திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2-1 வானவர் (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1048பெரிய திருமொழி || (2-1–வானவர்) (திருவேங்கடம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன் உடைமையை பெறுகைக்கு தன்னை இரப்பாளன் ஆக்கினவர்க்கு–மகாபலிக்கு கொடுத்து அல்லது நிற்க ஒண்ணாத படி விநீத வேஷத்தோடே சென்றான் ஆயிற்று –அவன் அடிமை கொள்வதாக வந்து இரந்து நிற்கிற பின்பு நீயும் அவன் நினைவின் படி போகப் பெறுவதே-என்கிறார் முதல் பாசுரத்தில்) 1
வானவர் தங்கள் சிந்தை போலேன் நெஞ்சமே.இனிவந்து, மாதவ மானவர் தங்கள் சிந்தையமர்ந்துறை கின்றவெந்தை, கானவரிடு காரகிற்புகை யோங்கு வேங்கடம் மேவி, மாண்குறள் ஆன அந்தணற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. –2-1-1
பதவுரை Show / Hide
என் நெஞ்சமே, En Nenjame - என்னுடைய மனமே!
மா தவம் மானவர் தங்கள் சிந்தை, Maa Thavam Maanavar Thangal Sinthai - மிக்க தவஞ் செய்தவர்களான மனிசருடைய நெஞ்சிலே
அமர்ந்து உறைகின்ற எந்தை, Amarnthu Uraikindra Endhai - பொருந்தி வாழ்கின்ற ஸ்வாமியும்
கானவர் இடு கார் அகில் புகை ஓங்கு வேங்கடம் மேவி, Kaanavar Idu Kaar Akil Pugai Ongu Vengadam Mevi - வேடர்கள் ஸமர்ப்பிக்கும் காரகிலபுகை பரவியிருக்கப்பெற்ற திருமலையிலே வாழ்பவனும்
மாண் குறள் ஆன அந்தணற்கு, Maan Kurai Aan Andhanarukku - வாமந ப்ரஹ்மசாரி வடிவெடுத்தவனுமான எம்பெருமானுக்கு
வானவர் தங்கள் சிந்தை போல, Vaanavar Thangal Sinthai Pola - நித்யஸூரிகளுடைய ஹ்ருதயம் போலே (நீயும்)
இனிது உவந்து, Inidhu Uvandu - நன்றாகக் கனிந்து
இன்று, Indru - இப்போது
அடிமை தொழில் பூண்டாயே, Adimai Thozhil Poondhaaye - கைங்கர்ய் வ்ருத்தியை ஏற்றுக் கொண்டாய் காண்.
1049பெரிய திருமொழி || (2-1–வானவர்) (திருவேங்கடம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தண்ணீர் பந்தலை வைத்து நம் அடிமை பெறுகைக்கு தம்மை நமக்குத் தந்து கொடு நிற்கிற நம்மை அடிமை கொள்வதாக ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிதி பண்ணின பரம -தார்மிகனுக்கு அடிமைத் தொழில் பூண்டாய் –அவன் திருமலையில் வந்து நிற்கிற நிலையை நீ ஒருபடி சபலம் ஆக்கினாயே- என்கிறார் இரண்டாம் பாசுரத்தில்) 2
உறவு சுற்றமென் றொன்றிலா வொருவன் உகந்தவர் தம்மை, மண்மிசைப் பிறவி யேகெடுப் பானது கண்டென் நெஞ்சமென்பாய், குறவர் மாதர்க ளோடு வண்டு குறிஞ்சி மருளிசை பாடும் வேங்கடத்து, அறவ நாயகற் கின்று அடிமைத் தொழில் பூண்டாயே. –2-1-2
பதவுரை Show / Hide
என் நெஞ்சம் என்பாய், En Nenjam Enbai - எனது நெஞ்சே!, (- (இன்று அடிமைத்தொழில் பூண்டாயே-.))
உறவு சுற்றம் என்று ஒன்று இலா ஒருவன், Uravum Suttam Endru Ondru Ila Oruvan - பந்துக்கள் தாயாதிகள் என்று சொல்லக்கூடிய எவ்வகை ஆபாஸஸம்பந்தமுமில்லாத அத்விதீயனான பெருமான்
உகந்தவர் தம்மை, Uganthavar Thammai - தானுகந்த அந்தரங்கபக்தர்களுக்கு
மண் மிசை பிறவியே கெடுப்பான் அது கண்டு, Man Misai Piraviye Keduppaan Adhu Kandu - இப்பூமியில் பிறவியைப் போக்குவானென்கிற தன்மையைக் கண்டு
குறவர் மாதர்களோடு, Kuravar Maathargalodu - குறத்திகளோடு கூட
வண்டு, Vandu - வண்டுகள்
குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து, Kurinji Marul Isai Paadum Vengadaththu - குறிஞ்சி, மருள் முதலிய இசைகளைப் பாடுமிடமான திருமலையிலுள்ள
அறவன் நாயகற்கு, Aravan Naayakarukku - பரமதர்மிஷ்டனான அப்பெருமானுக்கு
1050பெரிய திருமொழி || (2-1–வானவர்) (திருவேங்கடம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உபய விபூதி உக்தனான சர்வேஸ்வரனுக்கு –அடிமைத் தொழில் பூண்டாயே – அவாப்த சமஸ்த காமனானவனுடைய குறையை ஒருபடி நிரப்பினாயே ஸ்ரீ திருமலையிலே வந்து புகுந்து இவரை அடிமை கொள்வதற்கு முன்பு உபய விபூதி யோகத்தால் வந்த ஐஸ்வர்யத்தை ஒன்றாக நினைத்திலன் காணுமவன் –என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்) 3
இண்டை யாயின கொண்டு தொண்டர்கள் ஏத்து வாருற வோடும், வானிடைக் கொண்டு போயிடவு மதுகண்டென் நெஞ்சமென்பாய், வண்டு வாழ்வட வேங்கடமலை கோயில் கொண்டத னோடும், மீமிசை அண்ட மாண்டிருப் பாற்கு அடிமைத்தொழில் பூண்டாயே. –2-1-3
பதவுரை Show / Hide
என் நெஞ்சம் என்பாய், En Nenjam Enbai - ஓ மனமே!, (- (அடிமைத்தொழில் பூண்டாயே-.))
இண்டை ஆயின கொண்டு, Indai Aayin Kondo - புஷ்பமாலைகளை ஏந்திக் கொண்டு (தன் பக்கல்வந்து)
ஏத்துவார், Aeththuvaar - ஸ்தோத்ரம் பண்ணுமவர்களான
தொண்டாகள், Thondaagal - தாஸபூதர்களை
உறவோடும், Uravodum - அவர்களுடைய ஸம்பந்த ஸம்பந்திகளோடுங் கூட
கொண்டு போய், Kondupoi - இந்நிலத்தில் நின்றும் கொண்டுபோய்
வானிடை, Vaanidai - பரமபதத்திலே
இட அது கண்டு, Ida Adhu Kandu - (எம்பெருமான்) சேர்க்கிற படியைக் கண்டு,
வண்டு வாழ், Vandu Vaal - வண்டுகள் களித்து வாழப்பெற்ற
வடவேங்கடம்மலை கோயில் கொண்டு, Vadavaengadammalai Koyil Kondo - வடதிசையிலுள்ள திருமலையை திருக்கோயிலாகக் கொண்டு
அதனோடும், Adhanodum - அந்தத் திருமலையையும்
மீமிசை அண்டம், Meemichai Andam - நித்ய விபூதியான திரு நாட்டையும்
ஆண்டு இருப்பாற்கு, Aandu Iruppaarku - ஆண்டு கொண்டிருக்கிற அப்பெருமானுக்கு
1051பெரிய திருமொழி || (2-1–வானவர்) (திருவேங்கடம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜ்ஞாநீத்வாத் மைவ மே மதம் -என்கிறபடியே ஜ்ஞாநிகளைத் தனக்கு ஆத்ம பூதராக உடையவனாய் இருக்கிறவனுக்கு நீயும் ஆவி ஆனாயோ-என்கிறார் நாலாம் பாசுரத்தில்) 4
பாவி யாதுசெய் தாயென் னெஞ்சமே! பண்டு தொண்டுசெய் தாரை, மண்மிசை மேவி யாட்கொண்டு போய்வி சும்பேற வைக்குமெந்தை, கோவி நாயகன் கொண்ட லுந்துயர் வேங்க டமலை யாண்டு, வானவர் ஆவி யாயிருப் பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே. –2-1-4
பதவுரை Show / Hide
என் நெஞ்சமே, En Nenjame - என் மனமே! (- (அடிமைத்தொழில் பூண்டாயே-.))
பாவியாது செய்தாய், Paaviyadhu Seithai - அலைபாயாமல் திண்ணிதான அத்யவஸாயம் கொண்டாய்;
பண்டு மண்மிசை மேவி, Pandhu Manmichai Mevi - முன்பு இந்நிலத்திலே வந்தவதரித்து,
தொண்டு செய்தாரை ஆள் கொண்டுபொய், Thondu Seithaarai Aal Kondupoi - அடிமை செய்தவர்களை ஆட்படுத்திக்கொண்டு போய்
விசும்பு ஏற வைக்கும் எந்தை, Visumbu Eera Vaikkum Endhai - பரமபதத்திலே ஸ்தாபித்தருளும் ஸ்வாமியும்,
கோவி நாயகன், Kovi Naayagan - கோபிகளுக்கு நாதனும்,
கொண்டல் உந்து உயர், Kondal Unthu Uyar - மேகங்களைத் தள்ளும்படியான உயர்த்தியையுடைய (சிகரங்கள் பொருந்திய)
வேங்கடம் மலை, Vaengadam Malai - திருமலையை
ஆண்டு, Aandu - அரசாட்சி செய்துகொண்டு
வானவர் ஆவியாய் இருப்பாற்கு, Vaanavar Aaviyai Iruppaarku - ஞானிகளைத் தனக்கு உயிர் நிலையாகவுடையவனுமான அப்பனுக்கு
1052பெரிய திருமொழி || (2-1–வானவர்) (திருவேங்கடம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பாவியாது -என்று நீ இப்படி விசாரியாதே துணிவதே என்று என்னைக் கொண்டாட வேண்டின ஹேது என் -என்ன விசாரிக்க வேண்டும்படி எத்தனை விஷயம் புறம்பே கிடக்கிறது என்கிறார் – அக் கண்ணில் குளிர்திக்கு இலக்கு ஆவதே –அக் கண் அழகுக்கு ஜிதம் என்று எழுதிக் கொடுத்தார் உடைய வ்ருத்தியிலே அன்வயித்தாயோ-என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5
பொங்கு போதியும் பிண்டி யுமுடைப் புத்தர் நோன்பியர் பள்ளி யுள்ளுறை, தங்கள் தேவரும் தாங்களு மேயாக என்நெஞ்சமென்பாய்! எங்கும் வானவர் தான வர்நிறைந் தேத்தும் வேங்கடம் மேவி நின்றருள், அங்க ணாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. –2-1-5
பதவுரை Show / Hide
என் நெஞ்சம் என்பாய், En Nenjam Enbai - ஓ மனமே!, (- (இன்று அடிமைத்தொழில் பூண்டாயே-.))
பொங்கு, Pongu - கொம்புங்கிளையுமாகப் பணைத்து வளர்ந்திருக்கிற
போதியும், Podhiyum - அரசமரத்தையும்
பிண்டியும், Pindiyum - அசோகமரத்தையும்
உடை, Udai - (தங்களுக்குத் தஞ்சமாக) உடையவர்களான
புத்தர், Puththar - பௌத்தரும்
நோன்பியர், Nonpiyar - அமணரும்
பள்ளியுள் உறை தங்கள் தேவரும் தாங்களுமே ஆக, Palliyul Urai Thangal Thevarum Thangalume Aaga - தமது தேவாலயங்களிலேயுள்ள தங்களுடைய சாமிகளும்  தாங்களுமேயாய் உலகமெங்கும் நிறைந்து கிடக்கச் செய்தேயும் (அந்த மதங்களில் நீ புகாமல்),
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும், Engum Vaanavar Thanavar Nirainthu Aeththum - தேவப்ரக்ருதிகளும் அஸூரப்ரக்ருதிகளும் எங்கும் சூழ்ந்துகொண்டு  போற்றுமிடமான
வேங்கடம், Vengadam - திருமலையிலே
மேவி நின்று, Mevi Nindru - எழுந்தருளியிருந்து
அருள், Arul - அருள்செய்கின்ற
அம் கண் நாயகற்கு, Am Kan Nayakarukku - அழகிய திருக்கண்களையுடைய பெருமானுக்கு
1053பெரிய திருமொழி || (2-1–வானவர்) (திருவேங்கடம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ த்ரி பாத் விபூதி-அதிலே உண்டான ஸ்ரீ அநந்த ஸ்ரீ வைநதேயாதிகளுக்கு நிர்வாஹகன் ஆனவனுக்கு – அமரருடைய வ்யாபாரத்தை அநாதரித்து நித்ய ஸூரிகள் உடைய யாத்ரைகளிலே அன்வயித்தாயே- என்கிறார் ஆறாம் பாசுரத்தில்) 6
துவரி யாடையர் மட்டை யர்சமண் தொண்டர் கள்மண்டி யுண்டு பின்னரும், தமரும் தாங்களுமே தடிக்கஎன் நெஞ்சமென்பாய், கவரி மாக்கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்டகண் ணார்வி சும்பிடை, அமர நாயகறகு இன்றடிமைத் தொழில் பூண்டாயே. –2-1-6
பதவுரை Show / Hide
என் நெஞ்சம் என்பாய், En Nenjam Enbai - ஓ மனமே!, (- (நீயும் அவர்களைப்போலே உண்டு தடிக்க நினையாமல்) (இன்று அடிமைத்தொழில் பூண்டாயே-.))
துவரி ஆடையர், Thuvari Aadaiyar - காஷாய வஸ்த்ரமுடுத்தவர்களாய்
மட்டையர், Mattaiyar - மொட்டைத்தலையரா யிருக்கிற
சமண் தொண்டர்கள், Saman Thondargal - சமணமதக்காரர்கள்
மண்டி, Mandi - ஒருவர்க்கொருவர் மேல் விழுந்து
உண்டு, Undu - (மனம்போன படி) உணவுகளை உட்கொண்டு
பின்னரும், Pinnarum - மேலும்
தாங்களும் தமரும் தடிக்க, Thangalum Thamarum Thadikka - அவர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் உடல் தடித்துக்கிடக்க,
கவரி மா கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்ட, Kavari Maa Kanam Serum Vengadam Koyil Konda - சவரிமான்கள் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்திருக்கப்பெற்ற திருமலையைக் கோயிலாகக் கொண்டவனும்
கண் ஆர் விசும்பிடை அமரர் நாயகற்கு, Kan Aar Visumpidai Amarar Nayakarukku - விசாலாமான பரமபதத்திலேயுள்ள நித்யஸூரிகளுக்குத் தலைவனுமான பெருமானுக்கு
1054பெரிய திருமொழி || (2-1–வானவர்) (திருவேங்கடம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆதித்ய அந்தராத்மாவாய் இருக்கும் என்று அனுசந்தித்துப் போகை அன்றிக்கே கண்ணாலே கண்டு அடிமை செய்து அனுபவிக்கப் பெற்றாயே நீ –என்கிறார் ஏழாம் பாசுரத்தில்) 7
தருக்கி னால்சமண் செய்து சோறுதண் தயிரினால்திரளை,மிடற்றிடை நெருக்கு வார்அலக் கணது கண்டென் நெஞ்சமென்பாய், மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டத னோடும், வானிடை அருக்கன் மேவிநிற் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே. –2-1-7
பதவுரை Show / Hide
தருக்கினால், Tharukkinaal - வெறும் தர்க்கங்களாலே (- (அடிமைத்தொழில் பூண்டாயே-.))
சமண் செய்து, Saman Seythu - தங்களுடைய சமண மதத்தைப்பற்றி வாது செய்துகொண்டு
தண் தயிரினால், Than Thayirinaal - நல்ல தயிரோடு கூடிய
சோறு திரளை, Sooru Thiralai - சோற்றுக் கவளத்தை
மிடறு இடை, Mitaru Idai - கழுத்துக்குள்ளே யிட்டு
நெருக்குவார், Nerukkuvaar - அடைப்பவர்களான அந்தச் சமணருடைய
அலக்கண் அது, Alakkan Adhu - அப்படிப்பட்ட திண்டாட்டத்தை
கண்டு, Kandu - பார்த்து
என் நெஞ்சம் என்பாய், En Nenjam Enbai - ஓ மனமே! (நீ அவர்களுடைய திரளில் சேராமல்)
வண்டுகள், Vandugal - வண்டுகளானவை
மருட்கள், Marutkal - மருள் முதலிய இசைகளை
பாடும், Paadum - பாடுமிடமான
வேங்கடம், Vengadam - திருமலையை
கோயில் கொண்டு, Koyil Kondu - திருக்கோயிலாகக் கொண்டு
அதனோடும், Adhanodum - அவ்வளவுமாத்திரமன்றிக்கே
வானிடை, Vaanidai - ஆகாசத்திலே (திரிகிற)
அருக்கன், Arukkan - ஸூர்யமண்டலத்திலும்
மேவி நிற்பாற்கு, Mevi Nirpaaruku - பொருந்தியிருக்கும் பெருமானுக்கு
1055பெரிய திருமொழி || (2-1–வானவர்) (திருவேங்கடம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன்னோராயிரம் பிள்ளைகளுக்கு தலைவன் ஆனவனுக்கு வரையாதே ரஷகன் ஆனவனுக்கு அடிமை செய்கையிலே ஒருப்பட்டாயே-என்கிறார் எட்டாம் பாசுரத்தில்) 8
சேயனணியன் சிறியன் பெரிய னென்பது சிலர்ப்பேசக் கேட்டிருந்தே, என் னெஞ்சமென் பாய் எனக் கொன்று சொல்லாதே, வேய்கள் நின்றுவெண் முத்த மேசொரி வேங்க டமலை கோயில் மேவிய, ஆயர் நாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே. –2-1-8
பதவுரை Show / Hide
சேயன் என்பது, Seyan Enbadhu - (அவன்) வெகு தூரத்திலுள்ளவன் (அவனை எப்படி தொழ முடியும்) என்று சொல்லுவதும், (- (பரமபதநாதனைத் தொழுங்கள் என்றால்) (அர்ச்சாரூபியான எம்பெருமானைத் தொழுங்கள் என்றால்) (ஸ்ரீ கிருஷ்ணனைத் தொழுங்கள் என்றால்) (வ்யூஹவாஸூதேவனையும் அந்தர்யாமியான பெருமானையும் தொழுங்கள் என்றால்) (அந்த துர்வாதிகளின் திரளில் புகாமல்) (இன்று அடிமைத்தொழில் பூண்டாயே-))
அணியன்  என்பது, Aniyan Enbadhu - (இவன்) இதோ இருக்கிறானே (இவனையா தொழுவது) என்று சொல்லுவதும்,
சிறியன் என்பது, Siriyan Enbadhu - (இவன்) இழிகுலத்திலே பிறந்தவனாயிற்றே (இவனையோ தொழுவது) என்று சொல்லுவதும்,
பெரியன் என்பதும், Periyan Enbadhu - கைக்கு எட்டாதவனை எப்படி தொழுவது? என்று சொல்லுவதுமாய் (ஆக இப்படியெல்லாம்)
சிலர் பேச, Silar Pesu - சில துர்ப்பாக்கியசாலிகள் பேசாநிற்க,
என் நெஞ்சம் என்பாய், En Nenjam Enbai - ஓ மனமே!
கேட்டிருந்தே, Kettirundhe - (அந்த குத்ஸிதவாதங்களை நீ) ;கேட்டு வைத்தும்
எனக்கு ஒன்று சொல்லாதே, Enakku Ondru Sollaadhe - என்னிடத்திலும் ஒரு வார்த்தை சொல்லாமல்,
வேய்கள், Veygal - மூங்கில்களானவை
நின்று, Ninru - ஒரு படிப்பட நின்றுகொண்டு
வெண்முத்தமே சொரி, Venmuthame Sori - வெளுத்த முத்துக்களைச் சொரியுமிடமான
வேங்கடம் மலை, Vaengadam Malai - திருமலையை
கோயில் மேவிய, Koyil Meviyah - கோயிலாக விரும்பிய
ஆயர்நாயகற்கு, Aayarnayakarukku - ஸ்ரீ கோபால கிருஷ்ணனுக்கு
1056பெரிய திருமொழி || (2-1–வானவர்) (திருவேங்கடம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பலரும் அவனை ஆஸ்ரயித்து பின்னையும் காணப் பெறார்கள் – ப்ரஹ்மாதிகள் அநந்தரம் தம் தாம் அதிகார அர்த்தமாக ஆஸ்ரயியா நிற்பர்கள் – நீ இவ்விரண்டு கோடியிலும் இன்றிக்கே அவன் பக்கலிலே அடிமை புக்காயே-என்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில்) 9
கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய் என்நெஞ்சமென் பாய் துணிந்துகேள், பாடி யாடிப் பலரும் பணிந்தேத்திக் காண்கிலா, ஆடு தாமரை யோனு மீசனும் அமர் கோனும்நின் றேத்தும்,வேங்கடத்து ஆடு கூத்தனுக் கின்று அடிமைத்தொழில் பூண்டாயே. –2-1-9
பதவுரை Show / Hide
கூடி, Koodi - உலகத்தாரோடே கூடி (- (இதற்கு முன்பெல்லாம்) (இன்று அடிமைத்தொழில் பூண்டாயே-.))
ஆடி, Aadi - அவர்கள் எந்த விஷயங்களிலே ஊன்றுவர்களோ அந்த விஷயங்களிலே ஊன்றி,
உரைத்ததே உரைத்தாய், Uraiththade Uraiththai - அவர்கள் என்ன வார்த்தைகளைச் சொல்லுவார்களோ அந்த வார்த்தை களையே சொல்லிக் கொண்டிருந்த
என் நெஞ்சம் என்பாய், En Nenjam Enbai - என் மனமே!
துணிந்து கேள், Thuninthu Kela - (இப்போது நான் உனக்கு மகிழ்ந்து சொல்வதை) விச்வஸித்துக் கேள்;
பலரும், Palarum - எத்தனையோ பேர்கள்
பாடி, Paadi - (பகவத் குணங்களைப்) பாடிக் கொண்டும்
ஆடி, Aadi - கூத்தாடிக்கொண்டும்
பணிந்து, Paninthu - ஆச்ரயித்து
ஏத்தி, Aethi - துதித்தும்
காண்கிலா, Kankila - ஸாக்ஷாத்கரிக்க முடியாதவனும்,
ஆடு தாமரையோனும் ஈசனும் அமரர் கோனும் நின்று ஏத்தும் வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு, Aadu Thamaraiyonum Eesanum Amarar Konum Ninru Aethum Vengadathu Aadu Koothanukku - வெற்றியையுடைய பிரமனும் சிவனும் இந்திரனும் நிலை நின்று போற்றுமிடமான திருமலையிலே நிற்பவனும் (முன்பு) குடக்கூத்தாடினவனுமான பெருமானுக்கு
1057பெரிய திருமொழி || (2-1–வானவர்) (திருவேங்கடம் 4) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருமங்கையில் உள்ளாருக்கு பிரதாநரான ஸ்ரீ ஆழ்வார் இன் தமிழாலே அருளிச் செய்த இப்பத்தும் பாட வல்லார்க்கு பூண்ட வடிமை நித்யமாக செல்லும் தேசத்தை இருப்பிடமாக உடையவர் ஆவர்- என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10
மின்னு மாமுகில் மேவு தண்திரு வேங்க டமலை கோயில்மேவிய, அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை, கன்னி மாமதிள் மங்கை யர்க்கலி கன்றி யிந்தமி ழாலு ரைத்த, இம் மன்னு பாடல்வல் லார்க்கிட மாகும் வானுலகே. –2-1-10
பதவுரை Show / Hide
மின்னும் மா முகில் மேவு, Minnum Maa Mukil Mevu - மின்னுகின்ற காளமேகங்கள் வந்து சேருகிற
தண் திரு வேங்கடம் மலை கோயில் மேவிய, Than Thiru Vengadam Malai Koyil Meviyah - குளிர்ந்த திருமலையைக் கோயிலாகக் கொண்டு எழுந்தருளி யிருப்பவனும்,
அன்னம் ஆய் நிகழ்ந்த, Annam Aay Nigazhndha - ஹம்ஸ ரூபியாய்த் திரு வவதரித்தவனும்
அமரர் பெருமானை, Amarar Perumanai - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனுமான பெருமான் விஷயமாக,
கன்னி மா மதிள் மங்கையர் கலிகன்றி, Kanni Maa Madi Mangkaiyar Kalikanri - நிலைநின்ற பெரிய மதில்களையுடைய திருமங்கை நாட்டில் உள்ளவர்களுக்குத் தலைவரான ஆழ்வார்
இன் தமிழால் உரைத்த, In Tamizhal Uraitha - செவிக்கினிய தமிழ்ப் பாஷையாலே அருளிச்செய்த
மன்னு, Mannu - (வேதம்போலே) நித்யமான
இப்பாடல், Ippadal - இப்பாசுரங்களை
வல்லார்க்கு, Vallarkku - ஓதவல்லவர்களுக்கு
வான் உலகு, Vaan Ulagu - பரமபதம்
இடம் ஆகும், Idam Aakum - வாஸஸ்தானமாகும்.