| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 391 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 1 | தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த எம் தாசரதி போய் எங்கும் தன் புகழாவிருந்து அரசாண்ட எம் புருடோத்தம னிருக்கை கங்கை கங்கை யென்ற வாசகத்தாலே கடு வினை களைந்திட கிற்கும் கங்கையின் கரை மேல் கை தொழ நின்ற கண்ட மென்னும் கடி நகரே–4-7-1 | கங்கை கங்கை என்ற வாசகத்தாலே,Gangai Gangai Endra Vaasagaththaaley - கங்கை கங்கை என்ற சப்த்த்தைச் சொல்லுவதனால் என்ற வாசகத்தைச் சொல்லுவதாகும். கடு வினை,Kadu Vinai - கடுமையான பாவங்களை களைந்திட கிற்கும்,Kalaindhida Kirkkum - ஒழிக்கவல்ல கரை மேல்,Karai Mel - கரையிலே கை தொழ நின்ற,Kai Thozha Nindra - (பக்தர்கள்) கை கூப்பித் தொழும் படியாக நின்ற கண்டம் என்றும்,Kandam Endrum - ‘கண்டம்’ என்னும் பெயரை யுடைய கடி நகர்,Kadi Nagar - சிறந்த நகரமானது (எதுவென்னில், தங்கையை,Thangaiyai - (இராவணனுடைய ) தங்கையாகிய சூர்ப்பணகையினுடைய மூக்கும்,Mookkum - மூக்கையும் தமையனை,Thamaiyanai - அவளுடைய தமையனான ராவணனுடைய தலையும்,Thalaiyum - தலையையும் எங்கும்,Engum - நாட்டெங்கும் தன் புகழ்,Than Pugazh - தன்னுடைய கீர்த்தியே யாம்படி இருந்து,Erundhu - பதினோராயிரம் ஸம்வத்ஸரம் எழுந்தருளி யிருந்து அரசு ஆண்ட,Arasu Aanda - ராஜ்ய பரிபாலகஞ் செய்தருளினவனும் எம்,Em - எமக்குத் தலைவனுமான தாசரதி,Daasarathi - இராமபிரானுமாகிய எம் புருடோத்தமன்,Em Purudhoaththaman - புருஷோத்தமப் பெருமாளுடைய எமது இருக்கை,Emadhu Irukkai - வாஸஸ்தாநமாம். |
| 392 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 2 | சலம் பொதி யுடம்பின் தழலுமிழ் பேழ் வாய்ச் சந்திரன் வெங்கதிர் அஞ்ச மலர்ந்தெழுந் தணவி மணி வண்ண வுருவின் மால் புரு டோத்தமன் வாழ்வு நலம் திகழ் சடையான் முடிக் கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும் கலந்திழி புனலால் புகர் படு கங்கைக் கண்டமென்னும் கடி நகரே–4-7-2 | நலம் திகழ்,Nalam Thigazh - (எம்பெருமானுடைய ஸ்ரீபாததீரத்தை வஹக்கின்றமையாலுண்டான) நன்மை விளங்கா நிற்கிற ஜடையன்,Jadaiyan - ஜடையை யுடையவனான சிவபெருமானுடைய முடி,Mudi - தலையில் (அணியப் பெற்றுள்ள) கொன்றை மலரும்,Kondrai Malarum - (செந்நிறமுடைய) கொன்றைப் பூவோடும் நாரணன்,Naaranan - (அச் சிவபிரானுக்குத் தலைவனான) நாராயணனுடைய பாதத் துழாயும்,Paadath Thuzhaayum - திருவடிகளிற் பனைந்த (பசுமை நிறமுடைய) திருத்துழாயோடும் கலந்து,Kalandhu - சேர்ந்து இழி,Izhi - ஆகாயத்தில் நின்றும் பூமியில் இழிந்து வெள்ள மிடா நின்ற புனலால்,Punalal - ஜலத்தினால் புகர் படு,Pugar Padu - விளங்கா நின்றுள்ள கங்கை,Gangai - கங்கைக் கரையிலுள்ள கண்டமென்னும் கடிநகர்,Kandamennum Kadi Nagar - ‘கண்டம்’ என்னும் பெயரை யுடைய சிறந்த நகரமானது சலம்,Sadam - ஜலத்தை பொதி,Podhi - பொதிந்து கொண்டிருக்கிற உடம்பின்,Udampin - வடிவை யுடைய சந்திரன்,Sandhiran - சந்திரனும் தழல்,Thazhal - நெருப்பை உமிழ்,Umizh - உமிழா நின்றுள்ள பேழ்,Pezh - பெரிய வாய்,Vaai - கிரணங்களை யுடையவனாய் வெம்,Vem - வெம்மையே இயல்வாக வுடையவான கதிர்,Kathir - ஸூர்யனும் அஞ்ச,Anja - அஞ்சும்படியாக மலர்ந்து எழுந்து,Malarndhu Ezhundhu - மிகவும் பரம்பின சரீரத்தை யெடுத்துக் கொண்டு கிளர்ந்து அணவு,Anavu - (அந்த சந்த்ர ஸூர்யர்களுடைய இருப்பிடத்தைச்) சென்று கிட்டின மணி வண்ணன் உருவின்,Mani Vannan Uruvin - (நீலமணி போன்ற நிறம் பொருந்திய வடிவை யுடையவனும் மால்,Maal - (அடியார் பக்கல்) வ்யாமோஹமுடையவனுமான புருடோத்தமன்,Purudhoaththaman - புருஷோத்தமன் வாழ்வு,Vaazhvu - வாழுமிடம் |
| 393 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 3 | அதிர்முக முடைய வலம்புரி குமிழ்த்தி அழலுமிழ் ஆழி கொண் டெறிந்து அங்கு எதிர்முக வசுரர் தலைகளை யிடறும் எம் புரு டோத்தம னிருக்கை சதுமுகன் கையில் சதுப் புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி கதிர்முக மணி கொண்டிழி புனல் கங்கைக் கண்ட மென்னும் கடி நகரே–4-7-3 | சதுமுகன் கையில்,Sadhumugan Kaiyil - சதுர்முக ப்ரஹ்மாவினுடைய கையிலும் சதுப்புயன் தாளில்,Saduppuyan Thaalil - சதுப்புஜனான எம்பெருமானுடைய திருவடியிலும் (பின்பு) சங்கரன் சடையினில்,Sankaran Sadaiyinil - சிவபெருமானுடைய ஜடையிலும் தங்கி,Thangi - தங்கி, கதிர்,Kathir - ஒளியுடையனவும் மணி,Mani - ரத்னங்களை கொண்டு,Kondu - கொழித்துக் கொண்டு இழி,Ezhi - இழிகிற புனல்,Punal - தீர்த்தத்தை யுடைய கங்கை,Gangai - கங்கைக் கரையிலுள்ள கண்டமென்னும் கடிநகர்;,Kandamennum Kadi Nagar - ‘கண்டம்’ என்னும் பெயரை யுடைய சிறந்த நகரமானது அங்கு,Angu - உலகமளந்த அப்போது, அதிர் முகம் உடைய,Adhir Mugam Udaiya - முழங்கா நின்ற முகத்தை யுடைய வலம் புரி,Valam Puri - ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தை குமிழ்த்தி,Kumizhthi - திருப் பவளத்தில் வைத்து ஊதியு“ அழலுமிழ்,Azhalumizh - நெருப்பை வீசா நின்றுள்ள ஆழி கொண்டு எறிந்து,Aazhi Kondu Erindhu - திரு வாழியை யெடுத்து விட்டெறிந்தும், எதிர் முகம்,Edhir Mugam - (போர் செய்வதாக) எதிர்த்த முகத்தை யுடைய அசுரர்,Asurar - அஸுரர்களுடைய தலைகளை,Thalaigalai - தலைகளை இடறும்,Edarum - உருட்டி யருளின எம் புருடோத்தான் இருக்கை,Em Purudhoaththaan Irukkai - எமது புருடோத்தமனுடைய வாஸஸ்தலமாகும். |
| 394 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 4 | இமையவர் இறுமாந்திருந் தரசாள ஏற்று வந்தெதிர் பொரு சேனை நமபுரம் நணுக நாந்தகம் விசிறும் நம் புருடோத்தமன் நகர் தான் இமவந்தம் தொடங்கி இருங்கடலளவும் இரு கரை உல கிரைத்தாட கமை யுடைப் பெருமைக் கங்கையின் கரை மேல் கண்ட மென்னும் கடி நகரே–4-7-4 | இமவந்தம் தொடங்கி,Imavantham Thodangi - இமய மலையின் உச்சி முதற் கொண்டு இரு கடல் அளவும்,Eru Kadal Alavum - பெரிய கடல் வரைக்கும் இரு கரை,Eru Karai - இரண்டு கரைகளிலுமுள்ள இரைத்து,Eraiththu - ஆரவாரித்துக் கொண்டு ஆட,Aada - நீராட கமை உடை பெருமை,Kamai Udai Perumai - (அவர்களது பாபங்களைப்) பொறுக்கையால் எந்த பெருமையை யுடைய கங்கையின் கரை மேல்,Gangaiyin Karai Mel - கங்கைக் கரையில் கண்டம் என்னும் கடிநகர்;,Kandam Ennum Kadi Nagar - ‘கண்டம்’ என்னும் பெயரை யுடைய சிறந்த நகரமானது இமையவர்,Emaiyavar - (இந்திரன் முதலிய) தேவர்கள் இறுமாந்து இருந்து,Erumaanthu Irundhu - அஹங்காரப் பட்டுக் கொண்டிருந்து அரசு ஆள,Arasu Aala - ராஜ்யம் நிர்வஹிப்பதற்காகவும், ஏற்று வந்த எதிர் பொரு சேனை,Etrru Vandha Edhir Poru Senai - துணிந்து வந்து (தன் மேலும் அத் தேவர்கள் மேலும்) எதிந்து போர் செய்கிற (அஸுர ராஷஸ) ஸேனையானது நமபுரம்,Namapuram - யமலோகத்தை நணுக,Nanuga - கிட்டுகைக்காகவும் நாந்தகம்,Naandhagam - நந்தகமென்னும் வாளை விசிறும்,Visirum - வீசா நிற்குமவனும் நம்,Nam - நமக்குத் தலைவனுமான புருடோத்தமன்,Purudhoaththaman - புருஷோத்தமப் பெருமாளுடைய நகர்,Nagar - நகரமாகும். |
| 395 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 5 | உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண் சுடராழியும் சங்கும் மழுவொடு வாளும் படைக்கல முடைய மால் புருடோத்தமன் வாழ்வு எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப் பொழு தளவினில் எல்லாம் கழுவிடும் பெருமைக் கங்கையின் கரை மேல் கண்ட மென்னும் கடி நகரே–4-7-5 | எழுமையும்,Ezhumaiyum - ஏழு ஜந்மங்களிலும் கூடி ஈண்டிட,Koodi Eendhida - சேர்ந்து திரண்ட பாவம் எல்லாம்,Paavam Ellaam - பாவங்களை யெல்லாம் இறைப் பொழுது அளவினில்,Eraip Pozhuthu Alavinil - க்ஷண காலத்துக்குள்ளே கழுவிடும்,Kazhuvidum - போக்கி விடும்படியான பெருமை,Perumai - பெருமையை யுடைய கங்கையின் கரை மேல்; கண்டம் என்னும் கடி நகர்;,Kandam Ennum Kadi Nagar - ‘கண்டம்’ என்னும் பெயரை யுடைய சிறந்த நகரமானது உழுவது ஓர் படையும்,Uzhuvadhu Or Padaiyum - உழுவதற்கு உரிய கருவியாகிய கலப்பையும் உலக்கையும்,Ulakkaiyum - உலக்கையையும் வில்லும்,Villum - ஸ்ரீசார்ங்கத்தையும் ஒண் சுடர்,On Sudar - அழகிய தேஜஸ்ஸையுடைய ஆழியும்,Aazhiyum - திரு வாழியையும் சங்கும்,Sangum - ஸ்ரீபாஞ்ச ஜன்யத்தையும் மழுவொடு,Mazhuvodu - கோடாலியையும் வாளும்,Vaalum - நந்தக வாளையும் படைக்கலம் உடைய,Padaikkalam Udaiya - ஆயுதமாக வுடையவனும் மால்,Maal - ஸர்வேச்வரனுமான புருடோத்தமன்,Purudhoaththaman - புருஷோத்தமப் பெருமான் வாழ்வு,Vaazhvu - எழுந்தருளியிருக்குமிடம் |
| 396 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 6 | தலைப் பெய்து குமுறிச் சலம் பொதி மேகம் சல சல பொழிந்திடக் கண்டு மலைப் பெருங் குடையால் மறைத்தவன் மதுரை மால் புருடோத்தமன் வாழ்வு அலைப் புடைத் திரை வாய் அருந் தவமுனிவர் அவபிரதம் குடைந் தாட கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரை மேல் கண்ட மென்னும் கடி நகரே–4-7-6 | அரு தவம் முனிவர்,Aru Thavam Munivar - அரிய தவங்களைப் புரிந்த மஹர்ஷிகள் அலைப்பு உடை,Alaippu Udai - அலைத்தலை யுடைய (கரை யெறியா நின்றுள்ள) திரை வாய்,Thirai Vaai - அலையிலே அவபிரதம் குடைந்து ஆட,Avapratham Kudaindhu Aada - அவப்ருத ஸ்நாநம் பண்ண, (பிறகு பெரும் ஆறாய்) கலப்பைகள் கொழிக்கும்,Kalappaigal Kozhikkum - (யாக பூமியிலுண்டான) கலப்பை முதலிய உபகரணங்களெல்லா வற்றையும் எடுத்துத் தள்ளிக் கொண்டு போகா நிற்கிற கங்கையின் கரை மேல்,Gangaiyin Karai Mel - கங்கைக் கரையிலுள்ள கண்டம் என்னும் கடி நகர் ;,Kandam Ennum Kadi Nagar - ‘கண்டம்’ என்னும் பெயரை யுடைய சிறந்த நகரமானது சலம்,Sadam - (கடலிலுள்ள) ஜலத்தை பொதி,Podhi - பொதிந்து கொண்டிரா நின்ற மேகம்,Megham - மேகங்களானவை தலைப்பெய்து,Thalaippeidhu - திருவாய்ப்பாடியில் வந்து கிட்டி குமுறி,Kumuri - கர்ஜனை பண்ணி சலசல பொழிந்திட,Salasala Pozhindhida - சள சள வென்று மழை பொழிய கண்டு,Kandu - (அதைக்) கண்டு மலை,Malai - கோவர்த்தன மலையாகிற பெருங் குடையால்,Perung Kudaiaal - பெரிய குடையாலே மறுத்தவன்,Maruththavan - (அம்மழையைத்) தடுத்தருளினவனும் மதுரை,Mathurai - திரு வடமதுரையில் மால்,Maal - விருப்பமுடையவனுமான புருடோத்தமன்,Purudhoaththaman - ஸ்ரீபுருஷோத்தமப் பெருமான் வாழ்வு,Vaazhvu - எழுந்தருளி யிருக்குமிடம். |
| 397 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 7 | விற் பிடித் திறுத்து வேழத்தை முருக்கி மேலிருந்தவன் தலை சாடி மற் பொரு தெழப் பாய்ந்து அரையன யுதைத்த மால் புரு டோத்தமன் வாழ்வு அற்புத முடைய அயிராவத மதமும் அவரிளம்படிய ரொண் சாந்தும் கற்பக மலரும் கலந்திழி கங்கைக் கண்ட மென்னும் கடி நகரே–4-7-7 | அற்புதம் உடைய,Arpudham Udaiya - ஆச்சர்யமான ஐராவதம்,Airaavatham - ‘ஐராவதம்’ என்னும் (தேவேந்திரனது) யானையினுடைய மதமும்,Madhamum - மத நீரும், அவர்,Avar - அத் தேவர்கள் (விரும்பத் தக்க) இள படியர்,Ela Padiyar - இளம் பருவத்தை யுடையவர்களான தேவ மாதர்கள் (அணிந்த) கற்பகம் மலரும்,Karpagam Malarum - (அவர்களது குழலில் சொருகி யிருந்த) கற்பகப் பூக்களும் கலந்து,Kalandhu - ஒன்று சேர்ந்து இழீ,Izhi - இழியா நின்றுள்ள கங்கை,Gangai - கங்கைக் கரையில் கண்டம் என்னும் கடிநகர் வில் பிடித்து இறுத்து,Vil Pidiththu Iruththu - (கம்ஸனுடைய ஆயுதச் சாலையிலிருந்து) வில்லிப் பிடித்து முறித்து. வேழத்தை,Vezhaththai - (குவலயாபீடம் என்ற ) யானையை முறுக்கி,Murukki - பங்கப்படுத்தியும் மேல் இருந்தவன்,Mel Irundhavan - (அந்த யானையின்) மேலிருந்த யானைப் பாகனுடைய தலை,Thalai - தலையை சாடி,Saadi - சிதறப் புடைத்தும் மல்,Mal - (சாணுர முஷ்டிகாதி) மல்லர்களோடு பொருது,Porudhu - போர் செய்தும் அரயைனை,Arayainai - உயர்ந்த கட்டிலின் மேலிருந்த அரசனாகிய கம்ஸனை எழப் பாய்ந்து உதைத்த,Ezha Paayndhu Udaiththa - அவன்மேற் பாய்ந்து (கீழே) தள்ளித் திருவடிகளால்) உதைத்தவனான என் புருஷோத்தமன் வாழ்வு,En Purushoththaman Vaazhvu - ஸ்ரீபுருஷோத்தமப் பெருமான் எழுந்தருளி யிருக்குமிடம். |
| 398 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 8 | திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய் அரசினை யவிய அரசினை யருளும் அரி புருடோத்தம னமர்வு நிரை நிரை யாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்கு விட்டு இரண்டு கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை கண்ட மென்னும் கடி நகரே–4-7-8 | நெடியன,Nediyana - நீண்டவையா யிரா நின்றுள்ள யூபம்,Yoopam - (பசுக்கள் கட்டுகிற) யூப ஸ்தம்பங்களானவை நிரை நிரை ஆக,Nirai Nirai Aaga - திரள் திரளாக நிரந்தரம்,Nirandharam - இடை விடாமல் ஒழுங்கு விட்டு,Ozhungu Vittu - நெடுக ஓடா நிற்பதும் இரண்டு கரை புரை ,Erandu Karai Purai - இரு பக்கத்துக் கரைகளும் தம்மிலே ஒத்து வேள்வி புகை கமழ்,Velvi Pugai Kamazha - யாக குண்டத்திலுண்டாகும் புகைகளால் பரிமளியா நிற்பதுமான கங்கை,Gangai - கங்கைக் கரையில் கண்டம் என்னும் கடி நகர்;,Kandam Ennum Kadi Nagar - ‘கண்டம்’ என்னும் பெயரை யுடைய சிறந்த நகரமானது திரை பொரு,Thirai Poru - அலை யெறியா நின்றுள்ள கடல் சூழ்,Kadal Soozh - கடலால் சூழப் பெற்ற திண் மதிள்,Thin Mathil - திண்மையான மதிள்களை யுடைய துவரை,Thuvaarai - த்வாரகைக்கு வேந்து,Vendhu - தலைவனும் தன்,Than - தன்னுடைய மைத்துனன் மார்க்கு,Maiththunan Maarkku - மைத்துனன் மார்களான பாண்டவர்களுக்கு ஆய்,Aay - பக்ஷபாதியாய் நின்று அரசனை அவிய,Arasanai Aviya - துரியோதநாதி ராஜாக்களை அழியச் செய்து அரசினை,Arasinai - ராஜ்யத்தை அருளும்,Arulum - (அப்பாண்டவர்கட்குக்) கொடுத்தருளினவனும் அரி,Ari - (ஸகல பாபங்களையும்) போக்குமவனுமான புருடோத்தமன்,Purudhoaththaman - புருஷோத்தமப் பெருமாள் அமர்வு,Amarvu - பொருந்தி யெழுந்தருளி யிருக்குமிடம் |
| 399 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 9 | வட திசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி இட முடை வதரி யிட வகை யுடைய எம் புருடோத்தம னிருக்கை தட வரை யதிரத் தரணி விண்டிடியத் தலைப் பற்றிக் கரை மரம் சாடி கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்ட மென்னும் கடி நகரே–4-7-9 | தட வரை,Thada Varai - (மந்தரம் முதலிய) பெரிய மலைகளானவை அதிர,Athira - சலிக்கும் படியாகவும் காணி,Kaani - பூமியானது விண்டு இடிய,Vindu Idiya - பிளவுபட்டு இடிந்து விழும்படியாகவும் தலைப் பற்றி,Thalaip Patri - (மரங்களினுடைய) தலை யாவுஞ் செல்லக் கிளம்பி கரை,Karai - கரையிலுள்ள மரம்,Maram - மரங்களை சாடி,Saadi - மோதி முறித்தும் இடம் உடை,Edam Udai - இடமுடையத்தான் (விசாலமான) கடல்,Kadal - (ஒன்றாலுங் கலங்காத) கடலுங்கூட கலங்க,Kalanga - கலக்கும்படி கடுத்து,Kaduthu - வேகங்கொண்டு இழி,Ezhi - இழியா நின்றுள்ள கங்கை,Gangai - கங்கா தீரத்திலுள்ள கண்டம் என்னும் படி நகர்;,Kandam Ennum Padi Nagar - ‘கண்டம்’ என்னும் பெயரை யுடைய சிறந்த நகரமானது வட திசை,Vada Thisai - வடக்கிலுள்ள மதுரை,Mathurai - ஸ்ரீ மதுரையும் சாளக்கிராமம்,Saalakkiraamam - ஸ்ரீ ஸாளக்ராமமும் வைகுந்தம்,Vaikuntham - ஸ்ரீவைகுண்டமும் துவரை,Thuvaarai - ஸ்ரீத்வாரகையும் அயோத்தி,Ayoththi - திருவயோத்தையும் இடம் உடை,Edam Udai - இடமுடைத்தான (விசாலமான) வதரி,Vathari - ஸ்ரீ பதரிகாஸ்ரமுமாகிற இவற்றை இடவகை உடைய,Edavagai Udaiya - வாஸஸ்தானமாக வுடையனான எம் புருடோத்தமன் இருக்கை,Em Purudhoaththaman Irukkai - ஸ்ரீபுருஷோத்தமப் பெருமான் எழுந்தருளி யிருக்குமிடம். |
| 400 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 10 | மூன்றெழுத் ததனை மூன்றெழுத் ததனால் மூன்றெழுத் தாக்கி மூன் றெழுத்தை ஏன்று கொண் டிருப்பார்க்கு இரக்கம் நன்குடைய எம் புரு டோத்தம னிருக்கை மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுரு வானான் கான் தடம் பொழில் சூழ் கங்கையின் கரை மேல் கண்ட மென்னும் கடி நகரே–4-7-10 | கான்,Kaan - கறு நாற்றம் கமழா நின்றுள்ள தட,Thada - பெரிய பொழில்,Pozhil - சோலைகளினால் சூழ்,Soozh - சூழப் பெற்ற கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடி நகர் ;,Gangaiyin Karaimeel Kandam Ennum Kadi Nagar - கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடி நகர் ; மூன்று எழுத்ததனை,Moonru Ezhuthadhanai - அகார மகார ஸ்வரூபமான ‘ஓம்’ என்னும் பிரணவத்தை மூன்று எழுத்தனால்,Moonru Ezhuthanaal - (‘நிருக்தம்’ என்று) மூன்றக்ஷராமன பெயரை யுடைத்தான நிர்வசக ப்ரியையாலே மூன்று எழுத்து ஆகி,Moonru Ezhuthu Aagi - (மூன்று பதமாய் மூன்று அர்த்தத்துக்கு வாசகமாயிருக்கும்) மூன்றெழுத்தாகப் பிரித்து மூன்று எழுத்தை,Moonru Ezhuthai - (அந்த) மூன்றெழுத்தை (பிரணவத்தை) ஏன்று கொண்டிருப்பார்க்கு,Eenru Kondiruppaarkku - (தஞ்சமாக நினைத்து) அது ஸந்திக்குமவர்கள் பக்கலில் இரக்கம் நன்கு உடைய,Erakkam Nanku Udaiya - சிறந்த கருணையையுடையவனும் மூன்று அடி நிமிர்த்து,Moonru Adi Nimirththu - அந்த பிரணவத்தை நம பத்தோடும் நாராயண பத்தோடும் நாராயண பத்தோடுங்கூட்டி மூன்று பதமாக்கி (திருவஷ்டாக்ஷரமாக்கி) மூன்றினில்,Moonrinil - (அந்த) மூன்று பதங்களிலும் தோன்றி,Thonri - (ஆத்மாவினுடைய அநந்யார்ஹ சேஷத்துவம் அநந்ய போக்யத்துவமாகிற மூன்று ஆகாரங்களையும்) தோன்றுவித்து. மூன்றினில்,Moonrinil - அந்த ஆகார த்ரயத்துக்கும் பிரதி ஸம்பந்தியாக மூன்று உரு ஆனான்,Moonru Uru Aanaan - (காணும்) சேஷித்வம் ப்ராப்யத்வம் என்கிற மூன்று ஆகாரங்களை யுடையவனுமான எம் புருடோத்தமன் இருக்கை,Em Purudhoaththaman Irukkai - ஸ்ரீபுருஷோத்தமப் பெருமான் எழுந்தருளி யிருக்குமிடம். |
| 401 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும் (தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை) அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 11 | பொங்கொலி கங்கைக் கரை மலி கண்டத்து உறை புரு டோத்தம னடிமேல் வெங்கலி நலியா வில்லி புத் தூர்க் கோன் விட்டு சித்தன் விருப் புற்று தங்கிய அன்பால் செய் தமிழ் மாலை தங்கிய நாவுடை யார்க்கு கங்கையில் திருமால் கழலிணைக் கீழே குளித்திருந்த கணக்காமே–4-7-11 | இத்திருமொழி,Iththirumozhi - நீர்க் கொழிப்பால் வந்து கிளர்த்தியை யுடையதும் ஒலி,Oli - கோபத்தை உடையதுமான கங்கை கரை,Gangai Karai - கங்கைக் கரையிலுள்ளதும் மலி,Mali - எல்லா வகை ஏற்றங்களை உடையதுமான. கண்டத்து,Kandaththu - திருக் கண்டங் கடி நகரில் புருடோத்தமன்,Purudhoaththaman - புருஷோத்தப் பெருமானுடைய அடி மேல்,Adi Meel - திருவடிகளில், வெம்கலி நலியா,Vemkali Naliya - கொடிய கலியினால் நலியப் பெறாத வில்லிபுத்தூர் கோன்,Villipuththoor Kon - ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தலைவரான விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார் விருப்புற்ற,Viruppu Utra - ஆசைப் படல் தங்கிய அன்பால்,Thangiya Anbaal - நிலை நின்ற பக்தியினால் செய்,Sey - அருளிச் செய்த தமிழ் மாலை,Thamizh Maalai - இத்திருமொழி தங்கிய,Thangiya - நிலை நின்றிருக்கப்பெற்ற நா உடையார்க்கு,Naa Udaiyaarkku - நாக்கை உடையவர்களுக்கு கங்கையில்,Gangaiyil - கங்காநதியில் குளித்து,Kuliththu - நீராடி திருமால்,Thirumaal - ஸ்ரீயபதியினுடைய இணை,Inai - ஒன்றொடொன்றொத்த கழல் கீழே,Kazhal Keezhe - திருவடிகளின் கீழே இருந்த கணக்கு ஆம்,Irundha Kanakku Aam - நிரந்தரவேலை பண்ணுமையாகிற பயன் பெற்றதாகும். |