திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 730 | பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 1 | வன் தாள் இணை வணங்கி வள நகரம்
தொழுது ஏத்த மன்னனாவான்
நின்றாயை அரி அணை மேல் இருந்தாயை
நெடும் கானம் படர போகு
வென்றாள் எம்மி ராமாவோ!
உன்னை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு
நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன்
நன் மகனே! உன்னை நானே | பதவுரை Show / Hideஎம் இராமாவோ, Em Iraamavo - ஓ எமது இராமனே! வளம் நகரம், Valam Nagaram - அழகிய அயோத்தி மாநகரத்துப் பிரஜைகள் அனைவரும் வல் தாளின் இணை வணங்கி தொழுது ஏத்த, Val Thaalin Inai Vanangi Thozhudhu Aetha - (சரணமடைந்தவர்களை எப்பொழுதும் விடாமற் பாதுகாக்கும்) மன்னன் ஆவான் நின்றாயை, Mannan Aavaan Nindraaiyai - அரசனாகப் பட்டாபிஷேகஞ் செய்து கொள்ளுதற்கு ஸித்தனாய் நின்றவனும் அரி அணை மேல் இருந்தாயை, Ari Anai Mel Irundhaaiyai - சிங்காசனத்தின் மீது வீற்றிருக்க ஸித்தனாயிருந்தவனுமான உன்னை நெடுங்கானம் படர போகு என்றாள், Nedungaanam Padara Pogu Endraal - பெரிய காட்டிற்கு செல்லுதற்கு (இந்நகர் விட்டு நீங்கிப்) போ என்று (கைகேயி) கூறினாள் நல் மகனே, Nal Maganae - நல்ல குமாரனே! நான், Naan - நான் உனை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு, Unai Bayandha Kaikesi Than Sol Kaettu - உன்னைப் பெற்று வளர்த்த தாயான கைகேயியின் வார்த்தையைக் கேட்டு நன்றாக உன்னை நானிலத்தை ஆள்வித்தேன், Nandraaga Unnai Naanilaththai Aalviththen - நன்றாக! உன்னை நிலவுலகத்தை ஆளும்படி செய்தேன். போகு, Pogu - என்றாள் = போகென்றாள் என்று புணரத்தக்கது, இராமாவோ, Iraamavo - ஒகாரம் மிக்கது, புலம்பல் விளியாகலின் புலம்பின் ஓவும் ஆகும் என்றார். |
| 731 | பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 2 | வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ? | பதவுரை Show / Hideவெவ் வாயேன் வெவ் உரை கேட்டு, Veve Vaayaan Veve Urai Kaettu - கொடிய வாயை யுடையேனை என்னுடைய கடுஞ்சொற்களைக் கேட்டு இரு நிலத்தை வேண்டாதே, Iru Nilaththai Vendaadhe - பெரிய நிலவுலகத்து அரசாட்சியை விரும்பாமலே விட்டிட்டு விரைந்து, Viraindhu - சீக்கிரமாக வென்றி மை வாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து மா ஒழிந்து, Vendri Mai Vaaya Kaliru Ozhindhu Ther Ozhindhu Maa Ozhindhu - வெற்றியை விளைப்பதான வனமே மேவி, Vaname Mevi - காட்டையே சேர்ந்து நெய் வாய வேல் நெடு கண் நேரிழையும், Ney Vaaya Veel Nedhu Kann Nerizhaiyum - நெய்ப்பூசிய நுனியையுடைய வேலாயுதம் போன்ற இளங்கோவும், Ilankovum - இளைய பெருமாளும் பின்பு போக, Pinbu Poga - உடன் தொடர்ந்து வர எவ்வாறு நடந்தனை, Evvaaru Nadandhanai - எங்ஙனம் நடந்து சென்றாயோ! எம் பெருமான், Em Perumaan - எமது ஐயனே! என் செய்கேன், En Seigkaen - நான் என் செய்வேன்! |
| 732 | பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 3 | கொல் அணை வேல் வரி நெடும் கண் கௌசலை தன்
குலமதலாய்! குனி வில்லேந்தும்
மல்லணைந்த வரை தோளா! வல் வினையேன்
மனம் உருக்கும் வகையே கற்றாய்
மெல்லணை மேல் முன் துயின்றாய்
இன்று இனி போய் வியன் கான மரத்தின் நீழல்
கல்லணை மேல் கண் துயில கற்றனையோ?
காகுத்தா! கரிய கோவே! | பதவுரை Show / Hideகொல் அணை, Kol Anai - கொலைத் தொழில் பொருந்தின வேல், Vel - வேலாயுதம் போன்ற வரி நெடுங்கண், Vari Nedungkan - செவ்வரி பரந்த நீண்ட கண்களையுடைய கௌசலை தன், Kausalai Than - கௌஸல்யையினது குலம், Kulam - குலத்தில் தோன்றிய மதலாய், Madalai - குமாரனே! குனி வில் ஏந்தும், Kuni Vil Aenthum - வளைந்த வில்லைத் தரித்த மல் அணைந்த வரை தோளா, Mal Anaintha Varai Thola - வலிமை பொருந்திய மலைகள் போன்ற தோள்களை யுடையவனே! வல் வினையேன், Val Vinaiyen - மஹா பாபியான என்னுடைய மனம் உருக்கும் வகையே கற்றாய், Manam Urukkum Vagaiye Kattrai - மனதை உருகச் செய்வதற்கே வல்லவனே! காகுத்தா, Kaakuththa - ககுத்ஸ்தனென்னும் அரசனது குலத்தில் தோன்றியவனே! கரிய கோவே, Kariya Kove - கருநிறமுடைய ஐயனே! மெல் அணை மேல் முன் துயின்றாய், Mel Anai Mel Mun Thuyinraai - மென்மையான பஞ்சனை மெத்தையின் மேல் முன்பெல்லாம் படுத்து உறங்கிப் பழகினவனான நீ இனி இன்று போய், Ini Indru Poi - இனிமேற் புதிதாக இன்றைக்குச் சென்று வியன் கானம் மரத்தின் நீழல், Viyan Kaanam Marathin Neezhal - பெரிய காட்டிலுள்ள மரத்தின் நிழலிலே கல் அணை மேல் கண் துயில கற்றனையோ, Kal Anai Mel Kan Thuyil Kattranaiyo - கருங்கற் பாறைகளையே படுக்கையாகக் கொண்டு அதன் மேற்படுத்துத் துயிலப் பழகின்றாயோ முருக்குதல், Murukkuthal - அழித்தல். முருங்கு என்பதன் பிறவினை. வியன், Viyan - உரிச்சொல். வியல் என்பதன் விகாரமுமாம். நீழல் – நிழல் என்பன் நீட்டல் |
| 733 | பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 4 | வா போகு வா இன்னம் வந்து
ஒருகால் கண்டு போ மலராள் கூந்தல்
வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா
விடையோன் தன் வில்லை செற்றாய்!
மா போகு நெடும் கானம் வல் வினையேன்
மனம் உருக்கும் மகனே! இன்று
நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய்ப்
போகாதே நிற்க்குமாறே! | பதவுரை Show / Hideவா, Vaa - (சற்று இங்கே) வா போகு, Pogu - இனிச் செல்வாய் வா, Vaa - மறுபடியும் இங்கு வா இன்னம் வந்து ஒருகால் கண்டு போ, Innam Vandu Orukal Kandu Po - (போம்போது) பின்னையும் ஒரு தரம் வந்து என்னைப் பார்த்து விட்டுப் போ மலர் ஆள் கூந்தல், Malai Aal Koondhal - பூக்களை எப்பொழுதும் தரிக்கிற மயிர் முடியை யுடையவளும் வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டு ஆ, Veiy Poalum Ezhil Tholi Than Poruttu Aa - மூங்கில் போன்ற அழகிய தோள்களை யுடையளுமான பிராட்டியை மணஞ்செய்து கொள்ளுதற்காக விடையோன் தன் வில்லை செற்றாய், Vidaiyon Than Villai Settrai - சிவனுடைய வில்லை முறித்தவனே! வல் வினையேன் மனம் உருக்கும் மகனே, Val Vinaiyen Manam Urukkum Magane - மஹா பாபியான எனது மனதை உருகச் செய்கிற மைந்தனே! இன்று, Indru - இப்பொழுது நீ, Nee - நீ மா போகு நெடுங்கானம் போக, Maa Pogu Nedungaanam Poga - யானைகள் ஸஞ்சரிக்கிற பெரிய காட்டுக்குப் போக என் நெஞ்சம், En Nenjam - எனது மனமானது இரு பிளவு ஆய் போகாதே நிற்கும் ஆறே, Iru Pilavu Aay Pogaadhe Nirkum Aare - இரண்டு பிளப்பாகப் பிளந்து போகாமலே வலியதாய் நிற்கும் தன்மை என்னோ? |
| 734 | பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 5 | பொருந்தார் கை வேல் நுதி போல்
பரல் பாய மெல் அடிகள் குருதி சோர
விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப
வெம்பசி நோய் கூர இன்று
பெரும் பாவியேன் மகனே! போகின்றாய்
கேகயர் கோன் மகளாய் பெற்ற
அரும் பாவி சொல் கேட்ட அரு வினையேன்
என் செய்கேன்? அந்தோ! யானே | பதவுரை Show / Hideபொருந்தார் கை வேல் நுதி போல், Porundhaar Kai Vel Nuthi Pol - பகைவர்கள் கையிலேந்தும் கூர்மையான வேலாயுதத்தின் நுனி போன்ற பரல், Paral - பருக்கைக் கற்கள் பாய, Paaya - (காலில் தைத்து அழுத்தவும்) மெல் அடிக்கள் குருதி சோர, Mel Adikkal Kuruthi Soora - மென்மையான (உனது) பாதங்களினின்று ரத்தம் பெருகவும் வெயில் உறைப்ப, Veil Uraippa - (மேலே) வெயிலுறைக்கவும் வெம் பசி நோய் கூர, Vem Pasi Noi Koora - (வேண்டிய போது உணவு கிடையாமலே) வெவ்விய பசியாகிய நோய் மிகவும் பெரும் பாவி யேன் மகனே, Perum Paavi Yen Magane - மஹா பாபியான எனது மைந்தனே! இன்று, Indru - இப்பொழுது விரும்பாத கான் விரும்பி போகின்றாய், Virumbadha Kaan Virumbi Pogaindraai - (எவரும்) விரும்பாத காட்டை (நான் போகச் சொன்னேனென்பதனாலே) விரும்பி (அவ்விடத்துக்குச் செல்கிறாய்) கேகயர்கோன் மகள் ஆய்பெற்ற அரும்பாவி, Kekayar Koan Magal Aaypetra Arumpaavi - கேகயராஜன் பெற்ற மகளான கொடிய பாவியாகிய கைகேயியினுடைய சொல் கேட்ட அரு வினையேன் யான், Sol Kaetta Aru Vinaiyen Yaan - வார்த்தையைக் கேட்ட கொடியேனாகிய நான் அந்தோ! என் செய்கேன், Andho En Seigken - ஐயோ! என்ன செய்வேன்! வெம்பசி நோய் கூர = கூர, Vembasi Noi Koora Koora - மிகுதி யுணர்த்தும் கூர் என்ற உரிச்சொற் பகுதியினடியாய் பிறந்த செயவெனெச்சம். கேகயர், Kekayar - கேகய தேசத்திலுள்ளவர்கள். |
| 735 | பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 6 | அம்மா என்று அழைக்கும் ஆர்வ சொல்
கேளாதே அணி சேர் மார்வம்
என் மார்வத் திடை அழுந்த தழுவாதே
முழுசாதே மோவாது உச்சி
கைம்மாவின் நடை அன்ன மென்னடையும்
கமலம் போல் முகமும் காணாது
எம்மானை என் மகனை இழந்திட்ட
இழி தகையேன் இருகின்றேனே | பதவுரை Show / Hideஅம்மா என்று உகந்து அழைக்கும், Amma Endru Ughandhu Azaikkum - ஐயா! என்று மகிழ்ச்சி கொண்டு (என்னை) அழைக்கின்ற ஆர்வம் சொல் கேளாதே, Aarvam Sol Kelaadhe - ப்ரீதி விளங்குஞ்சொல்லை (நான்) கேட்கப் பெறாமலும் அணி சேர் மார்வம், Ani Seer Maarvam - ஆபரணங்கள் பொருந்திய (என் மகனது) மார்பு என் மார்வத்திடை அழுந்த, En Maarvathidai Azhundhu - என் மார்பிலே அழுந்தும்படி தழுவாதே, Thazhuvathae - (நான் அவனை) இறுக அணைத்துக் கொள்ளாமலும் முழுசாதே, Muzhusaathae - (அந்த ஆலிங்கந போகக் கடலில்) முழுகாமலும் உச்சி மோவாது, Uchi Moavathu - உச்சியை மோந்திடாமலும் கைம்மாவின் நடை அன்ன மெல் நடையும், Kaimmaavin Nadai Anna Mel Nadaiyum - யானையினது நடை போன்ற (கம்பீரமான அம்மகனது) மென்மையான நடையின் அழகையும் கமலம் போல் முகமும் காணாது, Kamalam Pol Mukamum Kaanathu - தாமரை மலர்போன்ற (அவனது) முகப் பொலிவையும் காணமாலும் எம்மானை என் மகனை இழந்திட்ட, Emmaanai En Maganai Izhandhitta - எமது ஐயனான என் மகனைக் (காடேறப் போக்கி) இழந்து விட்ட இழி தகையேன், Izhil Thagaiyen - இழிவான செயலைச் செய்தவனான நான் இருக்கின்றேனே, Irukkindraen - (இன்னமும் அழிந்திடாமல்) உயிர் வாழ்ந்திருக்கின்றேனே. |
| 736 | பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 7 | பூ மருவி நறும் குஞ்சி சடையா புனைந்து
பூம் துகில் சேர் அல்குல்
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது
அங்கங்கள் அழகு மாறி
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று
செல தக்க வனம் தான் சேர்த்தல்
தூ மறையீர்! இது தகவோ? சுமந்திரனே!
வசிட்டனே! சொல்லீர் நீரே | பதவுரை Show / Hideதூ மறையீர், Thoo Maraiyir - நித்ய நிர்த் தோஷமான வேதத்ததை ஓதி யிருக்கிற பிராமணர்களே! சுமந்திரனே, Sumandhiranae - (ராஜ தர்மத்தை நன் கறிந்து நடத்திப் போந்த ஸுமந்த்ரரே!) வசிட்டனே, Vachittanae - ராஜ தர்மங்களை உபதேசித்துப் போருகிற) வஸிஷ்ட மஹர்ஷியே (உங்களை ஒரு விஷயம் கேட்கிறேன்) பூ மருவும் நறு குஞ்சி, Poo Maruvum Naru Kunchi - புஷ்பம் மாறாதே யிருப்பதாய் மணம் கமழா நின்ற திருக் குழலை புன் சடை ஆ புனைந்து, Pun Sadai Aa Punaindhu - விகாரமான ஜடையாகத் திரித்து பூ துகில் சேர் அல்குல், Poo Thugil Ser Alkul - நல்ல பட்டுப் பீதாம்பரங்கள் சாத்த வேண்டிய திருவரையிலே காமர் எழில் விழல் உடுத்து, Kaamar Ezhil Vizhal Uduthu - காண்கைக்கு ஆசைப்படத்தக்க அழகிய விச்வாமித்ரத்தைக் கயிறாக முறுக்கிச் சாத்தி கலன் அணி யாது, Kalan Ani Yaadhu - திருவாபரணங்கள் அணியாமல் அங்கங்கள் அழகு மாறி, Angangal Azhagu Maari - இயற்கை யழகுக்கு மேல் திருவாபரணங்களால் உண்டாகக்கூடிய செயற்கை யழகின்றியிலே ஏமரு தோள் என் புதல்வன் தான், Aemaru Thol En Puthalvan Thaan - ஸுரக்ஷிதமான தோள்களை யுடையனான எனது குமாரனானவன் யான் இன்று செல தக்க வனம் சேர்தல், Yaan Indru Sela Thakka Vanam Serthal - நான் இப்போது போகவேண்டிய காட்டுக்குத் தான் போவது தகவோ, Thagavoe - தகுதி தானோ! நீரே சொல்லீர், Neere Solliir - (தர்மஜ்ஞரான) நீங்களே (ஆராய்ந்து) சொல்லுங்கள் |
| 737 | பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 8 | பொன் பெற்றார் எழில் வேத புதல்வனையும்
தம்பியையும் பூவை போலும்
மின் பற்றா நுண் மருங்குல் மெல்லியல் என்
மருகியையும் வனத்தில் போக்கி
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
என்னையும் நீள் வானில் போக்க
என் பெற்றாய்? கைகேசி! இரு நிலத்தில்
இனிதாக இருக்கின்றாயே | பதவுரை Show / Hideகைகேசீ, Kaikeesi - கைகேயியே பொன் பெற்றார் எழில் வேதம் புதல்வனையும், Pon Pettraar Ezhil Vedham Puthalvanaiyum - கல்விச் செல்வத்தைப் பெற்றவர்களான உபாத்தியாயரின் தம்பியையும், Thambiyaiyum - (அவனது) தம்பியான லக்ஷ்மணனையும் பூவை போலும், Poovai Polum - (பேச்சின் இனிமையிற் கொஞ்சுகிற) கிளி போன்றவளும் மின் பற்றா நுண் மருங்குல் மெல் இயல்என் மருகியையும், Min Patraa Nun Marungul Mel Iyalen Marugiyaiyum - மின்னலும் ஈடாகமாட்டாத நுண்ணிய இடையையும் வனத்தில் போக்கி, Vanathil Pookki - காட்டுக்குப் போகச்செய்து நின் பற்று ஆம் நின் மகன் மேல் பழி விளைத்திட்டு, Nin Pattru Aam Nin Magan Mel Pazhi Vilaittittu - உனது அன்புக்கு இடமான உன் மகனான பரதன் என்னையும் நீள் வானில் போக்க, Ennaiyum Neel Vaanil Pookka - (புத்ர விரஹத்தால்) என்னையும் தூரத்திலுள்ள மேலுலகத்திற்குச் செலுத்துதலினால் என் பெற்றாய், En Pettraai - நீ என்ன பயனடைந்தாய்! இரு நிலத்தில், Iru Nilathil - பெரிய இவ்வுலகத்தில் இனிது ஆக, Inidhu Aaga - சுகமாக இருக்கின்றாயே, Irukkindraaye - வாழ்கின்றாயே மருகி, Marugi - மகன் மனைவி (இதன் ஆண்பால்-மருகன்) என் பெற்றாய் = இவ்வளவு கொடுமைகளை ஒருங்கே செய்தற்கு |
| 738 | பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 9 | முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி
அவன் தவத்தை முற்றும் செற்றாய்
உன்னையும் உன் அருமையையும் உன் நோயின்
வருத்தமும் ஒன்றாக கொள்ளாது
என்னையும் என் மெய் உரையும் மெய்யாக
கொண்டு வனம் புக்க எந்தாய்!
நின்னையே மகனாய் பெற பெறுவேன்
ஏழ் பிறப்பும் நெடும் தோள் வேந்தே | பதவுரை Show / Hideமுன் ஒருநாள், Mun Orunaal - முன்பு ஒரு நாளிலே மழு ஆளி சிலை வாங்கி, Mazhu Aali Silai Vaangi - பரசுராமனிடத்திலிருந்து அவன் கை வில்லை வாங்கி அவன் தவத்தை முற்றும் பெற்றாய், Avan Thavathai Muttrum Pettraai - அவனியற்றிய தபஸ்ஸின் பயனை முழுதும் (அம்புக்கு இலக்காக்கி) அழித்திட்டவனே! உன்னையும் உன் அருமையையும், Unnaiyum Un Arumaiyaiyum - உன்னுடைய மேன்மையையும் (நான் பெருந்தவஞ் செய்து) உன்னை அருமை மகனாகப் பெற்ற தன்மையையும் உன் மோயின் வருத்தமும், Un Moyin Varuththamum - உனது பெற்ற தாயான கௌசல்யை (உன்னை பிரியில் தரியேன் என்று) உன் பின் தொடர்ந்த வருத்தத்தையும் ஒன்று ஆக கொள்ளாது, Ondru Aaga Kollaadhu - ஒரு பொருளாகக் கொள்ளாமல் என்னையும், Ennaiyum - என்னையும் என் மெய் உரையும், En Mei Uraiyum - எனது ஸத்ய வாக்கையும் மெய் ஆக கொண்டு, Mei Aak Kondu - பொருளாகக் கருதி வனம் புக்க எந்தாய், Vanam Pukka Endhai - காடேறச் சென்ற எமது ஐயனே! நெடுந்தோள் வேந்தே, Nedunthol Vende - பெரிய தோள்களை யுடைய அரசனே! ஏழ் பிறப்பும், Ezhu Pirappum - இனி அனேக ஜன்மங்கள் பிறந்து பிறந்த ஜன்மந்தோறும் நின்னையே மகன் ஆக பெற பெறுவேன், Ninnaiye Magan Aak Perap Peruven - நீ எனக்குப் பிள்ளையாய்ப் பிறக்கும்படி பேறு பெறக் கடவேன். மழு ஆளி, Mazhu Aali - மழுவை (ஆயுதமாக) ஆள்பவன்; இ-கருத்தாப்பொருள் விகுதி. அன்றியே, மழு வாளி, Andriye Mazhu Vaali - மழுவாகிய ஆயுதத்தை யுடையவன் இ-பெயர் விகுதி. மழு வாள், Mazhu Vaal - இரு பெயரொட்டுப் பண்புத்தொகை. மழு – கோடாலி தந்தை, மகனை எந்தாய் என்றது, அன்புபற்றிய வழுவமைதி. செற்றாய், Thandai Maganai Endhai Endrathu Anbu Patriya Vazhvu Amaithi Settrai - செறு-பகுதி |
| 739 | பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 10 | தேனகுமா மலர் கொந்தாள் கௌசலையும்
சுமித்ரையும் சிந்தை நோவ
கூன் உருவில் கொடும் தொழுத்தை சொல் கேட்ட
கொடியவள் தன் சொல் கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த
வள நகரைதுறந்து நானும்
வானகமே மிக விரும்பி போகின்றேன்
மனு குலத்தார் தங்கள் கோவே! | பதவுரை Show / Hideமனுகுலத்தார் தங்கள் கோவே, Manukulathar Thangal Kove - மநுகுலத்திற் பிறந்த அரசர்களிற் சிறந்தவனே! தேன் நகு மா மலர் கூந்தல், Then Nagu Maa Malar Koondhal - தேனைப் புறப்பட விடுகிற சிறந்த மலர்களைச் சூடிய கூந்தலையுடைய கௌசலையும், Kausalayum - கௌஸல்யையும் சுமித்திரையும், Sumithirayum - ஸுமித்ரையும் சிந்தை நோவ, Sindhai Nova - மனம் வருந்த கூன் உருவின் கொடும் தொழுத்தை சொல் கேட்ட கொடியவள் தன்சொல் கொண்டு, Koon Uruvin Kodum Thozuthai Sol Ketta Kodiyaval Than Sol Kondu - வக்ரமான வடிவம் போலவே கானகமே மிக விரும்பி இன்று நீ துறந்த, Kaanagame Miga Virumbi Indru Nee Thurandha - காட்டையே மிகவும் விரும்பி இப்பொழுது நீ கைவிட்ட வளம் நகரை, Valam Nagara - (உன் பட்டாபிஷேகத்தின் பொருட்டு) அலங்கரிக்கப் பட்டிருக்கிற இந்நகரத்தை நானும் துறந்து, Naanum Thurandu - நானும் விட்டிட்டு வானகமே மிக விரும்பி போகின்றேன், Vaanagame Mika Virumbi Pokingren - மேலுலகத்தையே மிகவும் விரும்பி (அவ்விடத்திற்குச்) செல்கின்றேன். கூனுருவின் = இன், Koonuruvin In - ஐந்தனுருபு ஒப்புப்பொருள். கொடுமை- தீமையே யன்றி வளைவுமாதலை தொழுத்தை தொழும்பன என்பதன் பெண்பால். மநு, Thozhuthai Thozhumpana Enbathin Penpaal Maanu - ஸூர்யனது குமாரன்; வைவஸ்வதமநு. |
| 740 | பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 11 | ஏரார்ந்த கரு நெடுமால் ராமனாய்
வனம் புக்க வதனுக்கு ஆற்றா
தாரர்ந்த தடவரை தோள் தயரதன் தான்
புலம்பிய அப் புலம்பல் தன்னை
கூரார்ந்த வேல் வலவன் கோழியூர் கோன்
குடை குலசேகரன் சொல் செய்த
சீரார்ந்த தமிழ் மாலை இவை வல்லார்
தீ நெறி கண் செல்லார் தாமே | பதவுரை Show / Hideஏர் ஆர்ந்த, Aer Aarntha - அழகு நிறைந்த கரு, Karuthu - கரு நிறமுடைய நெடுமால், Nedumaal - மஹா விஷ்ணு இராமன் ஆய், Iraman Aayi - ஸ்ரீ ராமனாகத் திருவவதரித்து வனம் புக்க, Vanam Pukka - காட்டுக்குச் சென்றதான அதனுக்கு, Adhanukku - அச் செயலை ஆற்றா, Aartra - பொறுக்க மாட்டாமல் தார் ஆர்ந்த தட வரை தோள் தயரதன் புலம்பிய, Thaar Aarntha Thada Varai Thol Thayaratthan Pulampiya - வெற்றி மாலை பொருந்திய பெரிய மாலை போன்ற அப் புலம்பல் தன்னை, Ap Pulampal Thannai - அக் கதறல்களை, கூர் ஆர்ந்த, Koora Aarntha - கூர்மை மிக்க வேல் வலவன், Vel Valavan - வேற்படையின் தொழிலில் வல்லவரும கோழியர் கோன், Kozhiyar Kon - உறையூரிலுள்ளார்க்குத் தலைவரும் குடை, Kudai - கொற்றக்குடையை உடையவருமான குலசேகரன், Kulashekaran - குலசேகராழ்வார் சொல் செய்த, Sol Seitha - அருளிச் செய்த சீர் ஆர்ந்த, Seer Aarntha - சிறப்பு மிக்க தமிழ் மாலை இவை, Tamil Maalai Ivai - தமிழ்ப் பிரபந்தரூபமான இப் பத்துப் பாசுரங்களையும் வல்லார், Vallaar - கற்க வல்லவர்கள் தீ நெறிக்கண், Thee Nerikkan - கொடிய வழி யொன்றிலும் செல்லார், Sellaar - சென்று சேர மாட்டார்கள். (தான், தாம்–அசைகள்) |