| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 433 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் பத்து (முதல் திருமொழி - வாக்குத்தூய்மை) (நைச்சியானுஸந்தானம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 1 | வாக்குத் தூய்மை யிலாமையினாலே மாதவா உன்னை வாய்க் கொள்ள மாட்டேன் நாக்கு நின்னை யல்லால் அறியாது நான தஞ்சுவன் என் வச மன்று மூர்க்குப் பேசுகின்றானிவ னென்று முனிவாயேலும் என் நாவினுக்கு ஆற்றேன் காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரணா கருளக் கொடியானே–5-1-1 | மாதவா,Maadhavaa - ச்ரிய: பதியானவனே! நாரணா,Naaranaa - (உலகங்கட்கெல்லாம்) ஆதி காரணமானவனே! கருளன்,Karulan - பெரிய திருவடியை கொடியானே,Kodiyaanae - த்வஜமாக வுடையவனே! வாக்கு,Vaakku - (என்னுடைய) வாய் மொழிக்கு தூய்மை இலாமையினாலே,Thooymai Ilaamaiyinaalae - பரி சுத்தி இல்லாமையால் உன்னை,Unnai - (ஹேய ப்ரதிபடனான) உன்னை வாய் கொள்ள மாட்டேன்,Vaai Kollamaattaen - வாய் கொண்டு துதிக்க யோக்யதை அறற்வனா யிரா நின்றேன் நாக்கு,Naakku - (வெறுமனே கிடப்போமென்று பார்த்தாலும்) (ரஸமறிந்த எனது) நாக்கானது நின்னை அல்லால்,Ninnai Allael - உன்னை யொழிய மற்றொருவரை அறியாது,Ariyaadhu - (வாய்க் கொள்ள) அறியாது; அது,Adhu - அசுத்தமான நாக்கு இங்ஙனே உன் பக்கம் ஈடுபடா நின்றதைக் குறித்து நான் அஞ்சுவன்,Naan Anjuvan - நான் அஞ்சுகின்றேன்; என் வசம் அன்று,En Vacham Andru - (அது) (அந்த நாக்கானது)எனக்கு வசப்பட்டு நிற்பதன்று; இவன் மூர்க்கு பேசுகின்றான் என்று,Ivan Moorkku Paesugindraan Endru - “இவன் மூடர் பேசும் பேச்சைப் பேசா நின்றான்” என்று திருவுள்ளம் பற்றி முனிவாயேலும்,Munivaayaelum - நீ சீறி யருளினாலும் என் நாவினுக்கு ஆற்றேன்,En Naavinukku Aatraen - என்னுடைய நாக்கின் பதற்றத்தை என் ஸஹகிக்க வல்வேனல்லேன்; காக்கை வாயிலும்,Kaakkai Vaayilum - காக்கையினுடைய வாயிலுண்டான சொல்லையும் கட்டுரை,Katturai - நற் சொல்லாக கொள்வர்,Kolvar - (அறிவுடையார்) கொள்ளுவார்கள். |
| 434 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் பத்து (முதல் திருமொழி - வாக்குத்தூய்மை) (நைச்சியானுஸந்தானம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 2 | சழக்கு நாக்கொடு புன் கவி சொன்னேன் சங்கு சக்கர மேந்து கையானே பிழைப்ப ராகிலும் தம்மடியார் சொல் பொறுப்பதும் பெரியோர் கடனன்றே விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்றல்லால் வேறொருவரோடு என் மனம் பற்றாது உழைக்கு ஓர் புள்ளி மிகை யன்று கண்டாய் ஊழி யேழுலகுண் டுமிழ்ந்தானே–5-1-2 | சங்கு சக்கரம் ஏந்து கையானே!,Sangu Chakkaram Aendhu Kaiyaanae - சங்கு சக்கரம் ஏந்து கையானே! ஊழி,Oozhi - பிரளயக் காலத்தில் ஏழ் உலகு,Ezh Ulagu - எல்லா வுலகங்களையும் உண்டு,Undu - திரு வயிற்றில் வைத்துக் கொண்டு (பின்பு பிரளயம் கழிந்தவாறே) உமிழ்ந்தானே,Umizhnthaaney - (அவற்றை) வெளிப்படுத்தினவனே! சழக்கு நாக்கொடு,Sazhakku Naakkodu - பொல்லாத நாக்கினால் புன் கவி,Punn Kavi - அற்பமான பாசுரங்களை சொன்னேன்,Sonnaen - நான் சொன்னேன்; பிழைப்பர் ஆகிலும்,Pizhaippar Aagilum - (தாஸ பூதர்கள்) பிழை செய்தவர்களே யாகிலும் தம் அடியார்,Tham Adiyaar - தமக்கு அடிமைப்பட்ட அவர்களுடைய செயல்,Seyal - சொல்லை. பொறுப்பது,Poruppadhu - பொறுத்தருளுகை பெரியோர் கடன் ஆனதே,Periyor Kadan Aanaadhe - பெருந்தன்மை யுடையவர்களுக்கு கடமை யன்றோ நின் கண் அல்லால் மற்று விழிக்கும் கண் இலேன்,Nin Kan Allael Matru Vizhikkum Kan Ilaen - உன்னுடைய கடாஷம் அல்லால் வேறு ஒருவருடைய கடாஷத்தை (ரஷகமாக) உடையேனல்லேன்; வேறு ஒருவரோடு,Vera Oruvarodu - (அன்றியும்) மற்று ஒருவர் பக்கலிலும் என் மனம்,En Manam - என் நெஞ்சானது பற்றாது,Patraadhu - பொருந்த மாட்டாது உழைக்கு,Uzhaikku - புள்ளிமானுக்கு ஓர் புள்ளி மிகை அன்று கண்டாய்,Or Pulli Migai Andru Kandaai - ஒரு புள்ளி (ஏறுவது) குற்றமதன்றோ? |
| 435 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் பத்து (முதல் திருமொழி - வாக்குத்தூய்மை) (நைச்சியானுஸந்தானம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 3 | நன்மை தீமைக ளொன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை யல்லால் புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப் புகழ்வானன்று கண்டாய் திருமாலே உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ நாரணா என்பன் வன்மை யாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவனென்னும் வன்மை கண்டாயே–5-1-3 | கண்டாய்,Kandaai - முன்னிலை யசைச் சொல் திருமாலே,Thirumaalae - ச்ரிய: பதியானவனே! நாரணா என்னும் இத்தனை அல்லால்,Naaranaa Enum Ithanai Allael - ‘நாராயணா!’ என்று கூப்பிடுகையாகிற இவ்வளவொழிய நன்மை தீமைகள் ஒன்றும்,Nanmai Theemigal Ondrum - (வேறு) நன்மை தீமை ஒன்றையும் அறியேன்,Ariyaen - அறிகிறேனில்லை. புன்மையால்,Punnmaiyaal - (எனக்கு இயற்கையாக உள்ள) அற்பத் தனத்தினால் உன்னை,Unnai - உன்னைக் குறித்து புள்ளுவம் பேசி,Pulluvam Paesi - வஞ்சகமான சொற்களைச் சொல்லி புகழ்வான் அன்று கண்டாய்,Pugazhvaan Andru Kandaai - புகழுவனல்லன் (அடியேன்) உன்னை,Unnai - உன்னை உண்ணும் ஆறு,Unnum Aaru - இடைவிடாது ஸ்மரித்துக் கொண்டிருக்கத் தக்க வழிகளில் ஒன்றும்,Ondrum - ஒரு வழியையும் அறியேன்,Ariyaen - அறிந்தேனில்லை; ஓவாறே,Ovaarae - (ஒரு நொடிப் பொழுதும்) ஒழிவின்றி (இடைவிடாமல்) நமோ நாராயணா என்பன,Namo Naaraayanaa Enbana - நமோ நாராணாய என்னா நின்றேன் வன்மை ஆனது,Vanmai Aanaadhu - அடியேனுக்கு மிடுக்காவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும்,Un Koyilil Vaazhum Vaittanavan Enum - உன்னுடைய கோயிலில் வாழுகின்றவன் வைஷ்ணவன் என்கிற மிடுக்கோடு |
| 436 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் பத்து (முதல் திருமொழி - வாக்குத்தூய்மை) (நைச்சியானுஸந்தானம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 4 | நெடுமையால் உலகேழு மளந்தாய் நின்மலா நெடியாய் அடியேனைக் குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா கூறை சோறு இவை வேண்டுவ தில்லை அடிமை யென்னு மக்கோயின்மையாலே அங்கங்கே அவை போதரும் கண்டாய் கொடுமைக் கஞ்சனைக் கொன்று நின் தாதை கோத்த வன் தளை கோள் விடுத் தானே–5-1-4 | நெடுமையால்,Nedumaiyaal - (குறிய மாணுருவை மாற்றி) நெடுக வளர்ந்ததனால் உலகு எழும்,Ulagu Ezhum - எல்லா வுலகங்களையும் அளந்தாய்,Alandhaay - அளந்தருளினவனே! நின்மலா,Ninmalaa - பரிசுத்தமானவனே! நெடியாய்,Nediyai - (அனைவர்க்கும்) தலைவனானவனே! கொடுமை கஞ்சனை,Kodumai Kanjanai - கொடிய கம்ஸனை கொன்று,Kondru - உயிர்க் கொலை செய்து, நின் தாதை கோத்த வன் தளை கோள் விடுத்தானே,Nin Thaathai Koatha Van Thalai Kol Viduththaane - உனது தந்தையாகிய வஸுதேவருடைய காலில் பூட்டப்பட்டிருந்த வலிய விலங்கின் பூட்டை தறித்துப் பொகட்டவனே! அடியேனை,Adiyenai - (உனக்கு) அடிமைப்பட்டுள்ள என்னை அடிமை கொள்வதற்கு,Adimai Kolvadharku - கிங்கரனாகக் கொள்வதற்கு ஐயுறு வேண்டா,Aiyuru Vendaa - ஸந்தேகிக்க வேண்டியதில்லை; கூறை சோறு இல்லை,Koorai Sooru Illai - இக் கூறையையும் சோற்றையும் வேண்டுவது இல்லை,Venduvathu Illai - (நான் உன்னிடத்து) விரும்புகிறேனில்லை; அடிமை என்னும்,Adimai Ennum - அடிமை யென்ற அ கோயின்மையாலே,A Koyinmaiyaale - அந்த ராஜகுல மாஹாத்மியத்தினால் அவை,Avai - அக்கூறை சோறுகள் அங்கு அங்கு,Angu Angu - அவ்வவ் விடங்களில் போதரும்,Podharum - (தாமாகவே) கிடைக்கும் கண்டாய்,Kandaai - (கண்டாய்- முன்னிலை யசைச் சொல்.) |
| 437 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் பத்து (முதல் திருமொழி - வாக்குத்தூய்மை) (நைச்சியானுஸந்தானம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 5 | தோட்டம் இல்லவள் ஆத் தொழு ஓடை துடவையும் கிணறும் இவை யெல்லாம் வாட்ட மின்றி உன் பொன்னடிக் கீழே வளைப்பகம் வகுத்துக் கொண் டிருந்தேன் நாட்டு மானிடத் தோடு எனக்கு அரிது நச்சுவார் பலர் கேழலொன் றாகி கோட்டு மண் கொண்ட கொள்கையினானே குஞ்சரம் வீழக் கொம்பொசித் தானே–5-1-5 | கேழல் ஒன்று ஆகி,Kezhal Ondru Aagi - ஒப்பற்ற வராஹ ரூபியாய்க் கொண்டு கோடு,Kodu - (தனது) கோரப் பல் நுனியில் மண் கொண்ட,Man Konda - பூமியைத் தாங்குகையாகிற கொள்கையினாளே,Kolgaiyinalae - கால பாவத்ந யுடையவனே குஞ்சரம்,Kunjcharam - (குவலயாபீடமென்ற) யானையானது வீழ,Veezha - முடியும்படி கொம்பு,Kombu - (அதன்) தந்தத்தை ஓசித்தானே,Osiththaanae - முறித்தெறிந்தவனே! தோட்டம்,Thottam - தோட்டமும் இல்லவள்,Illaval - மனைவியும் ஆ,Aa - பசுக்களும் தொழு,Thozhu - மாட்டுத் தொழுவமும் ஓடை,Odai - குளமும் துடவையும்,Thudavaiym - விளை நிலமும் கிணறும் இவை எல்லாம்,Kinarum Ivai Ellaam - கிணறுமாகிற இவை யெல்லா வற்றையும் வாட்டம் இன்றி,Vaattam Inri - குறைவில்லாமல் உன் பொன் அடி கீழே,Un Pon Adi Keezhae - அடியேன் உனது அழகிய திருவடியிலே வளைப்ப வகுத்துக் கொண்டிருந்தேன்,Valaippa Vakuththu Kondirundhaen - திரள வகுத்துக் கொண்டிரா நின்றேன் எனக்கு,Enakku - (எல்லாம் உன் திருவடியே என்றிருக்கிற) எனக்கு நாடு மானிடத்தோடு,Naadu Maanidaththodu - நாட்டிலுள்ள மநுஷ்யரோடு அரிது,Aridhu - (ஸஹ வாஸம் செய்வது) அஸஹ்யம்; பலர்,Palar - பல பேர் நச்சுவார்,Nachchuvaaar - (இந்த ஸஹவாஸத்தை) விரும்புவர்கள் |
| 438 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் பத்து (முதல் திருமொழி - வாக்குத்தூய்மை) (நைச்சியானுஸந்தானம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 6 | கண்ணா நான்முகனைப் படைத்தானே காரணா கரியாய் அடியேன் நான் உண்ணா நாள் பசியாவதொன் றில்லை ஓவாதே நமோ நாரணா வென்று எண்ணா நாளும் இருக்கெசுச் சாம வேத நாண் மலர் கொண்டு உன் பாதம் நண்ணா நாள் அவை தத்துறு மாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே–5-1-6 | காரணா,Kaaranaa - (லோக ஸருஷ்டிக்குக் காரணமானவனே!) நான்முகனை,Naanmuganaai - பிரமனை படைத்தானே,Padaiththaanae - (உந்தி மேல்) படைத்தருளினவளே! கண்ணா,Kannaa - கண்ணபிரானே! கரியாய்,Kariyaai - (காள மேகம்போல்) கறுத்த நிறத்தை யுடையவனே! அடியேன் நான் ,Adiyaen Naan - (உனக்கு) சேக்ஷபூதனான நான் உண்ணா நாள்,Unnaa Naal - உண்ணா தொழிந்த போது பசி ஆவதொன்றுமில்லை,Pasi Aavadhonrumillai - பசி என்பது மறந்து முண்டாவதில்லை. ஓயாதே,Oyaadhe - இடைவிடாமல் நமோ நாராயணா என்று,Namo Naaraayanaa Endru - ‘நமோ நாராயணாய’ என்று எண்ணா நாளும்,Ennaa Naalum - அநுஸந்திக்கப் பெறாத நாளும் இருக்கு எசுச் சாமவேதம்,Irukku Esuchchaamavetham - ருக், யஜுர், ஸாமம் என்கிற வேதங்களை (ச்சொல்லிக் கொண்டும்) நாண் மலர் கொண்டு,Naan Malar Kondru - அப்போதலர்ந்த (புதிய) பூக்களை எடுத்துக் கொண்டும் (வந்து) உன் பாதம்,Un Paadham - உன் திருவடிகளை நண்ணா நான்,Nannaa Naan - கிட்டப் பெறாத நாள்களும் அவை,Avai - (எனக்கு) அந்த உண்ணாதொழிந்த நாள்களாம்; அவை,Avai - அந்த வேதாசந்தநமும் புஷ்ப ஸமர்ப்பணமும் தத்துவம் ஆகில்,Thaththuvam Aagil - தட்டுப்படுமாகில் அன்று,Andru - அந்த நாளானது எனக்கு,Enakku - எனக்கு பட்டினி நாள்,Pattini Naal - உண்ணாதொழிந்த நாளாகும். |
| 439 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் பத்து (முதல் திருமொழி - வாக்குத்தூய்மை) (நைச்சியானுஸந்தானம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 7 | வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம் காணலாங்கொல் என்றாசையினாலே உள்ளம் சோர உகந்தெதிர் விம்மி உரோம கூபங்களாய் கண்ண நீர்கள் துள்ளம் சோரத் துயிலணை கொள்ளேன் சொல்லாய் யான் உன்னைத் தத்துறுமாறே–5-1-7 | வெள்ளை,Vellai - பால் மயமான வெள்ளத்தின் மேல்,Vellaththin Mael - பெருக்கிலே ஒரு பாம்பை,Oru Paambai - ஒப்பற்ற திருவனந்தாழ்வானை மெத்தை ஆக விரித்து,Meththai Aaga Viriththu - படுக்கையாக விரித்து அதன் மேலே,Adhan Maelae - அப் படுக்கையின் மீது கள்ளம் நித்திரை கொள்கின்ற மார்க்கம்,Kallam Niththirai Kolginra Maarkkam - (நீ) யோக நித்ரை செய்தருளும்படியை காணலாம் கொல் என் ஆசையினாலே,Kaanalaam Kol En Aasaiyinaalae - காணக் கூடுமோ என்கிற விருப்பத்தினால், உள்ளம் சோர,Ullam Soora - நெஞ்சு அழிய உகந்து எதிர் விம்மி,Ugandhu Ethir Vimmi - மகிழ்ச்சியின் மிகுதியால் (வார்த்தை சொல்ல வொண்ணாதபடி) மாறாகக் கலங்கி உரோம கூபங்கள் ஆய்,Uroma Koopangal Aay - (உடம்பு முழுவதும்) மயிர்க் குழி யெறியப் பெற்று கண்ண நீர்கள்,Kanna Neergal - கண்ணீர் அணை,Anai - படுக்கையில் துயில் கொள்ளேன்,Thuyil Kollen - உறங்கப் பெறுகிறேனில்லை; யான்,Yaan - (இப்படிப்பட்ட) அடியேன் உன்னை,Unnai - உன்னை தத்துறும் ஆறு,Thaththurum Aaru - கிட்டும்வழியை சொல்லாய்,Sollaai - அருளிச் செய்ய வேணும். |
| 440 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் பத்து (முதல் திருமொழி - வாக்குத்தூய்மை) (நைச்சியானுஸந்தானம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 8 | வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே மது சூதா கண்ணனே கரி கோள் விடுத்தானே காரணா களிறட்ட பிரானே எண்ணு வாரிடரைக் களைவானே ஏத்தரும் பெருங் கீர்த்தியினானே நண்ணி நான் உன்னை நாள் தொறும் ஏத்தும் நன்மையே அருள் செய் எம்பிரானே–5-1-8 | காரணா,Kaaranaa - (உலகங்கட்குக்) காரணமானவனே! என்ணுவார் இடரை களைவானே,Ennuvaar Idarai Kalaivaanae - (எப்போதும் உன்னையே தியானிப்பவர்களுடைய துன்பங்களைப் போக்குமவனே! மது சூதா,Madhu Soodhaa - மதுவைக் கொன்றவனே! கரி கோள் விடுத்தானே,Kari Kol Viduththaanae - கஜேந்திராழ்வானுடைய துக்கத்தை நீக்கினனனே! கண்ணனே!,Kannaney - கண்ணனே! வண்ணம்,Vannam - அழகிய மால்,Maal - பெரிய வரை,Varai - கோவர்த்தன மலை குடை ஆக,Kudai Aaga - குடையாக (அமைய) மாரி,Maari - மழையினின்றும் காத்தவனே,Kaaththavanae - (பசுக்களையும் இடைகரையும்) காத்தருளினவனே! களிறு,Kaliru - (குவலயாபீடமென்னும்) யானையை அட்ட,Atta - முடித்த பிரானே,Piranae - உபகாரகனே! ஏத்த அரு பெரு கீர்த்தியினானே,Eaetha Aru Peru Keerththiyinaanae - துதிக்க முடியாத அளவற்ற கீர்த்தியை யுடையவனே! எம்பிரானே,Empiraanae - எமக்குத் தலைவனே! நான்,Naan - அடியேன் உன்னை,Unnai - உன்னை நாள் தொறும்,Naal Thorum - தினந்தோறும் நண்ணி,Nanni - ஆச்ரயித்து ஏத்தும் நன்மை,Eaeththum Nanmai - துதிக்கையாகிற நன்மையை அருள் செய்,Arul Sei - அருள் செய்ய வேணும். |
| 441 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் பத்து (முதல் திருமொழி - வாக்குத்தூய்மை) (நைச்சியானுஸந்தானம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 9 | நம்பனே நவின் றேத்த வல்லார்கள் நாதனே நரசிங்கமதானாய் உம்பர் கோனுலகேழும் அளந்தாய் ஊழி யாயினாய் ஆழி முன்னேந்தி கம்ப மா கரி கோள் விடுத்தானே காரணா கடலைக் கடைந்தானே எம்பிரான் என்னை யாளுடைத் தேனே ஏழை யேனிடரைக் களையாயே–5-1-9 | நம்பனே,Nampanae - (ரக்ஷகன் என்று) நம்பத் தகுந்தவனே! நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே,Navinru Eaetha Vallaargal Naadhanae - (ஸ்தோத்திரங்களை) வாயாரச் சொல்லிப் புகழ வல்லவர்களுக்கு ரக்ஷகனே! நரசிங்கம் அது ஆனாய்,Narasingham Adhu Aanaai - நரசிங்க அவதராம் செய்தருளினவனே! உம்பர்,Umbar - நித்ய ஸூரிகளுக்கு கோன்,Kon - தலைவனே! உலகு ஏழும்,Ulagu Eaazhum - எல்லா வுலகங்களையும் அளந்தாய்,Alandhaai - (திரிவிக்கிரமாவதாரத்தில்) அளந்து கொண்டவனே! ஊழி ஆயினாய்,Oozhi Aayinaai - காலம் முதலிய பதார்த்தங்களுக்கெல்லாம் நிர்வாஹகனானவனே! முன்,Mun - முன்னே ஆழி,Aazhi - திருவாழி யாழ்வானை ஏத்தி,Eaethi - (திருக் கையில்) ஏந்திக் கொண்டு (எழுந்தருளி) மா கம்பம்,Maa Kampam - மிக்க நடுக்கத்தை அடைந்த கரி,Kari - கஜேந்திர ஆழ்வானுடைய கோள்,Kol - சிறையை விடுத்தானே,Viduththaanae - விடுத்தருளினவனே! காரணா,Kaaranaa - ஜகத் காரண பூதனே! கடலை,Kadalai - (திருப்பாற்) கடலை கடைந்தானே,Kadaindhaanae - (தேவர் களுக்காகக்) கடைந்தருளினவனே! எம்பிரான்,Empiraan - எம்பிரானே! என்னை,Ennai - அடியேனை ஆளுடை,Aaludai - ஆட்படுத்திக் கொண்டவனும் தேனே,Thaenae - தேன் போல் இனியனுமானவனே! ஏழையேன்,Eaazhaiyaen - (உன் திருநாமங்களில்) சாபல்யமுடைய என்னுடைய இடரை,Idarai - துன்பத்தை களையாய்,Kalaiyaai - களைந்தருள வேணும். |
| 442 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் பத்து (முதல் திருமொழி - வாக்குத்தூய்மை) (நைச்சியானுஸந்தானம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 10 | காமர் தாதை கருதலர் சிங்கம் காண வினிய கருங்குழல் குட்டன் வாமனன் என் மரகத வண்ணன் மாதவன் மது சூதனன் தன்னை சேம நன்கமரும் புதுவையர் கோன் விட்டு சித்தன் வியந் தமிழ் பத்தும் நாம மென்று நவின்றுரைப்பார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணனுலகே–5-1-10 | காமர் தாதை,Kaamar Thaathai - மன்மதனுக்குத் தந்தையும் கருதலர் சிங்கம்,Karuththalar Singam - (தன்னை) விரோதிப்பவராகிய யானைகட்கு சிங்கம் போன்றவனும் காண,Kaana - ஸேவிப்பதற்கு இனிய,Iniya - அழகாயிருக்கிற கரு குழல் குட்டன்,Karu Kuzhal Kuttan - கறுத்த குழலையுடைய சிறுக்கனானவனும் வாமனன்,Vaamanan - வாமாநாவதாரம் செய்தருளியவனும் என்,En - எனக்குத் தலைவனும் மரகத வண்ணன்,Maragatha Vannan - மரகதப் பச்சை போன்ற வடியையுடையவனும் மாதவன்,Maadhavan - பிராட்டிக்குக் கண்வனும் மதுசூதனன் தன்னை,Madhusoodanan Thannai - மதுவைக் கொன்றவனுமான எம்பெருமானைக் குறித்தருளிச்செய்த சேமம்,Saemam - க்ஷேமமானது நன்கு,Nangu - நன்றாக (குறைவின்றி) அமரும்,Amarum - அமைந்திருக்கப் பெற்ற புதுவையர் கோன்,Puduvaiyar Kon - ஸ்ரீவில்லிபுத்தூரிள்ளார்க்குத் தலைவனான விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வாரது வியன் தமிழ் பத்தும்,Viyan Tamil Paththum - பெருமையுள்ள (இத்) தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும் நாமம் என்று,Naamam Endru - (எம்பெருமானது) திருநாமங்களாக பிரதிபத்தி பண்ணி நவின்று,Navinru - அன்பு கொண்டு உரைப்பார்கள்,Uraippaargal - ஓதுமவவர்கள் ஒல்லை,Ollai - விரைவாக நாரணன் உலகு,Naaranan Ulagu - ஸ்ரீவைகுண்டத்தை நண்ணுவார்,Nannuvaar - கிட்டப் பெறுவர்கள். |