திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1-7 அங்கண் ஞாலம் (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1008பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழ் இரண்டாந் திருமொழியின் நான்காம் பாட்டின் உரையில் நரஸிம்ஹாவதார ப்ரமேயங்களை மிக்க விரிவாக வரைந்தோ மாதலால் அங்கே கண்டு கொள்வது.) 1
அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோராளரியாய் அவுணன் பொங்காவாகம் வள்ளு கிரால் போழ்ந்த புனிதன் இடம் பைம் கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ் செங்கணாளி யிட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றமே –1-7-1
பதவுரை Show / Hide
அங்கு, Angu - (‘நீ சொல்லுகிற விஷ்ணு இங்கில்லை’ என்று இரணியன் சபதஞ் செய்த) அவ்விடத்திலே
அம் கண் ஞாலம் அஞ்ச ஓர் ஆள் அரி ஆய், Am Kan Nyaalam Anja Oor Aal Ari Aay - அழகியதாய் விசாலமான பூமியிலுள்ளாரெல்லாரும் பயப்படும்படியான ஒப்பற்ற நரசிங்கமூர்த்தியாய் (எம்பெருமான் தோன்றினதைக் கண்டு)
அவுணன் பொங்க, Avunan Pong - இரணியன் கிளர்ந்த வளவிலே,
ஆகம், Aagam - அவனது உடலை
வள் உகிரால், Val Ukiraal - கூர்மையான நகங்களாலே
போழ்ந்த, Pozhntha - இருபிளவாகப் பிளந்த
புனிதன் இடம், Punithan Idam - பரம பரிசுத்தனான எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடமாவது;-
செம் கண் ஆளி, Sem Kan Aali - (சீற்றத்தால்) சிவந்த கண்களையுடைய சிங்கங்களானவை
பை கண் ஆனை கொம்பு கொண்டு, Pai Kan Aanei Kombu Kondu - பசுமையான கண்களையுடைய யானைகளின் தந்தங்களைக் கொணர்ந்து
பத்திமையால், Pathimaiyaal - பக்தியினாலே
அடி கீழ், Adi Keezh - (பகவானுடைய) திருவடிகளிலே
இட்டு, Ittu - ஸமர்ப்பித்து
இறைஞ்சும், Iraichum - ஆச்ரயிக்கப்பெற்ற
சிங்கவேள் குன்றம், Singaveal Kunram - அஹோபிலமென்கிற சிங்க வேள்குன்றமாம்.
1009பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சீற்றத்தாலே கடைவாயுடனே நாக்கை எற் றிக்கொள்ளுகிற பெரிய வாயையுடைய நரசிங்கமூர்த்தியாய்த் தோன்றி, பர ஹிம்ஸையே போது போக்கான இரணியனுடைய மார்பைப் பிளந்த பெருமான் எழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேழ்குன்றம்.) 2
அலைத்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன் கொலைக் கையாளன் நெஞ்சிடந்த கூர் உகிராளன் இடம் மலைத்த செல் சாத்தெறிந்த பூசல் வன் துடிவாய் கடுப்ப சிலைக்கை வேடர் தெழிப் பறாத சிங்க வேள் குன்றமே –1-7-2
பதவுரை Show / Hide
அலைத்த பேழ்வாய், Alaitha Pezhvai - (சீற்றத்தாலே) நாக்கு அலையா நின்றுள்ள பெரிய வாயையும்
வாள் எயிறு, Vaal Eiyiru - ஒளி பொருந்திய பற்களையுமுடையதாய்
ஓர், Oor - ஒப்பற்றதாய்
கோள், Kol - மிடுக்கையுடையதான
அரி ஆய், Ari Aay - நரஸிம்ஹமாய்க்கொண்டு
கொலை கையாளன் அவுணன் நெஞ்சு இடந்த, Kolai Kaiyaalan Avunan Nenju Idanthu - ஜீவ ஹிம்சையில் கைகாரனான இரணியனுடைய மார்வைக் கிழித்தெறிந்த
கூர் உகிராளன் இடம், Koora Ukiraalan Idam - கூர்மையான நகங்களையுடைய எம்பெருமான்  எழுந்தருளியிருக்கு மிடமாவது:-
மலைத்த, Malaittha - (வேடர்களாலே) ஆக்கிரமிக்கப்பட்ட
செல் சாத்து, Sel Saathu - வழிப்போக்கு ஜனங்களின் ஸமூகத்தாலே
எறிந்த, Erintha - (பிரதியாகச்) செய்யப்பட்ட
பூசல், Poosal - சண்டையிலே
வல் துடி வாய் கடுப்ப, Val Thudi Vaai Kaduppa - கடூரமான தொனியை யுடைத்தான பறையானது கோஷம் செய்ய,
சிலை கை வேடர், Silai Kai Veda - வில்லைக் கையிலேயுடைய வேடருடைய
தெழிப்பு, Thezhippu - ஆரவாரமானது
அறாத, Aradha - எப்போதும் மாறாத
1010பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வடிவின் பெருமைக்குத் தகுதியாகப் பெரிய வாயையும், ஒளி பொருந்திய (அல்லது, வாள் போன்ற) கோரப்பற்களையு முடைய நரசிங்கமாகத் தோன்றி இரணியனுடைய மாம்ஸஞ் செறிந்த மார்வைப் பிளந்த பெருமான் உறையுமிடம் சிங்கவேள் குன்றம்.) 3
ஏய்ந்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன் வாய்ந்த வாகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம் ஓய்ந்த மாவுமுடைந்த குன்றும் அன்றியும் நின்றழலால் தேய்ந்த வேயுமல்ல தில்லாச் சிங்க வேள் குன்றமே –1-7-3
பதவுரை Show / Hide
ஏய்ந்த பேழ்வாய் வாள் எயிறு, Eyndha Pezhvai Vaal Eiyiru - (வடிவுக்குத்) தகுதியாகப் பெருத்த வாயையும் வாள் போன்ற பற்களையுடைமுடையதாய்
ஓர் கோள் அரி ஆய், Oru Kola Ari Aay - ஒப்பற்றதாய் மிடுக்கையுடையதான நரசிங்கமாகி
அவுணன், Avunan - இரணியாசுரனுடைய
வாய்ந்த ஆகம், Vaayndha Aagam - வளர்ந்த உடலை
வள் உகிரால், Val Ukiraal - கூர்மையான நகங்களாலே
வகிர்ந்த, Vagirntha - கிழித்தெறிந்த
அம்மானது இடம், Ammaanathu Idam - ஸ்வாமி எழுந்தருளி யிருக்கிற இடமாவது:-
ஓய்ந்த மாவும், Oyndha Maavum - (கடினமான நிலங்களில் அங்குமிங்கும் திரிந்து அலைந்ததனால்) களைத்துப்போன மிருகங்களும்
உடைந்த குன்றும், Udaindha Kunrum - உடைந்துபோன சிறு மலைகளும்
அன்றியும், Andriyum - இன்னமும்
நின்று அழலால் தேய்ந்த வேயும் அல்லது, Ninru Azhalal Theyndha Veyum Allathu - இருந்தபடியே நெருப்பாலே குறைகொள்ளியாய்க் கிடக்கிற மூங்கிலும் ஆகிய இவைகள் தவிர
இல்லா, Illaa - வேறொன்றுமில்லாத
1011பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கையும் வேலுமாயிருக்கிற விருப்பைக் கண்ட காட்சியிலே எல்லாரையும் துக்கப்படுத்தவல்லவனான இரணியனுடைய உயிரைக் கவர்ந்து அவனது மார்வைப் பிளந்தருளின பெருமான் உறையுமிடமாவது சிங்கவேழ்குன்றம்.) 4
எவ்வம் வெவ்வேல் பொன் பெயரோன் எதலனின் இன்னுயிரை வவ்வி ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த வம்மானதிடம் கவ்வு நாயும் கழுகும் உச்சிப் போதொடு கால் சுழன்று தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச் சிங்க வேள் குன்றமே –1-7-4
பதவுரை Show / Hide
எவ்வம் வெம்வேல், Evvam Vemveel - துன்பத்தை விளைப்பதாய் தீக்ஷ்ணமான வேலாயுதத்தையுடையனாய்
ஏதலன், Aethalan - பாகவத விரோதியான
பொன் பெயரோன், Pon Peyaron - இரணியனுடைய
இன் உயிரை, In Uyirai - இனிமையான பிரானணை
வவ்வி, Vavvi - அபஹரித்து
ஆகம், Aagam - (அவனுடைய) சரீரத்தை
வள் உகிரால், Val Ukiraal - கூர்மையான நகங்களாலே
வகிர்ந்த அம்மானது இடம், Vagirntha Ammanathu Idam - கிழித்தெறிந்த பெருமான் எழுந்தருளியிருக்குமிடமாவது:-
கவ்வும் நாயும், Kavvum Nayum - (கண்டவர்களை) யெல்லாம் கவர்கின்ற நாய்களும்
கழுகும், Kazhugum - கழுகுகளும் (நிறைந்திருப்பதனாலும்)
உச்சிப் போ தொடு கால் சுழன்று, Uchchi Po Thodu Kaal Suzhndru - கொழுத்த வெய்யிலும் சுழல்காற்றும் எப்போது மிருப்பதனாலும்
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா, Deivam Allal Chella Onna - தேவதைகள் தவிர மற்றையோர் சென்று கிட்ட  முடியாததான
1012பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சீற்றத்தாலே பல்லோடு நாக்கைச் செலுத்தி மென்றுகொண்டே யிருக்கிற பெரிய வாயையும் ஒளிவிடுகிற எயிற்றையும் மிடுக்கையுமுடைய நரசிங்கமாய்த் தோன்றி இரணியன் உயிர்மாளும்படியாக அவனது மார்வைப் பிளந்த பெருமானெழுந்தருளி யிருக்குமிடம் சிங்கவேழ் குன்றம். அஃது எப்படிப்பட்டது? மாறாமல் நின்று எரிகிற அக்நியைச் சுழல் காற்றானது முகந்து கொண்டு ஆகாயமெங்கும் பரவி வீசியெறிகையாலே சென்று காண்பதற்கு அருமைப்படும் கோயில்.) 5
மென்ற பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன் பொன்ற வாகம் வள்ளுகிரால்  போழ்ந்த புனிதனிடம் நின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பூடிரிய சென்று காண்டற்கரிய கோயில் சிங்க வேள் குன்றமே –1-7-5
பதவுரை Show / Hide
மென்ற பேழ்வாய், Mendra Pezhvai - (சீற்றத்தாலே) மடித்த பெரிய வாயையும்
வாள் எயிறு, Vaal Eiyiru - வாள்போன்ற பற்களையுமுடையதாய்
ஓர், Oor - ஒப்பற்றதாய்
கோள், Kol - மிடுக்கையுடையதான
அரி ஆய், Ari Aay - நரசிங்கமாகி
பொன்றஅவுணன், Ponraavunan - (தன்னைக் கண்டமாத்திரத்திலே) செத்துப்போன இரணியனுடைய
ஆகம், Aagam - உடலை
வள் உகிரால், Val Ukiraal - கூர்மையான நகங்களாலே
போழ்ந்த, Pozhntha - பிளந்திட்ட
புனிதன் இடம், Punithan Idam - பரிசுத்தனான பகவான் எழுந்தருளியிருக்குமிடமாவது:-
சூறை, Soorai - சுழல்காற்றானது
நின்ற செம் தீ மொண்டு, Nindra Sem Thee Mondo - குறைவில்லாமலிருக்கிற சிவந்த நெருப்பை வாரிக்கொண்டு
நீள் விசும்பூடு இரிய, Neel Visumpoo Iriya - விசாலமான ஆகாசமடங்கலும் ஓடிப்பரவுகிறபடியாலே
சென்று காண்டற்கு அரிய கோயில், Sendru Kaandharku Ariya Koyil - கிட்டிச் சென்று ஸேவிக்க முடியாத கோயிலான
1013பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சீற்றத்தாலே அக்நிஜ்வாலைபோலே ஜ்வலிக்கிற சிவந்த கண்ணையும் ஒளிவிடாநின்ற பெரிய வாயையும் கோரப்பற்களையும் கண்டு “அப்பப்ப! இதென்ன உரு!” என்று பயப்பட்டு தேவர்கள் அங்கு மிங்கும் கால் தடுமாறிச் சிதறி ஓடும்படியாக நரசிங்கவுருக்கொண்டு எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேழ்குன்றம்.) 6
எரிந்த பைங்கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடி தெவ்வுரு வென்று இரிந்து வானோர் கலங்கியோடே இருந்த வம்மானதிடம் நெரிந்த வேயின் முழை யுள் நின்று நீண் எரி வா யுழுவை திரிந்த வானைச் சுவடு பார்க்கும் சிங்க வேள் குன்றமே –1-7-6
பதவுரை Show / Hide
எரிந்த, Erintha - (சீற்றத்தாலே) ஜ்வலிக்கின்ற
பை கண், Pai Kan - பசுமைதங்கிய கண்களோடும்
இலங்கு பேழ்வாய் எயிற்றொடு, Ilangu Pezhvai Eiyir Thodu - விளங்கா நின்ற பெரிய வாயில் பற்களோடும் கூடியிருக்கிற
இது, Idhu - இந்த நரசிங்கத் திருக்கோலமானது
எவ்வுரு என்று, Evuru Endru - என்ன பயங்கரமான ரூபம்! என்று அஞ்சி
வானோர், Vaanor - தேவர்கள்
இரிந்து கலங்கி ஓட, Irinthu Kalangi Oda - அங்குமிங்கும் சிதறிக் கால் தடுமாறி ஓடும்படியாக
இருந்த, Irundha - எழுந்தருளியிருந்த
அம்மானது இடம், Ammaanathu Idam - ஸர்வேசரனுடைய இடமாவது:-
உழுவை, Uzhuvai - புலிகளானவை
நெரிந்த வேயின் முழையுள் நின்று, Nerindha Veyin Muzhaiyul Nindru - நெருக்கமான மூங்கிற் புதர்களினின்றும்
நீள் நெறி வாய், Neel Nerai Vaai - பெரிய வழியிலே (வந்து)
திரிந்த ஆனை சுவடு பார்க்கும், Thirindha Aanai Suvadu Paarkkum - காட்டில் திரிகின்ற யானைகள் போன அடையாளத்தைஆராய்ந்து பார்க்குமிடமான
1014பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நரசிங்கமூர்த்தி இரணியன் மீது கொண்ட கோபம் அளவற்றிருந்ததனால் அந்தக் கோபாக்நி  மேலுலகமளவும் போய்ப் பரவி எங்கும் தஹிக்கப்புகவே ஸர்வலோக ஸம்ஹாரஸமயம் பிறந்துவிட்ட தென்று மூவுலகத்திலுள்ளோரும் அஞ்சி நடுங்கும்படியா யிருந்ததாம். அப்படிப்பட்ட உக்ர நரஸிம்ஹன் எழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேள் குன்றம்.) 7
முனைத்த சீற்றம் விண் சுடப் போய் மூ வுலகும் பிறவும் அனைத்தும் அஞ்ச வாளரியாய் இருந்த வம்மானிதிடம் கனைத்த தீயும் கல்லும் அல்லா வில்லுடை வேடருமாய் தினைத்தனையும் செல்ல ஒண்ணாச் சிங்க வேள் குன்றமே –1-7-7
பதவுரை Show / Hide
முனைத்த சீற்றம், Munaiththa Seetrum - மிக்க கோபமானது
போய், Poy - வளர்ந்து சென்று
விண் சுட, Vin Sudha - ஆகாயத்தைக் கொளுத்தவும்
மூ உலகும்பிறவும், Moo Ulagum Piravum - மூன்று லோகங்களும் மற்றுமுள்ளவைகளும்
அனைத்தும், Anaiththum - எல்லாம்
அஞ்ச, Anja - பயப்படவும்
கனைத்த தீயும், Kanaittha Theeyum - ஒலி செய்கின்ற நெருப்பும்
கல்லும், Kallum - (அந்த நெருப்பினால் வேகின்ற) கற்களும்
அல்லா வில் உடை வேடரும் ஆய், Allaa Vil Udai Veadarum Aayi - உலகத்தில் கண்டறியாத விற்களையுடைய வேடர்களும் நிறைந்திருப்பதனாலே
தினை தனையும் செல்ல ஒண்ணா, Thinai Thanaiyum Sella Onna - க்ஷணகாலமும் கிட்ட வொண்ணாததான
1015பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நான்முகக் கடவுளாகிய பிரமனும் சிவனும் முறைவழுவாது துதிக்கும்படியாக விலக்ஷணமான நரசிங்கவுருக் கொண்டு எம்பெருமா னெழுந்தருளியிருக்குமிடம் சிங்கவேள் குன்றம்.) 8
நாத் தழும்ப நான் முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த அங்கு ஓர் ஆளரியாய் இருந்த வம்மானதிடம் காய்த்த வாகை நெற்றொலிப்பக் கல்லதர் வேய்ங்கழை போய் தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்க வேள் குன்றமே –1-7-8
பதவுரை Show / Hide
நான் முகனும் ஈசனும் ஆய், Naan Mughanum Eesanum Aayi - பிரமனும் சிவனும் கூடிக் கொண்டு
நா தழும்ப, Naa Thazhumba - நாக்குத் தடிக்கும்படி
முறையால் ஏத்த, Muraiyal Aetha - கிரமப்படி ஸ்தோத்ரம் பண்ண
காய்த்த, Kaayththa - காய்கள் நிறைந்த
வாகை, Vaagai - வாகை மரங்களினுடைய
நெற்று, Nettru - நெற்றுகளானவை
ஒலிப்ப, Olippa - சப்திக்க,
கல் அதர், Kal Adhar - கல்வழிகளிலேயுண்டான
வேய் கழை, Veiy Kazhai - குழல் மூங்கிற் செடிகள்
போய், Poy - ஆகாசத்தை அளாவிப்போய்
தேய்த்த, Theyththa - (மூங்கில்கள் ஒன்றோடொன்று) உராய்கையினாலுண்டான
தீயால், Theeyaal - நெருப்பினால்
விண் சிவக்கும், Vin Sivakkum - ஆகாசம் சிவந்திருக்கப்பெற்ற
1016பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழ்ப்பாட்டுகளில் தெய்வமல்லால் செல்ல வொண்ணா” என்றும், சென்று காண்டற்கு அரிய கோயில்” என்றும், ‘தினைத்தனையுஞ் செல்லவொண்ணா” என்றும் இத்திவ்ய தேசத்தின் அருமையைச் சொல்லிவந்தாரே;) 9
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான் அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் இடம் நெல்லி மல்கிக் கல்லுடைப்பப் புல்லிலை யார்த்து அதர் வாய்ச் சில்லி சில் லென்ற சொல் அறாத சிங்க வேள் குன்றமே –1-7-9
பதவுரை Show / Hide
நெஞ்சே, Nenjey - ஓ மனமே!
நல்லை, Nallai - நீ மிகவும் நல்லவன்;
நம்முடை நம்பெருமான், Nammudai Namberumaan - நமக்கு ஸ்வாமியாய்
அல்லி மாதர் புல்க நின்ற, Alli Maathar Pulka Nindra - பெரிய பிராட்டியாரை அணைத்துக் கொண்டிருப்பவனாய்
ஆயிரம் தோளன் இடம், Aayiram Tholan Idam - ஆயிரந்தோள்களை யுடையனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கு மிடமாய்,
நெல்லி, Nelli - நெல்லி மரங்கள்
மல்கி, Malki - நிறைந்து
கல் உடைப்ப, Kal Udaippa - பாறைகளை உடைக்கவும்
புல் இலை ஆர்த்து, Pul Ilai Aarththu - பனையோலைகள் ஒலிசெய்யவும்
அதர் வாய், Adhar Vaai - வழிகளிலே
சில்லி, Chilli - சுவர்க்கோழிகளையுடைய
சில் என்று ஒல் அறாத, Sil Endru Ol Aradha - சில் என்கிற ஒலி இடைவிடாமல் ஒலிக்கவும் பெற்ற
சிங்கவேள் குன்றம், Singaveal Kunram - சிங்கவேள்குன்றத்தை
நாம்தொழுதும், Naamthozhudum - நாம் ஸேவிப்போம்.
1017பெரிய திருமொழி || (1-7–அங்கண் ஞாலம்) (சிங்கவேள் குன்றம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வீரலக்ஷ்மி விளங்குங் கண்களையுடைய சிங்கங் களானவை யானைக்கோடு முதலியவற்றைக் கொண்டு ஸமர்ப்பித்து வணங்குமிட மான சிங்கவேழ் குன்றத்திலே யெழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் விஷயமாகத் திருமங்கை மன்னன் அருளிச்செய்த சொல்மாலையை ஓதவல்லவர்கள் தீங்கின்றி வாழ்வார்கள் என்று – இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.) 10
செங்கணாளி யிட்டிறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய எங்கள் ஈசன் எம்பிரானை இரும் தமிழ் நூல் புலவன் மங்கை யாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார்க் கலியன் செங்கை யாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே –1-7-10
பதவுரை Show / Hide
செம்கண் ஆளி, Semkan Aali - சிவந்த கண்களையுடைய சிங்கங்கள்
இட்டு, Ittu - (தமக்குக் கிடைத்த யானைத் தந்தம் முதலியவற்றைத்) திருவடிகளிலே ஸமர்ப்பித்து
இறைஞ்சும், Iraichum - வணங்குமிடமான
சிங்க வேழ் குன்று உடைய, Singam Vezh Kuntru Udaiya - சிங்கவேழ் குன்றத்தை இருப்பிடமாகவுடையனாய்
எங்கள் ஈசன், Engal Eesan - ஸம்ஸாரிகளான நமக்கெல்லார்க்கும் ஸ்வாமியாய்
எம் பிரானை, Em Piraanai - நமக்கு உபகாரகனாயுமுள்ள ஸ்ரீ நரஸிம்ஹமூர்த்தி விஷயமாக,
இரு தமிழ் நூல் புலவன், Iru Tamil Nool Pulavan - பெரிய தமிழ் சாஸ்த்ரத்தில் வல்லவராய்
மங்கை ஆளன், Mangai Aalan - திருமங்கை நாட்டுக்குத் தலைவராய்
மன்னு தொல்சீர், Mannu Tholseer - நித்யஸித்தமான ஸ்ரீ வைஷ்ணவலஷ்மியை உடையவராய்
வண்டு அறைதார், Vandu Araidhaar - வண்டுகள் படிந்து ஒலி செய்கின்ற மாலையை யணிந்தவராய்
செம் கை ஆளன், Sem Kai Aalan - மிக்க உதாரரான
கலியன், Kaliyan - ஆழ்வாரருளிச்செய்த
செம் சொல் மாலை, Sem Sol Maalai - செவ்விய இச்சொல் மாலையை
வல்லவர், Vallavar - ஓதவல்லவர்கள்
தீது இலர், Theethu Ilar - தீமை யொன்றுமின்றி நன்மை பெற்றவராவர்.