திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1-6 வாணில முறுவல் (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
998பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) (ஸ்ரீ நைமிசாரண்யத் தெம்பெருமான் திருவடிகளிலே பெரிய பிராட்டியார் முன்னிலையாகச் சரணம் புகுகிறார் இத்திருமொழியில். பகவானிடத்தில் சரணாகதி செய்யுமிடத்து அவனுடைய மேன்மைகளையும் தன்னுடைய தாழ்வுகளையும் வெளியிட்டுக்கொண்டே செய்ய வேணுமென்று விதியிருப்பதாலும், ஆர்த்தியின் கனத்தாலே தம்முடைய தோஷங்களெல்லாம் நினைவுக்கு வந்தே தீருமாகையாலும், இவ்வாழ்வார் தாமும் தம்முடைய குற்றங்குறைகளை யெல்லாம் விரிவாகப் பேசிக்கொண்டு சரணாகதி பண்ணுகிறார்.) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) 1
வாணிலாமுறுவல்சிறுனுதல்பெருந்தோள் மாதரார்வனமுலைப்பயனே பேணினேன், அதனைப்பிழையெனக்கருதிப் பேதையேன்பிறவிநோயறுப்பான், ஏணிலேனிருந்தேனெண்ணினேனெண்ணி இளையவர்க்கலவியிந்திறத்தை நாணினேன், வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்! –1-6-1
பதவுரை Show / Hide
நைமிசாரணியத்துள் எந்தாய், Naimisaaraniyaththul Endhaai - நைமிசாரண்யத்தில் எழுந்தருளியிருக்கிற ஸ்வாமீ!,
பேதையேன், Paethaiyen - அறிவு கெட்டவனான அடியேன்,
வாள் நிலா முறவல், Vaal Nila Muraval - ஒளி பொருந்திய புண் சிரிப்பையும்
சிறு நுதல், Siru Nuthal - சிறிய நெற்றியையும்
பெரு தோள், Peru Thol - பெரிய தோளையும் உடையரான
மாதரார், Maatharaar - பெண்களினுடைய
வனம் முலையே, Vanam Mulaiye - அழகிய முலைகளையே
பயன், Payan - பரம புருஷார்த்தமாக
பேணினேன், Paeninaen - (நெடுநாள் வரை) ஆதரித்திருந்தேன்;
அதனை, Adhanai - அப்படி ஆதரித்திருந்த நிலைமையை
பிழை என கருதி, Pizhai Ena Karuthi - தப்பென்று நினைத்து
பிறவி நோய் அறுப்பான் ஏண் இலேன் இருந்தேன், Piravi Noi Aruppaan Aen Ileen Irundhen - ஸம்ஸாரமாகிற வியாதியை அறுத்துக்கொள்ள எண்ண மில்லாதவனாகவே இருந்திட்டேன்;
எண்ணினேன், Enninaen - ஸ்வரூபத்தை ஆராயத்தொடங்கினேன்;
எண்ணி, Enni - ஆராயவே,
இளையவர் கலவியின் திறத்தை நாணினேன், Ilaiyavar Kalaviyin Thiraththai Naaninaen - விசயாந்தர போகங்களைக் காறியுமிழ்ந்தேன்;
வந்து உன் திரு அடி அடைந்தேன், Vandhu Un Thiru Adi Adaindhen - இன்று உன் திருவடிகளை வந்து பணிந்தேன்.
999பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எம்பெருமான் பக்கல் வந்துசேர்ந்தவுடனே, கீழ்க்கழிந்த காலத்துக்கு அநுதாபம் பிறப்பது வழக்கம். இப்படி பகவத் விஷயத்திலீடுபட்டு ஆநந்தமயமாகப் போது போக்க வேண்டியிருக்க, அந்தோ! விஷயாந்தரங்களில் ஈடுபட்டுத் தருமத்தை அடியோடு மறந்து எவ்விதத்திலாவது இந்திரியங்களுக்கு திருப்தியை உண்டாக்குவதே வேண்டியது என்று கொண்டு அருமந்த காலத்தை அநியாயமாகப் போக்கினேனே! என்று கழிவிரக்கங் காட்டுகின்றார் முன்னடிகளில்.) 2
சிலம்படி யுருவில் கரு நெடும் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து புலம்படிந்து உண்ணும் போகமே பெருக்கிப் போக்கினேன் பொழுதினை வாளா அலம் புரி தடக்கை யாயனே மாயா வானவர்க்கு அரசனே வானோர் நலம் புரிந்து இறைஞ்சுன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-2
பதவுரை Show / Hide
சிலம்பு அடி உருவின், Silambu Adi Uruvin - சிலம்புகளை அணிந்த கால்கள் அழகாயிருக்கப் பெற்றவர்களும்
கருநெடு கண்ணார் திறத்தன் ஆய், Karunedu Kannaar Thiraththan Aay - கறுத்து நீண்ட கண்களையுடையவர்களுமான மாதர்களிடத்திலேயே ஆஸக்தனாய்
அறத்தையே மறந்து, Araththaye Maranthu - தருமங்களை மறந்து
புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி, Pulan Padinthu Unnum Pogame Perukki - இந்திரியங்கள் பொருந்தி அநுபவிக்கிற விஷய போகங்களையே மேன் மேலும் அதிகப்படுத்திக்கொண்டு
பொழுதினை வாளா போக்கினேன், Pozhudhinai Valaapo Kkinen - வாழ்நாளை வீணாகக் கழித்தேன்;
அலம் புரி தடகை, Alam Puri Thadakai - போதும் போதுமென்று சொல்லும்படியாக தாநஞ்செய்கிற பெரிய திருக்கையையுடைய
ஆயனே, Aayaney - கோபால க்ருஷ்ணனே!
மாயா, Maayaa - ஆச்சரியமான செய்கைகளையுடையவனே!
வானவர்க்கு அரசனே, Vaanavarkku Arasane - தேவாதிதேவனே!
வானோர், Vaanor - நித்யஸூரிகள்
நலம் புரிந்து இறைஞ்சு, Nalam Purinthu Irainju - அன்பு புண்டு ஆக்ரயிக்கப்பெற்ற
உன் திரு அடி அடைந்தேன், Un Thiru Adi Adaindhen - உன் திருவடிகளிலே இன்று வந்து கிட்டப்பெற்றேன்.
1000பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (போக்கினேன் பொழுதினை வாளா ” என்று வீண்போது போக்கினதாகக் கீழ்ப்பாட்டிலருளிச் செய்தார் ;) 3
சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து கரி குழல் மடந்தையர் திறத்து காதலே மிகுத்துக் கண்டவா திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும் வேதனைக் கொடுங்கி நடுங்கினேன் வேலை வெண் திரை யலமரக் கடைந்த நாதனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-3
பதவுரை Show / Hide
வேலை வெண்திரை அலமர, Velaivendhirai Alamara - கடலிலேயுள்ள வெளுத்த அலைகள் கலங்கும்படி
கடைந்த, Kadaindha - (தேவர்களுக்காகக்) கடைந்தருளின
சூதினை பெருக்கி, Soodhinai Perukki - அதிகமாகச் சூதாடியும்
களவினை துணிந்து, Kalavinai Thuninthu - களவு செய்வதில் துணிந்தும்
சுரி குழல் மடந்தையர் திறத்து காதலேமிகுத்து, Suri Kuzhal Madanthaiyar Thirathu Kaadhalemiguthu - சுருண்ட கூந்தலையுடைய ஸ்த்ரீகள் விஷயத்திலே மிக்க ஆசைகொண்டு
கண்ட ஆ திரிந்த, Kanda Aa Thirindha - கண்டபடியெல்லாம் தட்டித்தரிந்த
தொண்டனேன், Thondaneyn - அடியேன்
நமன் தமர்செய்யும் வேதனைக்கு, Naman Thamarcheyyum Vedhanaiyikku - யமபடர்கள் செய்யப்போகிற ஹிம்ஸைகளை நினைத்து
ஒடுங்கி நடுங்கினேன், Odungi Nadunginen - உடல் குன்றி நடுங்கினவனாய்
வந்து உன் திருஅடி அடைந்தேன், Vandhu Un Thirudi Adaindhen - இன்று வந்து உன் திருவடிகளைச் சேர்ந்துவிட்டேன்.
1001பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அக்நி ஸாக்ஷிகமாகத் தாம் விவாஹம் செய்து கொண்ட பெண்டிர்களை அலக்ஷியஞ் செய்து விட்டிட்டுப் பிறருடைய மனைவியையும் பொருளையும் கைப்பற்றி இவ்வுலகில் மனம் போனபடி திரிந்தவர்கள் அந்தப் பாவங்களின் பலனை அனுபவிப்பதற்கு யம லோகஞ் சென்றவாறே அங்கு யமபடர்கள் வந்து பிடித்துக்கொண்டு சக்தி யுள்ளவளவும் புடைத்துத் தங்களுக்கும் இளைப்பு உண்டானவாறே ‘ இங்கே கிடவுங்கள்’ என்று ஒரு மூலையில் தள்ளிவைத்து, செம்பினால் செய்யப்பட்டு நெருப்பிலே பழுக்கப் பழுக்கக் காய்ச்சப்பட்டு எரி வீசுகின்ற பதுமையைக் கொணர்ந்து முன்னே நிறுத்தி, பாவீ! முன்னே பிறர் மனைவியை அணைந்தாயே; இப்போது இந்தப் பதுமையை அணைந்து கொள்” என்று சொல்லி அணைவித்துத் துன்பப்படுத்து வர்கள் – என்கிற விஷயத்தைக் கேள்விப்பட்டது முதல் அஞ்சி நடுங்குகின்றேன் ; உன்னைச் சரணமடைந்தால் எல்லா அச்சமும் நீங்கிவிடும் என்று இப்போது உன்னைச் சரணமடைந்திட்டேன் என்றாராயிற்று.) 4
வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர் பொருள் தாரம் என்று இவற்றை நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழு வென மொழிவதற்கு அஞ்சி நம்பனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-4
பதவுரை Show / Hide
வம்பு உலாம் கூந்தல் மனைவியை துறந்து, Vambu Ulaam Koondhal Manaiviyai Thurandhu - பரிமளம் வீசாநின்ற கூந்தலையுடையளான தாலி கட்டின பெண் சாதியை உபேக்ஷித்துவிட்டு
பிறர் பொருள் தாரம் என்று இவற்றை நம்பினார், Piraar Porul Thaaram Endru Ivatrai Nambinaar - பிறருடைய பொருள், பிறருடைய மனைவி என்னும்படிய பரத்ரவ்யங்களை விரும்பினவர்கள்
இறந்தால், Irandhaal - இறந்துபோனால்
நமன் தமர், Naman Thamar - யமபடர்கள்
பற்றி, Patri - பிடித்துக்கொண்டு
எற்றி, Etri - துன்பப்படுத்தி
வைத்து, Vaiththu - (தங்களுக்கும் கை சலித்தவாறே) ஓரிடத்தில் போட்டுவைத்து,
பாவீ, Paavee - “பெரும்பாவங்களைச் செய்து இவ்விடம் வந்து சேர்ந்தவனே!
செம்பினால் இயன்ற எரி எழுகின்ற பாவையை தழுவு என, Sembinaal Iyanra Eri Ezhugindra Paavaiye Thazhuvu Ena - செம்பினால் செய்யப்பட்டதாய் நெருப்புப் பற்றியெரிகின்றதான இந்த ஸ்த்ரீப்ரதிமையைத்தழுவிக்கொள்” என்று
மொழிவதற்கு அஞ்சி, Mozhivadharku Anji - சொல்லப்போகிறார்களே! யென்று பயப்பட்டு
நம்பனே, Nambane - ஆச்ரிதர்களுக்கு நம்பத்தகுந்தவனே!
1002பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இடும்பையாலடர்ப்புண்டு.- விஷய போகங்களைச்செய்து திரிபவர் களும் ஏழைகளைக் கண்டால் ஐயோ ! என்று இரங்குவதுண்டு ; அந்த இரக்கமும் எனக்கு இல்லாமல் போயிற்றே ! என்று அநுதாபப்படுகிறார்.) 5
இடும்பையால் அடப்புண்டு இடுமினோ துற்றென்று இரந்தவர்க்கு இல்லையே என்று நெடும் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை கடும் சொலார் கடியார் காலனார் தமரால் படுவதோர் கொடு மிறைக்கு அஞ்சி நடுங்கி நான் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-5
பதவுரை Show / Hide
இடும்பையால் அடர்ப்புண்டு, Idumpaigal Adarppundhu - ஏழ்மைத்தனத்தினால் கஷ்டப்பட்டு
ஓ! துற்று இடுமின் என்று, O Thuttru Idumin Enru - “ஐயோ! ஒரு கவளம் இடுங்கோள்” என்று கதறி
இரந்தவர்க்கு, Irandavarkku - பிச்சை கேட்டவர்களுக்கு
இல்லையே என்று, Illaiye Enru - இல்லவேயில்லை யென்று சொல்லி
நெடு சொலால் மறுத்த, Nedu Solaal Marutha - நீண்ட சொல்லாலே திரஸ்கரித்த
நீசனேன் நான், Neesanen Naan - நீசனாகிய நான்
அந்தோ, Andho - ஐயோ!
வினை பயன்தன்னை நினைக்கிலேன், Vinai Payanthanai Ninaikkilena - பாபங்களுக்கு நேரக்கூடிய பலன்களை நெஞ்சாலும் நினைக்க மாட்டாதவனாயிருக்கின்றேன்;
கடு சொலார் கடியார் காலனார் தமரால் படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி நடுங்கி, Kadu Solaar Kadiyaar Kaalanaar Thamaral Paduvathu Oru Kodu Mirraikku Anji Nadungi - க்ரூரமான சொற்களையுடையராய் க்ரூரமான செய்கை களையுமுடையரான யமபடர்களாலே உண்டாகக் கூடியகடினமாக ஹிம்ஸைகளை நினைத்து அஞ்சி நடுங்கி
1003பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜீவஹிம்ஸைகள் பண்ணித் திரிந்ததற்கும் எல்லையில்லையென்கிறார். கோடியமனமாவது வழியைவிட்டு விலகின மனம்; ருஜு வான வழியில் போகாமல் கோணலாகச் செல்லுகின்ற மனம் என்றபடி. புத்தி கெட்டுச் சினத்தொழில்களைச் செய்தேனென்கிறார்.) 6
கோடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து திரிந்து நாயினத்தொடும் திளைத்திட்டு ஓடியும் உழன்றும் உயிர் களே கொன்றேன் உணர்விலேன் ஆதலால் நமனார் பாடியைப் பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே பாற் கடல் கிடந்தாய் நாடி நான் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-6
பதவுரை Show / Hide
பரமனே, Paramaney - புருஷோத்தமனே!
பாற்கடல் கிடந்தாய், Paarkadal Kidandhai - திருப்பாற்கடலில் திருக்கண் வளர்ந்தருளுமவனே!
கோடிய மனத்தால், Kodiyamanathal - கோணலான நெஞ்சோடே
சினம் தொழில் புரிந்து, Sinam Thozhil Purinthu - பிறர்க்கு விரோதமான காரியங்களைச் செய்து
நாய் இனத்தொடும் திரிந்து திளைத்திட்டு, Nai Inathodum Thirinthu Thilaithittu - நாய் முதலிய துஷ்ட ஜந்துக்களோடு கூடித்திரிந்து வேட்டையாடிக்களித்து
ஓடியும் உழன்றும், Oadiyum Uzhanthum - இங்குமங்கும் ஓடித்திரிந்தும்
உயிர்களே கொன்றேன், Uyirgale Konren - பிராணி ஹிம்ஸையையே செய்துகொண்டிருந்தவனாய்
உணர்வு இலேன் நான், Unarvu Ilen Naan - விவேக சூந்யனாயிருந்த நான்
நமனார் பாடியை பெரிதும் பரிசு அழித்திட்டேன், Namanar Paadiyai Peridum Parisu Azhithitten - யமபட்டணமான நரகத்தின் நிலைமையை மிகவும் அழித்து விட்டேன்.
1004பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மனமொழி மெய்கள் மூன்றாலும் பாவங் களையே செய்து செத்தவர்கள் போகிற வழியின் கொடுமையைக் கேள்விப்பட்ட மாத்திரத்திலே நடுநடுங்கி வந்து உன் திருவடிகளைப் பற்றினேன் என்கிறார்.) 7
நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதி யல்லாதன செய்தும் துஞ்சினார் செல்லும் தொன்னெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய் வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா வானவர் தானவர்க்கு என்றும் நஞ்சனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-7
பதவுரை Show / Hide
விளங்கனி முனிந்தாய், Vilangani Munindhai - விளாம்பழமாய் வந்து தோன்றின அஸுரனைச் சீறித் தொலைத்தவனே!
வஞ்சனேன் அடியேன்நெஞ்சினில் பிரியா வானவா, Vanjanen Adiyennenjinil Priya Vaanavaa - வஞ்சகனான என்னுடைய நெஞ்சினுள்ளும் புகுந்து பிரியாதிருக்கிற தேவனே!
தானவர்க்கு என்றும் நஞ்சனே, Thaanavarkku Endrum Nanjane - அசுரர்களுக்கு எப்போதும் மிருத்யுவாயிருப்பவனே!
நீதி அல்லாதன, Neethi Alladhana - அநீதியான ஒழுக்கங்களை
நெஞ்சினால் நினைந்தும், Nenjinaal Ninaindhum - (முதலில்) நெஞ்சாலே நினைத்தும்
வாயினால் மொழிந்தும், Vaayinal Mozhindhum - (பிறகு) வாயாலே சொல்லியும்
செய்தும், Seithum - (பிறகு) செய்கையினால் அனுட்டித்தும்
துஞ்சினார், Thunjinar - முடிந்தவர்கள்
செல்லும், Sellum - அடையத்தக்க
தொல் நெறி, Thol Nerii - நரகமார்க்கத்தை
கேட்டே, Kette - (கற்றுணர்ந்த பெரியோர் சொல்லக்) கேட்டமாத்திரத்திலே
துளங்கினேன், Thulankinen - நடுங்கினவனாய்க்கொண்டு உன் திருவடி அடைந்தேன்-.
1005பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கலி புருஷன் என்னைத் துன்பப்படுத்த நினைத்துத் தனக்குக் கையாட்களான இந்திரியங்களையழைத்து நீங்கள் திருமங்கை யாழ்வாரை நன்றாக ஹிம்வித்துவிடுங்கள் என்று ஏவினான் ;) 8
ஏவினார் கலியார் நலிக வென்று என் மேல் எங்கனே வாழுமாறு ஐவர் கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல் வண்ணா பாவினாரின் சொல் பன் மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து என் நாவினால் வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-8
பதவுரை Show / Hide
குறுங்குடி, Kurungudi - திருக்குறுங்குடியிலெழுந்தருளியிருக்கிற
நெடு கடல் வண்ணா, Nedu Kadal Vanna - பெரிய கடல் போன்ற திருநிறமுடையவனே!
கலியார், Kaliyar - கலிபுருஷனென்கிற ஒரு மஹாப்ரபுவானவர்
நலிக என்று, Nalika Endru - “இந்தத் திருமங்கை மன்னனை ஹிம்ஸியுங்கோள்” என்று சொல்லி
என் மேல், En Mel - என் மேலே
ஐவர் ஏவினார், Aivar Aevinar - பஞ்சேந்திரியங்களையும் ஏவிவிட்டார்;
எங்ஙனே வாழும் ஆறு, Enggane Vaalum Aaru - அந்தக் கலிபுருஷர் இனி பிழைக்க வழி ஏது? (ஏனென்னில்;)
நான், Naan - அடியேன்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன், Kovinar Seyyum Kodumaiyai Madithen - குறும்பர்களான அந்த இந்திரியங்கள் செய்யத்தக்க கொடுமைகளை அப்புறப்படுத்திவிட்டேன்;
என் நாவினால், En Naavinai - எனது நாவினாலே
பா ஆர் இன் சொல் பல் மலர்கொண்டு, Paa Ar In Sol Pal Malarkondu - நல்ல சந்தங்கள் நிறைந்த இனிய சொற்களாகிற புஷ்பங்கள் பலவற்றையுங் கொண்டு
உன் பாதமே பரவி, Un Paathame Paravi - உன் திருவடிகளையே தோத்திரஞ்செய்து
பணிந்து, Panindhu - கீழே விழுந்து
1006பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தம்முடைய அத்யவஸாயத்தை வெளி யிடுகிறாரிதில்.) 9
ஊனிடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல் தானுடைக் குரம்பை பிரியும் போது உன் தன் சரணமே சரணம் என்று இருந்தேன் தேனுடைக் கமலத் திருவினுக்கு அரசே திரை கொள் மா நெடும் கடல் கிடந்தாய் நானுடைத் தவத்தால் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –1-6-9
பதவுரை Show / Hide
தேன் உடை கமலம் திருவினுக்கு அரசே, Then Udai Kamalam Thiruvinukku Arase - தேன் நிறைந்த தாமரைப்பூவிற் பிறந்த பெரிய பிராட்டியார்க்குப் பதியானவனே!
திரை கொள்மா நெடு கடல் கிடந்தாய், Thirai Kolma Nedu Kadal Kidandhai - அலைகள் நிரம்பிய மிகப்பெரிய திருப் பாற்டலில் கண் வளர்ந்தருளுமவனே!
ஊன், Oon - மாமிசத்தை
இடை சுவர் வைத்து, Idai Suvar Vaiththu - நடுநடுவே சுவராக வைத்து
என்பு, Enbu - எலும்புகளை
தூண் நாட்டி, Thoon Naatti - கம்பங்களாக நட்டு
உரோமம் வேய்ந்து, Uromam Veyndhu - மயிர்களை மேலே மூடி
ஒன்பது வாசல் தான் உடை, Onbathu Vaasal Thaan Udai - நவத்வாரங்களையுடையதாகச் செய்யப்பட்ட
குரம்பை, nan - குடிசை போன்ற இந்த சரீரத்தை
பிரியும் போது, nan - விட்டுப்பிரியுங்காலத்தில்
உன்தன் சரணமே சரணம் என்று இருந்தேன், nan - உன்னுடைய திருவடிகளே ரக்ஷகமாக வேணுமென்று நினைத்திருந்தேன்;
நானுடை தவத்தால் திருஅடி அடைந்தேன், nan - (இப்போது) என்னுடைய பாக்கியத்தினால் திருவடிவாரத்தில் சேரப்பெற்றேன்.
1007பெரிய திருமொழி || (வாணில முறுவல்) - -(திரு நைமிசாரண்யம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இமையோர் நாதனாகிய இந்திரன் தனது பரிவாரங்களை யெல்லாம் அழைத்து நாம் எல்லாரும் நைமிசாரணியத்துள் சென்று எம்பெருமானை ஸேவிப்போம் வாருங்கள்;) 10
ஏதம் வந்து அணுகா வண்ண நாம் எண்ணி எழுமினோ தொழுதும் என்று இமையோர் நாதன் வந்து இறைஞ்சும் நைமி சாரணி யத்து எந்தையைச் சிந்தையுள் வைத்து காதலே மிகுத்த கலியன் வாய் ஒலி செய் மாலை தான் கற்று வல்லார்கள் ஓத நீர் வையகம் ஆண்டு வெண் குடைக் கீழ் உம்பரும் ஆகுவர் தாமே –1-6-10
பதவுரை Show / Hide
ஏதம் வந்து அணுகா வண்ணம், nan - “துக்கங்கள் நம்மிடம் வந்து சேராத வகையை
நாம் எண்ணி, nan - நாம் எண்ணியிருப்போமாகில்
தொழுதும் எழு மின் என்று, nan - (நைமிசாரண்யத்திலேபோய்த்) தொழுவோம் வாருங்கள்” என்று சொல்லி
இமையோர் நாதன் வந்து, nan - தேவேந்திரன் வந்து
இறைஞ்சும், nan - ஆச்ரயிக்கப்பெற்ற
நைமிச அரணியத்து எந்தையை, nan - நைமிசாரண்யத்தில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமானை
சிந்தையுள் வைத்து, nan - தியானம் செய்து
காதல் மிகுந்த, nan - பகவத்பக்தி அதிகரிக்கப்பெற்ற
கலியன், nan - திருமங்கையாழ்வார்
வாய் ஒலி செய்மாலை, nan - அருளிச் செய்த இச்சொல் மாலையை
கற்று வல்லுநர்கள் தாம், nan - அப்யஸித்துத் தேறினவர்கள்
ஓதம்நீர் வையகம், nan - கடல் சூழ்ந்த இப்பூமண்டலத்தை
வெண் குடை கீழ் ஆண்டு, nan - வெளுத்த குடை நிழலின் கீழே இருந்துகொண்டு அரசாட்சி செய்தபின்பு
உம்பரும் ஆகுவர், nan - நித்யஸூரிகளோடும் சேரப்பெறுவர்கள்.