திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1028 | பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (1.“சேலேய்கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும், மேலாத்தாய் தந்தையுமவரே யினியாவாரே” 2. “தாயாய்த்தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய், நீயாய் நீ நின்றவாறு” என்கிறபடியே உன்னையே ஸகலவிதபந்துக்களுமாகக் கொள்ள வேண்டியிருக்க அது செய்யாதே தாயேயென்றும் தந்தையேயென்றும் தாரமேயென்றும் கிளையேயென்றும் மக்களேயென்றும் ஆபாஸமான புத்ரமித்ராதிகளிடத்திலே ஆசைவைத்து மிகவும் கஷ்டங்கள் பட்டேன்; அவர்களுக்கு என்னை ரக்ஷிக்க சக்தியுண்டாகிலன்றோ அவர்களால் நான் வாழ்வேன்; உண்மையில் அசக்தர்களான அவர்களை நான் வீணே நம்பிக்கெட்டேன் என்றபடி.) 1 | தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டு ஒழிந்தேன் உன்னைக் காண்பதோர் ஆசையினால்
வேயேய் பூம் பொழில் சூழ் விரையார் திருவேம்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கியாள் என்னைக் கொண்டருளே –1-9-1 | பதவுரை Show / Hideவேய் ஏய், Vey Aey - மூங்கில்கள் நெருங்கி யிருக்கப் பெற்றதும் (ஆகையினாலே) பூ பொழில் சூழ், Poo Pozhil Soozh - பூஞ்சோலைகள் நிறைந்திருக்கப் பெற்றதும் (ஆகையினாலே) விரை ஆர், Virai Aar - பரிமளம் விஞ்சியிருக்கிற திருவேங்கடவா, Thiruveengadavaa - திருமலையில் எழுந்தருளியுள்ள பெருமானே! தாயே என்றும் தந்தையே என்றும் தாரமேஎன்றும் கிளையே என்றும் மக்களே என்றும், Thaaye Endrum Thandhaie Endrum Thaarameendrum Kilaie Endrum Makkaie Endrum - தாய் தந்தை மனையாள் பந்துக்கள் பிள்ளைகள் என்கிற ஆபாஸமான சரீர ஸம்பந்திகளையே எப்போதும் வாய்வெருவிக்கொண்டு நோய் பட்டு ஒழிந்தேன், Noi Pattu Ozhindhen - அநர்த்தப்பட்டுப் போனவனும் நாயேன், Naayen - நாய் போலே மிக்க நீசனுமான அடியேன் உன்னை காண்பது ஓர் ஆசையினால், Unnai Kaanbathu Oor Aasaiyin Aal - (அந்த ஆபாஸ பந்துக்களை விட்டு, ப்ராப்த பந்துவான) உன்னை ஸேவிக்க வேணுமென்கிற ஆசையினால் வந்து அடைந்தேன், Vandhu Adaindhen - உன்னிடம் வந்து சரணம் புகுந்தேன்; என்னை, Ennai - சரணாகதனான என்னை நல்கி, Nalki - கிருபை செய்து ஆள் கொண்டருள், Aal Konda Arul - அடிமை கொண்டருளவேணும். |
| 1029 | பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆபாஸபந்துக்களை உற்ற உறவினராக நினைத்திருந்த குற்றத்தைப் பொறுத்தருளவேணுமென்று சரணம் புகுந்தார் கீழ்ப்பாட்டில்;) 2 | மானேய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம் பொழில் சூழ் திருவேம்கட மா மலை என்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-2 | பதவுரை Show / Hideதேன்ஏய், Then Aey - வண்டுகள் நிறைந்த பூ பொழில் சூழ், Poo Pozhil Soozh - பூஞ்சோலைகளாலே சூழப்பட்ட திருவேங்கடம் மா மலை, Thiruveengadam Maa Malai - திருவேங்கடமென்னும் சிறந்த மலைகளாலே எழுந்தருளியிரா நின்ற என் ஆனாய், En Aanai - ஆனை போன்ற எம்பெருமானே! மா நிலத்து, Maa Nilaththu - இப்பெரிய பூமண்டலத்திலே மான் ஏய் கண் மடவார் மயக்கில் பட்டு, Maan Aey Kan Madavaar Mayakkil Pattu - மான்போன்ற கண்ணழகுடைய மாதர்களின் கண்மயக்கிலே, அகப்பட்டு, நாநாவித நரகம் புகும் பாவம், Naanavitha Naragam Pugum Paavam - பலவகைப்பட்ட நரகங்களிலே புகுவதற்குக் காரணமான பாவங்களை நானே செய்தேன், Naane Seidhen - நானொருவனே செய்து வைத்தேன்; வந்து அடைந்தேன், Vandhu Adaindhen - உன்பக்கல் வந்து சரணம் புகுந்தேன்; |
| 1030 | பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜீவஹிம்சை பண்ணிப் போந்த குற்றங்களையும் பொறுத்தருளவேணுமென்று சரணம் புகுகிறார்.) 3 | கொன்றேன் பல்லுயிரைக் குறிக் கோளொன்றி லாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக வுரைத்தறியேன்
குன்றேய் மேக மதிர் குளிர் மா மலை வேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-3 | பதவுரை Show / Hideகுன்று ஏய் மேகம் அதிர் குளிர் மா மலை வேங்கடவா, Kundru Aey Megam Adhir Kulir Maa Malai Vengadavaa - மலைபோன்ற மேகங்கள் கோஷிக்குமிடமாய்க் குளிர்ந்ததாய்ச் சிறந்ததான திருவேங்கட மலையி லெழுந்தருளி யிருப்பவனே! குறிக்கோள் ஒன்று இலாமையினால், Kurikkol Onru Ilamaiyinai - விவேகமென்பது சிறிதுமில்லாமையினாலே இரந்தார்க்கு, Irandhaarkku - யாசித்தவர்களுக்கு இனிது ஆக, Inidhu Aaga - மதுரமாக என்றேனும், Endraenume - ஒருநாளும் உரைத்து அறியேன், Uraiththu Ariyaen - பதில் சொல்லி அறியேன்; பல் உயிரை, Pal Uyirai - பல பிராணிகளை கொன்றேன், Konraen - கொலைசெய்து முடித்தேன்; அன்றே, Andrae - அந்த க்ஷணத்திலேயே வந்து அடைந்தேன், Vandhu Adaindhen - உன்னை வந்து பற்றினேன்; |
| 1031 | பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அநுலோமப் பிறவிகளென்றும் பிரதிலோமப் பிறவிகளென்றும் சாஸ்த்ரங்களில் எத்தனை விதமான ஸங்கர ஜன்மங்கள் சொல்லப்பட்டிருக்கின்றனவோ, அத்தனை ஜன்மங்களிலும் பிறப்பதுமிறப்பதும் செய்தாயிற்று.) 4 | குலம் தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்த்து ஒழிந்தேன்
நலம் தான் ஒன்றும் இலேன் நல்லதோர் அறம் செய்துமிலேன்
நிலம் தோய் நீள் முகில் சேர் நெறியார் திருவேங்கடவா
அலந்தேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-4 | பதவுரை Show / Hideநிலம் தோய் நீள் முகில் சேர் நெறி ஆர் திருவேங்கடவா, Nilam Thoy Neel Mukil Ser Neri Aar Thiruveengadavaa - பூமியிலே படிந்த பெரிய மேகங்கள் நடமாடின வழிகள் பொருந்தியிரு க்கிற திருமலையிலெழுந்தருளி யுள்ளவனே! எத்தனை குலமும், Ethanai Kulamum - எல்லாக்குலங்களிலும் பிறந்து இறந்து எய்த்து ஒழிந்தேன், Pirandhu Irandhu Eyththu Ozhindhaen - பிறப்பதும் இறப்பதுமாக இளைத்துப் போனவனும் நலம் ஒன்றும் இலேன், Nalam Onrum Ilaen - ஒருவகை நன்மையுமில்லாதவனும் நல்லது ஓர் அறமும் செய்திலேன், Nalladhu Oru Arahamum Seidhilaen - நல்ல தருமமொன்றும் செய்தறியாதவனும் அலந்தேன், Alandhaen - பல கஷ்டங்களை அநுபவித்த வனுமான அடியேன் வந்து அடைந்தேன், Vandhu Adaindhen - உன்னை வந்து பற்றினேன்; |
| 1032 | பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அதிபாதகம், உபபாதகம், மஹாபாதகம் என்னும்படியான பாவங்கள் எப்படிப்பட்டவையாயினும் செய்யும்போது சிறிதும் சலியாமல் செய்துவிட்டேன்.) 5 | எப்பாவம் பலவும் இவையே செய்து இளைத்து ஒழிந்தேன்
துப்பா நின்னடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்
செப்பார் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என்
அப்பா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-5 | பதவுரை Show / Hideசெப்பு ஆர் திண் வரை சூழ், Seppu Aar Thin Varai Soozh - அரணாகப் போரும்படியான திண்ணிய மலைகளாலே சூழப்பட்ட திரு வேங்கடம் மா மலை, Thiru Vengadam Maa Malai - திருமலையிலே எழுந்தருளியிரா நின்ற என் அப்பா, En Appaa - என் அப்பனே துப்பா, Thuppaa - ஸர்வசக்தனே! எப்பாவம் பலவும் இவையே செய்து, Eppavam Palavum Ivaiye Seidhu - பலவகைப்பட்ட பாவங்களையே பண்ணி இளைத்தொழிந்தேன், Ilaiththozhindhaen - துக்கப்பட்டவனாய் நின் அடியே, Nin Adiye - உனது திருவடிகளை தொடர்ந்து, Thodarnthu - அநுஸரித்து ஏத்தவும், Aeththavum - துதிக்கவும் கிற்கின்றிலேன், Kirkkinrilen - சக்தியற்றவனான நான் வந்து அடைந்தேன்-. |
| 1033 | பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சரீரமென்பது பஞ்சபூமயமாயிருக்கும். மண்ணையும் மணலையும் கல்லையும் நீரையும் சேற்றையுங்கொண்டு வீடு கட்டுமா போலே, ப்ருதிவி, அப்பு, தேஜஸ், வாயு, ஆகாசம் என்கிற பஞ்சபூதங்களைக் கொண்டு இந்த மாம்ஸபிண்டம் நிருமிக்கப்பட்டிராநின்றது.) 6 | மண்ணாய் நீர் எரி கால் மஞ்சுளாவு மாகாசமுமாம்
புண்ணார் ஆக்கை தன்னுள் புலம்பித் தளர்ந்து எய்த்து ஒழிந்தேன்
விண்ணார் நீள் சிகர விரையார் திருவேங்கடவா
அண்ணா வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-6 | பதவுரை Show / Hideவிண் ஆர் நீள் சிகரம், Vin Ar Neel Sikaram - ஆகாசத்தையளாவி உயர்ந்திருக்கிற கொடுமுடிகளையுடையதும் விரை ஆர், Virai Aar - பரிமளம் மிக்கதுமான திருவேங்கடவா, Thiruveengadavaa - திருமலையிலே எழுந்தருளியிருக்கிற அண்ணா, Anna - ஸ்வாமிந்!, மண்ஆய் நீர் எரி கால் மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம், Manai Neer Eri Kaal Manju Ulaavum Aakachamum Aam - பூமி, ஜலம், அக்நி, வாயு, மேகங்களு லாவுகின்ற ஆகாசம் ஆகிய பஞ்சபூதங்களினாலாகியதும் புண் ஆர், Pun Ar - புண்கள் நிறைந்ததுமான ஆக்கை தன்னுள், Aakkai Thannul - சரீரத்திலே (அகப்பட்டுக் கொண்டு) புலம்பி தளர்ந்து எய்த்து ஒழிந்தேன், Pulambi Thalarndhu Eyththu Ozhindhen - கதறியழுது உடல் மெலிந்து மிகவும் கஷ்டப்பட்டவனான அடியேன் |
| 1034 | பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (“கிளரொளியிளமை கெடுவதன் முன்னம்” என்றும்) 7 | தெரியேன் பாலகனாய்ப் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேனாயின பின் பிறர்க்கே வுழைத்து ஏழை யானேன்
கரிசேர் பூம் பொழில் சூழ் கனமா மலைவேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-7 | பதவுரை Show / Hideகரி சேர், Kari Ser - யானைகள் மிகுந்திருக்கப் பெற்றதும் பூ பொழில் சூழ், Poo Pozhil Soozh - அழகிய சோலைகளாலே சூழப்பட்டும் கனம் மா மலை வேங்கடவா, Kanam Maa Malai Vengadavaa - திண்ணியதாயு மிருக்கிற திருமலையிலே வாழ்பவனே! அரியே, Ariye - ஹரியே! பாலகன் ஆய், Palagan Aayi - சிறியேனாயிருந்தபோது தெரியேன், Theriyeen - அறிவில்லாதவனாய் பல தீமைகள், Pala Theemaigal - பல பாவங்களை செய்தும் இட்டேன், Seithum Ittaein - செய்து தீர்த்தேன்; பெரியேன் ஆயின பின், Periyeen Aayin Pin - யௌவன பருவ மடைந்த பின்பு பிறர்க்கே உழைத்து, Pirarkke Uzhaiththu - விஷயாந்தர பரனாய் ச்ரமப் பட்டு ஏழை ஆனேன், Ezhaai Aanen - சதிர்கெட்டுப்போனேன்; |
| 1035 | பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நோற்கையாவது – ஸங்கல்பிக்கை; பல பிறவிகளை ஸங்கல்பிக்கையாவது – பலபிறவிகள் உண்டாகும்படி கருமங்களைச் செய்தலாம்.) 8 | நோற்றேன் பல் பிறவி உன்னைக் காண்பதோர் ஆசையினால்
ஏற்றேன் இப் பிறப்பே இடர் உற்றனன் எம்பெருமான்
கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா
ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-8 | பதவுரை Show / Hideகோல் தேன் பாய்ந்து ஒழுகும், Kol Then Paayndhu Ozhugum - கோல்களின்றும் தேன் இழிந்து வெள்ளமிடா நின்ற குளிர் சோலை சூழ் வேங்கடவா, Kulir Solai Soozh Vengadavaa - குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருமலையில் வாழ்பவனே! எம்பெருமான், Emperumaan - அஸ்மத் ஸ்வாமியே!, பல் பிறவி நோற்றேன், Pal Piravi Nootren - எனக்குப் பல பிறவிகள் உண்டாகும்படி காரியம் செய்து வைத்தேன். உன்னை காண்பது ஓர் ஆசையினால், Unnai Kaanbathu Oor Aasaiyin Aal - உன்னை ஸேவிக்கவேணுமென்று ஒரு காதல் கிளர்ந்த படியினாலே இப்பிறப்பே ஏற்றேன், Ippirappe Aetren - இந்த ஜந்மத்திலே உனக்கு அன்பனாக ஏற்பட்டேன். இடர்உற்றனன், Idarutranan - (இன்னமும் நேரக்கூடிய பிறவிகளை நினைத்து) துக்கப்படா நின்றேன்; |
| 1036 | பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உன்னுடைய ஸம்பந்தத்தை அறுத்துக்கொண்டு வெகுதூரம் ஓடிப்போன வெனக்கு ஓரிடத்திலும் ஒருவகையான ஆதாரமுமில்லை.) 9 | பற்றேல் ஒன்றுமிலேன் பாவமே செய்து பாவியானேன்
மற்றேல் ஓன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலச் சுனை வேங்கடவா
அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே –1-9-9 | பதவுரை Show / Hideமாயனே, Maayaney - ஆச்சரியமான குணங்களை யுடையவனே! எங்கள் மாதவனே, Engal Maadhavane - எங்களுக்குப் புருஷகாரமான பிராட்டிக்கு வல்லபனே! கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலம் சுனை வேங்கடவா, Kal Then Paayndhu Ozhugum Kamalam Sunai Vengadavaa - மலை முழைஞ்சுகளின்றும் தேன் பெருகி வெள்ளமிடா நிற்பதும் தாமரைச் சுனைகளை யுடையதுமான திரு மலையிலே வாழ்பவனே! பற்று ஒன்றும் இலேன், Patru Ondrum Ileen - ஒருவிதமான ஆகாரமும் அற்றவனாய் பாவமே செய்து பாவி ஆனேன், Paavame Seidhu Paavi Aaneen - பாவங்களையே செய்து பாபிஷ்டனாய் மற்று ஒன்று அறியேன், Mattru Ondru Ariyeen - ஒரு உபாயமுமறியாதவனான அடியேன் அற்றேன், Atraen - உனக்கே அற்றுத் தீர்ந்தவனாய்க் கொண்டு |
| 1037 | பெரிய திருமொழி || (1-9—தாயே தந்தை)(திருவேங்கடம் 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (“கண்ணாவானென்றும் மண்ணோர் விண்ணோர்க்குத், தண்ணார் வேங்கடவிண்ணோர் வெற்பனே” என்றபடி) 10 | கண்ணா யேழ் உலகுக்கு உயிராய வெங்கார் வண்ணனை
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திரு மங்கையர் கோன் கலியன்
பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே –1-9-10 | பதவுரை Show / Hideஏழ் உலகுக்கு, Ezhu Ulagukku - எல்லா வுலகங்களுக்கும் கண் ஆய், Kan Aay - கண் போன்றவனும் உயிர் ஆய, Uyir Aay - உயிர் போன்றவனும் எம், Em - எமக்காக கார் வண்ணணை, Kaar Vannanaik - மேகம் போன்ற திரு நிறத்தையுடையவனும் விண்ணோர் தாம் பரவும்பொழில் வேங்கடம், Vinnor Thaam Paravumpozhil Vengadam - நித்ய ஸூரிகளும் வந்து துதிக்கப்பெற்ற, சோலை சூழ்ந்த திருமலையிலே வேதியதனை, Vediyathanai - வேத ப்ரதிபாத்யனாய் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமானைக் குறித்து திண் ஆர் மாடங்கள் சூழ் திரு மங்கையர்கோன் கலியன், Thin Ar Maadangal Soozh Thiru Mangaiyarkon Kalyan - திண்ணிய மாடங்கள் சூழ்ந்த திருமங்கையி லுள்ளார்க்குத் தலைவரான கலியன் (அருளிச் செய்த) பண் ஆர் பாடல் பத்தும், Pan Ar Paadal Paththum - பண்ணோடு கூடிய இப்பத்துப் பாசுரங்களையும் பயில்வார்க்கு, Payilvaarakku - ஓதுமவர்களுக்கு பாவங்கள் இல்லை, Paavangal Illai - பிரதிபந்தங்களெல்லாம் தொலைந்து போம். |