu Pinaindha - ராஸக்ரீடை செய்தருளின
எம் கோவலன், Em Kovalann - நமது கோபாலனும்,
ஏத்துவார்தம், Aethuvaartham - தன்னைத் துதிப்பவர்களுடைய
மனத்து, Manaththu - நெஞ்சிலே
உள்ளான், Ullaan - வஸிப்பவனும்
இடவெந்தை, Idaventhai - திருவிடவெந்தையிலே
மேவிய, Meviya - பொருந்திய
எம்பிரான், Embiran - அஸ்மத் ஸ்வாமியுமானவன் எழுந்தருளியிருக்கப்பெற்றதும்
தீர்த்தம் நீர் தட சோலை சூழ், Theertham Neer Thada Solai Soozh - புண்ய தீர்த்தங்களாலும் பெரிய சோலைகளாலும் சூழப்பெற்றதுமான
1022பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வேண்டினார்க்கு வேண்டின படியே தானஞ் செய்கிற அஸுர சக்ரவர்த்தியான மஹாபலியினுடைய யாகபூமியிலே வாமநப்பிரமசாரியாய்ச் சென்று கை நீட்டி மூவடி மண் தாவென்று இரந்தவனும், ஸுக்ரீவனுக்கு நம்பிக்கையுண்டாவதற்காக ஸப்த ஸாலவ்ருக்ஷங்களைத் துளை படுத்தின மஹா பலமுடையவனும், ஆச்ரிதரக்ஷணார்த்தமாகத் திவ்யாயுதங்களைத் தரிப்பதற்கான பல திருக்கைகளையுடையவனும், (அல்லது) கச்சிமாநகரி லுள்ள அஷ்டபுஜகரம் என்கிற திவ்ய தேசத்திலே அஷ்டபுஜனாக ஸேவை ஸாதிப்பவனும், இமயமலையில் திருப்பிரிதியென்னும் திருப்பதியிலே யெழுந் தருளியிருப்பவனும், திருமாலிருஞ்சோலையிலே வந்து நிற்பவனும், முதலை வாயிலே அகப்பட்டுத் துடித்த ஸ்ரீ கஜேந்த்ராழ்வானுடைய துன்பத்தைத் தொலைத்தவனுமான பெருமானுடைய திருவேங்கட மலையைச் சென்று சேர் மனமே!) 5
வண் கையான வுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய் மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான் எண் கையான் இமயத்துள்ளான் இருஞ்சோலை மேவிய வெம்பிரான் திண் கைம்மா துயர் தீர்த்தவன் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-5
பதவுரை Show / Hide
வண் கையான், Van Kaiyaan - விசேஷமாக தானஞ்செய்கிற கையையுடையவனாய்
அவுணர்க்கு நாயகன், Avaunarkku Naayagan - அசுரர்கட்குத் தலைவனான மாவலியினது
வேள்வியில், Velviyil - யாக பூமியிலே
மாணி ஆய் சென்று, Maani Aay Senru - பிரமசாரி வேஷத்துடன் எழுந்தருளி
கையால், Kaiyaal - தனது திருக்கையாலே
மண் இரந்தான், Man Irandhaan - பூமியை யாசித்தவனும்
மராமரம் ஏழும், Maraamaram Ezhum - ஏழு மராமரங்களையும்
எய்த, Eytha - துளைபடுத்தின
வலத்தினான், Valaththinaan - வலிவையுடையவனும்
எண் கையான், En Kaiyaan - அஷ்ட புஜங்களையுடையவனும்
இமயத்து உள்ளான், Imayaththu Ullaan - இமயமலையின் கண் (திருப்பிரிதியிலே) எழுந்தருளியிருப்பவனும்
இரு சோலை, Iru Solai - திருமாலிருஞ் சோலையிலே
மேவிய, Meviya - பொருந்திய
எம்பிரான், Embiran - ஸ்வாமியும்
திண் கை மா, Thin Kai Maa - திடமான துதிக்கையையுடைய கஜேந்திரனது
துயர், Thuyar - துன்பத்தை
தீர்த்தவன், Theerthavan - போக்கினவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற
1023பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உலகங்களெல்லாம் பிரளயத்திலே அழுந்திப் போகாதபடி அவற்றைத் தனது திருவயிற்றிலே வைத்து நோக்கி ஓராலந்தளிரிலே பள்ளி கொண்டவனும், சந்திரனுக்கு நேர்ந்த க்ஷயரோகத்தைப் போக்கி யருளினவனும், “அழகியான் தானே அரியுருவன் தானே” என்கிறபடியே அழகிய கோரப்பற்களுடனே மஹாபலசாலியான நரசிங்கமாய்த் திருவவதரித்து, தன் வலிவோடு ஒத்தவலிவுடையனான ஹிரண்யனுடைய மார்விலே நகங்களை யூன்றி அவ்வுடலைப் பிளந்தவனுமான பெருமானுடைய திருவேங்கடத்தைச் சென்று சேர் மனமே!) 6
எண் திசைகளும் ஏழு உலகமும் வாங்கிப் பொன் வயிற்றில் பெய்து பண்டு ஓர் ஆலிலைப் பள்ளி கொண்டவன் பான் மதிக்கிடர் தீர்த்தவன் ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள் எயிற்றொடு திண் திறல் அரியாய் அவன் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-6
பதவுரை Show / Hide
பண்டு, Pandhu - முன்னொருகால்,
எண் திசைகளும், En Thisaigalum - எட்டுத் திக்குகளையும்
ஏழ் உலகமும், Ezh Ulagamum - ஸப்த லோகங்களையும்
வாங்கி, Vaangi - (பிரளயம் கொள்ளாதபடி) எடுத்து
பொன் வயிற்றில், Pon Vayittril - (தனது) அழகிய திருவயிற்றிலே
பெய்து, Peidhu - இட்டுவைத்து
ஓர் ஆல் இலை, Oor Aal Ilai - ஒரு ஆலந்தளிரிலே
பள்ளி கொண்டவன், Palli Kondaavan - சயனித்தருளினவனும்
பால் மதிக்கு, Paal Mathikku - வெளுத்த சந்திரனுக்கு
இடர், Idar - க்ஷயரோகமாகிற துக்கத்தை
தீர்த்தவன், Theerthavan - போக்கினவனும்,
ஒள் எயிற்றோடு, Ol Eiyirtoadu - ஒளிபொருந்திய கோரப் பற்களோடு கூடி
திண் திறல் அரி ஆயவன், Thin Thiral Ari Aayavan - மிக்க வலிவுடைய நரசிங்கமூர்த்தியாகத் தோன்றினவனாய்
ஒண் திறல் அவுணன், On Thiral Aavunan - மஹா பலசாலியான இரணியாசுரனுடைய
உரத்து, Urathu - மார்விலே
உகிர், Ukir - (திருக்கை) நகங்களை
வைத்தவன், Vaiththavan - வைத்து அழுத்தினவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற
1024பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிருதிவி, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் என்கிற பஞ்சபூத ஸ்வரூபியாக நிற்பவன் என்று சொன்னது-ஸகல லோகங்களும் தானிட்ட வழக்கா யிருக்குமவன் என்றபடி.) 7
பாரு நீர் எரி காற்றினோடு ஆகாசமுமிவை யாயினான் பேருமாயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகுமிடம் காரும் வார் பனி நீள் விசும்பிடைச் சோருமா முகில் தோய் தர சேரும்வார் பொழில் சூழ் எழில் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-7
பதவுரை Show / Hide
பாரும் நீர் எரி காற்றினோடு ஆகாசமும் இவை ஆயினான், Paarum Neer Eri Kaatrinodu Aakachamum Ivai Aayinaan - பூமி ஜலம் தேஜஸ் வாயு ஆகாசம் என்கிற பஞ்சபூத ஸ்வரூபியானவனும்
ஆயிரம் பேரும் பேச நின்ற, Aayiram Perum Pesa Nindra - ஸஹஸ்ர நாமங்களாலும் பிரதி பாதிக்கப்படா நிற்பவனும்
பிறப்பு இலி, Pirappu Ili - (கருமமடியாகப்) பிறத்தல் இல்லாதவனுமான எம்பெருமான்
பெருகும் இடம், Perugum Idam - வளருகிற இடமானதும்,-
நீள் விசும்பிடை, Neel Visumbidai - பெரிய ஆகாசத்தினின்றும்
காரும் வார் பனி, Kaarum Vaar Pani - மழைநீரும் மிக்க பனித்துளியும்
சோரும், Soorum - பெய்யப்பெற்றதும்
மாமுகில் தோய்தர, Maamugil Thoythara - (மேலுள்ள) காள மேகங்கள் வந்து படியும்படியாக
சேரும், Serum - பொருத்தமான
வார், Vaar - உயரவோங்கியிருக்கிற
பொழில், Pozhil - சோலைகளாலே
சூழ், Sool - சூழப்பெற்றதும்
எழில், Ezhil - அழகியதுமான
1025பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழ்ப்பாட்டில் “பாரு நீரெரி காற்றினோடு ஆகாயமுமிவையாயினான்” என்ற முதலடியிற் சொன்ன அர்த்தமே இப்பாட்டிலும் முதலடியிற் சொல்லப்படுகிறது. அம்பரம் – ஆகாயம்; தற்சம வடசொல். பிருதிவி, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் என்கிற பஞ்சபூதஸ்வ ரூபியானவனும், நித்யஸூரிகளுக்குத் தலைவனும், அலர்மேல் மங்கைக்குத் துணைவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கப்பெற்ற திருமலையைச் சென்று சேர்மனமே!.) 8
அம்பர மனல் கால் நிலம் சலமாகி நின்ற வமரர் கோன் வம்புலா மலர் மேல் மலி மட மங்கை தன் கொழுநன் அவன் கொம்பின்னன விடை மடக் குற மாதர் நீளிதணம் தொறும் செம்புனமவை காவல் கொள் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-8
பதவுரை Show / Hide
அம்பரம் அனல் கால் நிலம் சலம் ஆகி நின்ற, Ambaram Anal Kaal Nilam Salam Aagi Nindra - ஆகாயம் நெருப்பு காற்று பூமி ஜலம் ஆகிய பஞ்சபூதஸ்வ ரூபியும்
அமரர் கோன், Amarar Kon - நித்ய ஸூரிகட்குத் தலைவனும்
வம்பு உலாம் மலர்மேல் மலி மட மங்கை தன், Vambu Ulaam Malarmel Mali Mada Mangai Than - பரிமளம் உலாவுகின்ற தாமரை மலரின் மேலே பொருந்திய பெரிய பிராட்டியாருக்கு
கொழுநன் அவன், Kozhunaan Aavan - நாயகனுமான எம்பிரான் எழுந்தருளியிருக்கப் பெற்றதும்,
நீள் இதணம் தொறும், Neel Idhanam Thorum - உயர்ந்த பரண்கள் தோறும்
கொம்பின் அன்ன இடை, Kombin Anna Idai - வஞ்சிக் கொம்போடு ஒத்த (நுண்ணிய) இடுப்பையுடைய
மட குற மாதர், Mada Kura Maathar - மடமை தங்கிய குறப்பெண்கள்
செம்புனம் அவை காவல் கொள், Sempunam Avai Kaaval Kol - செவ்விய வயல்களைக் காவல் செய்து கொண்டிருக்கப் பெற்றதுமான
1026பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்திருமொழியில் கீழ்ப்பாசுரங்க ளெல்லாவற்றிலும் ஆழ்வார் தமது திருவுள்ளத்தை நோக்கிக் கூறுதலொன்றே யுள்ளது; பரோபதேசமென்பது இல்லை. இப்பாசுரம் “பேசுமின் திருநாம மெட்டெழுத்தும் ” என்று தொடங்கப்படுகிறது. பேசுமின் என்றால், ‘சொல்லுங்கள்’ ‘ என்று பொருள்படுகையாலே முன்னடிகளிரண்டும் பரோபதேசமென்றும் பின்னடிகளிரண்டும் ஸ்வாத்மோத்போதநமென்றும் கொள்க.) 9
பேசுமின் திருநாமம் எட்டு எழுத்தும் சொல்லி நின்று பின்னரும் பேசுவார் தம்மை உய்ய வாங்கிப் பிறப்பு அறுக்கும் பிரானிடம் வாச மா மலர் நாறுவார் பொழில் சூழ் தரும் உலகுக் கெல்லாம் தேசமாய்த் திகழும் மலைத் திருவேம்கடம் அடை நெஞ்சே –1-8-9
பதவுரை Show / Hide
பேசும், Pesum - எல்லாராலும் அநுஸந்திக்கத் தக்கதும்
இன், In - போக்யமுமான
திரு நாமம் எட்டு எழுத்தும், Thiru Naamam Ettu Ezhuthum - திருவஷ்டாக்ஷர மஹா மந்திரத்தை
சொல்லி நின்று, Solli Nindru - அநுஸந்தித்து
பின்னரும், Pinnaarum - மேன்மேலும்
பேசுவார் தம்மை, Pesuvaar Thammai - (அதனையே) அநுஸந்திப்பவர்களை
உய்யவாங்கி, Uyya Vaangi - உஜ்ஜீவிக்கச்செய்து
பிறப்பு அறுக்கும் பிரான் இடம், Pirappu Arukkum Piraan Idam - (அவர்களது) ஸம்ஸாரத்தைத் தொலைக்கு மெம்பெருமான் எழுந்தருளி யிருக்குமிடமானதும்,
வாசம் மா மலர் நாறும், Vaasam Maa Malar Naarum - மணம்மிக்க சிறந்த புஷ்பங்கள் பரிமளிக்கப்பெற்ற
வார் பொழில், Vaar Pozhil - விசாலமான சோலைகளாலே
சூழ்தரும், Sooltharum - சூழப்பட்டதும்,
உலகுக்கு எல்லாம், Ulagukku Ellam - எல்லா வுலகங்களுக்கும்
தேசம் ஆய் திகழும், Desam Aay Thigalum - திலகம்போன்று விளங்குவதுமான
திருவேங்கடம் மலை, Thiruveengadam Malai - திருமலையை
நெஞ்சமே அடை, Nenjamai Adai - மனமே! அடைந்திடு.
1027பெரிய திருமொழி || (1-8–கொங்கு அலர்ந்த) (திருவேங்கடம் 1 ) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (யௌவனபருவத்திற்குத் தகுதி யாகச் சிவந்த நிறத்தையுடைய கயல்களானவை ஒன்றோடொன்று களித்து விளையாடப்பெற்ற சுனைகளையுடைய திருவேங்கட மலையிலே நித்யவாஸம் செய் தருள்கின்ற பெருமானைக்குறித்துத் திருமங்கைமன்னன் அழகிய தமிழிலே செவ்விய சொல்லாலே அருளிச்செய்த இச்சொல்மாலையைத் தரித்துச் சொல்லவல்லவர்கள் இவ்விபூதியிலுள்ள வளவும் ராஜாதி ராஜர்களாய் விளங்கி, பின்னை நித்திய விபூதிக்கும் நிர்வாஹகராகப் பெறுவர்களென்று இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.) 10
செங்கயல் திளைக்கும் சுனைத் திருவேம்கடத்துறை செல்வனை மங்கையர் தலைவன் கலிகன்றி வண்டமிழ்ச் செஞ்சொல் மாலைகள் சங்கை யின்றித் தரித்து உரைக்க வல்லார்கள் தஞ்சமதாகவே வங்க மா கடல் வையம் காவலராகி வானுல காள்வரே –1-8-10
பதவுரை Show / Hide
செம் கயல், Sem Kayal - (இளமையாலே) சிவந்த மீன்கள்
திளைக்கும், Thilaikkum - களித்து விளையாடப் பெற்ற
சுனை, Sunai - நீர் நிலைகளையுடைய
திரு வேங்கடத்து, Thiru Vengadaththu - திருமலையிலே
உறை, Urai - நித்யவாஸம் பண்ணா நின்ற
செல்வனை, Selvanai - திருமாலைக் குறித்து,
மங்கையர் தலைவன் கலிகன்றி, Mangaiyar Thalaivan Kalikanri - திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரான கலியன் (அருளிச் செய்த)
வண் தமிழ், Van Tamil - அழகிய தமிழினாலாகிய
செம் சொல் மாலைகள், Sem Sol Maalaigal - சிறந்த சொல் மாலையை
சங்கை இன்றி தரித்து உரைக்க வல்லார்கள், Sangai Indri Tharithu Uraikka Vallarhal - ‘இது பலன்தருமோ, தராதோ’ என்கிற ஸந்தேஹமில்லாமல் (விச்வாஸத்துடனே) அப்யஸித்து அநுஸந்திக்க வல்லவர்கள்
வங்கம் மா கடல் வையம், Vangam Maa Kadal Vaiyam - கப்பல்கள் நிறைந்த பெரிய கடலால் சூழப்பட்ட பூமண்டலத்திலுள்ளார்க்கு
தஞ்சம் அது ஆகவே காவலர் ஆகி, Thanjam Adhu Aagave Kaavalar Aagi - புகலிடமாய்க்கொண்டு அவர்களுக்கு ரக்ஷகராகி (இப்படி லீலாவிபூதியை நிர்வஹித்த பின்பு)
வான் உலகு ஆள்வர், Vaan Ulagu Aalvar - பரமபதத்தையும் ஆளப் பெறுவர்கள்.