திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 4-8 கவளயானை (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1318பெரிய திருமொழி || (4-8–கவளயானை) (திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருமாலிடத்து ஈடுபட்ட தலைமகளது செயல்கண்டு நற்றாய் இரங்கிக் கூறுதல் திருவடிகளிலே விழுந்து சரணம் புக்கு-அடியேன் இடரைக் களையாய் -என்று தேவரோட்டை அனுபவத்துக்கு விரோதியைப் போக்கித் தர வேணும் என்று அபேஷித்தார் அவனும் அப்படியே செய்வானாக ஒருப்பட-அது பற்றாமல்-ப்ராப்தியால் உண்டான த்வரையாலே தாமான தன்மை போய்-பிரிந்து-பிரிவாற்றாமையாலே நோவு பட்டு) 1
கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர்க் குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும் தவள மாட நீடு நாங்கைத் தாமரையாள் கேள்வன் என்றும் பவள வாயாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே –4-8-1
பதவுரை Show / Hide
வெருவாதாள், Veruvaathal - அஞ்சாதவளாய்க் கொண்டு (- (என் பெண் பிள்ளையானவள்) (வேங்கடமே வேங்கடமே என்கின்றாள்–;))
வாய் வெருவி, Vaai Veruvi - வாய்பிதற்றுகின்றவளாய்
என்குடங்கால் மருவாள், Enkudankaal Maruvaal - எனதுமடியில் பொருந்து கின்றிலள்;
வாள் நெடு கண் துயில் மறந்தாள், Vaal Nedu Kan Thuyil Marandhaal - வாள்போன்று நீண்ட கண்களிலே உறக்கத்தை மறந்துவிட்டாள்;
வண்டு, Vandu - வண்டுபோலவும்
ஆர் கொண்டல், Aar Konda - பூர்ண மேகம்போலவும்
உரு ஆளன், Uru Aalan - திருவுருவமுடையவனும்
வானவர் தம் உயிர் ஆளன், Vaanavar Tham Uyir Aalan - நித்யஸூரிகளுக்கு உயிராயிருப்பவனும்
ஒலி திரை நீர், Oli Thirai Neer - கோஷிக்கின்ற அலைநீர்
பௌவம் கொண்ட திரு ஆளன், Pauvam Konda Thiru Alan - பொருந்திய கடலில் நின்றும் கொள்ளப்பட்ட பிராட்டியை ஆள்பவனமான எம்பெருமான்
என் மகளை செய்தனகள், En Magalai Seithanagal - எனது பெண்பிள்ளை திறத்துச்செய்தவகைகளை
நான் எங்ஙனம் சிந்திக்கேன், Naan Engganam Sindhikkeen - நான் நினைக்கத்தான் முடியுமோ?
1319பெரிய திருமொழி || (4-8–கவளயானை) (திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருமாலிடத்து ஈடுபட்ட தலைமகளது செயல்கண்டு நற்றாய் இரங்கிக் கூறுதல் திருவடிகளிலே விழுந்து சரணம் புக்கு-அடியேன் இடரைக் களையாய் -என்று தேவரோட்டை அனுபவத்துக்கு விரோதியைப் போக்கித் தர வேணும் என்று அபேஷித்தார் அவனும் அப்படியே செய்வானாக ஒருப்பட-அது பற்றாமல்-ப்ராப்தியால் உண்டான த்வரையாலே தாமான தன்மை போய்-பிரிந்து-பிரிவாற்றாமையாலே நோவு பட்டு) 2
கஞ்சன் விட்ட வெஞ்சினத்த களிறு அடர்த்த காளை என்றும் வஞ்சி மேவி வந்த பேயின் உயிரை யுண்ட மாயன் என்றும் செஞ்சொல் ஆளர் நீடு நாங்கைத் தேவ தேவன் என்று ஓதி பஞ்சி யன்ன மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே –4-8-2
பதவுரை Show / Hide
அகல் அல்குல் கலை ஆளா, Akal Alkul Kalai Aala - அகன்ற நிதம்பமானது வஸ்த்ரத்தை தரிக்கின்றதில்லை; (- (என் மகளை செய்தனகள் எங்ஙனம்) (நான் சிந்திக்கேன்))
கை கனம் வளையும் ஆளா, Kai Kanam Valaiyum Aala - கைகளானவை பொன் வளைகளை ஆள்கின்றனவில்லை;
நான் என் செய்கேன், Naan En Seigkeen - (இதற்கு) நான் என்ன பண்ணுவேன்?
அடியேன், Adiyean - “அடியவளாகிய என்னை
விலை ஆள் ஆ, Vilai Aal Aa - பிறர்க்கு விற்கவும் உரிய வேலைக்காரியாக (க் கொள்ள)
வேண்டுதியோ, Vendudiyoo - திருவுள்ளம் பற்றுவாயோ?
வேண்டாயோ, Vendaayo - மாட்டாயோ?”
என்னும், Ennum - என்கிறாள்;
மெய்யம் மலை ஆளன், Meyyam Malai Alan - திருமெய்யமலையை இருப்பிடமாக வுடையவனும்
வானவர் தம் தலையாளன், Vaanavar Tham Thalaiyalan - நித்யஸூரிகளுக்குத் தலைவனாயிருப்பவனும்
ஏழ் மாமரம் எய்த வென்றி சிலை ஆளன், Ezha Mamaram Eytha Vendri Silai Alan - ஸப்தஸாலவ்ருக்ஷங்களைத் துளைத்த ஜயசீலமான அம்மை உடையவனமான பெருமான்
1320பெரிய திருமொழி || (4-8–கவளயானை) (திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருமாலிடத்து ஈடுபட்ட தலைமகளது செயல்கண்டு நற்றாய் இரங்கிக் கூறுதல் திருவடிகளிலே விழுந்து சரணம் புக்கு-அடியேன் இடரைக் களையாய் -என்று தேவரோட்டை அனுபவத்துக்கு விரோதியைப் போக்கித் தர வேணும் என்று அபேஷித்தார் அவனும் அப்படியே செய்வானாக ஒருப்பட-அது பற்றாமல்-ப்ராப்தியால் உண்டான த்வரையாலே தாமான தன்மை போய்-பிரிந்து-பிரிவாற்றாமையாலே நோவு பட்டு) 3
அண்டர் கோன் என் ஆனை என்றும் ஆயர் மாதர் கொங்கை புல்கு செண்டன் என்றும் நான் மறைகள் தேடி யோடும் செல்வன் என்றும் வண்டு உலவு பொழில் கொள் நாங்கை மன்னு மாயன் என்று என்று ஓதி பண்டு போல் அன்று என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே –4-8-3
பதவுரை Show / Hide
மான் ஆய மென் நோக்கி, Maan Aaya Men Nookki - மானின் நோக்குப் போன்ற அழகிய நோக்கை உடையளான என் மகள், (- (அம்மனைமீர் அறிகிலேன்–.))
வாள் நெடு கண் நீர் மல்கும், Vaal Nedu Kan Neer Malkum - ஒளி பொருந்திய நீண்ட கண்கள் நீர் நிரம்பப் பெற்றிருக்கின்றாள்;
வளையும், Valaiyum - (இவளது) வளைகளும்
சோரும், Sorum - (கையில் நின்று) நழுவாநின்றன;
தேனாய, Thenaya - தேனைக்கொண்ட
நறு துழாய், Naru Thuzhai - மணம்மிக்க திருத்துழாயினாலாகிய
அலங்கலின், Alangalin - மாலையினுடைய
திறம், Thiram - பரிசுகளை
பேசி, Peshi - சொல்லிக்கொண்டு
உறங்காள், Urangaal - உறக்கமற்றிருக்கின்றாள்;
காண்மின், Kaanmin - (இந்நிலைமையைக்) கண் கொண்டுபாருங்கள்;
கான் ஆயன், Kaan Aayan - காட்டிலே திரியுமவனும்
கடி மனையீல், Kadi Manaiyil - காவலுள்ள வீடுகளிலும்
தயிர் உண்டு, Thayir Undu - தயிரை உட்கொண்டு
நெய் பருக, Ney Paruga - நெய்யைக் குடிக்கும்படியாக
நந்தன் பெற்ற, Nandhan Pettra - நந்தகோபர் பெற்ற
ஆன் ஆயன், Aan Aayan - கோபாலக்ருஷ்ணனுமான பெருமான்
என் மகளை செய்தனகள், En Magalai Seithanagal - என் பெண்பிள்ளையைப் பண்ணின படிகளை
1321பெரிய திருமொழி || (4-8–கவளயானை) (திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருமாலிடத்து ஈடுபட்ட தலைமகளது செயல்கண்டு நற்றாய் இரங்கிக் கூறுதல் திருவடிகளிலே விழுந்து சரணம் புக்கு-அடியேன் இடரைக் களையாய் -என்று தேவரோட்டை அனுபவத்துக்கு விரோதியைப் போக்கித் தர வேணும் என்று அபேஷித்தார் அவனும் அப்படியே செய்வானாக ஒருப்பட-அது பற்றாமல்-ப்ராப்தியால் உண்டான த்வரையாலே தாமான தன்மை போய்-பிரிந்து-பிரிவாற்றாமையாலே நோவு பட்டு) 4
கொல்லை யானாள் பரிசு அழிந்தாள் கோல் வளையார் தம் முகப்பே மல்லை முந்நீர் தட்டிலங்கை கட்டழித்த மாயன் என்றும் செல்வ மல்கு மறையோர் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி பல்வளையாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே –4-8-4
பதவுரை Show / Hide
தாய் வாயில் சொல் கேளாள், Thaai Vayil Sol Kelaal - தாயாகிய என்னுடைய வாய்ச் சொல்லை (என்மகள்) கேட்பதில்லை; (- (நங்காய்!, மங்கைமீர்!-;))
தன் ஆயத்தோடு அணையாள், Than Aayaththodu Anaiyaal - தனது தோழிமார்களுடன் கூடுவதில்லை;
தட மென் கொங்கையே ஆர சாந்து அணியாள், Thada Men Kongaiye Aara Santhu Anaiyaal - பருத்து மெல்லிதான (தனது) முலைகளையும் அழகாக சந்தனத்தினால் (முன்பு போல) அலங்கரிக்கின்றாளில்லை
எம்பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும், Emperumaan Thiru Arangam Engae Ennum - ‘என் ஸ்வாமி யெழுந்தருளியிருக்கிற திருவரங்கம் எங்கே?’ என்கிறாள்;
பேய் மாய முலை உண்டு, Pei Maaya Mulai Undu - பேய்ச்சியான பூதனை முடியும் படியாக (அவளது) முலைப் பாலைப் பருகி
இ உலகு உண்ட பெருவயிற்றன், I Ulaku Unda Peruvayitran - இவ்வுலகங்களையும் அமுது செய்த பெரிய திருவயிற்றையுடையனான
மா மாயன், Maa Maayan - மிகக் ஆச்சர்ய பூதன்
என் மகளை செய்தனகள், En Magalai Seithanagal - என் பெண்பிள்ளைக்குச் செய்தவற்றை
பேசில், Pesil - சொல்லப்புகுந்தால்
மதிக்கிலேன், Mathikkileen - அளவிட்டுச் சொல்ல மாட்டுகின்றிலேன்.
1322பெரிய திருமொழி || (4-8–கவளயானை) (திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருமாலிடத்து ஈடுபட்ட தலைமகளது செயல்கண்டு நற்றாய் இரங்கிக் கூறுதல் திருவடிகளிலே விழுந்து சரணம் புக்கு-அடியேன் இடரைக் களையாய் -என்று தேவரோட்டை அனுபவத்துக்கு விரோதியைப் போக்கித் தர வேணும் என்று அபேஷித்தார் அவனும் அப்படியே செய்வானாக ஒருப்பட-அது பற்றாமல்-ப்ராப்தியால் உண்டான த்வரையாலே தாமான தன்மை போய்-பிரிந்து-பிரிவாற்றாமையாலே நோவு பட்டு) 5
அரக்கராவி மாள வன்று ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற குரக்கரசன் என்றும் கோல வில்லி என்றும் மா மதியை நெருக்கு மாட நீடு நாங்கை நின்மலன் என்று என்று ஓதி பரக்கு அழிந்தாள் என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே –4-8-5
பதவுரை Show / Hide
பூண் முலை மேல் சாந்து அணியாள், Poon Mulai Mel Santhu Aniyal - ஆபரணங்கள் அணிந்த முலையின்மேல் சந்தனத்தை பூசுகின்றாளில்லை; (- (என் மகளை செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேன்))
பொரு கயல் கண் மை எழுதாள், Poru Kayal Kan Mai Ezhuthal - ஒன்றோடொன்று சண்டை செய்யுமிரண்டு மீன்கள் போன்றுள்ள கண்களிலே மையிட்டுக் கொள்ளுகிறாளில்லை;
பூவை பேணாள், Poovai Penal - (தான் வளர்த்துக் கொண்டிருந்த) பூவைப் பட்சியையும் ஆதரிக்கின்றாளில்லை;
எத்தனையும் ஏண் அறியாள், Ethanaiyum Aen Ariyal - எந்த வஸ்துவையும் நெஞ்சினால் நினைக்கின்றாளில்லை;
எம்பெருமான் திரு அரங்கம் எங்கே என்னும், Emperumaan Thiru Arangam Engae Ennum - ‘என் ஸ்வாமியின் திருவரங்கம் எங்கே?’ என்பதொரு வார்த்தையையே சொல்லிக் கொண்டிருக்கிறாள்;
நாள் மலராள் நாயகன் ஆய், Naal Malaraal Naayagan Aay - செவ்வித்தாமரைப்பூவிற் பிறந்த பிராட்டிக்கு வல்லபனானவனும்
நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி, Naam Ariya Aayppadi Valarntha Nambi - நமக்கெல்லாம் தெரியும்படியாகத் திருவாய்ப்பாடியில் வளர்ந்தவனுமான பெருமான்
ஆண் மகன் ஆய், Aan Magan Aay - பெரிய ஆண்பிள்ளையாய்க் கொண்டு
1323பெரிய திருமொழி || (4-8–கவளயானை) (திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருமாலிடத்து ஈடுபட்ட தலைமகளது செயல்கண்டு நற்றாய் இரங்கிக் கூறுதல் திருவடிகளிலே விழுந்து சரணம் புக்கு-அடியேன் இடரைக் களையாய் -என்று தேவரோட்டை அனுபவத்துக்கு விரோதியைப் போக்கித் தர வேணும் என்று அபேஷித்தார் அவனும் அப்படியே செய்வானாக ஒருப்பட-அது பற்றாமல்-ப்ராப்தியால் உண்டான த்வரையாலே தாமான தன்மை போய்-பிரிந்து-பிரிவாற்றாமையாலே நோவு பட்டு) 6
ஞாலம் உற்றும் உண்டு உமிழ்ந்த நாதன் என்றும் நானிலம் சூழ் வேலை யன்ன கோல மேனி வண்ணன் என்றும் மேல் எழுந்து சேல் உகளும் வயல் கொள் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதி பாலின் நல்ல மென் மொழியாள் பார்த்தான் பள்ளி பாடுவாளே –4-8-6
பதவுரை Show / Hide
தாது ஆடு வனமாலை தாரானோ என்று என்று தளர்ந்தாள், Thadu Aadu Vanamalai Thaarano Endru Endru Thalarndhaal - ‘தாதுக்கள் நிரம்பிய வனமாலையை எனக்குத் தந்தருளமாட்டானோ?’ என்று பலகால் சொல்லி சோர்வடைந்தாள்; (- (என் மகளை செய்தனகள் நான் எங்ஙனம் சொல்லுகேன்?))
யாதாலும் ஒன்று உரைக்கில், Yaathaalum Onru Uraikkil - (அவளுக்கு அடக்கமுண்டாகும்படி நாம்) ஏதாவதொரு வார்த்தை சொன்னால் (அதற்கு மறுமொழியாக)
எம்பெருமான் திரு அரங்கம் என்னும், Emperumaan Thiru Arangam Ennum - ‘எம்பெருமான் திருவரங்கம்’ என்கிற வார்த்தையொன்றே சொல்லுகின்றாள்;
பூ மேல் மாது ஆளன், Poo Mel Maathu Aalan - பூவிற்பிறந்த பிராட்டிக்கு வல்லபனும்
குடம் ஆடி, Kudam Aadi - குடக்கூத்தாடினவனும்
மதுசூதன், Madhusoodhan - மதுவென்னமசுரனைக் கொன்றவனும்
முன்னம் மன்னர்க்கு ஆய் தூது சென்ற ஆளன், Munnam Mannarkku Aay Thoodhu Senra Aalan - முன்பொருகால் பஞ்சபாண்டவர்களுக்காக தூது நடந்தவனுமான ஸ்வாமி
1324பெரிய திருமொழி || (4-8–கவளயானை) (திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காலும் பாடகமும் பொருந்தின படியை அவன் பாடா இருக்குமவள் அவனூரைப் பாடா நின்றாள்) 7
நாடி என்தன் உள்ளம் கொண்ட நாதன் என்றும் நான் மறைகள் தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் என்றும் சிறை கொள் வண்டு சேடுலவு பொழில் கொள் நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதிப் பாடகம் சேர் மெல்லடியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே –4-8-7
பதவுரை Show / Hide
வார்ஆளும் இள கொங்கை, Vaar Aalum Ila Kogai - கச்சையிட்டுக் கட்டி ஆளக்கடவதான (தனது) இள முலைகள் (- (என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் செப்புகேன்))
வண்ணம் வேறு ஆயின ஆறு எண்ணாள்;, Vannam Veeru Aayin Aaru Ennaal - நிறம் வேறுபட்ட விதத்தை நினைக்கின்றாளில்லை
எண்ணில், Ennil - ஏதேனுமொன்றை எண்ணப்புகுந்தால்
பேராளன் பேர் அல்லால் பேசாள், Peraalan Per Allal Pesal - ஸர்வேச்வரனது திருநாமங்களைத் தவிர வேறொன்றையும் பேசுகிறாளில்லை;
இ பெண் பெற்றேன் நான், I Pen Petraen Naan - இப்படிப்பட்ட பெண்ணைப் பெற்றேன் நான்
என் செய்கேன், En Seykain - என்ன பண்ணுவேன்?;
தார் ஆளன், Thaar Aalan - திருமாலை சாத்திக்கொண்டிருப்பவனும்
தண் குடந்தை நகர் ஆளன், Than Kudanthai Nagar Aalan - குளிர்ந்த திருக்குடந்தை நகரை ஆள்பவனும்
ஐவர்க்கு ஆய், Aivarkku Aay - பஞ்சபாண்டவர்களுக்காக
அமரில், Amaril - (பாரதப்) போரில்
உய்த்த தேராளன், Uytta Theralan - நடத்தப்பட்ட தேரையுடையனுமான பெருமான்
1325பெரிய திருமொழி || (4-8–கவளயானை) (திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பலரும் தன்னைப் பழிக்க-அவர்களை தனக்கு கூட்டு என்று-அவனூரைப் பாடுவாள் ஆனாள் ஊரவர் கவ்வை எரு விட்டு -ஏசுவதே பாடுகைக்கு உடல்) 8
உலகம் ஏத்தும் ஒருவன் என்றும் ஒண் சுடரோடு உம்பர் எய்தா நிலவும் ஆழிப் படையான் என்றும் நேசன் என்றும் தென் திசைக்குத் திலதம் அன்ன மறையோர் நங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதிப் பலரும் ஏச என் மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே –4-8-8
பதவுரை Show / Hide
உறவு ஆதும் இவள் என்று என்று, Uravum Aadhum Ival Endru Endru - ‘தாய் தந்தையர் என்கிற உறவு முறைகளைச் சிறிதும் உடையளல்லள்’ என்று பலகால் சொல்லி (- (இப்பெண்பிள்ளையோ வென்னில்) (மாயவனே! மாதவனே! என்கின்றாள்;) (என் மகளை செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேன்))
பலர் ஒழியாது ஏசும் அலர் ஆயிற்று, Palarl Ozhiyadhu Aesum Alar Aayitru - பலபேர்கள் எப்போதும் குறைகூறும்படியான பழி விளைந்திட்டது;
மறவாதே எப்பொழுதும், Maravadhe Eppozhudhum - மறவாமல் ஸர்வகாலமும்
பிறவாத பேராளன், Piravatha Peralan - கருமங்காரணமான பிறப்பையுடையனாகாத பெருமை பொருந்தியவனும்
பெண் ஆளன், Pen Aalan - பெண் பிறந்தாரைத் தனக்காகவுடையவனும்
மண் ஆளன், Man Aalan - மண்ணுலகத்தவர்களை ஆள்பவனும்
விண்ணோர் தங்கள் அறவாளன், Vinnor Thangal Aravaalan - நித்யஸூரிகளுக்குப் பரமதார்மிகனாயிருப்பவனுமான பெருமான்
1326பெரிய திருமொழி || (4-8–கவளயானை) (திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ கிருஷ்ணன் என்றும் ப்ரஹ்மாதிகள் ஸ்நேஹத்தைப் பண்ணி புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்கும் படியாக அவர்கள் மநோ ரதத்தே நிற்கிறவன் என்றும் ஆனந்தாவஹன் என்றும்–ஜகத் காரண பூதன் என்றும் ஸ்ரீ நாங்கை யிலே வர்த்திக்கிற தேவ தேவன் என்றும் ஓதி பண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே) 9
கண்ணன் என்றும் வானவர்கள் காதலித்து மலர்கள் தூவும் எண்ணன் என்றும் இன்பன் என்றும் ஏழு உலகுக்கு ஆதி என்றும் திண்ண மாடு நீடு நாங்கைத் தேவ தேவன் என்று என்று ஓதிப் பண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே –4-8-9
பதவுரை Show / Hide
சேல் உகளும் வயல் புடை சூழ் திருஅரங்கத்து அம்மானை, Sel Ugalum Vayal Pudai Sooz Thiruarangathu Ammanaik - மீன்கள் துள்ளி விளையாடப் பெற்ற கழனிகளினால் சுற்றும் சூழப்பட்ட திருவரங்கத்திலுள்ள எம்பெருமானை (- (இஹலோக ஐச்வர்யங்களையநுபவித்துப் பின்பு))
சிந்தை செய்த, Sindhai Seitha - தியானித்துக் கொண்டிருக்கின்ற
நீலம் மலர் கண்மடவான் நிறை அழிவை, Neelam Malar Kanmadavaan Nirai Azivai - கருநெய்தல் போன்ற கண்களை யுடையனான பரகால நாயகியினது அடக்கம் அழிந்தமையைக் குறித்து
தாய் மொழிந்த அதனை, Thaai Mozhintha Adhanai - தாய்பேசின பாசுரமாக,
நேரார் சாலன், Neraar Saalan - பகைவர்க்கு யமன் போன்ற வரும்
வேல், Veel - வேற்படையையுடையரும்
பரகாலன், Parakalan - பரகாலனென்ற திருநாமமுடையவருமான
கலிகன்றி, Kalikanri - திருமங்கையாழ்வார்
ஒலி, Oli - அருளிச்செய்த
மாலை, Maala - இச் சொல்மாலையை
கற்று வல்லார் தாம், Kattru Vallar Thaam - ஓதி உணரவல்லவர்கள்,
மாலை சேர் வெண் குடை கீழ், Maalai Seer Ven Kudai Keezh - முத்துஸரங்கள் தொங்கவிடப் பெற்ற வெண்குடை நிழலில்
மன்னவர் ஆய், Mannavar Aay - அரசர்களாயிருந்துகொண்டு
போன் உலகில் வாழ்வர், Poon Ulagil Vazhvar - பரமபதத்தில் நித்யாநுபவம் பண்ணப்பெறுவர்.
1327பெரிய திருமொழி || (4-8–கவளயானை) (திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிராட்டி தசை வந்து ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த இப்பத்தும் வல்லார் ஒருத்தி வாய் வெருவ-ஒருத்தி கூப்பிட்ட எளிவரவு தீர -ஒரு நாளும் பிரிய வேண்டாதே இருக்கிற தேசத்திலே இருக்கப் பெறுவார்) 10
பாருள் நல்ல மறையோர் நாங்கைப் பார்த்தன் பள்ளி செங்கண் மாலை வார்கொள் நல்ல முலை மடவாள் பாடலைத் தாய் மொழிந்த மாற்றம் கூர் கொள் நல்ல வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார் ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள் இன்பம் நாளும் எய்துவாரே— –4-8-10
பதவுரை Show / Hide
பந்தோடு கழல் மருவாள், Pandhodu Kazhal Maruvaal - பந்தையும் கழற்காய்களையும் தொடுகிறதுமில்லை; (- (என் மகள்) (என் மகளை செய்தனகள் அம்மனைமீர்! அறிகிலேன், அந்தோ!))
பை கிளியும் பால் ஊட்டாள், Pai Kiliyum Paal Oottal - (தனது) பசுமை தங்கிய கிளிக்குப் பாலூட்டுகிறதுமில்லை;
பாவை பேணாள், Paavai Peenaal - (விளையாட்டுக் கருவியான) மரப்பாச்சியை நோக்குவதுமில்லை;
திருஅரங்கன், Thiruarangan - “ஸ்ரீரங்கநாதன்
வந்தானோ வாரானோ  என்று என்றே, Vandaano Vaaraano Endru Endrae - வந்து விட்டானோ? என்றும் வரமாட்டானோ?” என்றும் சொல்லிக்கொண்டு
வளையும் சோரும், Valaiyum Soorum - கைவளைகள் கழல நிற்கின்றாள்
சந்தோகன், Sandhogan - சாந்தோக்ய உபநிஷத்தினால் ப்ரதிபாத்யனும்
பௌழியன், Pauzhiyan - கௌஷீதகீப்ராஹ்மணத்தினால் ப்ரதிபாத்யனும்
ஐந்து அழல் ஓம்பு, Ainthu Azhai Oombu - பஞ்சாக்நிகளினால் ஆராதிக்கப் படுபவனும்
தைத்திரியன், Thaitthiriyan - தைத்திரிய உபநிஷத்தினால் பிரதிபாதிக்கப் படுபவனும்
சாமவேதி, Saamavethi - ஸாமவேதப்ரதிபாத்யனுமான பெருமான்
வந்து, Vandhu - இவ்விடம் வந்து