திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 213 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 1 | ஆற்றி லிருந்து விளையாடு வோங்களை
சேற்றா லெறிந்து வளை துகில் கைக் கொண்டு
காற்றின் கடியனாய் ஓடி அகம் புக்கு
மாற்றமும் தாரானால் இன்று முற்றும் வளைத்திறம் பேசானால் இன்று முற்றும்–2-10-1 | பதவுரை Show / Hideஆற்றில் இருந்து,Aatril Irundhu - யமுனை ஆற்றங்கரை மணலிலிருந்து கொண்டு விளையாடுவோங்களை,Vilaiyaaduvongalai - விளையாட நின்ற எங்கள் மேல் சேற்றால் எறிந்து,Saetral Erindhu - சேற்றை விட்டெறிந்து வளை,Valai - எங்களுடைய கை வளைகளையும் துகில்,Thugil - புடவைகளையும் கைக் கொண்டு,Kaik Kondu - (தன்) கையால் வாரி யெடுத்துக் கொண்டு காற்றில்,Kaatril - காற்றிலுங் காட்டில் கடியன் ஆய்,Kadian Aai - மிக்க வேகமுடையவனாய் ஓடி,Odi - (அங்கு நின்றும்) ஓடி வந்து அகம் புக்கு,Agam Pukku - (தன்)வீட்டினுள்ளே புகுந்து கொண்டு மாற்றமும்,Maatramum - (வாசலில் நின்று அவன் பேரைச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டு கதறுகின்ற எங்களைக் குறித்து) ஒரு வாய்ச் சொல்லும் தாரானாய்,Tharaanaai - அருளாமல் உபேக்ஷியா நின்ற பெருமானால் இன்று முற்றும்,Indru Mutrum - இப்போது முடியா நின்றோம்; வளைத் திறம்,Valai Thiram - (தான் முன்பு வாரிக் கொண்டு போன) வளையின் விஷயமாக பேசானால்,Paesaanal - (தருகிறேன், தருகிறிலேன் என்பவற்றில் ஒன்றையும்) வாய் விட்டுச் சொல்லாத அப் பெருமானால் இன்று முற்றும்.,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; |
| 214 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 2 | குண்டலம் தாழக் குழல் தாழ நாண் தாழ
எண் திசை யோரும் இறைஞ்சித் தொழுதேத்த
வண்டமர் பூங்குழ லார் துகில் கைக் கொண்டு
விண் தோய் மரத்தானால் இன்று முற்றும் வேண்டவும் தாரானால் இன்று முற்றும்–2-10-2 | பதவுரை Show / Hideகுண்டலம்,Kundalam - கர்ண பூஷணங்களானவை தாழ,Thaazha - (தோள் (அளவும்) தாழ்ந்து தொங்கவும் குழல்,Kuzhal - திருக் குழல்களானவை தாழ,Thaazha - (அத்தோடொக்கத்) தாழ்ந்தசையவும் நாண்,Naan - திருக்கழுத்திற் சாத்தின விடு நாணானது தாழ,Thaazha - (திருவுந்தி யளவும்) தாழந்தசையவும் எண் திசையோரும்,Enn Disaiyorum - எட்டு திக்கிலுமுள்ள (தேவர் முனிவர் முதலியோர்) எல்லாரும் இறைஞ்சி தொழுது,Erainji Thozhudhu - நன்றகா [ஸாஷ்டாங்கமாக] வணங்கி ஏத்த,Ethan - ஸ்தோத்ரம் பண்ணவும் வண்டு அமர் பூ குழலார்,Vandu Amar Poo Kuzhalar - (இப்படிப்பட்ட நிலைமையை யுடையனாய்) வண்டுகள் படிந்துகிடக்கப் பெற்ற பூக்களை அணிந்த கூந்தலையுடைய இடைச்சிக(ளான எங்க)ளுடைய துகில்,Thugil - (ஆற்றங்கரையில் களைந்து வைக்கப் பட்டிருந்த) புடவைகளை கைக் கொண்டு,Kaik Kondu - (தனது)கைகளால் வாரிக் கொண்டு விண் தோய் மரத்தானால்,Vin Thoi Maraththaanal - ஆகாசத்தை அளாவிய (குருந்த) மரத்தின் மேல் ஏறியிரா நின்றுள்ள கண்ணபிரானால் இன்று முற்றும்;,Indru Mutrum - இப்போது முடியா நின்றோம்; வேண்டவும்,Vendavum - (எங்கள் துகிலை தந்தருள் என்று நாங்கள்) வேண்டிக் கொண்ட போதிலும் தாரானால்,Tharanaal - (அவற்றைக்) தந்தருளாத கண்ணபிரானால் இன்று முற்றும்;,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; |
| 215 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 3 | தடம் படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து
படம் படு பைந்தலை மேலெழப் பாய்ந்திட்டு
உடம்பை யசைத்தானால் இன்று முற்றும் உச்சியில் நின்றானால் இன்று முற்றும்–2-10-3 | பதவுரை Show / Hideதடம் படு,Thadam Padu - இடமுடைத்தான [விசாலமான] தாமரைப் பொய்கை,Thamaraip Poigai - தாமரைப் பொய்கையை கலக்கி,Kalakki - உள்ளே குதித்து கலங்கச் செய்வது (அக் கலக்கத்தினால் சீற்றமுற்று) விடம் படு,Vidam Padu - விஷத்தை உமிழ்ந்து கொண்டு (பொய்கையில்) மேற்கிளம்பின நாகத்தை,Naagaththai - காளிய ஸர்ப்பத்தை வால் பற்றி ஈர்த்து,Vaal Patri Eerththu - வாலைப் பிடித்திழுத்து, (அதனால் பின்பு) படம்படு,Padam Padu - படமெடுக்கப்பெற்று பை,Pai - மெத்தென்றிருந்த தலை மேல்,Thalai Mel - (அந் நாகத்தின்) தலை மேல் எழப் பாய்ந்திட்டு,Ezha Paindhittu - கிளாக்குதித்து (அத் தலையின் மீது நின்று) உடம்பை,Udambai - (தன்) திரு மேனியை அசைத்ததனால்,Asaiththadhaal - அசைத்து கூத்தாடின கண்ணபிரானால் இன்று முற்றும்;,Indru Mutrum - இப்போது முடியா நின்றோம்; உச்சியில்,Uchiyil - (அந்த காளியன் இளைத்து விழுந்து தன்னை சரணம் புகுமளவும்) (அவனுடைய) படத்தின் மீது நின்றானாள்,Nindranal - நின்றருளின கண்ணபிரானால் இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; |
| 216 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 4 | தேனுகனாவி செகுத்து பனங்கனி
தானெறிந்திட்ட தடம் பெருந் தோளினால்
வானவர் கோன் விட வந்த மழை தடுத்து
ஆனிரை காத்தானால் இன்று முற்றும் அவை யுய்யக் கொண்டானால் இன்று முற்றும்–2-10-4 | பதவுரை Show / Hideதேனுகன்,Thenukan - தேநுகாஸுரனுடைய ஆவி,Aavi - உயிரை செகுத்து,Sekuththu - முடிக்க நினைத்த அத் தேனுகனை பனங்கனி,Panangani - (ஆஸிராலிஷ்டமான) பனை மரத்தின் பழங்கள் (உதிரும்படியாக) எறிந்திட்ட,Erindhitta - (அந்த மரத்தின் மேல்) வீசி யெறிந்த தடம் பெருந் தோளினால்,Thadam Perun Tholinal - மிகவும் பெரிய தோளாலே, (கோவர்த்தன பர்வதத்தை எடுத்து) வானவர் கோன் விட வந்த மழை தடுத்து,Vaanavar Kon Vida Vandha Mazhai Thaduththu - தேவேந்திரனது ஏவுதலாலே வந்த வர்ஷத்தைத் தவிர்த்து ஆனிரை,AaNirai - பசுக்களின் திரளை காத்தானால்,Kaaththaanal - ரக்ஷித்தருளின கண்ணபிரானால் இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; அவை,Avai - அப் பசுக் கூட்டத்தை இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; |
| 217 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 5 | ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பாலுண்டு
பேர்த்தவர் கண்டு பிடிக்கப் பிடி யுண்டு
வேய்த் தடந் தோளினார் வெண்ணெய் கொள் மாட்டாது அங்கு
ஆப்புண்டிருந்தானால் இன்று முற்றும் அடி யுண்டழுதானால் இன்று முற்றும்–2-10-5 | பதவுரை Show / Hideஆய்ச்சியர் சேரி,Aaychiyar Seri - இடைச் சேரியிலே அளை,Alai - (இடைச்சிகள் கடைவதாக) (மத்தை நாட்டி) உடைத்த தயிர்,Thayir - தயிரையும் பால்,Paal - (காய்ச்சுவதற்காக வைத்த) பாலையும் உண்டு,Undu - அமுது செய்து பேர்ந்து,Perndhu - (அவ் வளவோடு திருப்தி யடையாமல்) பின்னையும் (ஒரு கால் வெண்ணை திருடப் புகுந்த வளவிலே) அவர்,Avar - அவ் லிடைச்சிகள் கண்டு,Kandu - (ஒளிந்திருந்து) (இவன் திருடுகின்ற போதில்) கண்டு பிடிக்க,Pidikka - (இவனைத் தங்கள் கையில்)அகப் படுத்திக் கொள்ள பிடி யுண்ட,Pidi Unda - (அவர்கள் கையில்) பிடிபட்டு வெண்ணை,Vennai - (அதற்கு தப்ப மாட்டாமல்) வெண்ணெயை கொள்ள மாட்டாது,Kolla Maattaadhu - (தான் நினைத்தபடி) கைக் கொள்ள மாட்டாமல் அங்கு,Angu - அவர்கள் வீட்டில் ஆப்புண்டு இருந்தானால்,Aappundu Irundhaanal - கட்டுண்டிருந்த கண்ணபிரானால் இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; அடியுண்ட அமுதினால்,Adi Unda Amudhinal - (அவர்கள் கையால்) அடிபட்டு அழுத கண்ணபிரானால் இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; |
| 218 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 6 | தள்ளித் தளிர் நடை யிட்டு இளம் பிள்ளையாய்
உள்ளத்தினுள்ளே அவளை யுற நோக்கி
கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை யுயிர்
துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும் துவக்கற வுண்டானால் இன்று முற்றும்–2-10-6 | பதவுரை Show / Hideதள்ளி தளர்நடை இட்டு,Thalli Thalarnadai Ittu - (காலூன்றி நடக்கத் தரிப்பில்லாமையாலே) தட்டித் தடுமாறி தளர்நடை யிட்டு இளம் பிள்ளையாய்,Iam Pillaiyaai - (நடக்க வேண்டும்படியான) இளங்குழந்தையாய் கள்ளத்தினால்,Kallaththinal - (இருக்கச் செய்தே) (தன் வடிவை மறைத்து தாய் வடிவைக் கொண்டு) கிருத்திரிமத்தாலே வந்த,Vandha - (தன்னைக் கொல்ல) வந்த பேய்ச்சி அவளை,Peychi Avalai - பேய்ச்சியாகிய அந்தப் பூதனையை உள்ளத்தின் உள்ளே உற நோக்கி,Ullaththin Ullae Ura Nokki - (’நம்மை நலிய வருகிறவள் இவள்’ என்று) தன் மநஸ்ஸினுள்ளே (எண்ணி) உறைக்கப் பார்த்து முலை,Mulai - (பிறகு அவள் தனக்கு முலை உண்ணக் கொடுத்தவாறே) அம் முலையை உயிர் துள்ள சுவைத்ததனால்,Uyir Thulla Suvaiththadhaal - (அவளுடைய) உயிர் துடிக்கும்படி உறிஞ்சி உண்ட கண்ண பிரானால் இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; துவக்கு அற,Thuvakku Ara - (அம் முலையில் தடவிக் கிடந்த விஷத்தில் தனக்கு) ஸ்பர்சமில்லாதபடி உண்டானால்,Undaanaal - (அம் முலையிற் பாலை) உண்ட கண்ண பிரானால் இன்று முற்றும்,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; |
| 219 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 7 | மாவலி வேள்வியில் மாணுரு வாய்ச் சென்று
மூவடி தா வென்று இரந்த இம் மண்ணினை
ஓரடி யிட்டு இரண் டாமடி தன்னிலே
தாவடி யிட்டானால் இன்று முற்றும் தரணி யளந்தானால் இன்று முற்றும்–2-10-7 | பதவுரை Show / Hideமாவலி,Maavali - மஹாபலியினுடைய வேள்வியில்,Velviyil - யாக பூமியிலே மாண் உரு ஆய் சென்று,Maan Uru Aai Sendru - பிரமசாரி ரூபியாய் எழுந்தருளி மூ அடி தா என்று,Moo Adi Thaa Endru - (என் அடியாலே) மூன்றடி (நிலம்) கொடு என்று இரந்து,Erandhu - யாசித்துப் பெற்ற இம் மண்ணினை,Em Manninai - இந்தப்பூமியை ஓர் அடி இட்டு,Or Adi Ittu - (அளந்து தன் வசப்படுத்தத் தொடங்கின வளவிலே) (பூமிப் பரப்படங்கலும் தனக்குள்ளே யாம்படி) ஓரடியைப் பரப்ப வைத்து (அளந்து) இரண்டாம் அடி தன்னிலே,Erandam Adi Thannilae - இரண்டாவது அடியைக் கொண்டு அளக்கத் தொடங்கின வளவிலே தாலி அடி இட்டானால்,Thaali Adi Ittaanal - மேலுலகங்களடங்கலும் தனக்குள்ளே யாம்படி) தாவி அடி யிட்ட கண்ண பிரானால் இன்று முற்றும்,Indru Mutrum - இப்போது முடியா நின்றோம்; தரணி அளந்தானால்,Dharani Alandhaanal - (தேவேந்திரனாகிய ஒரு ஆச்ரிதனுக்காக இப்படி) லோகத்தை அளந்தவனாலே இன்று முற்றும்.,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; |
| 220 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 8 | தாழை தண்ணாம்பல் தடம் பெரும் பொய்கை வாய்
வாழும் முதலை வலைப்பட்டு வாதிப்புண்
வேழம் துயர் கெட விண்ணோர் பெருமானாய்
ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும் அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும்–2-10-8 | பதவுரை Show / Hideதாழை,Thaazhai - (கரையிலே) தாழைகளையும் தண் ஆம்பல்,Than Aambal - (உள்ளே) குளிர்ந்த ஆம்பல் மலர்களை யுமுடைய தடம் பெரும்,Thadam Perum - மிகவும் பெரிய பொய்கை வாய்,Poigai Vaai - தடாகத்தினுள்ளே வாழும்,Vaazhum - வாழ்ந்து கொண்டிருந்த முதலை,Mudhalai - முதலையின் வாயாகிய வலைப்பட்டு,Valaipattu - வலையிலே அகப்பட்டுக் கொண்டு வாதிப்பு உண்,Vaadippu Un - துன்பமடைந்த வேழம்,Vezham - ஸ்ரீகஜேந்திராழ்வானுடைய துயர்,Thuyar - வருத்தம் கெட,Keda - தீரும்படியாக விண்ணோர் பெருமான் ஆய்,Vinnor Perumaan Aai - நித்ய ஸூரிகளுக்குத் தலைவன் என்பதைத் தோற்றுவிக்கப் பெரிய திருவடியை வாகனமாக உடையவனாய் ஆழி,Aazhi - (அப்பொய்கைக் கரையிலே சென்று) சக்ராயுதத்தாலே பணி கொண்டானால்,Pani Kondaanal - (முதலையைத் துணிந்து , கஜேந்திராழ்வரனுடைய) கைங்கர்யத்தை ஸ்வீக்ரித்தருளின கண்ண பிரானால் இன்று முற்றும்;,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; அதற்கு,Adharku - அந்த யானையின் திறத்தில் அருள் செய்தானால்,Arul Seidhaan - (இப்படிப்பட்ட) கிருபையைச் செய்தருளின கண்ண பிரானால் இன்று முற்றும்;,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; |
| 221 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 9 | வானத் தெழுந்த மழை முகில் போல் எங்கும்
கானத்து மேய்ந்து களித்து விளையாடி
ஏனத் துருவாய் இடந்தஇம் மண்ணினை
தானத்தே வைத்தானால் இன்று முற்றும் தரணி யிடந்தானால் இன்று முற்றும்–2-10-9 | பதவுரை Show / Hideவானத்து,Vaanaththu - (கடலில் நீரை முகந்து கொண்டு) ஆகாசத்திலே எழுந்து,Ezhandhu - கிளம்பின மழை முகில் போல்,Mazhai Mugil Pol - வர்ஷிக்கப் புக்க மேகம் போல ஏனத்து உரு ஆய்,Eenaththu Uru Aai - (கறுத்த நிறத்தை யுடைய) ஒரு வராஹத்தின் ரூபமாய் (அவதரித்து) கானத்து,Kaanaththu - காடு நிலங்களில் எங்கும்,Engum - எல்லாவிடத்திலும் (திரிந்து) மேய்ந்து,Meindhu - (கோரைக் கிழங்கு முதலியவற்றை) அமுது செய்து களித்து,Kaliththu - செருக்கடைந்து விளையாடி,Vilaiyaadi - விளையாடி, இடந்த,Edandha - (பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போன ஹிரண்யாக்ஷனைக் கொன்று) (அண்ட பித்தியில் நின்றும்) ஒட்டு விடுவித் தெடுத்த இம் மண்ணினை,Em Manninai - இந்தப் பூமியை தானத்தே,Thaanaththae - யதாஸ்தாநத்தில் வைத்தானால்,Vaiththaanal - (கொணர்ந்து) வைத்து நிலை நிறுத்தின கண்ண பிரானால் இன்று முற்றும்;,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; தரணி,Dharani - (இப்படி கடலில் மூழ்கிப் போன) பூமியை இடந்தானால்,Edandhaan - கோட்டாற் குத்தி எடுத்துக் கொணர்ந்த கண்ண பிரானால் இன்று முற்றும்;,Endru Mutrum - இப்போது முடியா நின்றோம்; |
| 222 | பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம்பத்து-பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து) (ஆயர்மங்கையர் யசோதைபக்கல் கண்ணன்தீம்புகளைக் கூறி முறையிடுதல்) (கலித்தாழிசை) 10 | அங்கமலக் கண்ணன் தன்னை யசோதைக்கு
மங்கை நல் லார்கள் தாம் வந்து முறைப்பட்ட
அங்கவர் சொல்லைப் புதுவைக் கோன் பட்டன் சொல்
இங்கிவை வல்லவர்க்கு ஏதமொன் றில்லையே–2-10-10 | பதவுரை Show / Hideநல் மங்கைமார்கள் தாம்,Nal Mangaimargal Thaam - (பகவத் ப்ரேமமாகிற) நன்மை பொருந்திய (இடைப்) பெண்கள் அம் கமலம்,Am Kamalam - அழகிய செந்தாமரைப் பூப்போன்ற கண்ணன் தன்னை,Kannan Thannai - கண்களை யுடைய கண்ணபிரான் (செய்த தீம்பு) விஷயமாக அங்கு வந்து,Angu Vandhu - அந்தக் கண்ண பிரானுடைய வீட்டுக்கு வந்து அசோதைக்கு,Asothaiyukku - (அவன் தாயான) யசோதைப் பிராட்டி யிடத்திலே முற்பட்ட,Murppatta - (தங்கள் ஆர்த்திதோற்றக்) கதறிச் சொன்ன அவர் சொல்லை,Avar Sollai - அவ் விடைச்சிகளின் சொல்லை, புதுவை,Puthuavai - ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கோன்,Kon - நிர்வாஹகரான பட்டன்,Pattam - பெரியாழ்வார் சொல்,Sol - அருளிச் செய்த இவை,Evai - இப் பாசுரங்களை இங்கு,Engu - இந்த ஸம்ஸாரத்தில் (இருந்து கொண்டே) வல்லவர்க்கு,Vallavarkku - ஓத வல்லவர்களுக்கு ஒன்று ஏதம்,Onru Aedham - ஒரு வகைக் குற்றமும் இல்லை,ellai - இல்லையாம். |