திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 647 | பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 1 | இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே | பதவுரை Show / Hideதிரு அரங்கம், Thiru Arangam - ஸ்ரீரங்கமென்கிற பெரு நகருள், Peru Nagarul - பெரிய நகரத்திலே இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும், Irul Iriya Sudar Manigal Imaikkum - இருளானது சிதறி யொழியும் படி ஒளி விடுகின்ற மணிகள் விளங்கா நிற்கப் பெற்ற நெற்றி, Netri - நெற்றியையும் இனம் துத்தி, Inam Thuthi - சிறந்த புள்ளியையும் அணி, Ani - அழகாக உடைய– ஆயிரம் பணங்கள் ஆர்ந்த, Aayiram Panangal Aarntha - ஆயிரம் படங்களை உடையவனாய் அரவு அரசன், Aravu Arasan - நாகங்களுக்குத் தலைவனாய் பெரு சோதி, Peru Sothi - மிக்க தேஜஸ்ஸை யுடையனான அனந்தன் என்னும், Ananthan Ennum - திருவனந்தாழ்வானாகிற அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை, Ani Vilangum Uyar Vellai Anaiyai - அழகு மிக்கு உயர்த்தியை யுடைய வெண்ணிறமான திருப் படுக்கையிலே மேவி, Mevi - பொருந்தி தெள் நீர் பொன்னி, Thel Neer Ponni - தெளிந்த தீர்த்தத்தையுடைய காவிரி யானது திரை கையால் அடி வருட, Thirai Kaiyal Adi Varuda - அலைகளாகிற கைகளாலே திருவடிகளைப் பிடிக்க பள்ளி கொள்ளும், Palli Kollum - திருக் கண் வளர்ந்தருளா நின்ற கரு மணியை, Karum Maniyai - நீல மணி போன்றவராய் கோமளத்தை, Komalathai - ளெஸகுமார்யமே வடிவெடுத்தவரான பெரிய பெருமாளை என் கண் இணைகள், En Kan Inaihal - என் கண்களானவை கண்டு கொண்டு, Kandu Kondo - ஸேவிக்கப் பெற்று களிக்கும் நாள், Kalikkum Naal - ஆநந்தடையும் நாள் என்று கொல், Endru Kol - எந்நாளோ! இமைத்தல், Imaitthal - விழித்தல் அதாவது இங்கு, விளங்குதல். துத்தி, Thuthi - படத்தின் மேலுள்ள பொறி. பொன்னி, Ponni - பொன்களைக் கொழிக்கையாலே காவிரிக்குப் பொன்னி யென்று பெயராயிற்று. “பொன்னி திரைக் கையாலடி வருட” என்றது, Ponni Thiraik Kaiyaladi Varuda Endrathu - காவிரியின் அலைகள் இனிதாக மோதிக் குளிர்ச்சி பெற்றுள்ள கோமளம், Komalam - வடசொல், |
| 648 | பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 2 | வாயோர் ஈர் ரைஞ்சூறு துதங்கள் ஆர்ந்த
வளை வுடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ
வீயாத மலர் சென்னி விதானமே போல்
மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்
காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலைக்
கடி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
மாயோனை மணத் தூணே பற்றி நின்று என்
வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே ? | பதவுரை Show / Hideகடி அரங்கத்து, Kadi Arangathu - நறு மணம் மிக்க கோயிலிலே ஓர் ஈர் ஐ நூறு வாய், Oru Eer Ai Nooru Vaai - ஓராயிரம் வாய்களிலே துதங்கள் ஆர்ந்த, Thuthangal Aarntha - ஸ்தோத்ர வாக்கியங்கள் நிறைந்திருக்கப் பெற்றவனாய் வளை உடம்பின், Valai Udambin - வெளுத்த உடம்பை யுடையவனாய் அழல், Azhala - (எதிரிக்ள வந்து கிட்ட வொண்ணாதபடி) அழலை உமிழா நிற்பவனான நாகம், Naagam - ஆதி சேக்ஷன் உமிழ்ந்த, Umizhndha - (தன் வாயினின்று) வெளிக் கக்கிய செம் தீ, Sem Thee - செந் நிறமான ஆகநி ஜ்வாலையானது சென்னி, Sennai - தலையின் மேலே வீயாத மலர், Veeyadha Malar - அழிவில்லாத புஷ்பங்களாற் சமைத்த தொரு மேற் கட்டி போல எங்கும் மேல் மேலும் பரந்து மிக, Engum Mel Maelum Parandhu Mika - மேற்புறமெங்கும் விஸ்தரித்து விளங்க அதன் கீழ், Adhan Keel - (ஆதிசேக்ஷன் உமிழ்ந்த அக்நி ஜ்வாலையாகிற) அந்தப் புஷ்ப விதாநத்தின் கீழே) அரவு அணையில், Aravu Anaigal - சேஷ சயநத்திலே பள்ளி கொள்ளும், Palli Kollum - கண் வளர்ந்தருளா நிற்பவனும் காயா பூ மலர் பிறங்கல் அன்ன, Kaayaa Poo Malar Pirangal Anna - காயாவின் அழகிய பூக்களாலே தொடுக்கப்பட்ட நீலமாலை போன்றவனாய் மாலை, Maalai - பெருமை பொருந்தியவனாய் மாயோனை, Maayoni - ஆச்சர்யனான ஸ்ரீரங்கநாதனை (அடியேன்) மனம் தூண் பற்றி நின்று, Manam Thoon Patri Nindru - திருமணத் தூண்களிரண்டையும் அவலம்பாகப் பற்றிக்கொண்டு நின்று என் வாய் ஆர வாழ்த்தும் நாள் என்று கொல், En Vaai Aara Vaazhthum Naal Endru Kol - என் வாய்த்தினவு தீர ஸ்துதி செய்யுங்காலம் என்றைக்கு வாய்க்குமோ?. |
| 649 | பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 3 | எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும்
எடுத்தேத்தி ஈர் இரண்டு முகமும் கொண்டு
எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும்
தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற செம்பொன்
அம்மான் தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற
அணி அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்
அம்மான் தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு
அடியவரோடு என்று கொலோ அணுகும் நாளே | பதவுரை Show / Hideஎம் மாண்பின் அயன், Em Maanpin Ayan - ஸர்வ விதத்தாலுமுண்டான மாட்சிமையை யுடைய நான்முகன் நான்கு நாவினாலும் (தனது), Naanthu Naavinaalum Thanadhu - நாலு நாக்கினாலும் எடுத்து, Eduthu - சொற்களை யெடுத்து ஏத்தி, Aethi - துதித்து ஈர் இரண்டு முகமும் கொண்டு, Eer Irandu Mukhamum Kondu - நான்கு முகங்களாலும் இனிது ஏத்தி, Inidhu Aethi - இனிமையாக (வேதங்களாலே) ஸ்தோத்திரம் பண்ணி எழில் கண்கள் எட்டினோடும், Ezhil Kangal Ettinodum - அழகிய எட்டு கண்களினாலே எம் மாடும், Em Maadum - எல்லாப் பக்கங்களிலும் தொழுது இறைஞ்ச நின்ற, Thozhudhu Irajinja Nindra - நன்றாக ஸேவிக்கும்படி அமைந்த செம் பொன், Sem Pon - செவ்விய பொன் போல் (விரும்பத்தக்க வடிவுடைய) ஸ்வாமியான தன்னுடைய கமலம் மலர் கொப்பூழ், Kamalum Malar Koppuzh - தாமரைப் பூவை யுடைய திருநாபி யானது தோன்ற, Thondra - விளங்கும்படி அம்மான் தன், Ammaan Than - பெரிய பெருமாளுடைய அடிஇணை கீழ், Adiinai Keel - திருவடிகளின் கீழே அலர்கள் இட்டு, Alarkal Ittu - புஷ்பங்களை ஸமர்ப்பித்து அங்கு அடியவரோடு, Angu Adiyavarodu - அங்குள்ள கைங்கர்ய பரர்களோடு கூட அணுகும் நாள் என்று கொல், Anugum Naal Endru Kol - நெருங்கி வாழ்வது என்றைக்கோ? எம் மாண்பின், Em Manpin - துதிப்பதற்கு உறுப்பான வாக்தேவியை எப்போதும் தன் வசமாகக் கைக் கொண்டிருக்கும் |
| 650 | பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 4 | மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை
வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி
ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை
அமரர்கள் தம் தலைவனை அம் தமிழ் இன்ப
பாவினை அவ் வடமொழியை பற்றற்றார்கள்
பயில் அரங்கத்து அரவு அணை பள்ளி கொள்ளும்
கோவினை நாவுற வழுத்தி என் தன் கைகள்
கொய்ம் மலர் தூ என்று கொலோ கூப்பும் நாளே | பதவுரை Show / Hideமாவினை வாய் பிளந்து உகந்த மாலை, Mavinai Vaai Pilandhu Ugantha Maalai - குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியினுடைய வாயைக் கிழித்து மகிழ்ந்த பெருமானாய் வேலை வண்ணணை, Velai Vannana - கடல் போன்ற வடிவை யுடையவனாய் என் கண்ணணை, En Kannana - என்னுடையவன்’ என்று அபிமானிக்கக் கூடிய (ஸூலபனான) க்ருஷ்ணனாய்’ அன்று, Anru - (இந்திரன் கல் மழை பெய்வித்த) அக் காலத்திலே வன் குன்றம் ஏந்தி, Van Kuntram Aendhi - வலிய (கோவர்த்தன) மலையை (க்குடையாக)த் தூக்கி ஆவினை உய்யக் கொண்ட, Aavinai Uyyaik Konda - பசுக்களைக் காப்பாற்றி யருளின ஆயர் ஏற்றை, Aayar Aetrai - இடையர் தலைவனாய் அமரர்கள் தம் தலைவனை, Amarar Tham Thalaivana - நித்யஸூரிகளுக்கு ஸ்வாமியாய், அம் தமிழ் இன்ப பாவினை, Am Tamil Inba Paavinai - அழகிய தமிழ்ப் பாஷையாலாகிய ஆநந்த மயமான அருளிச் செயல் போல் யோக்கியனாய் அ வடமொழியை, A Vadamozhiyai - அழகிய ஸம்ஸ்க்ருத பாஷையாலாகிய ராமாயணாதிகள் போல் யோக்யனாய் பற்று அற்றார்கள் பயில் அரங்கத்து, Patru Atrarhal Payil Arangathu - ஸம்ஸார பந்தம் அற்றவர்களான விரக்தர்கள் நித்திய வாஸம் செய்கிற கோயிலிலே கோவினை, Kovinai - ஸ்வாமியான ஸ்ரீரங்கநாதனை நா உற, Na Ur - நாக்குத் தடிக்கும்படி வழுத்தி, Vazhuthi - துதித்து என் தன் கைகள், En Than Kaigal - என்னுடைய கைகளானவை கொய் மலர் தூய், Koyi Malar Thuy - (காலத்தில்) பறிக்கப்பட்ட புஷ்பங்களை பணிமாறி கூப்பும் நாள் என்று கொல், Kooppum Naal Endru Kol - அஞ்ஜலி பண்ணும் நாள் எதுவோ! |
| 651 | பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 5 | இணை இல்லா இன் இசை யாழ் கெழுமி இன்பத்
தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த
துணை இல்லா தொன் மறை நூல் தோத்திரத்தால்
தொன் மலர் கண் அயன் வணங்கி யோவாது ஏத்த
மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ
மதிள் அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்
மணி வண்ணன் அம்மானை கண்டு கொண்டு என்
மலர் சென்னி என்று கொலோ வணங்கும் நாளே ? | பதவுரை Show / Hideஇன்பம், Inbam - (வீணா கானத்தாலே) இன்பந்தருகின்ற தும்புருவும், Thum Puruvum - தும்புரு மஹரிஷியும் நாரதனும், Naarathanum - நாரத முனிவனும் இணை இல்லா இன் இசை, Inai Illaa In Isai - ஒப்பற்றதும் போக்யமுமான இசையை யாழ், Yaazh - வீணையிலே கெழுமி, Kezhumi - நிறைத்து (வீணா கானத்தைப் பண்ணிக் கொண்டு) இறைஞ்சி ஏத்த, Irainji Aetha - திருவடிகளிலே விழுந்து) வணங்கித் துதிக்கவும் தொல் மலர்க் கண் அயன், Thol Malarkk Kan Ayan - நித்யமான நாபீ கமலத்தி லுதித்த நான்முகனானவன் வணங்கி, Vanangi - நமஸ்கரித்து துணை இல்லா, Thunai Illaa - ஒப்பு இல்லாததும் தொல், Thol - அநாதியுமான மறை நூல் தோத்திரத்தால், Marai Nool Thothiraththal - வேதசாஸ்த்ரங்களாகிற ஸ்தோத்ரங்களால் ஓவாது ஏத்த, Ovaadhu Aetha - இடைவிடாமல் துதிக்கவும் மணி மாடம் மாளிகைகள், Mani Maadam Maaligaihal - மணி மயமான மாட மாளிகைகளையும் மல்கு செல்வம், Malku Selvam - பூர்ணமான ஸம்பத்தையும் மதிள், Mathil - ஸப்த ப்ராகாரங்களையுமுடைய அரங்கத்து, Arangaththu - கோயிலிலே மணி வண்ணன் அம்மானை, Mani Vannan Ammanaik - நீல மணி போன்ற திருநிறத்தை யுடையனான எம்பெருமானை கண்டு கொண்டு, Kandu Kondo - ஸேவித்து என் மலர் சென்னி, En Malar Senni - என்னுடைய பூமாலை யணிந்த தலையானது வணங்கும் நாள் என்று கொல், Vanangum Naal Endru Kol - (அவன் திருவடிகளில்) நமஸ்கரிப்பது என்றைக்கோ! இன் இசை யாழ் கெழுமி, In Isai Yaazh Kezhumi - இனிய இசையையுடைத்தான வீணையை அப்யஸித்து என்றுமாம் |
| 652 | பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 6 | அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை
அமரர்கள் தம் குழுவும் அரம்பையரும் மற்றும்
தெளி மதி சேர் முனிவர்கள் தம் குழுவும் முந்தி
திசை திசையில் மலர் தூவி சென்று சேரும்
களி மலர் சேர் பொழில் அரங்கத்து உரகம் ஏறி
கண் வளரும் கடல் வண்ணர் கமல கண்ணும்
ஒளி மதி சேர் திரு முகமும் கண்டு கொண்டு என்
உள்ளம் மிக என்று கொலோ வுருகும் நாளே | பதவுரை Show / Hideஅளி மலர் மேல் அயன், Ali Malar Mel Ayan - (மதுபானத்துக்காக) வண்டுகள் படிந்திருக்கிற தாமரைப் பூவில் தோன்றிய பிரமனும் சிவனும் அரன், Aran - சிவனும் இந்திரனோடு ஏனை அமரர்கள் தம் குழுவும், Indiranodu Eanai Amarar Galum - இந்திரனோடு கூட மற்றைத் தேவர்களின் திரளும் அரம்பையரும், Arampaiyarum - ரம்பை முதலிய தேவ மாதரும் மற்றும், Mattrum - மற்றுமுள்ள தெளி மதி சேர் முனிவர்கள் தம் குழுவும், Theli Mathi Ser Munivargal Tham Galum - தெளிந்த ஞானத்தை யுடைய (ஸநகாதி) மஹர்ஷிகளின் ஸமூஹமும் உந்தி, Undhi - ஒருவர்க்கொருவர் நெருக்கித் தள்ளி திசை திசையில், Thisai Thisaiyil - பார்த்த பார்த்தவிடமெங்கும் மலர் தூவி, Malar Thuvi - புஷ்பங்களை இறைத்துக் கொண்டு சென்று சேரும், Sendru Serum - வந்து சேர்தற்கு இடமான களிமலர் சேர் பொழில் அரங்கத்து, Kalimalar Ser Pozhil Arangathu - தேன் மிக்க மலர்களை யுடைய சோலைகளை யுடைத்தான கோயிலிலே உரகம் ஏறி, Uragam Eri - திருவனந்தாழ்வான் மீது பள்ளி கொண்டு கண் வளரும், Kan Valarum - திருக்கண் வளர்ந்தருளா நின்ற கடல் வண்ணர், Kadal Vannarar - கடல் போன்ற வடிவை யுடையரான பெரிய பெருமாளை யுடைய கமலம் கண்ணும், Kamalam Kannum - செந்தாமரை போன்ற திருக் கண்களையும் ஒளி மதி சேர் திரு முகமும், Oli Mathi Ser Thiru Mugamum - ஒளியை யுடைய சந்திரன் போன்ற திருமுக மண்டலத்தையும் கண்டு கொண்டு, Kandu Kondo - ஸேவிக்கப் பெற்று என் உள்ளம், En Ullam - என்னுடைய மனமானது மிக உருகும் நாள் என்று கொல், Miga Urugum Naal Endru Kol - மிகவும் உருகுங்காலம் என்றைக்கோ? |
| 653 | பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 7 | மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி
ஐம்புலன்கள் அடக்கி இடர் பார துன்பம்
துறந்து இரு முப் பொழுது ஏத்தி எல்லை இல்லா
தொன் நெறி கண் நிலை நின்ற தொண்டரான
அறம் திகழும் மனத்தவர் தம் கதியை பொன்னி
அணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள்
நீர் மல்க என்று கொலோ நிற்கும் நாளே ? | பதவுரை Show / Hideமறம் நிகழும் மனம் ஒழித்து, Maram Nigazhum Manam Ozhithu - கொடுமையால் விளங்கா நின்றுள்ள மனத்தை ஒழித்து வஞ்சம் மாற்றி, Vanjam Maatri - வஞ்சனைகளைப் போக்கி வல் புலன்கள் அடக்கி, Val Pulankal Adakki - கொடிய இந்திரியங்களை அடக்கி இடர் பாரம் துன்பம் துறந்து, Idar Paaram Thunbam Thurandu - (மேன் மேலும்) துக்கத்தை விளைப்பனவாய்ப் இரு முப்பொழுது ஏத்தி, Iru Muppozhudhu Aethi - பஞ்ச காலங்களிலும் துதித்து எல்லை இல்லா தொல் நெறிக் கண் நிலை நின்ற, Ellai Illaa Thol Nerik Kan Nilai Nindra - அளவிறந்த பழைய மர்யாதையிலே நிலை நின்ற தொண்டர் ஆன, Thondar Aana - தாஸ பூதர்களான அறம் திகழும் மனத்தவர் தம், Aram Thigazhum Manaththavar Tham - தர்ம சிந்தையே விளங்கும் மனமுடையரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு கதியை, Kathiyai - பரம ப்ராப்யனாய் பொன்னி அணி அரங்கத்து, Ponni Ani Arangathu - காவிரியால் அழகு பெற்ற கோயிலிலே நிறம் திகழும், Niram Thigazhum - அழகு விளங்கா நின்றுள்ள மாயோனை, Maayoni - ஆச்சரியனான எம்பெருமானை என் கண்கள், En Kangal - எனது கண்களானவை கண்டு, Kandu - ஸேவிக்கப் பெற்று நீர் மல்க நிற்கும் நாள் என்று கொல், Neer Malku Nirkum Naal Endru Kol - ஆநந்தக் கண்ணீர் ததும்பும்படி நிற்பது என்றைக்கோ? மறம், Maram - கொலை, கோபம், கொடுமை. இடர்ப் பாரத் துன்பம் துறந்து, Idarp Paarath Thunbam Thurandu - “பாரமாய பழவினை பற்றறுத்து” என்கை. |
| 654 | பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 8 | கோலார்ந்த நெடும் சார்ங்கம் கூன் நல் சங்கம்
கொலை ஆழி கொடும் தண்டு கொற்ற ஒள் வாள்
காலார்ந்த கதி கருடன் என்னும் வென்றி
கடும் பறவை இவை அனைத்தும் புறம் சூழ் காப்ப
சேலார்ந்த நெடும் கழனி சோலை சூழ்ந்த
திரு வரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
மாலோனை கண்டு இன்ப கலவி எய்தி
வல் வினையேன் என்று கொலோ வாழும் நாளே ? | பதவுரை Show / Hideகோல் ஆர்ந்த, Kol Aarntha - அம்புகளோடு கூடிய நெடு சார்ங்கம், Nedu Sargangam - பெரியதான ஸ்ரீ சார்ங்க மென்னும் வில்லும் கூன் நல் சங்கம், Koon Nal Sangam - வளைந்து விலக்ஷணமான ஸ்ரீ பாஞ்சஜந்யமென்னும சங்கமும் கொலை ஆழி, Kolai Aazhi - (எதிரிகளைக்) கொலை செய்ய வல்ல ஸூதர்சநமும் கொடும் தண்டு, Kodum Thandu - (பகைவர்களுக்குக்) கொடுந்தொழில் புரிகின்ற கௌமோதகி யென்னும் கதையும் கொற்றம் ஒள் வாள், Kotrham Ol Vaal - வெற்றி பெற்று ஒளி மிக்க நந்தகமென்னும் வாளும் கால் ஆர்ந்த கடும் கதி, Kaal Aarntha Kadum Kathi - வாயு வேகம் போன்ற மிகவும் விரைந்த நடையை யுடைய கருடன் என்னும், Karudan Ennum - பெரிய திருவடி யென்னும் பேரை யுடைய வென்றி பறவை இவை அனைத்தும், Ventrip Paravai Ivai Anaithum - ஐய சீலமான பக்ஷிராஜனும் (ஆகிய) இவை யெல்லாம் புறம் சூழ் காப்ப, Puram Soozh Kaappa - நாற் புறமும் சூழ்ந்து கொண்டு ரக்ஷையிட சேல் ஆர்ந்த நெடு கழனி, Seyl Aarntha Nedu Kazhani - (நீர் வளத்தால்) மீன்கள் நிரம்பிய விசாலமான சோலை சூழ்ந்த, Solai Soozhntha - சோலைகளாலும் சூழப்பட்ட மாலோனை, Maalonai - ஸர்வாதிகனான எம்பெருமானை வல் வினையேன், Val Vinaiyen - மஹா பாபியான அடியேன் கண்டு, Kandu - ஸேவிக்கப் பெற்று இன்பம் கல்வி எய்தி, Inbam Kalvi Eydhi - ஆநந்த மயமான ஸம்ச்லேஷத்தையும் பெற்று வாழும் நாள் என்று கொல், Vaalum Naal Endru Kol - வாழ்வது என்றைக்கோ? |
| 655 | பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 9 | தூராத மனக் காதல் தொண்டர் தங்கள்
குழாம் குழுமி திரு புகழ்கள் பலவும் பாடி
ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர்
மழை சோர நினைந்து உருகி ஏத்தி நாளும்
சீர் ஆர்ந்த முழ வோசை பரவை காட்டும்
திரு வரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
போராழி அம்மானை கண்டு துள்ளி
பூதலத்தில் என்று கொலோ புரளும் நாளே? | பதவுரை Show / Hideதூராத காதல் மனம், Thooradha Kaadhal Manam - ஒரு நாளும் த்ருப்தி பெறாத ஆசை கொண்ட மனத்தை யுடையவரான தொண்டர் தங்கள் குழாம், Thondar Thangal Kuzhaam - ஸ்ரீ வைஷ்ணவர்களின் கோஷ்டியிலே குழுமி, Kuzhumi - கூடி திரு புகழ்கள் பலவும் பாடி, Thiru Pugazhgal Palavum Paadi - (எம்பெருமானது) கீர்த்திகளெல்லாவற்றையும் (வாயாரப்) பாடி ஆராத மனம் களிப்போடு, Aaraadha Manam Kalipodu - (அவ்வளவிலும்) த்ருப்தி பெறாத மநஸ்ஸிலுள்ள ஆனந்தத்தோடே அழுத கண் நீர், Azhudha Kan Neer - அழுத கண்களிலுண்டான நீர்த் துளிகள் மழை சோர, Mazhai Soora - மழை போல் பெருகி வர நினைந்து உருகி ஏந்தி, Ninaindhu Urugi Aendhi - (எம்பெருமானை) நினைத்து (அத்தாலே) மனமுருகி ஸ்தோத்திரம் பண்ணி, நாளும், Naalum - எப்போதும் சீர் ஆர்ந்த முழவு ஓசை, Seer Aarntha Muzhavu Oosai - நல்ல வாத்யங்களின் கோஷமானது பரவை காட்டும், Paravai Kaatum - கடலோசை போல் முழங்கப் பெற்ற போர் ஆழி, Por Aazhi - (பகைவரோடு) யுத்தஞ்செய்வதையே தொழிலாக வுடைய அம்மானை, Ammanai - எம்பெருமானை கண்டு, Kandu - ஸேவிக்கப் பெற்று துள்ளி, Thulli - ஆநந்தத்துக்குப் போக்கு வீடாகத்) தலை கால் தெரியாமல் கூத்தாடி பூதலத்திலே, Poothalaththile - பூமியிலே புரளும் நாள் என்று கொல், Purallum Naal Endru Kol - (உடம்பு தெரியாமல்) புரள்வது என்றைக்கோ!. பரவை, Paravai - கடல் பரவியது: ஐ-கருத்தாய்ப் பொருள் விகுதி. |
| 656 | பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 10 | வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா
சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும்
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும்
இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ? | பதவுரை Show / Hideவன், Van - (நைமித்திக ப்ரளயத்தில்) அழியாதிருக்கக் கடவதும பெரு, Peru - பெருமை தங்கியதுமான வானகம், Vaanagam - ஸ்வர்க்கம் முதலிய மேலுலகங்கள் உய்ய, Uyya - உஜ்ஜீவிக்கவும் அமரர், Amarar - தேவர்கள் உய்ய, Uyya - உஜ்ஜீவிக்கவும் மண் உய்ய, Man Uyya - பூலோகம் உஜ்ஜீவிக்கவும் மண் உலகில் மனிசர் உய்ய, Man Ulagil Manisar Uyya - பூலோகத்திலுள்ள மனிதர்களெல்லாம் உஜ்ஜீவிக்கவும் மிகு துன்பம் துயர் அகல, Migu Thunbam Thuyar Akala - மிக்க துக்கத்தை விளைப்பதான பாவங்கள் நீங்கவும் அயர்வு ஒன்று இல்லா சுகம் வளர, Ayirvu Ondru Illa Sugam Valara - துக்கம் கலசாத சுகம் வளரவும் அகம் மகிழும், Aham Makizhum - (எப்போதும்) மனதில் ஆனந்தத்தை யுடையரான தொண்டர், Thondar - ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழ, Vazha - உஜ்ஜீவிக்கவும் அன்போடு, Anbodu - திருவுள்ளத்தில் உகப்போடு தென் திசை நோக்கி, Then Thisai Nookki - தெற்குத் திக்குக்கு அபிமுகமாக பள்ளி கொள்ளும், Palli Kollum - பள்ளி கொண்டிரா நின்ற அணி அரங்கன், Ani Arangan - ஸ்ரீரங்கநாதனுடைய திரு முற்றத்து, Thiru Muttirathu - ஸந்நிதியுள் திரு முற்றத்திலே அடியார் தங்கள், Adiyar Thangal - ஸ்ரீவைஷ்ணவர்களுடைய இன்பம் மிகு பெரு குழுவு கண்டு, Inbam Migu Peru Kuzhuvu Kandu - ஆநந்தம் நிரம்பிய பெரிய கோஷ்டியை சேவித்து யானும், Yaanum - அடியேனும் இசைந்து, Isainthu - (அவர்களுள் ஒருவனாக) மனம் பொருந்தி உடனே, Uthane - அவர்களோடு கூட இருக்கும் நாள் என்று கொல், Irukkum Naal Endru Kol - வாழ்ந்திருக்குங்காலம் எப்போது (வாய்க்குமோ?). |
| 657 | பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 11 | திடர் விளங்கு கரை பொன்னி நடுவு பாட்டு
திரு வரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை
கண்ணார கண்டு உகக்கும் காதல் தன்னால்
குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள்
கூடலர் கோன் கொடை குலசேகரன் சொல் செய்த
நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே | பதவுரை Show / Hideதிடர் விளங்கு கரை, Thidar Vilangu Karai - மணற்குன்றுகள் விளங்கா நின்ற கரையை யுடைத்தான பொன்னி நடுவு பாடு, Ponni Nadivu Paadu - காவிரியின் நடுவிடத்து கடல் விளங்கு, Kadal Vilangu - கடல் போல் விளங்குகின்ற கரு மேனி, Karum Meeni - கரிய திருமேனியை யுடைய அம்மான் தன்னை, Amman Thannai - பெரிய பெருமாளை கண் ஆர கண்டு உகக்கும் காதல் தன்னால், Kan Aara Kandu Ugakkum Kaadhal Thannal - கண்கள் த்ருப்தி யடையும்படி குடை விளங்கு, Kudai Vilangu - (அரசாட்சிக்கு ஏற்ப) வெண் கொற்றக் குடையுடன் விளங்கா நிற்பவரும் விறல் தானை, Viral Thaanai - பராக்கிரமம் மிக்க ஸேஸனைகளை யுடையவரும் கொற்றம் ஒள் வாள், Kotrham Ol Vaal - வெற்றியும் ஒளியும் பொருந்திய வாளை யுடையவரும் கூடலர் கோன், Koodalar Kon - மதுரையிலுள்ளவர்களுக்குத் தலைவரும் கொடை, Kodai - ஔதார்யத்தையே இயற்கையாக வுடையவருமான குலசேகரன், Kulashekaran - குலசேகரப் பெருமாள் சொற்செய்த, Sorzseitha - அருளிச் செய்த நடை விளங்கு, Nadai Vilangu - தமிழ் நடையானது நன்கு விளங்கா நின்ற தமிழ் மாலை பத்தும், Tamizh Maalai Paththum - தமிழ்ப் பிரபந்தரூபமான இப் பத்துப் பாசரங்களையும்; வல்லார், Vallaar - ஓத வல்லார்கள் நலம் திகழ் நாரணன், Nalam Thigazh Naaranan - கல்யாண குண சாலியான ஸ்ரீமந் நாராயணனுடைய அடி கீழ் நண்ணுவார், Adi Keezh Nannuvaaar - திருவடிகளில் சேரப் பெறுவர். |