திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 7-ஆலை நீள் கரும்பு (11 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
708பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 1
ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ அம்புயத் தடம் கண்ணினன் தாலோ வேலை நீர் நிறத் தன்னவன் தாலோ வேழ போதக மன்னவன் தாலோ ஏலவார் குழல் என் மகன் தாலோ என்று என்று உன்னை என் வாய் இடை நிறைய தால் ஒலித்திடும் திரு வினை இல்லாத தாயிற் கடை யாயின தாயே
பதவுரை Show / Hide
ஆலை நீள் கரும்பு அன்னவன், Aalai Neel Karumbu Annavan - ஆலையிலிட்டு ஆடத் தகுந்த நீண்ட கரும்பு போன்ற கண்ணனே!
தாலோ, Thalo - (உனக்குத்) தாலாட்டு
அம்புயம் தட கண்ணினன், Ambuyam Thada Kanninann - தாமரை போன்று விசாலமான திருக் கண்களை உடையவனே!
தாலோ, Thalo - தாலேலோ;-
வேலை நீர் நிறத்து அன்னவன், Velai Neer Nirathu Annavan - கடலின் நிறம் போன்ற நிறத்தை யுடையவனே!.
தாலோ, Thalo - தாலேலோ
வேழம் போதகம் அன்னவள், Vezham Podhagam Annaval - யானைக் குட்டி போன்றவனே!
தாலோ, Thalo - தாலேலோ;
ஏலம் வார் குழல், Elam Vaar Kuzhal - பரிமளம் மிக்கு நீண்ட திருக் குழலை யுடைய!
என் மகன், En Magan - என் மகனே!
தாலோ, Thalo - தாலேலோ;
என்று என்று, Endru Endru - இப்படி பலகாலுஞ்சொல்லி
என் வாயிடை நிறைய, En Vayidai Niraiya - என் வாய் திருப்தி யடையும்படி
உன்னை தால் ஒலித்திடும் திருவினை இல்லா தாயரில், Unnai Thaal Olithidum Thiruvinai Illa Thayarlil - உன்னை தாலாட்டுகையாகிற ஸம்பத்து இல்லாத தாய்மார்களில்
கடை ஆயின தாய், Kadai Aayin Thay - கடையான தாயாயிரா நின்றேன் நான் (என்கிறாள் தேவகி.)
ஆலையிலிட்டு ஆடத்தகுந்த கரும்பு என்றது, Aalaiyilittu Aadathakunda Karumbu Endrathu - நன்றாக முற்றி ரஸம் நிரம்பிய கரும்பு என்றவாறு;
அதுபோன்றவனே! என்றது, Adhuporandavaney Endrathu - “ஸர்வ ரஸ ஸர்வ கந்த “ என்று உபநிஷத்தில் ஓதியுள்ளபடி –
தாலோ, Thalo - தால் – நாக்கு குழந்தைகளை உறங்கப் பண்ணுவதற்காகப் பெண்கள் நாவை அசைத்துச் சொல்லும் சொலவு.
709பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 2
வடி கொள் அஞ்சனம் எழுது செம் மலர் கண் மருவி மேல் இனிது ஒன்றினை நோக்கி முடக்கி சேவடி மலர் சிறு கரும் தாள் பொலியும் நீர் முகில் குழவியே போலே அடக்கி ஆர செஞ்சிறு விரல் அனைத்தும் அம் கை யோடு அணைந்து ஆனையில் கிடந்த கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ! கேசவா ! கெடுவேன் கெடுவேனே
பதவுரை Show / Hide
வடி கொள், Vadi Kol - கூர்மையை யுடைத்தாய்
அஞ்சனம் எழுது, Anjanam Ezhuthu - மையிடப் பெற்றதாய்
செம் மலர், Sem Malai - செந்தாமரை மலரை ஒத்ததான
கண், Kan - கண்களாலே
மேல் ஒன்றினை, Mel Onrinai - மேற்கட்டியிலே தொங்க விட்டிருக்கும் கிளி முதலியவற்றில் ஒரு வஸ்துவை
இனிது, Inidhu - இனிதாக
மருவி நோக்கி, Maruvi Nookki - பொருந்தப் பார்த்துக் கொண்டும்
கரு தாள், Karuthal - கறுத்த புறந்தாளை யுடையதும்
மலர், Malar - செந்தாமரை மலரை யொத்து
சிறு, Siru - சிறுத்த
சே அடி, Sae Adi - சிவந்த அகவாயை உடையதுமான திருவடிகளை
முடக்கி, Mudakki - முடக்கிக் கொண்டும்
நீர் பொலியும், Neer Poliyum - (கழுத்தளவும் பருகின) நீர் விளங்கப் பெற்ற
முகில் குழவி போல, Mugil Kuzhavi Pola - மேகக் குட்டிப் போல,
செம்சிறு விரல் அனைத்தும், Semsiru Viral Anaithum - அழகிய சிறுத்த திரு விரல்களெல்லாவற்றையும்
அம் கையோடு, Am Kaiyodu - உள்ளங்கையிலே
அடக்கி ஆர, Adakki Aara - அடங்கும் படி
அணைந்து, Anaindhu - முடக்கிப் பிடித்துக் கொண்டும்
ஆனையின் கிடந்த கிடக்கை, Anainai Kidandha Kidakkai - ஆனை கிடக்குமா போலே பள்ளி கொண்டருளுமழகை.
கண்டிட பெற்றிலேன், Kandida Pettrilain - கண்டு அநுபவிக்கப் பெறாத பாவியானேன்;
அந்தோ, Andho - ஐயோ!
கேசவா, Kesavaa - கண்ண பிரானே!
கெடுவேன் கெடுவேன், Keduvein Keduvein - ஒன்று மநுபவிக்கப்பெறாத பெரும் பாவியானேன்.
710பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 3
முந்தை நன் முறை அன்புடை மகளிர் முறை முறை தம் தம் குறங்கிடை இருத்தி எந்தையே ! என் தன் குல பெரும் சுடரே ! எழு முகில் கணத்து எழில் கவரேறே! உந்தை யாவன் என்று உரைப்ப நின் செங்கேழ் விரலினும் கடை கண்ணினும் காட்ட நந்தன் பெற்றனன் நல்வினை இல்லா நாங்கள் கோன் வாசுதேவன் பெற்றிலனே
பதவுரை Show / Hide
அன்பு உடை, Anbu Udai - ப்ரீதியை யுடையவர்களான
முந்தை நல் முறை மகளிர், Mundai Nal Murai Makalir - பரம்பரையாக வருகிற நல்ல உறவு முறையை யுடைய பெண்கள்
தம் தம் குறங்கிடை, Tham Tham Kurangidai - தங்கள் தங்கள் துடைகளிலே
முறை முறை, Murai Murai - க்ரமம் க்ரமமாக
இருத்தி, Irudhi - வைத்துக் கொண்டு
எந்தையே, Endhaie - “என் அப்பனே!
என் தன் குலம் பெருசுடரே, En Than Kulam Perusudare - எங்கள் குலத்துக்குப் பெருத்ததொரு விளக்கானவனே!
எழு முகில் கணத்து, Ezhu Mukil Kanathu - (கடலில் நீரை முகந்து கொண்டு) மேலேழுகின்ற மேக ஸமூஹத்தினுடைய
எழில் கவர், Ezil Kavar - அழகைக் கவர்ந்து கொண்ட
ஏறே, Ere - “ காளை போன்றவனே!” (என்றிப்படி பலவாறாகத் துதித்து)
உந்தையாவன் என்று உரைப்ப, Undaiyavan Endru Uraippa - உன் தகப்பனார் யார்? (காட்டு,) என்றவளவிலே
நின், Nin - உன்னுடைய
செம் கேழ் விரலினும், Sem Kezh Viralinum - சிவந்து சிறந்த விரலினாலும்
கடை கண்ணினும், Kadai Kanninum - கடைக் கண்ணாலும்
காட்ட, Kaata - (இன்னார் என் தகப்பனார் என்று) காட்ட (அந்தப் பாக்கியத்தை)
நந்தன் பெற்றனன், Nandan Pettran - நந்தகோபர் பெற்றார்;
நல் வினை இல்லா நங்கள் கோன், Nal Vinai Illa Nangal Kon - பாக்யஹீநையான என்னுடைய பர்த்தாவான
வசுதேவன், Vasudevan - வஸுதேவர்
பெற்றிலன், Pettrilan - (நந்தகோபர் பெற்ற பாக்கியத்தைப்) பெறவில்லை.
711பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 4
களி நிலா எழில் மதி புரைமுகமும் கண்ணனே ! திண் கை மார்வும் திண் தோளும் தளி மலர் கரும் குழல் பிறை யதுவும் தடம் கொள் தாமரை கண்களும் பொலிந்த இளமை இன்பத்தை இன்று என் தன் கண்ணால் பருவேற்க்கு இவள் தாய் என நினைந்த அளவில் பிள்ளைமை இன்பத்தை இழந்த பாவியேன் எனது ஆவி நில்லாதே
பதவுரை Show / Hide
கண்ணனே களி நிலா, Kannane Kali Nila - ஸ்ரீ கிருஷ்ணனே! ஆநந்தத்தை விளைவிக்கும் நிலாவை யுடைய
எழில் மதி புரை முகமும் திண் கை, Ezil Mathi Purai Mukamum Thin Kai - பூர்ண சந்திரனை ஒத்த திருமுகமும் திண்ணிதான திருக் கைகளும்
மார்வும், Marvum - திரு மார்பும்
திண் தோளும், Thin Tholum - வலிமை பொருந்திய திருத் தோள்களும்
தளிர் மலர் கரு குழல், Thalir Malar Karu Kuzhal - தளிரையும் மலரையும் முடைத்தாய்க் கறுத்த திருக் குழற்கற்றையும்
பிறை அதுவும் தடங்கொள், Pirai Adhuvum Thadankol - அஷ்டமீ சந்திரன் போன்ற திருநெற்றியும் விசாலமான
தாமரை கண்களும், Thamarai Kangkalum - தாமரை போன்ற திருக் கண்களும் (ஆகிய இவை)
பொலிந்த இளமை இன்பத்தை, Polintha Ilamai Inbathai - அழகு பெற்று விளங்கும்படியான யௌவநாவஸ்தையின் போக்யதையை
இன்று, Indru - இப்போது
என் தன் கண்ணால், En Than Kannal - என்னுடைய கண்ணாலே
பருகுவேற்கு, Paruguveyru - நான் அநுபவியா நின்றாலும்
இவள் தாய் என நினைந்த, Ival Thai Ena Ninaindha - (இவள் என்னுடைய) தாய் என்று நினைப்பதற்குத் தகுதியான
பிள்ளைமை, Pillaimai - சைசவப் பருவத்திலுண்டான
அளவு இல் இன்பத்தை, Alavu Il Inbathai - அளவில்லாத ஆநந்தத்தை
இழந்த, Izhanda - அநுபவிக்கப் பெறாமல் இழந்த
பாவியேன் எனது, Paviyen Enathu - பாவியான என்னுடைய
ஆவி நில்லாது, Aavi Nilladhu - உயிரானது தரித்து நிற்க வழி யில்லையே!.
712பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 5
மருவு நின் திரு நெற்றியில் சுட்டி அசை தர மணி வாய் இடை முத்தம் தருதலும் உன் தன் தாதையை போலும் வடிவு கண்டு கொண்டு உள்ளம் உள் குளிர விரலை செஞ்சிறு வாய் இடை சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும் அவ் வுரையும் திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே
பதவுரை Show / Hide
நின் திரு நெற்றியில் மருவும் சுட்டி அசை தர, Nin Thiru Nettiyil Maruvum Sutti Asai Thara - உன்னுடைய திரு நெற்றியிலே பொருந்தியிருக்கிற சுட்டியானது அசையும்படி
மணிவாயிடை முத்தம் தருதலும் உன்தன் தாதையை போலும், Manivayidai Muththam Tharuthalum Unthan Thathaiya Polum - அழகிய வாயிலுண்டான
வடிவு, Vadivu - (உன்) வடிவழகை
கண்டு கொண்டு, Kandu Kondo - (நான்) பார்த்து
உள்ளம் டீள் குளிர, Ullam Teel Kulira - (கடலில் நீரை முகந்து கொண்டு) மேலேழுகின்ற மேக ஸமூஹத்தினுடைய
செம் சிறு வாயிடை, Sem Siru Vayidai - சிவந்த சிறிய திருவாயிலே
விரலை சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும் அ உரையும், Viralai Serthu Veguliyai Nindru Uraikkum A Uraiyum - விரல்களை வைத்துக் கொண்டு (நீ) சீற்றத்தோடே
ஒன்றும் திரு இலேன் பெற்றிலேன், Ondrum Thiru Ileen Pettrileen - ஒன்றையும் பாக்யமற்றவளான நான் அநுபவிக்கப்பெறவில்லை.
தெய்வ நங்கை எசோதை, Deiva Nangkai Eshodhai - ‘தெய்வமாது’ என்று சொல்ல லாம்படியான யசோதைப் பிராட்டி
எல்லாம் பெற்றாளே, Ellam Pettraale - அந்த பால்யசேஷ்டிதங்கள் எல்லாவற்றையும் அநுபவிக்கப் பெற்றாளே!.
வெகுளியாய் நின்று, Veguliyai Nindru - சீறுபாறென்று பேசுதல் குழந்தைகளின் இயல்வாம்.
713பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 6
தண் தாமரை கண்ணனே! கண்ணா ! தவழ்ந்து எழுந்து தளர்ந்த்ததோர் நடையால் மண்ணில் செம் பொடி ஆடி வந்து என் தன் மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ ! வண்ண செஞ்சிறு கை விரல் அனைத்தும் வாரி வாய் கொண்ட அடிசிலின் மிச்சில் உண்ண பெற்றிலேன் ஓ! கொடு வினையேன் என்னை என் செய்ய பெற்றது எம்மோயே
பதவுரை Show / Hide
தண் அம் தாமரை கண்ணனனே, Than Am Thamarai Kannananai - குளிர்ந்த அழகிய தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனே
கண்ணா தவழ்ந்து எழுந்து, Kannaa Thavazhndhu Ezhundhu - கண்ணபிரானே (நீ) தவழ்ந்து கொண்டுஎழுந்திருந்து
தளர்ந்தது ஓர் நடையால், Thalarndhadhu Oru Nadayal - தட்டுத்தடுமாறி நடப்பதாகிற ஒரு நடையினால்
செம்மண் பொடியில், Semman Podiyil - சிவந்த புழதி மண்ணிலே
ஆடி வந்து, Aadi Vandu - விளையாடி (அக்கோலத்தோடே) வந்து
என் தன் மார்வில், En Than Maarvil - என்னுடைய மார்விலே
மன்னிட பெற்றிலேன் அந்தோ, Mannida Pettrileen Andho - நீ அணையும் படியான பாக்கியத்தை பெற்றிலேன்; இஃது என்ன தெளர்ப்பாக்கியம்!
வண்ணம் செம், Vannam Sem - அழகு பெற்றுச் சிவந்து
சிறு, Siru - சிறிதான
கை விரல் அனைத்தும், Kai Viral Anaithum - கைவிரல்களெல்லா வற்றாலும்
வாரி வாய்க் கொண்ட அடிசிலின் மிச்சல் உண்ணப் பெற்றிலேன், Vaari Vayk Konda Adichilin Michchal Unnap Pettrileen - வாரிக் கொண்டு அமுது செய்த ப்ரஸாதத்தினுடைய
கொடுவினையேன், Koduvinaiyen - (இவற்றை யெல்லாம் நான் இழக்கும் படியாக) மஹா பாபத்தைப் பண்ணினேன்;
ஓ எம்மோய் என்னை என் செய்ய பெற்றது, O Emmoiy Ennai En Seyya Pettrathu - ஐயோ! என் தாயானவள் என்னை எதுக்காக பெற்றாளோ!
714பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 7
குழகனே !என் தன் கோமள பிள்ளாய் கோவிந்தா ! என் குடங்கையில் மன்னி ஒழுகு பேர் எழில் இளம் சிறு தளிர் போல் ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா மழலை மென் நகை இடை இடை அருளா வாயிலே முலை இருக்க வென் முகத்தே எழில் கொள் நின் திரு கண் இணை நோக்கம் தன்னையும் இழந்தேன் இழந்தேனே
பதவுரை Show / Hide
குழகனே, Kuzhaganai - எல்லாரோடும் கலக்கும் ஸ்வபாவமுடையவனே!
என் தன் கோமளம் பிள்ளாய், En Than Komalam Pillai - என் வயிற்றிற் பிறந்த அழகிய குமாரனே!
கோவிந்தா, Kovindaa - கோவிந்தனே!
என் குடங்கை யில் மன்னி ஓழுகு பேர், En Kudangai Yil Manni Ozhugu Peer - என்னுடைய குடங்கையிலே பொருந்தியிருந்து வெள்ளமிடாநின்ற மிக்க
எழில் இள சிறு தளிர் போல், Ezhil Ila Siru Thalir Pol - அழகை யுடைத்தாயும் மிகவும் இளைசான தளிர் போன்றதுமான
ஒரு கையால் ஒரு முலை முகம், Oru Kaiyal Oru Mulai Mukam - ஒரு திருக் கையாலே (என்னுடைய) ஒரு முலைக் காம்பை
நெருடா, Neruda - நெருடிக் கொண்டு
முலை வாயிலே இருக்க, Mulai Vayile Irukka - மற்றொரு முலையானது (உன்) வாயில் இருக்க
இடை இடை, Idai Idai - நடு நடுவே
என் முகத்தை மழலை மெல் நகை அருளா, En Mukaththai Mazhalai Mel Nakai Arula - என் முகத்தை நோக்கி புன் சிரிப்பைச் செய்து கொண்டு
எழில் கொள் நின் திரு கண் இணை நோக்கம் தன்னையும், Ezhil Kol Nin Thiru Kan Inai Nokkam Thannaiyum - அழகிய உன் இரண்டு கண்களாலும் பார்க்கிற பார்வையையும்
இழந்தேன் இழந்தேன், Izhandhen Izhandhen - ஐயோ! இழந்தேனே!
குழகன், Kuzhagan - எல்லாரோடும் கலந்து பரிமாறுவதையே இயல்வாக வுடையவன்
கோமளம், Komalam - ஸுகுமாரம்.
நெருடா, அருளா, Neruda Arula - ‘ செய்யா’ என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம்; நெருடி, அருளி என்றபடி.
715பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 8
முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும் முகிழ் இளம் சிறு தாமரை கையும் எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ் வாயும் அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும் அணி கொள் செஞ்சிறு வாய் நெளிப்பதுவும் தொழுகையும் இவை கண்ட வசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே
பதவுரை Show / Hide
வெண்ணெய் முழுதும் அளைந்து, Venney Muzhudhum Alainthu - வெண்ணெய் குடத்திலுள்ளவளவும கையை விட்டு (அளைந்து)
தொட்டு உண்ணும், Thottu Unnum - எடுத்து உண்கிற
இள முகிழ் தாமரை சிறுகையும், Ila Mukizh Thamarai Sirukaiyum - இளந்தளிரையும் தாமரையையும் போன்ற சிறிய திருக் கைகளும்
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு, Ezhil Kol Thambu Konda Adippadharku - அழகிய தாம்பாலே அடிக்க (அதற்கு)
எள்கு நிலையும், Elku Nilaiyum - அஞ்சி நிற்கும் நிலையும்
வெண் தயிர் தோய்ந்த செம் வாயும், Venn Thayir Thoyndha Sem Vayum - வெளுத்த தயிர் பூசிய சிவந்த வாயும்,
அழுகையும், Azhugaiyum - அழுவதும்,
அஞ்சி நோக்கும் அ நோக்கும், Anji Nokkum A Nokkum - பயந்து பார்க்கிற அப்பார்வையும்
அணி கொள் செம் சிறு வாய் நெளிப்பதுவும், Ani Kol Sem Siru Vay Nelippadhuvum - அழகிய சிவந்த சிறிய வாய் துடிப்பதும்
தொழுகையும், nan - அஞ்ஜலி பண்ணுகையும் (ஆகிற
இவை, nan - இவற்றையெல்லாம்
கண்ட, nan - நேரில் கண்ணாற்கண்டு அநுபவித்த
அசோதை, nan - யசோதை யானவள்
தொல்லை இன்பத்து, nan - பரமானந்தத்தினுடைய
இறுதி, nan - எல்லையை
கண்டாள், nan - காணப் பெற்றாள்
“அடிப்பதற்கு”, nan - அடிப்ப, அதற்கு எனப் பிரித்துரைத்தலுமாம்;
அழுகையும் தொழுகையும் பரிச்சிந்நர்களுடைய க்ருத்யமிறே. (பரிச்சிந்நர், nan - ஓரளவு பட்டவர்.
716பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 9
குன்றினால் குடை கவித்ததும் கோல குரவை கோத்ததும் குடமாட்டும் கன்றினால் விள வெறிந்ததும் காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும் அங்கு என் உள்ளம் குளிர ஒன்றும் கண்டிட பெற்றிலேன் அடியேன் காணுமாறு இனி வுண்டேனில் அருளே
பதவுரை Show / Hide
குன்றினால் குடை கவித்ததும், nan - கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கி நின்றதும்
கோலம் குரவை கோத்ததும், nan - அழகாக ராஸ க்ரீடை செய்ததும்
குடம் ஆட்டும், nan - குடக் கூத்தாடினதும்
கன்றினால் விள எறிந்ததும், nan - கன்றாய் வந்த ஒரு அசுரனைக் கொண்டு (அஸுராவேசமுடைய) விளங்காய்களை உதிர்த்ததும்
காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா, nan - திருவடிகளாலே காளிய நாகத்தின் தலையை மர்த்தித்ததும் (ஆகிய இவை) முதலாகவுள்ள
வென்றி சேர், nan - வெற்றி பொருந்திய
நல் பிள்ளை விளையாட்டம் அனைத்திலும், nan - விலக்ஷணமான பால்ய சேஷ்டிதங்க ளெல்லா வற்றினுள்ளும்
ஒன்றும், nan - ஒரு சேஷ்டிதத்தையும்
என் உள்ளம் உள் குளிர, nan - என் நெஞ்சு குளிரும்படி
அடியேன், Adiyen - நான்
அங்கு கண்டிட பெற்றிலேன், nan - அச்சேஷ்டிதங்களை நீ செய்தவிடத்தில் கண்ணாரக் கண்டு களிக்க பெற்றிலேன்;-
இனி, nan - இப்போது
காணும் ஆறு, Kaanum Aaru - (அவற்றை நான்) காணத் தக்க உபாயம்
உண்டு எனில், Undu Enil - இருக்குமாகில்
717பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 10
வஞ்ச மேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி வரண்டு நார் நரம்பு எழக் கரிந்துக்க நஞ்சமார் தரு சுழி முலை அந்தோ ! சுவைத்து நீ அருள் செய்து வளர்ந்தாய் கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய் ! கடைப் பட்டேன் வெறிதே முலை சுமந்து தஞ்சம் மேல் ஒன்றி இலேன் உய்ந்து இருந்தேன் தக்கதே நல்ல தாயைப் பெற்றாயே
பதவுரை Show / Hide
வஞ்சம் மேவிய நெஞ்சு உடை பேய்ச்சி, Vanjam Meviyai Nenju Udai Paeychchi - வஞ்சனை பொருந்திய நெஞ்சை யுடையளான பூதனை யானவள்
வரண்டு, Varandu - உடம்பு சோஷித்து
எழ, Ezha - (உள்ளுள்ள ரத்தமாம்ஸங்கள) வெளியிற் கொழிக்கும் படியாகவும்
நார் நரம்பு கரிந்து உக்க, Naar Narambu Karinthu Ukka - நார் போன்ற நரம்புகள் கருகி உதிரும் படியாகவும (அவளுடைய)
நஞ்சம் ஆர் தரு சுழி முலை, Nanjam Aar Tharu Suzhi Mulai - விஷந்தீற்றிய கள்ள முலையை
நீ சுவைத்து, Nee Suvaithu - நீ ஆஸ்வாதநம் பண்ணியும்
அருள் செய்து, Arul Seidhu - (என் மேல்) கிருபையினாலே
வளர்ந்தாய், Valarnthai - உயிருடன் வளரப் பெற்றாய்
அந்தோ, Andho - ஆச்சரியம்!
கஞ்சன் நாள் கவர், Kanjan Naal Kavar - கம்ஸனுடைய ஆயுஸ்ஸை அபஹரித்த
கரு முகில் எந்தாய், Karum Mukil Endhai - காளமேகம் போன்ற நாயனே!
முலை வெறிதே சுமந்து, Mulai Veridhae Sumandhu - (நான்) முலையை வியர்த்தமாகச் சுமந்து
கடைப்பட்டேன், Kadaipattain - கெட்டவரிலும் கடைகெட்டவளானேன்;
தஞ்சம் ஒன்று இலேன், Thanjam Ondru Ilaan - (உன்னையொழிய வேற) புகலற்றிராநின்றேன்;
உய்ந்திருந்தேன், Uyandhirundhen - (என்றைக்காகிலு முன்னைக் கண்ணால் காண்போமென்று)பிராணனைப் பிடித்துக் கொண்டு ஜீவிக்கிறேன்;
தக்கது, Thakkadhu - உனக்குத் தகுதியான
நல்ல தாயை, Nalla Thaayai - நல்ல தாயாரை
பெற்றாய், Petrayi - ஸம்பாதித்துக் கொண்டாய்.
718பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 11
மல்லை மா நகர்க்கு இறையவன் தன்னை வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து எல்லையில் பிள்ளை செய்வன காணாத் தெய்வ தேவகி புலம்பிய புலம்பல் கொல்லி காவலன் மாலடி முடி மேல் கோலமாம் குலசேகரன் சொன்ன நல் இசை தமிழ் மாலை வல்லார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே
பதவுரை Show / Hide
மல்லை மா நகர்க்கு, Mallai Maa Nagarkku - செல்வம் நிரம்பிய பெரிய நகரமாகிய வட மதுரைக்கு
இறையவன் தன்னை, Irayavan Thannai - தலைவனாயிருந்த கம்ஸனை
வான் செலுத்தி, Vaan Seluththi - வீர ஸ்வர்க்கத்திற்கு அனுப்பி
ஈங்கு வந்து அணை, Eengu Vandu Anai - (தேவகீ ஸமீபமாகிய) இங்கே வந்து சேர்ந்த
பிள்ளை, Pillai - கண்ண பிரானுடைய
மாயத்து எல்லை இல் செய்வன, Maayaththu Ellai Il Seivana - அற்புதத்தில் எல்லை யில்லாத சேஷடிதங்களை
காணா, Kaanaa - (நடந்த போது) காணப் பெறாத
தெய்வத் தேவகி, Deivath Devaki - தெய்வத் தன்மை பொருந்திய தேவகி யானவள்
புலம்பிய புலம்பல், Pulambiya Pulambal - புலம்பிக் கொண்டு சொன்ன பாசுரங்களை
கொல்லி காவலன், Kolli Kaavalan - கொல்லி நகர்க்கு அரசராய்
மால் அடி முடி மேல் கோலம் ஆம், Maal Adi Mudi Mael Kolam Aam - ஸர்வேச்வரனுடைய திருவடிகளைத் தம் திருமுடிக்கு அலங்காரமாக வுடையரான
குலசேகரன், Kulashekaran - குலசேகராழ்வார்
சொன்ன, Sonna - அருளிச் செய்த
நல் இசை தமிழ் மாலை, Nal Isai Tamil Maalai - நல்ல இசையையுடைய தமிழினாலாகிய சொல் மாலையை
வல்லார்கள், Vallargal - ஓத வல்லவர்கள்
ஒல்லை, Ollai - விரைவாக
நாரணன் உலகு, Naaranan Ulagu - ஸ்ரீவைகுண்டத்தை
நண்ணுவார், Nannuvaar - சேரப் பெறுவர்