திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 719 | பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 1 | மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனே!
தென் இலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் கரு மணியே!
என்னுடைய இன் அமுதே! ராகவனே! தாலேலோ | பதவுரை Show / Hideமன்னு புகழ், Mannu Pugazh - நிலை நின்ற புகழை யுடைய கௌசலை தன், Kausalai Than - கௌஸல்யையினுடைய் மணி வயிறு, Mani Vayiru - அழகிய வயிற்றிலே வாய்த்தவனே, Vaiththavane - பிள்ளையாகத் திருவவதரித்தவனே! தென் இலங்கை கோன், Then Ilangai Kon - தென்னிலங்கைக்கு இறைவனான ராவணனுடைய முடிகள், Mudigal - பத்துத் தலைகளையும் சிந்துவித்தாய், Sindhuviththai - சிதறப் பண்ணினவனே! செம் பொன் சேர், Sem Pon Ser - செவ்விய பொன்னாலே செய்யப்பட்டதாய் கன்னி, Kanni - அழிவில்லாததாய் நல், Nal - விலக்ஷணமாய் மா, Maa - பெரிதான மதில், Madhil - திருமதிளாலே புடை சூழ், Pudai Soozh - நாற் புறமும் சூழப்பட்ட கணபுரத்து, Kanapurathu - திருக் கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கிற என் கருமணியே, En Karumanie - நீல ரத்நம் போன்ற எம்பெருமானே! என்னுடைய இன் அமுதே, Ennudaiya In Amudhe - எனக்கு போக்யமான அம்ருதமாயிருப்பவனே! இராகவனே!, Irakavaney - ஸ்ரீராமனே! தாலேலோ, Thaleloo - (உனக்குத்) தாலாட்டு கணபுரம், Kanapuram - கண்ணபுரம் என்பதன் தொகுத்தல், தாலேலோ, Thaleloo - வளர்பிள்ளைத் தொட்டிலிலே வளர்த்திக் கண்வளரப் பண்ணுகைக்காகச் சீராட்டித் தாலாட்டுதல்; தால், Thal - நாக்கு; தமிழில் தொண்ணாற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்றாகிய பிள்ளைத் தமிழில் |
| 720 | பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 2 | புண்டரீக மலர் அதன் மேல் புவனி எல்லாம் படைத்தவனே!
திண் திற லாள் தாடகை தன் உரம் உருவ சிலை வளைத்தாய்!
கண்டவர் தம் மனம் வழங்கும் கண புரத்து என் கருமணியே !
எண் திசையும் ஆள் உடையாய்! ராகவனே! தாலேலோ | பதவுரை Show / Hideபுண்டரிகம் மலர் அதன் மேல், Pundarikam Malar Athan Mel - (திருநாபியில் அலர்ந்த) தாமரைப் பூவின் மேல் (பிரமனைத் தோற்றுவித்து அவன் முகமாக) புவனி எல்லாம் படைத்தவனே, Puvani Ellam Padaithavaney - உலகங்கள் எல்லாவற்றையும் ஸ்ருஷ்டித்தவனே! திண் திறலாள் தாடகை தன், Thin Thiralal Thadakai Than - த்ருடமான பலத்தை யுடையளான தாடகையினுடைய உரம் உருவ, Uram Uruva - மார்வைத் துளைக்கும் படியாக சிலை வளைத்தாய், Silai Valaiththai - வில்லை வளைத்து அம்புகளை எய்தவனே! கண்டவர், Kandavar - ஸேவித்தவர்கள் தம் மனம் வழங்கும், Tham Manam Vazhangu - தங்கள் மனத்தைத் தாங்களே இசைந்து கொடுப்பதற்குத் தகுந்த எண் திசையும், En Thisaiyum - எட்டுத் திக்கிலுள்ளவர்களையும் ஆள் உடையாய், Aal Udaiyaay - அடிமை கொண்டருளுபவனே! இராகவனே! தாலேலோ, Irakavane Thalelo - ஸ்ரீராமனே! (உனக்குத்) தாலாட்டு |
| 721 | பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 3 | கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல முதலாய் !
தங்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா ! தாசரதீ !
கங்கையிலும் தீர்த்த மலி கண புரத்து என் கரு மணியே
எங்கள் குலத்தின் இன் அமுதே !ராகவனே !தாலேலோ ! | பதவுரை Show / Hideகொங்குமலி கரு குழலாள், Kongumali Karu Kuzhalal - பரிமளம் மிகுந்த கறுத்த கூந்தலை யுடையளான கௌசலை தன், Kausalai Than - கௌஸல்யையினுடைய குலம் மதலாய், Kulam Mathalaiy - சிறந்த பிள்ளையானவனே! தங்கு பெருபுகழ் சனகன், Thangu Perupugazh Sanakan - பொருந்திய மஹா கீர்த்தியை யுடைய ஜநக மஹாராஜனுக்கு திரு மருகா, Thiru Maruga - மாப்பிள்ளை யானவனே! தாசரதீ, Dasarathe - சக்ரவர்த்தி திருமகனே! கங்கையிலும், Gangaiyilum - கங்கா நதியிற் காட்டிலும் மலி தீர்த்தம், Mali Theertham - சிறப்பு மிக்க தீர்த்தங்களை யுடைய கண புரத்து, Kanna Purathu - திருக் கண்ணபுரத்தி லெழுந்தருளி யிருக்கிற எங்கள் குலம், Engal Kulam - எங்கள் ராஜ வம்சத்துக் கெல்லாம் இன் அமுதே, In Amude - போக்யமான அமுதம் போன்றவனே! எங்கள் குலத்து இன்னமுதே, Engal Kulaththu Innamude - ஸ்ரீராமன் ராஜவம்ஸத்திற் பிறந்தாற்போல |
| 722 | பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 4 | தாமரை மேல் அயன் அவனை படைத்தவனே! தயரதன் தன்
மா முதலாய்! மைதிலி தன் மணவாளா வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கண புரத்து என் கருமணியே!
ஏமருவும் வெம் சிலை வலவா! ராகவனே! தாலேலோ | பதவுரை Show / Hideதாமரை மேல், Thamarai Mel - (திருநாபிக்) கமலத்திலே அயன் அவனை படைத்தவனே, Ayan Avanai Padaiththavane - பிரமனை உண்டாக்கினவனே! தயரதன் தன் மாமதலாய், Thayaradhan Than Mamathalaiy - தசரதனுடைய மூத்த குமாரனே! மைதிலி தன் மணவாளா, Maithili Than Manavala - பிராட்டிக்கு வல்லபனே! வண்டு இனங்கள், Vandu Inangal - வண்டுகளின் கூட்டங்கள் காமரங்கள் இசை பாடும், Kamarangkal Isai Padum - காமரமென்னும் இசையைப் பாடப் பெற்ற கண புரத்து, Kanna Purathu - திருக் கண்ணபுரத்தி லெழுந்தருளி யிருக்கிற ஏ மருவும் சிலை வலவா, E Maruvum Silai Valava - அம்புகள் பொருந்திய (ஸ்ரீசார்ங்கமென்னும்) வில்லை ஆள வல்லவனே “ஏமருவுஞ்சிலை” = ஏ, Emaruvunchilai E - எய்கையிலே, மருவும் – மூட்டாநின்ற, சிலை – வில் என்றும் பொருளாகலாம். வெகு சாதுரியமாய் அடக்கி ஆளத்தக்க வில், Vegu Sadhuriyamaiy Adakki Aalaththakka Vil - என்றவாறு |
| 723 | பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 5 | பாராளும் படர் செல்வம் பாரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பில் இளையவனோடு அரும் கானம் அடைந்தவனே
சீராளும் வரை மார்பா ! திரு கண்ண புரத்தரசே !
தாராளும் நீண் முடி என் தாசரதீ ! தாலேலோ | பதவுரை Show / Hideபார் ஆளும் படர் செல்வம், Paar Aalum Padar Selvam - பூமி முழுவதையும் ஆட்சி புரிகையாகிற பெரிய ராஜ்ய ஸம்பத்தை பரதன் நம்பிக்கே, Barathan Nambikke - ஸ்ரீ பரதாழ்வானுக்கே அருளி, Aruli - நியமித்து விட்டு ஆரா அன்பு இளையவனோடு, Aaraa Anbu Ilaiyavanodu - பரிபூர்ணமான பக்திப் பெருங்காதலை யுடைய இளைய பெருமாளுடன் கூட அரு கானம் அடைந்தவனே, Aru Kaanam Adaindavaney - (புகுவதற்கு) அருமையான காட்டைக் குறித்து எழுந்தருளினவனே! சீர் ஆளும் வரை மார்பா, Seer Aalum Varai Maarbaa - வீர லெக்ஷ்மிக்கு இருப்பிடமாய் மலை போன்ற திரு மார்பை யுடையவனே! தார் ஆளும் நீள் முடி, Thaar Aalum Neel Mudi - மாலையோடு கூடின சிறந்த திரு முடியை யுடையவனே! |
| 724 | பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 6 | சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவனே!
அற்றவர்கட்க்கு அரு மருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே!
கற்றவர்கள் தாம் வாழும் கண புரத்து என் கரு மணியே!
சிற்றவை தன் சொல் கொண்ட சீ ராமா! தாலேலோ | பதவுரை Show / Hideசுற்றம் எல்லாம் பின் தொடர, Sutram Ellam Pin Thodara - எல்லா உறவினரும் பின்னே தொடர்ந்து வர தொல் கானம் அடைந்தவனே, Thol Kaanam Adaindavaney - புராதநமான தண்டகாரண்யத்துக் கெழுந்தருளினவனே! அற்றவர்கட்கு, Attravarkadku - உனக்கே அற்றுத் தீர்ந்த பரம பக்தர்களுக்கு அரு மருந்தே, Aru Marundhe - ஸம்ஸார ரோகத்தைத் (தணிக்க) அருமையான மருந்து போன்றவனே! அயோத்தி நகர்க்கு அதிபதியே, Ayodhya Nagarkku Adhipathiye - அயோத்யா நகரத்திற்கு அரசனே! கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்து, Kattravargal Thaam Vaalum Kanapurathu - ஞானிகள் வாழ்தற்கு இடமான திருக்கண்ணபுரத்திலே எழுந்தருளியிருக்கிற என் கருமணியே, En Karumanie - நீலமணி போலழகிய எம்பெருமானே! சிற்றவை தன், Sitravai Than - சிறிய தாயாராகிய கைகேயியினுடைய சொல் கொண்ட சீராமா, Sol Konda Seerama - சொல்லை ஏற்றுக்கொண்ட ஸ்ரீராமமே! அது கேட்ட இராமபிரான், Adhu Ketta Irambiraan - “ஸீதே! நான் பிராணனை விட்டாலும் விடுவேன்; லக்ஷ்மணனையும் உன்னையும் விட்டாலும் விடுவேன்; |
| 725 | பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 7 | ஆலின் இலை பாலகனாய் அன்று உலகம் உண்டவனே!
வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே!
காலின் மணி கரை அலைக்கும் கண புரத்து என் கரு மணியே!
ஆலி நகர்க்கு அதிபதியே! அயோத்தி மனே! தாலேலோ | பதவுரை Show / Hideஅன்று, Anru - முன்பு மஹாப்ரளயம் வந்த போது ஆலின் இலை, Aalin Ilai - ஓர் ஆலந்தளிரிலே பாலகன் ஆய், Paalagan Aayi - குழந்தை வடிவாய்க் கொண்டு உலகம் உண்டவனே, Ulagam Undavaney - லோகங்களை யெல்லாம் திருவயிற்றில் வைத்து நோக்கினவனே! வாலியை கொன்று, Vaalaiyai Konru - வாலியைக் கொலை செய்து இளைய வானரத்துக்கு, Ilaiya Vaanarathukku - அவனது தம்பியான ஸுகரீவனுக்கு அரசு அளித்தவனே, Arasu Alithavane - ராஜ்யத்தைக் கொடுத்தவனே! காலில் மணி, Kaalil Mani - கால்வாய்களிலுள்ள ரத்நங்களை கரை அலைக்கும், Karai Alaikkum - கரையிலே கொண்டு கொழிக்கப் பெற்ற கண புரத்து, Kanna Purathu - திருக் கண்ணபுரத்தில் எழுந்தளி யிருக்கிற ஆலி நகர்க்கு, Aali Nagarkku - திருவாலி திருநகரிக்கு அதிபதியே, Adhipathiye - தலைவனே! அயோத்திமனே, Ayothimane - அயோத்தி நகர்க்கு அரசனே! |
| 726 | பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 8 | மலை அதனால் அணை கட்டி மதிள் இலங்கை அழித்தவனே!
அலை கடலை கடைந்து அமரர்க்கு அருளி செய்தவனே!
கலை வலவர் தாம் வாழும் கண புரத்து என் கரு மணியே!
சிலை வலவா! சேவகனே! சீ ராமா! தாலேலோ | பதவுரை Show / Hideமலை அதனால் அணை கட்டி, Malai Adhanal Anaik Katti - மலைகளைக் கொண்டு ஸேது பந்தனம் பண்ணி மதிள் இலங்கை அழித்தவனே, Mathil Ilangai Azhithavane - அரணை யுடைத்தான லங்காபுரியைப் பாழ்படுத்தினவனே அலை கடலை கடைந்து, Alai Kadalai Kadaindhu - அலை யெறிகின்ற திருப்பாற்கடலைக் கடைந்து அமரர்க்கு, Amararukku - தேவர்களுக்கு அமுது, Amuthu - அம்ருதத்தை அருளிச் செய்தவனே, Arulich Seithavane - கொடுத்தருளினவனே! கலை வலவர் தாம் வாழும் கணபுரத்து, Kalai Valavar Thaam Vaalum Kanapuraththu - ஸகல சாஸ்த்ரங்களையும் அறிந்தவர்கள் வாழ்கிற திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கிற சிலைவலவா, Silaivalavaa - (ஸ்ரீ சார்ங்கமென்னும்) வில்லைச் செலுத்த வல்லவனே! சேவகனே, Sevagane - வீரனே! |
| 727 | பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 9 | தளை அவிழும் நறும் குஞ்சி தயரதன் தன் குல முதலாய்!
வளைய வொரு சிலை யதனால் மதிள் இலங்கை அழித்தவனே!
களை கழுநீர் மருங்கலரும் கண புரத்து என் கரு மணியே!
இளையவர்கட்க்கு அருள் உடையாய்! ராகவனே! தாலேலோ | பதவுரை Show / Hideதளை அவிழும் நறு குஞ்சி, Thalai Avizhum Naru Kunji - கட்டு அவிழும்படியான நறுநாற்றமுடைய மயிர்முடியை யுடையனான தயரதன் தன், Thayaradhan Than - தசரத சக்ரவாத்தியினுடைய குலம் மதலாய், Kulam Mathalaiy - சிறந்த திருக்குமாரனே! ஒரு சிலை வளைய, Oru Silai Valaiya - ஒப்பற்ற வில்லானது வளைய அதனால், Adhanal - அந்த வில்லாலே களை கழுநீர், Kalai Kazhunir - களையாகப் பறிக்கப்பட்ட செங்கழுநீர்கள் மருங்கு அலரும் கணபுரத்து, Marungu Alarum Kanapurathu - சுற்றிலும் மலரப் பெற்ற திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளியிருக்கிற இளையவர்கட்கு, Ilaiyavarkadku - இளையவர்கள் விஷயத்திலே அருள் உடையாய், Arul Udaiyai - கருணை பொருந்தியவனே! |
| 728 | பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 10 | தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கண புரத்து என் கரு மணியே!
ஏவரி வெஞ்சிலை வலவா! ராகவனே! தாலேலோ | பதவுரை Show / Hideதேவரையும், Devaraiyum - தேவர்களையும் அசுரரையும், Asuraraiyum - அஸுரர்களையும் திசைகளையும், Thisaigalaiyum - திக்குக்களையும் (அதாவது எல்லா ப்ரதேசங்களையும்) படைத்தவனே, Padaithavaney - ஸ்ருஷ்டித்தவனே யாவரும் வந்து அடி வணங்க, Yavarum Vandu Adi Vananga - ஸகல சேதநரும் வந்து திருவடிகளில் ஸேவிக்கும்படியாக அரங்கம் நகர், Arangam Nagar - ஸ்ரீரங்கத்திலே துயின்றவனே, Thuyinravane - பள்ளி கொண்டிருப்பவனே! காவிரி நல் நதி, Kaviri Nal Nathi - காவேரி யென்கிற சிறந்த நதி யானது பாயும், Payum - ப்ரவஹிக்கப் பெற்ற கண புரத்து, Kanna Purathu - திருக் கண்ணபுரத்தில் எழுந்தருளி யிருக்கிற ஏ வரி வெம் சிலை வலவா, E Vari Vem Silai Valavaa - அம்புகள் தொடுக்கப்பெற்று அழகியதாய் (ச் சத்துருக்களுக்கு)க் கொடிதா யிருந்துள்ள வில்லை ஆள வல்லவனே |
| 729 | பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 11 | கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் காகுத்தன்
தன் அடி மேல் தாலேலோ என்று உரைத்த தமிழ் மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே | பதவுரை Show / Hideஎன் காகுத்தன் தன் அடி மேல், En Kaakuththan Than Adi Mel - என் ஸ்வாமியான இராமபிரான் விஷயமாக தாலேலோ என்று உரைத்த, Thalelo Endru Uraitha - (கௌஸல்யை) தாலாட்டிச் சொன்ன பாசுரங்களை (உட்கொண்டு) கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன், Kol Navilum Vel Valavan Kudai Kulashekaran - கொலைத் தொழில் புரிகின்ற வேலாயுதத்தைச் செலுத்த கன்னி நல் மா மதிள் புடை சூழ் கண புரத்து, Kanni Nal Maa Mathil Pudai Soozh Kanapurathu - சாச்வதமான சிறந்த அழகிய மதிள்கள் நாற்புறமும் சூழப் பெற்ற திருக்கண்ணபுரத்திலே சொன்ன, Sonna - அருளிச் செய்த பன்னிய நூல் தமிழ் மாலை பத்தும், Panniya Nool Tamil Maalai Paththum - பரம்பியதாய் ஸலக்ஷணமாய்த் தமிழ்ப் பாமாலை ஆகிய இப்பத்துப் பாசுரங்களையும் வல்லார், Vallaar - அதிகரிக்க வல்லவர்கள் |