திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1922 | பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (காலத்தைத் தப்பினான் ஆயிற்று -ஒப்பித்து வர வேண்டுகையாலே – இவர்களுக்கு உடலாக ஒப்பிக்கிறத்தோடு-இவர்களோடு சம்ஸ்லேஷிக்கிறதோடு வாசி என் என்றாயிற்று -அவன் படி – இருந்தபடியே உகக்கிற எங்களுக்கு ஒப்பிக்க வேணுமோ – கிட்டி வரச் செய்தேயும் காலத்தைத் தப்பி வருகையாலே ஓர் அடியிலே பத்தடி இட்டான் ஆயிற்று –சாபராதன் ஆகையாலே கிட்டி வர மாட்டுகிறிலன்- ஆற்றாமையாலே புறம்பு போக மாட்டுகிறிலன்–ஒப்பித்துக் கொடு வர வேணுமோ – காலத்தைத் தப்பி வர வேணுமோ – சாபராதனானால் மேல் விழ வன்றோ வடுப்பது) 1 | காதில் கடிப்பிட்டுக் கலிங்கம் உடுத்துத்
தாது நல்ல தண்ணம் துழாய் கொடு அணிந்து
போது மறுத்துப் புறமே வந்து நின்றீர்
ஏதுக்கு யிதுவென் யிதுவென் யிதுவென்னொ –10-8-1 | பதவுரை Show / Hideகாதில், Kaadhil - காதிலே (- (பெரியவரே) (இது ஏன்? இது ஏன்? இது ஏன்?)) கடிப்பு, Kadippu - குண்டலத்தை இட்டு, Ittu - அணிந்துகொண்டும் கலிங்கம் உடுத்து, Kalingam Uduthu - திருப்பரியட்டத்தைச் சாத்திக் கொண்டும் தாது நல்ல த ண் அம் துழாய், Thaadu Nalla Tha N Am Thuzhai - தாதுகளையுடைத்தாய நல்ல குளிர்ந்த அழகிய திருத்துழாய்மாலையை அணிந்து கொடு, Aninthu Kodu - அணிந்து கொண்டும் போது மறித்து வந்து, Podhu Marithu Vandu - காலதாமதமாக வந்து புறமே, Purame - கதவின் புறமாக எதுக்கு நின்றீர், Ethukku Nindreer - ஏன் நிற்கின்றீர் |
| 1923 | பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரத்யபிஜ்ஞார்ஹம் அல்லாத காலத்திலேயே வந்தார் இவர் –அந்ய பரதை பாவித்து வர வேணுமோ – கதவுக்கு புறம்பே நிற்க வேணுமோ – தள்ளவும் போகாதே ஒழிய வேணுமோ) 2 | துவராடையுடுத்து ஒரு செண்டு சிலுப்பி
கவராக முடித்துக் கலிக்கச்சுக் கட்டி
சுவரார் கதவின் புறமே வந்து நின்றீர்
இவராரிது வென் யிதுவென் யிதுவென்னொ –10-8-2 | பதவுரை Show / Hideதுவர் ஆடை, Thuvar Aadai - சிவப்பு நிறமான திருப்பரியட்டத்தை (- (இது என் இது என் இது என்?)) உடுத்து, Uduthu - சாத்திக்கொண்டு ஒரு செண்டு சிலுப்பி, Oru Sendu Siluppi - ஒருசெண்டையும் கையால்) சிலுப்பிக்கொண்டு கவர் ஆக முடித்து, Kavar Aaga Mudithu - (கிருக்குழலை) வாரிமுடித்து, கலி கச்சு கட்டி, Kali Katchu Katti - வலியகச்சுப்பட்டையை (இடுப்பில்) கட்டிக்கொண்டு சுவர் ஆர் கதவின் புறமே, Suvar Aar Kathavin Purame - சுவரோடு சார்ந்த கதவின் புறமாக வந்து நின்றீர், Vandu Nindreer - வந்து நிற்கின்றீர், இவர் ஆர், Ivar Aar - இப்படி நிற்கிற இவர் ஆர் கொல்? |
| 1924 | பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நஞ்சுண்டாரைப் போலே மோஹிக்கும் படியாக பண்ணை நுனுங்கிக் கொண்டு வந்து – ராத்ரியிலே பிரசித்தராய் இருப்பார் அப்ரசித்தரைப் போலே வரக் கடவதோ பண்ணை ந னுக்கிக் கொடு வரக் கடவோதோ ராத்ரியிலே வரக் கடவதோ) 3 | கருளக் கொடி ஒன்றுடையீர் தனிப் பாகீர்
உருளச் சகடமது உறக்கில் நிமிர்த்தீர்
மருளைக் கொடு பாடி வந்து இல்லம் புகுந்தீர்
இருளத்து இது என் இது என் இது வென்னோ –10-8-3 | பதவுரை Show / Hideகருளன், Karulan - கருடனாகிற (- (இது என் இது என் இது என்?)) கொடி ஒன்று உடையீர், Kodi Ondru Udaireer - ஒரு த்வஜத்தையுடையவரே! தனி பாகீர், Thani Baageer - அக்கருடனை நடத்துவதில் ஒப்பற்றவரே! உறக்கில், Urakkil - தூங்கும்போது சகடம் அது, Sakadam Adhu - அஸுரனாவாவேசிக்கப் பட்ட) வண்டியானது உருள, Urula - உருமாய்ந்துபோம்படி நிமிர்த்தீர், Nimirtheer - திருவடியைத்தூக்கினவரே! இருளத்து, Irulathu - இவ்விராப்போதிலே மருள, Marula - (பெண்கள்) மோஹிக்கும்படியாக பாடிக்கொடு வந்து, Paadikkodu Vandu - இசைபாடிக் கொண்டு வந்து இல்லம் புகுந்தீர், Illam Pugundheer - வீட்டினுள் வந்து சேர்ந்தீர், |
| 1925 | பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அரண் அழித்து வருவார் ஆதரம் உடையார் அன்றோ – பூர்ணராய் இருப்பார் அபூர்ணரைப் போலே வரக் கடவதேயோ – கலக்க வருவார் அப்ரசித்தமாக வன்றோ வருவது -அரண் அழித்து வர வேணுமோ) 4 | நாமம் பலவுமுடை நாரண நம்பீ
தாமத் துளவம் மிக நாறிடுகின்றீர்
காமன் எனப்பாடி வந்து இல்லம் புகுந்தீர்
ஏமத்து இது என் இது என் இது என்னோ –10-8-4 | பதவுரை Show / Hideநாமம் பலவும் உடை, Naamam Palavum Udai - பல பல திருநாமங்களையுடைய (- (இது என் இது என் இது என்?)) நாரண நம்பி, Naarana Nambi - ஸ்ரீமந்நாராயணமூர்த்தியே! மிக நாறு, Miga Naaru - மிகவுமு பரிமளித்துக்கொண்டிருக்கிற துளபம் தாமம், Thulabam Thaamam - திருத்துழாய்மாலையை இடுகின்றீர், Idhuginreer - அணிந்துகொண்டிருப்பவரே! காமன் என, Kaaman Ena - மன்மதன்போல பாடி வந்து, Paadi Vandu - பாடிக்கொண்டுவந்து ஏமத்து, Emathu - இராப்பொழுதில் இல்லம்புகுந்தீர், Illampugundheer - வீட்டினுள் புகுந்தீர், |
| 1926 | பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மயிர் முடி பேணாதே வர வேணுமோ –ஆயுதத்தோடு வர வேணுமோ – பின்னை வெற்றி கொண்டாடி நிற்க வேணுமோ) 5 | சுற்றும் குழல் தாழச் சுரிகை அணைத்து
மற்றும் பல மா மணி பொன் கொடணிந்து
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர்
எற்றுக்கு இது என் இது என் இது என்னோ –10-8-5 | பதவுரை Show / Hideகுழல், Kuzhal - திருக்குழல்களானவை (- (இதுஎன் இதுஎன் இதுஎன்?)) சுற்றும், Sutrum - பிடரியைச்சுற்றிலும் தாழ, Thaa - தாழ்ந்தலையப்பெற்றும் சுரிகை, Surigai - உடைவாளை அணைத்து, Anaiththu - தரித்துக்கொண்டும் மற்றும் பல, Mattrum Pala - மற்றும் பலவகைப்பட்ட மா மணி, Maa Mani - சிறந்த ரத்னாபரணங்களையும் பொன், Pon - பொன்னுபரணங்களையும் அணிந்துகொடு, Anindhukodu - சாத்திக்கொண்டும் முற்றம் புகுந்து, Muttram Pugundhu - (எங்கள்வீட்டு) முற்றத்திலே வந்து சேர்ந்து முறுவல் செய்து, Muruvai Seidhu - புன்சிரிப்புச் சிரித்து ஏற்றுக்கு நின்றீர், Aetrukku Nindheer - எதுக்காக நிற்கிறீர்? |
| 1927 | பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வ்யதிரேகத்தில் முடிவார்க்கு அன்றோ நீ உதவுவது –பிரணயிநி பக்கல் ஆயுதத்தோடு வர வேணுமோ – இடம் அறிந்து அன்றோ வருவது) 6 | ஆனாயரும் ஆநிரையும் அங்கு ஒழியக்
கூனாய தோர் கொற்ற வில் ஓன்று கை ஏந்திப்
போனார் இருந்தாரையும் பார்த்துப் புகுதீர்
ஏனோர்கள் முன் இது என் இது என் இது என்னோ –10-8-6 | பதவுரை Show / Hideஆன் ஆயரும், Aan Aayarum - கோபாலர்களையுமு (- (இதுஎன் இதுஎன்?)) ஆ நிரையும், Aa Niraiyum - பசுக்கூட்டங்களையும் அங்கு ஒழிய, Angu Ozhiy - அங்கேவிட்டுவிட்டு, கூன் ஆயது, Koon Aayadhu - வளைந்திருப்பதாய் கொற்றம், Kotrham - ஐச்வாயஸூசகமான வில் ஒன்று, Vil Ondru - ஒருவில்லை கை ஏந்தி, Kai Aendhi - கையில் பிடித்துக்கொண்டு போனார் இருந்தாரையும் பார்த்து புகுதீர், Ponar Irundharaiyum Paarthu Pugudheer - போனவர்கள் யார், இருப்பவர்கள் யார் என்று பார்த்துக் கொண்டு வருகின்றீர், ஏனோர்கள் முன் என், Aenorkal Mun En - பிரதிகூலர்களின் எதிரே ஏனிப்படி? |
| 1928 | பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உம்மை நீர் அறிந்தால் காலத்தைக் குறித்தே போவது எங்களை அறிந்தால் சொன்ன போதிலே வர வேண்டாவோ உறவு முறையாரைப் போலே நீர் கவிழ்ந்து இருக்கிறது என் –இங்கே வாரீர் – உம்மை நீர் அறிய வேண்டாவோ –எங்களை அறிய வேண்டாவோ) 7 | மல்லே பொருத திரள் தோள் மணவாளீர்
அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தைச்
சொல்லாது ஒழியீர் சொன்ன போதினால் வாரீர்
எல்லே இது என் இது என் இது என்னோ –10-8-7 | பதவுரை Show / Hideமல், Mal - மல்லர்களை (- (இதுஎன் இதுஎன் இதுஎன்?)) பொருத, Porutha - போர்செய்தழித்த திரள் தோள், Thiral Thol - திரண்ட புஜங்களையுடைய மணவாளீர், Manavaaleer - மணவாளரே! நும் மனத்தின் கருத்தை, Num Manaththin Karuththai - உம்முடைய திருவுள்ளத்தை அல்லே, Alle - (நேற்று) இரவே அறிந்தோம், Arindhom - தெரிந்துகொண்டோம் சொல்லாது ஒழியீர், Sollaadhu Ozhiyheer - (இன்னபோது வகுவேனென்லாமற் போகிறீரில்லை, சொன்ன போதினால் வாரீர், Sonna Podhinal Vareer - குறிப்பிட்டகாலத்தின்படி வருகிறீல்லை, எல்லை, Ellai - அந்தோ!, |
| 1929 | பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உமக்கு சத்ருசராய் இருப்பவர் பலரும் அல்லையோ-இது தன்னைக் கொண்டாடும் அவர்கள் அன்றோ அவர்கள் – இது என்ன கஷ்டமோ–சாஹாசங்களைச் செய்யக் கடவ நீர் இங்கே வந்தது என் – குறைவற்ற நீர் இங்கே வந்தது என் – மேன்மை உடையார் வரக் கடவதோ) 8 | புக்கு ஆடு அரவம் பிடித்து ஆட்டும் புனிதீர்
இக்காலங்கள் யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம்
தக்கார் பலர் தேவிமார் சால யுடையீர்
எல்லே இது என் இது என் இது என்னோ –10-8-8 | பதவுரை Show / Hideபுக்கு, Pukku - (பொய்கையிலே) குதித்து (- (இதுஎன் இதுஎன் இதுஎன்)) ஆடு அரவம் பிடித்து, Aadu Aravam Pidiththu - படமெடுத்தாடுகின்ற காளிய நாகத்தைப் பிடித்து ஆட்டும், Aattum - ஆட்டிவாட்டின புனிதீர், Punitheer - பரிசுத்தரே! இக்காலங்கள், Ikkaalangal - இப்போது யாம், Yaam - நாங்கள் உமக்கு, Umakku - உமக்கு ஏது ஒன்றும் அல்லோம், Aethu Ondrum Allom - ஒருசரக்காகவும் எண்ணப்படுவோமல்லோம், தக்கார், Thakkar - உமக்குத் தகுத்திருப்பவர்களாய் பலர், Palar - அளவற்றவர்களான தேவிமார், Devimar - மஹிஷீவர்க்கங்களை சால, Sala - மிகவும் உடையீர், Udaiyeer - உடையராயிருக்கின்றீர் எக்நே, Eknai - இது என்ன கஷ்டகாலம்! |
| 1930 | பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வ்யதிரேகத்தால் தரியாதவர்கள் இருக்க-உன்னைக் கொண்டு கார்யம் இன்றிக்கே இருப்பார்க்கு அன்றோ நீ உதவுவது -என்று சொல்லப் புக்காள்- இவ்வார்த்தை சொல்லித் தலைக் கட்டினால் பின்னை தனக்கு அவகாசம் அறும் -என்று பார்த்து அதுக்கு முன்பே காலைப் பிடித்தான் காலைப் பிடிக்கிறது என் –மார்வத்து எழுத்து என்கிறது என்-வாயிது விரல் இது என்கிறது என்) 9 | ஆடி அசைந்து ஆய் மடவாரொடு நீ போய்க்
கூடிக் குரவை பிணை கோமளப் பிள்ளாய்
தேடித் திரு மா மகள் மண் மகள் நிற்ப
ஏடி இது என் இது என் இது என்னோ –10-8-9 | பதவுரை Show / Hideதிரு மா மகள், Thiru Ma Magal - பெரிய பிராட்டியாம் (- (இதுஎன் இதுஎன்?)) மண் மகள், Man Magal - பூமிப்பிராட்டியாரும் தேடி நிற்ப, Thedi Nirpa - தேடிக்கொண்டிருக்க நீ போய், Nee Poi - அவர்களை உபேக்ஷித்துப்போய் ஆய் மடவாரொடு, Aai Madavarodu - இடைப்பெண்களோடே கூடி, Koodi - கலந்து குரவை பிணை, Kuravai Pinai - ராஸக்ரீடை நடத்தின கோமளம் பிள்ளயா, Komalam Pillaiya - அழகிய பிள்ளாய்! இது என், Idhu En - இது என்ன காரியம்! ஏடீ, Eadi - வாராய் தோழீ! |
| 1931 | பெரிய திருமொழி || (10-8–காதில் கடிப்பு) - (ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் தானே வந்து மேல் விழச் செய்தேயும் இவர்களுக்கு பாவ பந்தம் கனத்து இருக்கச் செய்தேயும் ஏறிட்டுக் கொண்ட சங்கல்பம் குலையாத படி நின்றதொரு நிலை உண்டு இறே இது கற்றார்க்கு அந்த மிறுக்கு இல்லை) 10 | அல்லிக் கமலக் கண்ணனை யங்கோர் ஆய்ச்சி
எல்லிப் பொழுதூடிய ஊடல் திறத்தைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
சொல்லித் துதிப்பார் அவர் துக்கமிலரே –10-8-10 | பதவுரை Show / Hideஅல்லி கமலம் கண்ணனை, Alli Kamalam Kannanai - தாதுகளையுடைய தாமரைப் பூப்போன்ற திருக்கண்களையுடைய கண்ணபிரானைக்குறித்து அங்கு, Angu - திருவாய்ப்பாடியில் ஓர் ஆய்ச்சி, Or Aaychi - ஓரிடைச்சி எல்லி பொழுது, Elli Pozhudhu - இராப்பொழுதிலே ஊடிய, Oodiya - ப்ரணயரோஷந் தோற்றப்பேசின ஊடல் திறத்தை, Oodal Thirathai - வெறுப்புவார்த்தை விஷயமாக கல்லில் மலி, Kallil Mali - மலையைக்காட்டிலும் அதிசயத்த (வலிமைகொண்ட) தோள், Thol - திருத்தோள்களையுடையரான கலியன், Kalyan - திருமங்கையாழ்வார் சொன்ன, Sonna - அருளிச்செய்த மாலை, Maalaik - இச்சொல்மாலையை துதிப்பார் அவர், Thudhippar Avar - எம்பெருமானை ஏத்துமவர்கள் துக்கம் இலர், Thukkam Ilir - துன்பமற்று வாழப்பெற்றுவர்கள். |