திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3-2 ஊன் வாட (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1158பெரிய திருமொழி || (3-2–ஊன் வாட) (தில்லைத் திருச்சித்ரகூடம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மாம்சமானது குறைய அசன வசநாதிகளைக் குறைத்து பிராணன்களைப் போகாதபடி அப்பஷண வாயு பஷணங்களாலே கால் கட்டி சரீரத்தை விட்டுப் போகாத இந்திரியங்கள் ஐந்தும் ஸ்வ ஸ்வ விஷயங்களைப் பெறாமையாலே நொந்து ஈடுபடும் படி தாங்கள் மேன்மேலும் கிலேசிக்கும்படி தபஸு பண்ண வேண்டா-தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே) 1
ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகாள கிற்பீர் கானாட மஞ்சைக் கண மாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடை போய் தேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே –3-2-1
பதவுரை Show / Hide
இமையோர் உலகு தமதுஆ ஆள கிற்பீர், Imaiyor Ulagu Thamathu Aala Kirbeer - பரமபதத்தை ஸ்வாதீநமாக ஆளவேண்டி யிருக்குமவர்களே!, (- (பின்னை என்ன செய்யவேண்டுமென்னில்;))
ஊன் வாட உண்ணாது, Oon Vaada Unnaadhu - மாம்ஸம் வற்றி யுலரும்படி உபவாஸங்களிலிருந்து
உயிர்காவலிட்டு, Uyirkavalittu - பிராணன் மாத்திரம் போகாதபடியாக (நீரையும் காற்றையும் உட்கொண்டு பிராணனைக்) காப்பாற்றி
உடலில் பிரியா புலன் ஐந்தும் நொந்து, Udalil Priya Pulam Aindhum Nondhu - சரீரத்தை விட்டுப் போகாத பஞ்சேந்திரியங்களும் நோவ
தாம் வாடவாட, Thaam Vaadavaada - தாங்கள் மேன்மேலும் வாட்டமடையும்படி
தவம் செய்ய வேண்டா, Thavam Seyya Venda - தபஸ்ஸூ பண்ணவேண்டா
கான் ஆட மஞ்ஞை கணம் ஆட, Kaan Aada Manjai Kanam Aada - சோலைகள் அசையும்படியாக
மஞ்சை கணம் ஆட, Manjai Kanam Aada - மயில்களின் கூட்டங்கள் ஆடவும்
மாடே, Maade - பக்கத்திலே
தேன், Then - வண்டுகளானவை
கயல் ஆடுநீர்கால் பழனம் படைபோய் ஆட, Kayal Aaduneerkal Pazhanam Padaipoy Aada - ஜலஸம்ருத்தியையுடைய வாய்க்கால்களை யுடைத்தான நீர்நிலங்களினருகே போய் (மதுவில்நசையாலே) மேலே பறக்கவும்
மாடம் கொடி ஆடு, Maadam Kodi Aadu - மாடங்களிலுள்ள கொடிகள் அசையாநிற்கவும் பெற்ற
தில்லை திருசித்ர கூடம், Thillai Thiruchithra Koodam - தில்லைத் திருச்சித்திரகூடமென்னுந் திருப்பதியை
சென்று சேர்மின்கள், Sendru Serminkal - சென்று சேருங்கள்.
1159பெரிய திருமொழி || (3-2–ஊன் வாட) (தில்லைத் திருச்சித்ரகூடம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெடும் காலம் பஞ்சாக்னி மத்யஸ்தராய் நின்று தபஸு பண்ண வேண்டா ஸ்ரீயபதியை ஹிருதயத்தில் பிரியாதபடி வைத்துக் கொள்வோம் என்பீர் வாயாலே ஓதுகிற வேதம் குறைவறுகையாலே வந்த ஸ்வ பாவிக சம்பத்தை உடைய பிராமணர் என்றும் ஒக்க முறையாலே அனுஷ்டித்த அக்னி வளர வளர புகழ் ஓங்கா நின்று உள்ள ஸ்ரீ தில்லை) 2
காயோடு நீடு கனி யுண்டு வீசு கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர் வாயோது வேதம் மலிகின்ற தொல் சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த தீயோங்க வோங்கப் புகழ் ஓங்கு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே –3-2-2
பதவுரை Show / Hide
திரு மார்பினை சிந்தையுள் வைத்தும் என்பீர், Thiru Maarbinai Sindhaiyul Vaiththum Enbeer - பிராட்டியைத் திருமார்பிற் கொண்ட பெருமானை நெஞ்சில் தரிப்போமென்றிருக்கிற பக்தர்களே!, (- (பிள்ளை என்ன செய்யவேண்டுமென்னில்) (தில்லை திருசித்ரகூடம் சென்று சேர்மின்கள்-.))
காயோடு நீடு கனி உண்டு வீசு கடுங் கால் நுகரிந்து, Kaayodu Needu Kani Undu Veesu Kadung Kaal Nukarinthu - இளங்காய்களையும் நெடுநாளுலர்ந்த பழங்களையும் புஜித்தும் வீசுகிற உஷ்ணமான காற்றை உட்கொண்டும்
நெடுங்காலம் ஐந்து தீயூடு நின்று, Nedungkaalam Aindhu Theeyoodu Nindru - நெடுநாள் வரையில் பஞ்சாக்நி மத்தியில் நின்றுகொண்டு
தவம் செய்ய வேண்டா, Thavam Seyya Venda - தபஸ்ஸூ பண்ணவேண்டர்
வாய் ஓது வேதம் மலிகின்ற, Vaai Othu Vedham Malikindra - வாயாலே ஓதப்பட்டு வருகிற வேதங்கள் குறைவற்றிருக்கிற
தொல்சீர்மறையாளர் நாளும் முறையால் வளர்த்த, Tholseermaraiyalar Naalum Muraiyala Valarttha - இயற்கையான நற்குணங்களமைந்த  வைதிகரிகள் நாள்தோறும் கிரமமாக அநுஷ்டித்த
தீ ஓங்க ஓங்க புகழ் ஓங்கு, Thee Onga Onga Pugazh Ongu - அந்நிகார்யங்கள் வளர வளர, (அதனாலே) கீர்த்தி வளரப் பெற்ற
1160பெரிய திருமொழி || (3-2–ஊன் வாட) (தில்லைத் திருச்சித்ரகூடம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பொழில் சூழ்ந்த பூமியை எடுத்தவனுடைய திருவடித் தாமரையை அணைய வேணும் என்னும் விருப்பத்தோடு வர்த்திப்பீர் – ரத்னங்களைக் கொண்டு பரிகரத்தோடும் பல்லவர் கோன் பணிவதும் செய்து செம் பொன்னாலும் மணியாலும் செய்த மாடங்கள் சூழா நின்றுள்ள ஸ்ரீ தில்லை) 3
வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்றாய் விரி நீர் முது வெள்ளம் உள் புக்கு அழுந்த வம்புண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர் பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து படை மன்னவன் பல்லவர் கோன் பணிந்த செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே –3-2-3
பதவுரை Show / Hide
வம்பு உண் பொழில் சூழ் உலகு, Vambu Un Pozhil Soozh Ulagu - வாஸனை வீசுகின்ற சோலைகளால் சூழப்பட்ட பூமியானது (- (தில்லை…சேர்மின்கள்-.))
விரி முதுநீர்வெள்ளம் உள் புக்கு அழுந்த, Viri Muthuneervellam Ul Pukku Azhundha - பரந்த கடல் வெள்ளத்தினுள்ளே புகுந்து மூழ்கிப் போக
அன்று, Anru - அக்காலத்து,
வெம்பும் சினம் புனம் கேழல் ஒன்று ஆய் எடுத்தான், Vembum Sinam Punam Kezhal Onru Aayi Eduththan - மிக்க கோபத்தை யுடைத்தாய் விலக்ஷணமான காட்டு வராகத் திருவுருவாகி (அப்பூமியை அங்கு நின்றும்) உத்தரிப்பித்துக் கொணர்ந்த பெருமானுடைய
அடி போது அணைவான் விருப்போடு இருப்பீர், Adi Podhu Anaivan Viruppodu Iruppir - பாதாரவிந்தத்தை சாரவேணுமென்னும் ஆசை கொண்டிருக்கும் அன்பர்களே!,
மன்னவன் பல்லவர்கோன், Mannavan Pallavarkon - பல்லவ ராஜன்
பை பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து, Pai Ponnum Muththum Maniyum Konarndhu - அழகிய பொற்பூக்களையும் முத்துக்களையும் மாணிக்கங்களையும் கொண்டு வந்து (ஸமர்ப்பித்து)
படை பணிந்த, Patai Panintha - தனது பரிவாரங்களோடுகூட ஆச்ரயிக்கப்பெற்றதும்
செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த, Sembon Mani Matangal Sulndha - அழகிய பொன்னாலும் ரத்னங்களாலும் செய்யப்பட்ட மாடங்களால் சூழப்பட்டதுமான
1161பெரிய திருமொழி || (3-2–ஊன் வாட) (தில்லைத் திருச்சித்ரகூடம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திரு அநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே கறுத்துப் பெருத்த கடலிலே உகந்து கண் வளர்ந்து அருளின ஸ்ரீயபதி ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடே கூட விடாதே சஞ்சரிக்கிற ஸ்ரீ தில்லை) 4
அருமா நிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த பெருமான் திரு நாமம் பிதற்றி நுந்தம் பிறவித் துயர் நீங்குதும் என்ன கிற்பீர் கருமா கடலுள் கிடந்தான் உவந்து கவை நா அரவின் அணைப் பள்ளியின் மேல் திருமால் திரு மங்கையோடாடு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே –3-2-4
பதவுரை Show / Hide
அன்று அரு மா நிலம் அளப்பான் குறள் ஆய், Anru Aru Ma Nilam Alappan Kural Aayi - முன் பொரு காலத்தில், ஒருவராலும் அளக்கமுடியாத பெரிய பூமியை அளப்பதற்காக வாமந ரூபியாகி (- (தில்லை…சேர்மின்கள்-.))
அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த பெருமான் திரு நாமம் பிதற்றி, Avunan Peru Velviyan Senru Irandha Peruman Thiru Namam Pithattri - மாவலியென்னு மசுரனுடைய பெரிய யாகபூமியிற் சென்று (மூவடிமண்) யாசித்த பெருமானுடைய திருநாமங்களை வாயராச் சொல்லி
நும்தம் பிறவி துயர்நீங்குதும் என்ன கிற்பீர், Numtham Piravi Thuyarningudum Enna Kirpir - உங்களுடைய ஸம்ஸார துக்கங்களைப் போக்கிக் கொள்ள நினைத்திருக்குமன்பர்களே!,
கரு மா கடலுள், Karuma Katalul - கறுத்துப் பெரிய கடலிலே
கவை நா அரவின் அணை பள்ளியின்மேல், Kavai Na Aravin Anai Palliyinmel - இரட்டை நாவையுடைய திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளி மெத்தையின் மேல்
உவந்து கிடந்தான் திருமால், Uvandhu Kitandhan Thirumal - மகிழ்ந்து சயனித்தருள்பவனான திருமால்
திரு மங்கையொடு ஆடு, Thiru Mankaiyodu Adu - பிராட்டியோடு நித்பவாஸம் பண்ணப்பெற்ற
1162பெரிய திருமொழி || (3-2–ஊன் வாட) (தில்லைத் திருச்சித்ரகூடம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் நித்யவாசம் பண்ணி புகழ் மங்கை எங்கும் உஜ்ஜ்வலமாய் வர்த்திப்பதும் செய்து புகழையும் காப்பையும் உடைய பொழில் சூழ்ந்த ஸ்ரீ தில்லை) 5
கோ மங்க வங்கக் கடல் வையம் உய்யக் குல மன்னரங்கம் மழுவில் துணிய தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித் தவ மா முனியைத் தமக்காக கிற்பீர் பூ மங்கை தங்கிப் புல மங்கை மன்னிப் புகழ் மங்கை எங்கும் திகழ புகழ் சேர் சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே –3-2-5
பதவுரை Show / Hide
கோ மங்க, Ko Manga - க்ஷத்ரியர்கள் அழியவும் (- (தில்லை…சேர்மின்கள்-.))
வங்கம் கடல் வையம் உய்ய, Vankam Katal Vaiyam Uyya - மரக்கலங்கள் நிறைந்த கடலால் சூழப்பட்ட பூமியிலுள்ளார் உஜ்ஜூவிக்கவும்
குலமன்னர் அங்கம் மழுவில் துணிய, Kulamannar Angam Maluvil Thuniya - ராஜாக்களுடைய சரீரம்  மழுவாலே துணிபடவும்
தாம், Tham - தாமே
அங்கு அமருள், Anku Amarul - அப்போதுண்டான போர்க்களத்திலே (புகுந்து)
படை தொட்ட, Padai Thotta - ஆயுதத் தொழில் புரிந்த
வென்றி தவம் மா முனியை, Vendri Thavam Maa Muniyai - ஜயசீலனாய்த தபஸ்வியான பரசுராமனாக அவதாரம் பண்ணின பெருமானை
தமக்கு ஆக்க கிற்பீர், Thamakku Aakka Kirbeer - ஸ்வாதீனப்படுத்திக்கொள்ள நினைக்கு மன்பர்களே!,
பூ மங்கை தங்கி புலம் மங்கை மன்னி, Poo Mangai Thangi Pulam Mangai Manni - பெரிய பிராட்டியர்(வலவருகே) தங்கியும் பூமிப் பிராட்டியர் (இடவருகே) பொருந்தியும்
புகழ் மங்கை எங்கும் திகழ, Pugazh Mangai Engum Thigazha - கீர்த்தியாகிற மங்கை எல்லாவிடங்களிலும் வியாபித்து விளங்கவும் பெற்று
புகழ் சேர் சேமம் கொள், Pugazh Ser Semam Kol - புகழோடு கூடிய க்ஷேமத்தையுடைத்தாய்
பை பூ பொழில் சூழ்ந்த, Pai Poo Pozhil Soozhntha - பரந்து பூத்த சோலைகளால் சூழப்பட்ட
1163பெரிய திருமொழி || (3-2–ஊன் வாட) (தில்லைத் திருச்சித்ரகூடம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிராமணர் உடைய ஹிருதயத்துக்கு ஏற்ற – சிவந்த வாயை உடைத்தான கிளியானது நல்ல ஸ்வரத்தோடே நாலு வேதத்தையும் பாடா நின்றுள்ள ஸ்ரீ தில்லை) 6
நெய் வாயழ்லம்பு துரந்து முந்நீர் துணியப் பணி கொண்டு அணி யார்ந்து இலங்கு மையார் மணி வண்ணன் எண்ணி நுந்தம் மனத்தே இருத்தும்படி வாழ வல்லீர் அவ்வாய் இள மங்கையர் பேசவும் தான் அருமா மறை யந்தணர் சிந்தை புக செவ்வாய்க் கிளி நான் மறை பாடு தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே –3-2-6
பதவுரை Show / Hide
நெய் வாய் அழல் அம்பு துரந்து, Ney Vaai Azhala Amba Thurandhu - கூர்மை பொருந்திய வாயையுடைத்தாய் அக்நியைச் சொரிகின்ற அம்பை பிரயோகித்து (- (தில்லை சேர்மின்கள்-.))
முந்நீர்துணிய, Munnirthuniy - ஸமுத்ரத்தை த்வம்ஸம் செய்ய முயன்று (பின்பு ஸமுத்ரராஜன் அநுகூலித்து வந்தவாறே)
பணி கொண்டு, Pani Kondo - (அவன் மேலே அணை கட்டுகையாகிற) கைங்கரியத்தை அவனால் கொண்டவனாயும்
அணி ஆர்ந்து இலங்கு மை ஆர்மணிவண்ணனை எண்ணி, Ani Aarnthu Ilangu Mai Aarmani Vannanaik Enni - ஆபரணங்கள் நிறைந்து விளங்குகின்ற கருமணி போன்ற வடிவுடைய னாயு மிருக்கிற பெருமானை சிந்தித்து
நும் தம் மனத்தே இருத்தும்படி வாழ வல்லீர், Num Tham Manaththae Iruththumpadi Vaazha Valliir - உங்களுடைய  நெஞ்சிலே (அவனை) இருத்தி வாழ நினைத்திருக்கு மன்பர்களே!,
அவ்வாய் இள மங்கையர், Avvai Ila Mangaiyar - அப்படிப்பட்ட வாயையுடைய சிறு பெண்கள்
அரு மா மறை பேசவும், Aru Maa Marai Pesavum - (காதால் கேட்டுக்கேட்டு முகபாடமான) அரிய பெரிய வேதவாக்கியங்களை சொல்லாநிற்க (அப்பெண்களுடனே கூட)
செம் வாய்கிளி அந்தணர் சிந்தை புக நால் மறைபாடு, Sem Vaaykili Andhanar Sindhai Puga Naal Maraipadu - சிவந்த வாயையுடைய கிளிகளானவை பிராஹ்மணர்கட்கும் மநோஹரமாக நான்கு வேதங்களையும் பாடுமிடமான
1164பெரிய திருமொழி || (3-2–ஊன் வாட) (தில்லைத் திருச்சித்ரகூடம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (முல்லை -உடன் கூடின திருக் குழலை உடைய ஸ்ரீ நப்பின்னை பிராட்டி யினுடைய மிருதுவான திருத் தோளிலே கலந்து அங்குண்டான மச்த்யங்கள் சுழலும்படி சுழன்று வருகிற கடல் பெற்ற ஸ்ரீ பெரிய பிராட்டி தங்கும் திரு மார்பை உடையவனை ஹிருதயத்தில் வைத்துக் கொள்ளும் என்பீர்-ஸ்ரீ தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே) 7
மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர் கௌவைக் களிற்றின் மருப்பும் பொறுப்பில் கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள் தெய்வப் புனல் சூழ்ந்து அழகாய தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே –3-2-7
பதவுரை Show / Hide
மௌவல் குழல் ஆய்ச்சி மெல் தோள் நயந்து, Mauval Kuzhal Aaychchi Mel Thol Nayandhu - முல்லைப்பூவைக் கூர்தலிலே அணிந்துள்ள நப்பின்னைப் பிராட்டியினுடைய மெல்லிய தோள்களை விரும்பி யணைந்தவனும், (- (தில்லை சேர்மின்கள்-.))
மகரம் சுழல சுழல் நீர்பயந்த தெய்வம் திரு மா மலர்மங்கை தங்கு திரு மார்பினை, Makarum Suzhal Suzhal Neerpayandha Deivam Thiru Maa Malarmangai Thangu Thiru Maarbinai - மீன்கள் சுழலும்படி சுழன்று வருகிற கடலினால் பிரஸவிக்கப்பட்ட அழகிய பெரிய பிராட்டியர்நித்யவாஸம் பண்ணப்பெற்ற திருமார்பை யுடையவனுமான பெருமானை
சிந்தையுள் வைத்தும் என்பீர், Sindhaiyul Vaiththum Enbeer - நெஞ்சில் வைக்க வேண்டியிருக்குமன்பர்களே!,
கௌவை களிற்றின் மருப்பும், Kauvai Kalittrin Maruppum - (சிங்கத்தோடே பிணங்கிப் பிளிறுகிற யானையின் கொம்புகளையும்
நெருப்பில் கமழ் சந்தும, Neruppil Kamazh Chandhum - மலையிலுள்ள மணங்கமழ்கின்ற சந்தன மரங்களையும்
உந்தி, Undhi - தள்ளிக்கொண்டு
நிவா வலங்கொள் தெய்வம் புனல் சூழ்ந்து அழகயாய, Nivaa Valangol Deivam Punal Soozhndhu Azhagayaya - ‘நிவா’ என்கிற ஆறானது சுற்றிலும் பிரவஹிக்கப் பெற்றதும் புண்ய தீர்த்தங்களால் சூழப்பட்டு  அழகியதுமான
1165பெரிய திருமொழி || (3-2–ஊன் வாட) (தில்லைத் திருச்சித்ரகூடம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பெருத்துப் பழையதான ஸ்ரீ கோவர்த்தனத்தை எடுத்து ஆயர் தலைவனாய் பசு மேய்த்து லோகத்தை திரு வயிற்றில் வைத்த ஆச்சர்ய பூதனுடைய ஆபரண ஒலியை உடைத்தாய் போக்யதை மிக்க திருவடிகளை கூட வேணும் என்னும் குறிப்பு உடையீர் சாஸ்த்ரங்களில் சொல்லுகிறபடியே ஆஸ்ரயிக்க அவர்களுக்கு ஆஸ்ரயணீயனாய் தேஜசை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரன்) 8
மா வாயின் அங்கம் மதியாது கீறி மழை மா முதுகுன்று எடுத்து ஆயர் தங்கள் கோவாய் நிரை மேய்த்து உலகுண்ட மாயன் குரை மா கழல் கூடும் குறிப்புடையீர் மூவாயிரம் நான்மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்காய சோதி தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே –3-2-8
பதவுரை Show / Hide
மா வாயின் அங்கம் மதியாது கீறி, Maa Vaayin Angam Mathiyaadhu Keerii - கேசியென்னும் குதிரை வடிவாக வந்த அரசனுடைய வாயோடுகூட (அதன்) உடலையும் அலக்ஷியமாகப் பிளந்தொழித்தவனாயும், (- (தில்லை சேர்மின்கள்-.))
மழை மா முது குன்று எடுத்து, Mazhai Maa Muthu Kuntru Eduthu - (இந்திரன் பெய்வித்த) பெரு மழைக்காக பெரிய பழைய கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்துப் பிடித்தவனாயும்
ஆயர்தங்கள் கோ ஆய் நிரை மேய்த்து, Aayarthangal Ko Aay Nirai Meyththu - இடையர்கட்குத் தலைவனாய் பசுக்களை மேய்த்தவனாயும்
உலகு உண்ட, Ulaku Unda - (பிரளய காலத்தில்) உலகங்களை உண்டவனாயுமிருக்கிற
மாயன், Maayan - எம்பெருமானுடைய
குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர், Kurai Maa Kazhal Koodum Kurippu Udaiyeer - ஆபரவொலி பொருந்திய சிறந்த திருவடிகளை சேர வேணுமென்னும் நினைவுடைய அன்பர்களே!,
மூவாயிரம் நான்மறையாளர், Moovaayiram Naanmaraiyalar - மூவாயிரம் பிராமணர்கள்
நாளும் முறையால் வணங்க, Naalum Muraiyhaal Vananga - நாள்தோறும் முறைமைப்படி வந்து பணியப்பெற்று
அணங்கு ஆய சோதி, Anangu Aaya Sothi - அப்ராக்ருதமான தேஜஸ்ஸையுடையனான
தேவாதி தேவன், Devaadhi Devan - ஸர்வேசுரன்
திகழ்கின்ற, Thigazhkindra - விளங்குகின்ற
1166பெரிய திருமொழி || (3-2–ஊன் வாட) (தில்லைத் திருச்சித்ரகூடம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ப்ரஹ்மாதிகளுக்கும் கிட்ட அரிய ஸ்ரீ பரம பதத்தில் இருக்க வேண்டி இருப்பீர் மிக்க நீரை உடைய நிவா என்கிற ஆறு முத்தை கொடு வந்து வித்துகிற வயலிலே விக்ருதமான கயல்கள் பாய்ந்து தாவித் திரிய தர்சநீயமான நீலம் நின்று திகழா நின்றுள்ள ஸ்ரீ தில்லை) 9
செரு நீல வேல் கண் மடவார் திறத்துச் சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும் அரு நீல பாவம் அகலப் புகழ் சேர் அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர் பெரு நீர் நிவா வுந்தி முத்தம் கொணர்ந்து எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள திரு நீலம் நின்று திகழ்கின்ற தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே –3-2-9
பதவுரை Show / Hide
செரு நீலம் வேல் கண் மடவார்திறத்து சினத்தோடு நின்று, Seru Neelam Veel Kan Madavaarthirathu Sinaththodu Nindru - யுத்தத்திற்குக் கருவியாய் நீல நிறத்தான வேல் போன்ற கண்களையுடைய ஸ்த்ரிகள் விஷயமாக வுண்டான கோபத்தோடு கூடியிருந்து (- (தில்லை சேர்மின்கள்-.))
மனத்தால் வளர்க்கும் அரு நீலம் பாவம் அகல, Manaththaal Valarkkum Aru Neelam Paavam Akala - நெஞ்சினாலே மேன்மேலும் வருத்தி செய்விக்கப்படுகிற போக்கமுடியாத நெஞ்சையிருள்மூடப் பண்ணுகிற பாவங்கள் நீங்கப்பெற்று
புகழ்சேர் அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர், Pugazhseer Amararukkum Eydhaadha Andaththu Iruppeer - புகழையுடைய பிரமன் முதலிய தேவர்கட்கும் துர்லபமான பரமபதத்திலே இருக்க வேண்டியிருக்கு மன்பர்களே?,
பெரு நீர்நிவா முத்தம் கொணர்ந்து உந்தி வித்தும் வயலுள் எங்கும், Peru Neernivaa Muththam Konarndhu Undhi Viththum Vayalul Engum - மிக்க நீரையுடைய ‘நிவா’ என்னும் ஆறானது முத்துக்களைக் கொண்டுவந்து தள்ளி விதைவிதைத்தாற்போலே சொருகப்பெற்ற வயல்களிலெல்லாம்
கயல் பாய்ந்து உகள, Kayal Paayndhu Ugal - மீன்கள் குதித்துத் துள்ளவும்
திரு நீலம் நின்று திகழ்கின்ற, Thiru Neelam Nindru Thigazhkindra - அழகிய நெய்தல்மலர்கள் எப்போதும் விளங்கவும் பெற்ற
1167பெரிய திருமொழி || (3-2–ஊன் வாட) (தில்லைத் திருச்சித்ரகூடம் 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரம உதாரரான ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் குறையாத ஓசை உடைத்தாக அருளிச் செய்த ஸ்ரீ திரு மொழி பத்தும் வல்லார் ப்ருதீவி பிரசுரமான லோகத்தை அளந்த திருவடிகளில் கீழே காலம் எல்லாம் வர்த்திக்கும்படி வாழ்வர்) 10
சீரார் பொழில் சூழ்ந்து அழகாய தில்லைத் திருச் சித்ரகூடத்துறை செங்கண் மாலுக்கு ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப அலை நீர் உலகுக்கு அருளே புரியும் காரார் புயல் கைக் கலிகன்றி குன்றா வொலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார் பாரார் உலகம் அளந்தான் அடிக் கீழ்ப் பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே –3-2-10
பதவுரை Show / Hide
சீர்ஆர்பொழில் சூழ்ந்து அழகாய தில்லை திரு சித்ர கூடத்து, Seeraarpozhil Soozhndhu Azhagaya Thillai Thiru Chithra Koodaththu - சிறந்த சோலைகளால் சூழப்பட்டு அழகுபெற்ற தில்லைத் திருச்சித்திர கூடத்திலே
உறை செங்கண் மாலுக்கு, Urai Chengkan Malukku - நித்யவாஸம் பண்ணுகிற புண்டரி காக்ஷனான பெருமான் விஷயமாக,
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப, Aaradha Ullaththavar Kaettu Uvappa - எவ்வளவு பகவதநுபவம் பண்ணினாலும் திருப்தி பிறவாத நெஞ்சை யுடையரான அன்பர்கள் கேட்டு ஆநந்திக்கும்படி,
அலைநீர்உலகுக்கு அருளே புரியும், Alainirulakukku Arule Puriyum - கடல் சூழ்ந்த இவ்வுலகத்திலுள்ளார்க்கு அருள் செய்யுமவராய்
கார்ஆர்புயல் கை கலிகன்றி, Kaararpuval Kai Kalikanri - காளமேகம்போல் உதாரரான திருமங்கையாழ்வார் (அருளிச்செய்த)
குன்றா ஒலி மாலை ஓர்ஒன்பதோடு ஒன்றும் வல்லார்தாம், Kundraa Oli Maalai Ooronpathodu Ondrum Vallartham - குறையாத ஓசையை யுடைத்தான சொல்மாலையாகிய் இப்பத்துப் பாசுரங்களையும் ஓதவல்லவர்கள்,
பார்ஆர்உலகம் அளந்தான் அடி கீழ், Paararulakham Alandhaan Adi Keezh - பூமியையும் ஸ்வர்க்காதிலோகங்களையும் அளந்தவனான பெருமானுடைய திருவடிவாரத்திலே
பல காலம் நிற்கும்படி வாழ்வர், Pala Kaalam Nirkkumpadi Vaalvar - நெடுங்காலம் அடிமைசெய்து நிற்கும்படி வாழப் பெறுவர்.