திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 658 | பெருமாள் திருமொழி || (தேட்டரும் திறல்) - அரங்கன் அடியாரது அடிமைத்திறத்தில் ஈடுபடுதல் 1 | தேட்டரும் திறல் தேனினை தென் அரங்கனை திரு மாது வாழ்
வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்ட மேவி அலர்ந்து அழைத்து அயர்வு எய்தும் மெய் அடியார்கள் தம்
ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே | பதவுரை Show / Hideதேட்டரும், Thettarum - (தன் முயற்சியால்) தேடிப் பெறுதற்கு அருமை யானவனும் திறல், Thiral - (தன்னை முற்ற அநுபவிப்பதற்கு உறுப்பான) வலிவைக் கொடுப்பவனும் தேனினை, Theninai - தேன் போல் பரம போக்யனும் தென் அரங்கனை, Then Aranganai - தென் திருவரங்கத்தில் வாழ்பவனும் திரு மாது வாழ் வாட்டம் இல் வன மாலை மார்பனை, Thiru Maathu Vaal Vaatam Il Vana Maalai Maarpanai - பெரிய பிராட்டியார் நித்ய வாஸம் செய்தற்கிடமாய் மால் கொள் சிந்தையர் ஆய், Maal Kol Sinthaiyar Aayi - (அவன் திறத்தில்) மோஹங்கொண்ட மனதை யுடையராய் ஆட்டம் மேவி, Aattam Mevi - (அந்த மோஹத்தாலே நின்ற விடத்தில் நிற்க மாட்டாமல்) ஆடுவதிலே ஒருப்பட்டு அலர்ந்து அழைத்து, Alarnthu Azhaithu - (பகவந்நாமங்களை) வாய் விட்டுக் கதறி கூப்பிட்டு அயர்வு எய்தும், Ayirvu Eydhum - இளைப்படைகின்ற மெய் அடியார்கள் தம், Mei Adiyaargal Tham - உண்மையான அன்புடைய பாகவதர்களின் ஈட்டம், Eettam - கோஷ்டியை கண்டிட கூடும் ஏல், Kandida Koodum Ael - ஸேவிக்கப் பெறுவோமாகில் அது காணும் கண் பயன் ஆவது, Adhu Kaanum Kan Payan Aavathu - கண் படைத்ததற்குப் பயன் அதுவே யன்றோ! ‘ஸ்ரீ ய:பதியே!, Sri Ya Padhiye - ஸ்ரீ மந்நாராயணனே!’ என்றிப்படி பல திரு நாமங்களைக் கூறி யழைத்து, மேவி = மேவுதல், Mevi Mevuthal - விரும்புதல்: “கண்டிடக் கூடு மேல்” என்றது, Kandidak Koodu Mel Endrathu - இத்தகைய மெய்யடியார்களை இந் நிலவுலகத்தில் |
| 659 | பெருமாள் திருமொழி || (தேட்டரும் திறல்) - அரங்கன் அடியாரது அடிமைத்திறத்தில் ஈடுபடுதல் 2 | தோடுலா மலர் மங்கை தோள் இணை தோய்ந்ததும் சுடர் வாளியால்
நீடு மா மரம் செற்றதும் நிரை மேய்த்ததும் இவையே நினைந்து
ஆடி பாடி அரங்காவோ! என்று அழைக்கும் தொண்டர் அடி பொடி
ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவதே ? | பதவுரை Show / Hideதோடு உலாம் மலர் மங்கை, Thodu Ulam Malar Mangai - இதழ்கள் மிக்கிருந்துள்ள தாமரைப் பூவிற் பிறந்த பிராட்டியினது தோள் இணை தோய்ந்ததும், Thol Inai Thoyndhadum - திருத் தோள்களோடு அணைய வமுக்கிக் கட்டிக் கொண்டதும் சுடர் வாளியால், Sudar Valiyal - புகரை யுடைய அம்பினால் நீடு மா மரம் செற்றதும், Needu Maa Maram Settradhum - நீண்ட ஸப்த ஸால வருக்ஷங்களைத் துளை செய்து தள்ளியதும் நிரை மேய்த்ததும், Nirai Meyththadhum - இப்படிப் பட்ட பகவச் சரிதங்களையே அநுஸந்தித்து ஆடி, Aadi - சரீர விகாரம் பெற்று பாடி, Paadi - (காதலுக்குப் போக்கு வீடாக வாய் விட்டுப்) பாடி ஓ! அரங்க!! என்று, O Arang Endru - ‘ஓ அரங்கனே!’ என்று (அவன் திரு நாமங்களைச் சொல்லி அழைக்கும், Azaikkum - கூப்பிடுகிற தொண்டர், Thondar - கைங்கரியத்தையே நிரூபகமாக வுடைய பாகவதர்களின் அடி பொடி, Adi Podi - திருவடித் தூள்களிலே நாம் ஆட பெறில், Naam Aada Peril - நாம் அவகாஹிக்கப் பெற்றால் (பிறகு) கங்கை நீர், Gangai Neer - கங்கா ஜலத்திலே குடைந்து ஆடும் வேட்கை, Kudaindhu Aadum Vetkai - அவகாஹித்து நீராட வேணுமென்கிற ஆசையானது என் ஆவது, En Aavathu - ஏதுக்கு? |
| 660 | பெருமாள் திருமொழி || (தேட்டரும் திறல்) - அரங்கன் அடியாரது அடிமைத்திறத்தில் ஈடுபடுதல் 3 | ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே | பதவுரை Show / Hideஏறு அடர்த்ததும், Eru Adarththadhum - (நப்பின்னைக்காக) ஏழு ரிஷபங்களை வலியடக்கியதும் ஏனம் ஆய் நிலம் கிண்டதும், Enam Aayi Nilam Kintadhum - வராஹ ரூபியாய் பூமியைக் கோட்டாற் குத்தி யெடுத்ததும் முன் இராமன் ஆய், Mun Iraman Aayi - முன்பு சக்ரவர்த்தி திருமகனாய்ப் பிறந்து மாறு அடர்த்ததும், Maru Adarththadhum - சத்ரு ராக்ஷஸர்களைக் கிழங்கெடுத்ததும் மண் அளந்ததும், Man Alandhadum - (த்ரிவிக்ரமனாய்) உலகளந்ததும் (ஆகிய இந்த சரிதங்களை) சொல்லி பாடி, Solli Paadi - வாயாற் சொல்லி வாய் விட்டுப் பாடி வண் பேர் பொன்னி ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு, Van Peer Ponni Aaru Pol Varum Kanna Neer Kondu - ஔதார்யத்தையும் பெருமையை யுடைய அரங்கன் கோயில் திரு முற்றம், Arangan Koyil Thiru Muttram - நம் பெருமாள் ஸந்நதி உள் திரு முற்றத்தை சேறு செய் தொண்டர், Seru Sei Thondar - சேறாக்குகிற பாகவதர்களின் சே அடி செழு சேறு, Sae Adi Sezhu Seru - திருவடிகளால் துகை யுண்ட அழகிய சேற்றை என் சென்னிக்கு அணிவன், En Chennikku Anivan - என்னுடைய நெற்றிக்கு திலகமாகக் கொள்வேன் கண்ண நீர், Kanna Neer - ஆறாம் வேற்றுமை யுருபு |
| 661 | பெருமாள் திருமொழி || (தேட்டரும் திறல்) - அரங்கன் அடியாரது அடிமைத்திறத்தில் ஈடுபடுதல் 4 | தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பால் உடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு
ஆர்த்த தோள் உடை எம்பிரான் என் அரங்கனுக்கு அடியார்களாய்
நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது
ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே | பதவுரை Show / Hideதோய்த்த தண் தயிர், Thoyththa Than Thayir - தோய்த்த தண் தயிர் வெண்ணெய், Vennai - வெண்ணையையும் பால், Paal - பாலையும் உடன் உண்டலும், Udan Undalum - ஒரே காலத்திலே அமுது செய்தவளவில் ஆய்ச்சி, Aaychi - யசோதைப் பிராட்டி யானவள் கண்டு உடன்று, Kandu Udandru - (அந்த களவு தன்னைப்) பார்த்து கோபித்து ஆர்த்த, Aartha - (பிறகு அவளாலே) பிடித்துக் கட்டப்பட்ட தோள் உடை, Thol Udai - தோள்களை யுடைய எம்பிரான், Embiraan - எமக்குத் தலைவனான என் அரங்கனுக்கு, En Aranganukku - என் ரங்கநாதனுக்கு அடியார்கள் ஆய், Adiyargal Aay - ஆட்பட்டவர்களாய் நா தழும்ப எழ, Na Thazhumba Ezh - நாக்குத் தடிக்கும்படி நாரணா என்று அழைத்து, Naaranaa Endru Azhaitthu - நாராயணா! என்று கூப்பிட்டு மெய் தழும்ப தொழுது, Mei Thazhumba Thozhudhu - சரீரம் காய்ப்பேறும்படி ஸேவித்து ஏத்தி, Aethi - தோத்திரம் பண்ணி இன்புறும், Inpurum - ஆனந்தமடைகின்ற தொண்டர், Thondar - ஸ்ரீவைஷ்ணவர்களுடைய சே அடி, Sae Adi - திருவடிகளை என் நெஞ்சம், En Nenjam - என் மனமானது ஏத்தி வாழ்த்தும், Aethi Vaazththum - துதித்து (அவர்களுக்கே) பல்லாண்டு பாடும் “கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெ யுண்ட வாயன், Kondal Vannanaik Kovalanaai Venne Yundha Vaayan - அணியரங்கன்” என்றபடி |
| 662 | பெருமாள் திருமொழி || (தேட்டரும் திறல்) - அரங்கன் அடியாரது அடிமைத்திறத்தில் ஈடுபடுதல் 5 | பொய் சிலை குரல் ஏறு எருத்தம் இறுத்து போர் அரவீர்த்த கோன்
செய் சிலை சுடர் சூழ் ஒளி திண்ண மா மதிள் தென் அரங்கனாம்
மெய் சிலை கரு மேகம் ஓன்று தம் நெஞ்சில் நின்று திகழ போய்
மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என் மனம் மெய் சிலிர்க்குமே | பதவுரை Show / Hideபொய், Poi - க்ருத்ரிமமாய் சிலை குரல், Silai Kural - கோபத்தை வெளியிடுகின்ற கோஷத்தை யுடைத்தான ஏறு, Aeru - (ஏழு) ரிஷபங்களின் எருத்தம் இறுத்து, Eruththam Iruththu - முசுப்புகளை முறித்தவனாய் போர் அரவு ஈர்த்த கோன், Poar Aravu Eerththa Kon - போர் செய்யவந்த காளிய நாகத்தை நிரஸித்த ஸ்வாமியாய், சிலை செய், Silai Sei - கல்லினால் செய்யப்பட்டு சுடர் ஒளி, Sudar Oli - மிக்க தேஜஸ்ஸை யுடைத்தாய் திண்ணம், Thinnam - த்ருடமாயிருக்குந் தன்மையையும் உடைத்தாய் மா, Maa - பெரிதான மதிள் சூழ், Madhil Soozh - மதிகளாலே சூழப்பட்ட தென் அரங்கன் ஆம், Then Arangan Aam - தென்னரங்கத்தில் எழுந்தருளி யிருப்பவனான ரங்கநாதனாகிய மெய் சிலை கரு மேகம் ஒன்று, Mei Silai Karu Megam Ondru - சரீரத்தில் வில்லோடு கூடிய ஒரு காள மேகமானது தன் நெஞ்சுள் நின்று திகழப் போய், Than Nenjul Nindru Thigazhapp Poi - தங்கள் மனதில் நிலைத்து விளங்கப் பெற்ற மெய் சிலிர்ப்பவர் தம்மையே, Mei Silirppavar Thammaiye - மயிர்க் கூச் செறியும் சரீரமுடைய ஸ்ரீவைஷ்ணவர்களையே என் மனம் நினைந்து, En Manam Ninainthu - என் நெஞ்சானது அநுஸந்தித்து மெய் சிலிர்க்கும், Mei Silirkkum - மயிர்க் கூச்செறியப் பெற்றது. “திகழப்போய்” என்ற விடத்து, போய், Thigazhappoy Endra Vidathu Poi - வார்த்தைப்பாடு. “மனம் மெய் சிலிர்க்கும்” என்றது, Manam Mei Silirkkum Endrathu - மனம் விகாரப்படா நின்ற தென்றபடி. |
| 663 | பெருமாள் திருமொழி || (தேட்டரும் திறல்) - அரங்கன் அடியாரது அடிமைத்திறத்தில் ஈடுபடுதல் 6 | ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட
தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே | பதவுரை Show / Hideஆதி, Aadhi - ஜகத் காரண பூதனாய் அந்தம், Andham - ப்ரளய காலத்திலும் வாழ்பவனாய் அநந்தம், Anandham - ஸர்வ வ்யாபியாய் அற்புதம் ஆன, Arputham Aana - ஆச்சரிய பூதனாய் வானவர் தம்பிரான், Vaanavar Thambiraan - அமரர்க்கதிபதியான ரங்கநாதனுடைய மா மலர் பாதம், Maa Malar Paatham - சிறந்த மலர் போன்ற திருவடிகளை சூடும் பத்தி இலாத, Soodum Paththi Ilaadha - சிரஸா வஹிப்பதற் குறுப்பான அன்பு இல்லாத பாவிகள் உய்ந்திட, Paavigal Uyndhida - பாபிகளும் உஜ்ஜீவிக்கும்படி எங்கும் திரிந்து, Engum Thirinthu - ஸர்வ தேசங்களிலும் ஸஞ்சாரஞ் செய்து தீது இல், Theethu Il - குற்றமற்ற நல் நெறி, Nal Nerii - நல் வழிகளை காட்டி, Kaatti - (தமது அநுஷ்டாநமுகத்தாலே) வெளிப்படுத்திக் கொண்டு எம்மான், Emmaan - நமக்குத் தலைவனான அரங்கனுக்கே, Aranganukke - ஸ்ரீரங்கநாதனுக்கே காதல் செய், Kaadhal Sei - பக்தி பூண்டிருக்கின்ற தொண்டர்க்கு, Thondarkku - பாகவதர்கள் விஷயத்தில் என் நெஞ்சம், En Nenjam - எனது மனமானது எப் பிறப்பிலும், Ep Pirappilum - எந்த ஜன்மத்திலும் காதல் செய்யும், Kaadhal Seyyum - அன்பு பூண்டிருக்கும். |
| 664 | பெருமாள் திருமொழி || (தேட்டரும் திறல்) - அரங்கன் அடியாரது அடிமைத்திறத்தில் ஈடுபடுதல் 7 | கார் இனம் புரை மேனி நல் கதிர் முத்த வெண்ணகை செய்ய வாய்
ஆர மார்வன் அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினை
சேரும் நெஞ்சினராகி சேர்ந்து கசிந்து இழிந்த கண்ண நீர்களால்
வார நிற்ப்பவர் தாள் இணைக்கு ஒருவாரம் ஆகும் என் நெஞ்சமே | பதவுரை Show / Hideகார் இனம் புரை, Kaar Inam Purai - மேகங்களின் திரளை ஒத்த மேனி, Meeni - திருமேனியையும் நல் கதிர், Nal Kadhir - அழகிய லாவண்யத்தையும் முத்தம் வெண் நகை செய்ய வாய், Muththam Ven Nagai Seyya Vaai - முத்துக்கள் போல் வெளுத்த புன் சிரிப்பை யுடைய சிவந்த திருப் பவளத்தையும் ஆரம் மார்வன், Aaram Maarvan - முக்தாஹாரமணிந்த மார்வையுமுடையனான அரங்கன் என்னும், Arangan Ennum - ஸ்ரீரங்கநாதனாகிற அரும் பெரும் சுடர் ஒன்றினை, Arum Perum Sudar Ondrinai - அருமை பெருமை யுள்ள விலக்ஷணமான தொரு தேஜஸ்ஸை சேரும் நெஞ்சினர் ஆகி, Serum Nenjinir Aagi - கிட்டி அநுபவிக்க வேணுமென்கிற சிந்தையை யுடையவராய் சேர்ந்து, Serndhu - (அங்ஙனமே) சேர்ந்து கசிந்து இழிந்த, Kasinthu Izhindha - (பக்தி பாரவச்யத்தாலே) சுரந்து பெருகின கண் நீர்கள், Kan Neergal - ஆநந்த பாஷ்பங்கள் வார நிற்பவர், Vaara Nirpavar - வெள்ளமிட்டொழுகும்படி நிற்குமவர்களுடைய தாள் இணைக்கு, Thaal Innaikku - இரண்டு திருவடிகள் விஷயத்தில் என் நெஞ்சம், En Nenjam - என் மனமானது ஒரு வாரம் ஆகும், Oru Vaaram Aakum - ஒப்பற்ற அன்பையுடையதாகும். |
| 665 | பெருமாள் திருமொழி || (தேட்டரும் திறல்) - அரங்கன் அடியாரது அடிமைத்திறத்தில் ஈடுபடுதல் 8 | மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்
மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை
மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே | பதவுரை Show / Hideமாலை உற்ற கடல், Maalaik Kutral Kadal - (தன் திருமேனி ஸ்பர்சத்தாலே) அலை யெறிகிற திருப்பாற்கடலில் கிடந்தவன், Kidandhavan - பள்ளிகொள்பவனும் வண்டு கிண்டு நறு துழாய் மாலை உற்ற, Vandu Kintu Naru Thuzhai Maalaik Kutral - (தேனுக்காக) வண்டுகள் குடையா நின்றுள்ள திருத்துழாய் மாலையை அணிந்த வரை பெரு திருமார்பினை, Varai Peru Thirumaarpinai - மலைபோற் பெருமை தங்கிய திருமார்பை யுடையவனும் மலர் கண்ணனை, Malar Kannanai - செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களை யுடையவனுமான ஸ்ரீரங்கநாதன் விஷயத்தில் மாலை உற்று, Maalaik Utrru - வ்யாமோஹத்தை அடைந்து எழுந்து ஆடி, Ezhunthu Aadi - (இருந்தவிடத்திலிராமல்) எழுந்து கூத்தாடி பாடி, Paadi - (வாயாரப்) பாடி திரிந்து, Thirinthu - (திவ்ய தேசங்கள் தோறும்) ஸஞ்சரித்து அரங்கன் எம்மானுக்கே, Arangan Emmaanukke - எமக்கு ஸ்வாமியான ஸ்ரீரங்கநாதன் விஷயத்திலே மாலை உற்றிடும், Maalaik Utrridum - பித்தேறித் திரிகின்ற தொண்டர், Thondar - ஸ்ரீவைஷ்ணவர்களுடைய வாழ்வுக்கு, Vazhvvukku - ஸ்ரீவைஷ்ணவ லஷ்மிக்கு என் நெஞ்சம் மாலை உற்றது, En Nenjam Maalaik Utrrathu - என் மனம் மயங்கிக் கிடக்கின்றது. மற்ற மூன்றடிகளிலுள்ள மாலை, Mattram Moondradigalilulla Maalai - மோஹம் என்னும் பொருளதான் மால் என்னுஞ் சொல் |
| 666 | பெருமாள் திருமொழி || (தேட்டரும் திறல்) - அரங்கன் அடியாரது அடிமைத்திறத்தில் ஈடுபடுதல் 9 | மொய்த்து கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று
எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடி பாடி இறைஞ்சி என்
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி அவனுக்கே
பித்தமராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே | பதவுரை Show / Hideகண் பனி, Kan Pani - ஆநந்த பாஷ்பமானது மொய்த்து சோர, Moytthu Soora - இடைவிடாமல் சொரியவும் மெய்கள் சிலிர்ப்ப, Meigal Silirppa - உடல் மயிர்க் கூச்செறியவும் உடல் ஏங்கி இளைத்து நின்று, Aengi Ilaitthu Nindru - நெஞ்சு தளர்ந்து களைத்துப் போய் எய்த்து, Eyththu - நிலை தளர்ந்து கும்பிடு நட்டம் இட்டு, Kumbidu Nattam Ittu - மஹா கோலாஹலத்தோடு கூடிய நர்த்தனத்தைப் பண்ணி எழுந்து ஆடி பாடி இறைஞ்சி, Ezhunthu Aadi Paadi Irainji - நின்ற விடத்து நில்லாமல் (பல வித) ஆட்டங்களாடிப் பாட்டுகள் பாடி வணங்கி, என் அத்தன், En Aththan - எனக்குத் தந்தையாய் அச்சன், Achchan - ஸ்வாமியான அரங்கனுக்கு, Aranganukku - ஸ்ரீரங்கநாதனுக்கு அடியார்கள் ஆகி, Adiyargal Aagi - அடியவர்களாய் அவனுக்கே, Avanukke - அந்த ரங்கநாதன் விஷயத்திலேயே பித்தர் ஆமவர், Piththar Aamavar - பித்தேறித் திரிகிறவர்கள் பித்தர் அல்லர்கள், Piththar Allargal - பைத்தியக்காரர்களல்லர்; மற்றயார் முற்றும், Mattrayaar Muttum - (பத்தி கார்யமான இந்த வ்யா மோஹமில்லாத) மற்ற பேர்களெல்லாம் பித்தரே, Piththare - பைத்தியக்காரர்கள் தான். |
| 667 | பெருமாள் திருமொழி || (தேட்டரும் திறல்) - அரங்கன் அடியாரது அடிமைத்திறத்தில் ஈடுபடுதல் 10 | அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம்
எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன்
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே | பதவுரை Show / Hideஅல்லி மாமலர் மங்கை நாதன், Alli Maamalai Mangai Naathan - அக விதழ்களை யுடைய சிறந்த (தாமரை) மலரில் பிறந்த பிராட்டிக்குக் கணவனான அரங்கன், Arangan - ஸ்ரீரங்கநாதனுடைய மெய் அடியார்கள் தம், Mei Adiyaargal Tham - உண்மையான பக்தர்களுடைய என்றும் மேவு மனத்தன் ஆம், Endrum Mevu Manaththan Aam - எப்போதும் பொருந்திய திரு வுள்ளத்தை யுடையவரும் கொல்லி காவலன், Kolli Kaavalan - கொல்லி நகர்க்கு அரசரும் கூடல் நாயகன், Koodal Naayagan - மதுரைக்கு அரசரும் கோழி கோன், Kozhi Kon - உறையூருக்கு அரசருமான குல சேகரன், Kula Seakaran - குலசேகராழ்வருடைய சொல்லின், Sollin - ஸ்ரீஸூக்திளாலே அமைந்த இன் தமிழ் மாலை வல்லவர், In Tamil Maalai Vallar - இனிய தமிழ்ப் பாசுரங்களை ஒத வல்லவர்கள் தொண்டர் தொண்டர்கள் ஆவர், Thondar Thondargal Aavar - தாஸாநுதாஸராகப் பெறுவர் |