திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2-8 திரிபுரம் (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1118பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு சிறுக்கனுக்கு தமப்பன் பகையாக அவனிலும் அணியனாய் உதவி நோக்கினவனைப் போலே இரா நின்றார் -இவர் யார் தான் என்கிறாள்-அடையாளம் சொல்லா நிற்கச் செய்தே நிச்சயிக்க ஒண்ணாத படி இறே விஷய ஸ்வபாவம் – ஒரு சிறுக்கனுக்காக உதவின அவ்வளவோ –உனக்கு உதவுகைகாக இங்கே வந்து அவசர ப்ரதீஷனாய் வந்து நிற்கிறவன் அன்றோ நான் -என்கிறார் முதல் பாசுரத்தில்) 1
திரிபுர மூன்றெரித் தானும்மற்றை மலர்மிசை மேலய னும்வியப்ப, முரிதிரை மாகடல் போல்முழங்கி மூவுல கும்முறை யால்வணங்க, எரியன கேசர வாளெயிற்றோ டிரணிய னாக மிரண்டுகூறா, அரியுரு வாமிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. –2-8-1
பதவுரை Show / Hide
திரிபுரம் மூன்று எரித்தானும், Thiripuram Moondru Erithaanum - எங்குந் திரிந்துகொண்டு உலகங்கட்குத் துன்பம் விளைத்துக் கொண்டிருந்த மூன்று பட்டணங்களைக் கொளுத்தியொழித் தவனான சிவபிரானும் (- (அதற்கு அவர்))
மலர் மிசை மேல் அயனும், Malar Misai Mael Ayanum - தாமரை மலரிற் பிறந்து மேன்மை பொருந்திய பிரமனும்
வியப்ப, Viyappa - ஆச்சரியப்படவும்,
மூ உலகும், Moo Ulagum - மூன்று லோகங்களிலுமுள்ளவர்கள்
முரி திரைமா கடல் போல் முழங்கி, Muri Thiraimaa Kadal Pool Muzhangi - அலையெறிகின்ற பெரிய கடல் போலே (ஸ்தோத்ர) கோஷங்களைச் செய்து கொண்டு
முறையால், Murayal - முறைதவறாது
வணங்க, Vananga - வணங்கவும்,
இரணியன் ஆகம் இரண்டு கூறு ஆ, Iraniyan Aagam Irandu Koordu Aa - இரணியாசுரனுடைய உடல் இரண்டு பிளவாம்படியாக
எரி அன கேசரம், Eri An Kesaram - நெருப்புப்போன்ற உளைமயிர்களோடும்
வாள் எயிற்றோடு, Vaal Eiyitroadu - வாள்போன்ற கோரப்பற்களோடும் கூடி
அரி உரு ஆம் இவர், Ari Uru Aam Ivar - நரசிங்கவுருக்கொண்ட பெருமானைப் போன்றுள்ள இப்பெரியவர்
ஆர் கொல் என்ன, Aar Kol Enna - யார்? என்று நான் சொல்ல,
அட்டபுய கரத்தேன் என்றார், Attapuy Karatthen Endraar - ‘அட்டபுயகரக்ஷேத்ரத்திலுள்ளவன்; நான்’  என்று மறுமொழி கூறினார்.
1119பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வீரத்தைப் பார்த்தவாறே சத்ருக்களும் யேத்தும்படியாய் இருந்தது – சீலத்தைப் பார்த்தவாறே அனுகூலர் அடைய யேத்தும்படியாய் இருந்தது – இவரை இன்னார் என்று நிச்சயிக்க போகிறது இல்லையீ கழஞ்சு மண் இரந்து வந்தவன் அல்லேன் உன்னை இரந்து வந்தவன் நான் பிறர்க்காக இரந்தவன் அல்லேன் எனக்காக இரந்தவன் என்கிறார்- இரண்டாம் பாசுரத்தில்) 2
வெந்திறல் வீரரில் வீரரொப்பார் வேத முரைத்திமை யோர்வணங்கும், செந்தமிழ் பாடுவார் தாம்வணங்கும் தேவ ரிவர்கொல் தெரிக்கமாட்டேன், வந்து குறளரு வாய்நிமிர்ந்து மாவலி வேள்வியில் மண்ணளந்த, அந்தணர் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. –2-8-2
பதவுரை Show / Hide
இமையோர், Imaiyor - தேவர்கள் (- (மாவலி நீர் வார்த்து தத்தம் பண்ணினவாறே) (அட்புயகரத்தேன் என்றார்-.))
வேதம் உரைத்து, Vedham Uraithu - வேத வாக்கியங்களைச் சொல்லி
வணங்கும், Vanangum - வணங்க நின்ற
வெம் திறல் வீர்ரில் வீரர் ஒப்பார் இவர், Vem Thiral Veeril Veerar Oppaar Ivar - மிக்க வலிவுகொண்ட வீரர்களிலுங் காட்டில் மஹாவீரரான இராமபிரானைப் போன்றுள்ள இப்பெரியவர்
செம் தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர்கொல், Sem Tamil Paaduvaar Thaam Vanangum Thevarkol - அழகிய தமிழ்ப் பாசுரங்களைப் பாடின முதலாழ்வார்கள் வணங்கப் பெற்ற திருவேங்கடமுடையானோ?
தெரிக்க மாட்டேன், Therikka Maatten - அறிகின்றிலேன்;
மாவலி வேள்வியில், Mavali Velviyil - மஹாபலியின் யாகபூமியிலே
குறள் உரு ஆய் வந்து, Kural Uru Aay Vandhu - வாமநவுருக் கொண்டுவந்து
நிமிர்ந்து, Nimirndhu - திரிவிக்கிரமனாக வளர்ந்து
மண் அளந்த, Man Alandha - பூமியை அளந்துகொண்ட
அந்தணர் போன்ற இவர் ஆர் கொல் என்ன, Andhanar Ponda Ivar Aar Kol Enna - பிரமசாரியைப் போலுமிரா நின்ற இப்பெரியவர் ஆர்? என்ன,
1120பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (யுத்த உன்முகமாய் இருக்கிற குவலயாபீடத்தை முடிக்கும்படியாக நிறத்துக்கு பரபாகமான வெண்மையை உடைய கொம்பை பறித்து இருண்ட மேகம் போலே இருக்கிற இவர் ஆர் தான் என்ன மேல் வார்த்தை – கம்ச ப்ரேரிதமான குவலையா பீடத்தை நிரசித்து கம்சன் படைவீட்டில் பெண்கள் பயத்தைப் போக்கின அவ்வளவே அல்ல உன் பயம் தீர்க்கைகாக வந்து நிற்கிறவன் நான் என்கிறார் மூன்றாம் பாசுரத்தில்) 3
செம்பொ னிலங்கு வலங்கைவாளி திண்சிலை தண்டொடு சங்கமொள்வாள், உம்ப ரிருசுட ராழியோடு கேடக மொண்மலர் பற்றியெற்றே, வெம்பு சினத்தடல் வேழம்வீழ வெண்மருப் பொன்று பறித்து,இருண்ட அம்புதம் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. –2-8-3
பதவுரை Show / Hide
வலம் கை, Valam Kai - வலத்திருக்கைpயலே (- (அட்டபுயகரத்தேன் என்றார்-.) (எற்றே!–; இது என்ன ஆச்சரீயம்!..))
இலங்கு, Ilangu - விளங்குகின்ற
செம் பொன், Sem Pon - பசும்பொன்னாற் செய்யப்பட்ட
வாளி, Vaali - அம்புகளையும்
திண் சிலை, Thin Silai - திண்ணிதான சார்ங்க வில்லையும்
தண்டொடு, Thandodu - கௌமோதகி யென்னும் கதையையும்
சங்கம், Sangam - ஸ்ரீ பாஞ்சஜந்யத்தையும்
ஒள் வாள், Ol Vaal - அழகிய நந்தவகவாளையும்,
உம்பர், Umbar - (ஆயதங்களெல்லா வற்றினும்) மேற்பட்டு
இரு சுடர், Iru Sudar - மிக்க தேஜஸ்ஸையுடைய
ஆழியோடு, Azhiyodu - திருவாழியாழ்வானையும்
கேடகம், Kedagam - கேடயத்தையும்
ஒண் மலர், On Malai - அழகிய புஷ்பத்தையும்
பற்றி, Patri - தரித்துக்கொண்டு,
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ, Vembu Sinathu Adal Vezham Veel - மிக்க கோபத்தையும் மிடுக்கையுமுடைய குவலய பீடமென்னும்  யானை  முடியும் படியாக
வெண் மருப்பு ஒன்று, Ven Maruppu Ondru - (அவ்யானையினுடைய) வெளுத்த ஒரு கொம்பை
பறித்து, Parithu - பிடுங்கிக் கையிலே கொண்டு
இருண்ட அம்புதம் போன்ற இவர் ஆர் கொல் என்ன, Irunda Ambudham Ponda Ivar Ar Kol Enna - காளமேகத்தை ஒத்திருக்கின்ற இவர் யார்? என்று நான் கேட்க
1121பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவனுடைய ஆச்ரயமான செயல்கள் எனக்கு ஒன்றும் தெரிகிறது இல்லை-திவ்யாயுதங்களை தரித்து அருளிச் செய்கிற வார்த்தை அடைய வேதம் போலே இரா நின்றது முறை கெடாதபடி பரிமாறக் கடவ பரம பதத்தில்-அத்யததபரோதி தோஜ்யோதிர் தீப்யதே அத்தனை தூரஸ்தன் என்று கை வாங்க வேண்டா-உனக்காக கிட்ட வந்து இருக்கிறவன் காண் என்கிறார் நாலாம் பாசுரத்தில்) 4
மஞ்சுயர் மாமணிக் குன்றமேந்தி மாமழை காத்தொரு மாயவானை யஞ்ச,அதன்மருப் பொன்றுவாங்கும் ஆயர்கொல் மாய மறியமாட்டேன், வெஞ்சுட ராழியும் சங்குமேந்தி வேதமு னோதுவர் நீதிவானத்து, அஞ்சுடர் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. –2-8-4
பதவுரை Show / Hide
மஞ்சு உயர், Manju Uyar - மேக மண்டலம் வரையில் உயர்ந்ததும் (- (ஆர் கொல் என்ன–;) (அட்டபுயகரத்தேன் என்றார்-.))
மா மணி குன்றம், Maa Mani Kuntram - சிறந்த ரத்னங்களை யுடையதுமான கோவர்த்தனகிரியை
ஏந்தி, Aendi - (குடையாக) எடுத்துப் பிடித்து
மா மழைகாத்து, Maa Mazhaikathu - பெருமழையைத் தடுத்தவராயும்,
அன்று, Andru - கம்ஸ னரண்மனையினுட் புகும்போது
ஒரு மாயம் ஆனை அஞ்ச, Oru Maayam Aana Anja - ஒப்பற்றதும் மாயச் செயல்களை யுடையதுமான (கம்ஸனுடைய) யானையானது நடுங்கும்படியாக
அதன் மருப்பு, Adhan Maruppu - அவ் யானையின் கொம்பை
வாங்கும், Vaangum - பறித்தெறிந்தவராயுமுள்ள
ஆயர்கொல், Aayarkol - கோபாலகிருக்ஷ்ணரோ? இவர்
மாயம் அறிய மாட்டேன், Maayam Ariya Maatten - (இன்னாரென்று நிச்சயிக்க முடியாத இந்த) ஆச்சரியத்தை அறிகிறேனில்லை;
வெம் சுடர் ஆழியும், Vem Sudar Azhiyum - தீக்ஷ்ணமான சோதியையுடைய சக்கரத்தையும்
சங்கும், Sangum - சங்கையும்
ஏந்தி, Aendi - தரித்துக்கொண்டு
முன், Mun - கண்ணெதிரே
வேதம் ஓதுவர், Vedham Othuvaar - வேதங்களை ஓதிக்கொண்டிருப்பவராய்
நீதி வானத்து அம்சுடர் போன்ற இவர், Neethi Vaanaththu Amsudar Ponda Ivar - முறை தவறாத பரமபதத்திலேயுள்ள பரஞ்சோதி போன்றவரான இவர்
1122பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கடல் போலே இழிய ஒண்ணாத படி-அபரிச்சின்னன் என்று இருக்க வேண்டா உனக்கு நெஞ்சால் பரிச்சேதிக்கலாம்படி வந்து நிற்கிறேன் என்கிறார் ஐந்தாம் பாசுரத்தில்) 5
கலைகளும் வேதமும் நீதிநூலும் கற்பமும் சொற்பொருள் தானும்,மற்றை நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையி னாலருள் செய்து,நீண்ட மலைகளும் மாமணி யும்மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற, அலைகடல் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. –2-8-5
பதவுரை Show / Hide
கலைகளும், Kalaigalum - (வேதத்தின் உபநிஷத் பாகமான) வேதாந்தங்களையும் (- (இவர் ஆர்கொல் என்ன–;) (அட்டபுயகரத்தேன் என்றார்–.))
வேதமும், Vedhamum - (கர்மகாண்டமான) வேதங்களையும்
நீதி நூலும், Neethi Noolum - இதிஹாஸங்களையும்
கற்பமும், Karppamum - கல்பஸூத்ரங்களையும்
சொல், Sol - வியாகரண சாஸ்த்ரத்தையும்
பொருள் தானும், Porul Thaanum - மீமாம்ஸா சாஸ்த்ரத்தையும்
நிலைகளும், Nilaigalum - அவரவர்க்கு உரிய ஸ்தானங்களையும்
வானவர்க்கும், Vaanavarkkum - தேவர்களுக்கும்
பிறர்க்கும், Pirarkkum - மற்றுமுள்ள மனிசர்க்கும்
நீர்மையினால், Neermayinal - கிருபையினால்
அருள் செய்து, Arul Seythu - அளித்தவரும்
­­­­­­நீண்ட மலைகளும் மா மணியும் மலர்மேல் மங்கையும் சங்கமும தங்குகின்ற அலை கடல் போன்ற, Ninda Malaihalum Ma Maniyum Malarmel Mankaiyum Sangamum Thangukinra Alai Katal Ponra - பெரிய மலைகளும் சிறந்த கௌஸ்துபமணியும் பிராட்டியும் சங்கும்  எப்போதும் நிலைத்திருக் கப்பெற்ற அலையெறிகின்ற கடல் போன்றவருமான
1123பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பெரிய கிளர்த்தியை உடைத்தாய் இருக்கிற கருங்கடல் பூவை காயா செவ்வியிலே அலர்ந்த நீலம் இவற்றோடு ஒக்க தொடுத்த மேகம்-ஓன்று உபமானமாகப் போராமையாலே-அங்கும் இங்குமாக-கதிர் பொறுக்குகிறார் சொன்ன உபமானம் தான் உபமேயதுக்கு போராமையாலே-உனக்கு அறியாமைக்கு உடலாக சொல்லா நின்றாய் நீ அறிகைக்காக வந்து நிற்கிறவன் அன்றோ நான் என்கிறார்-ஆறாம் பாசுரத்தில்) 6
எங்ஙனும் நாமிவர் வண்ணமெண்ணில் ஏது மறிகிலம், ஏந்திழையார் சங்கும் மனமும் நிறைவுமெல்லாம் தம்மன வாகப் புகுந்து,தாமும் பொங்கு கருங்கடல் பூவைகாயாப் போதவிழ் நீலம் புனைந்தமேகம், அங்ஙனம் போன்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. –2-8-6
பதவுரை Show / Hide
நாம், Nam - நாம்; (- (ஆர்கொல் என்ன—;) (அட்டபுகரத்தேன் என்றார்–.))
இவர் வண்ணம், Ivar Vannam - இவருடைய படிகளை
எங்ஙன் எண்ணிலும், Ennan Ennilum - எவ்விதமாக அறியப் பார்த்தாலும்
ஏதும் அறிகிலம், Edum Arikilam - ஒன்றும் அறிய மாட்டுகின்றிலோம்:
ஏந்து இழையார், Endu Ilaiyar - ஆபரணம் பூண்டிருப்பவர்களான மாதர்களுடைய
சங்கும், Sangum - வளைகளும்
மனமும், Manamum - நெஞ்சும்
நிறைவும் எல்லாம், Niraivum Ellam - அடக்கமுமாகிய எல்லாமும்
தம்மன ஆக, Thammana Aka - தம்முடையதாம்படி
புகுந்து, Pukunthu - இவ்விடம் வந்து சேர்ந்து,
பொங்கு கருகடல், Ponku Karukatal - அலையெறிகின்ற கூரிய ஸமுத்ரமென்ன
பூவை, Puvai - பூவைப்பூவென்ன
காயா, Kaya - காயாம்பூவென்ன
போது அவிழ் நீலம், Pothu Avaizhi Nilam - காலத்திலே அலர்ந்த கருநெய்தற்பூவென்ன
புனைந்த மேகம், Punaindha Megam - அழகிய மேகமென்ன
அங்ஙனம் போன்ற இவர் தாம், Annanam Ponda Ivar Tham - இவற்றைப் போலேயிருக்கிற இவர்
1124பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவ் ஒப்பனை அழகைக் கொண்டு ஸ்ரீ பரமபததில் இருக்கிறேன் என்று கூச வேண்டா உனக்காக வந்து நிற்கிறவன் நான் என்கிறார்-ஏழாம் பாசுரத்தில்) 7
முழுசிவண் டாடிய தண்டுழாயின் மொய்ம்மலர்க் கண்ணியும், மேனியஞ்சாந் திழிசிய கோல மிருந்தவாறும் எங்ஙனஞ் சொல்லுகேன். ஓவிநல்லார், எழுதிய தாமரை யன்னகண்ணும் ஏந்தெழி லாகமும் தோளும்வாயும், அழகிய தாமிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. –2-8-7
பதவுரை Show / Hide
வண்டு முழுசி ஆடிய, Vandu Muluci Atiya - வண்டுகள் (தேனிலே) முழுகிக் கூத்தாடா நிற்கப்பெற்ற (- (ஆர்கொல் என்ன—;) (அட்டபுகரத்தேன் என்றார்–.))
தண் துழாயின், Than Tulayin - குளிர்ந்த திருத்துழாயினால்
மொய் மலர் கண்ணி இருந்த ஆறும், Moy Malai Kanni Irundha Aarum - செறியத் தொடுக்கப்பட்ட புமாலை சாத்தியிருக்கும் படியையும்
மேனி அம் சாந்து இழுசிய கோலம் இருந்த ஆறும், Meeni Am Santhu Izhuchiya Kolam Irundha Aarum - திருமேனியிலே அழகிய சந்தனம் பூசப்பெற்ற அலங்கார மிருக்கும்படியையும்
எங்ஙனம் சொல்லுகேன், Engganam Sollugeen - என்னவென்று சொல்லுவேன்;
ஒவி நல்லார் எழுதிய, Ovi Nallaar Ezhudhiya - சித்ரமெழுதுவதில் வல்லவர்கள் எழுதினவை யென்னலாம் படியுள்ள
தாமரை அன்ன கண்ணும், Thamarai Anna Kannum - தாமரை யிதழ்போன்ற திருக்கண்களும்
ஏந்து எழில் ஆகமும், Ainthu Ezhil Aagamum - மிக்க அழகையுடையய திருமார்வும்
தோளும், Tholum - திருத்தோள்களும்
வாயும், Vaayum - திருப்பவளமும்
அழகியது ஆம் இவர், Azhagiyadhu Aam Ivar - அழகியவாக அமையப்பெற்ற இவர்
1125பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வ்யதிரேகத்தில் ஜீவிக்க அரிதாம்படி இரா நின்றார் இவர் ஆர் தான் என்ன- சொன்னபடி பொல்லாது-ஞாநீத் ஆத்ம மே மதம் -கேட்டு அறியாயோ என்றார் – உன்னை ஒழிய ஜீவியாதவன் காண் நான் என்கிறார் –எட்டாம் பாசுரத்தில்) 8
மேவியெப் பாலும்விண் ணோர்வணங்க வேத முரைப்பர்முந் நீர்மடந்தை தேவி,அப் பாலதிர் சங்கமிப்பால் சக்கரம் மற்றிவர் வண்ணமெண்ணில், காவியொப் பார்க்கட லேயுமொப்பார் கண்ணும் வடிவும் நெடியராய்,என் ஆவியொப் பாரிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. –2-8-8
பதவுரை Show / Hide
விண்னோர், Vinnor - நித்யஸுரிகள் (- (ஆர்கொல் என்ன—;) (அட்டபுயகரத்தேன் என்றார்–.))
எப்பாலும் மேவி, Eppaalum Mevi - சுற்றிலும் சூழ்ந்துகொண்டு
வணங்க, Vananga - வணங்கப்பெற்று
வேதம் உரைப்பர், Vedham Uraippar - (இப்பெரியவர்) வேதங்களை உருச்சொல்லுகின்றார்;
முந்நீர் மடந்தை, Munnir Madanthai - கடலிற்பிறந்த கமலையானவள்;
தேவி, Devi - பட்டமஹிஷியாயிரா நின்றாள்
அதிர் சங்கம், Adhir Sangam - முழங்குகின்ற சங்கானது
அப்பால், Appaal - இடத்திருக்கையிலுள்ளது;
சக்கரம், Sakkaram - திருவாழியானது
இப்பால், Ippaal - வலத்திருக்கையிலுள்ளது;
மற்று, Mattru - இதற்குமேல்
இவர் வண்ணம் எண்ணில், Ivar Vannam Ennil - இவருடைய நிறத்தை ஆராய்ந்து சொல்லப்புகுந்தால்
காவி ஒப்பார், Kaavi Oppaar - கருநெய்தல் பூவின் நிறத்தை ஒத்திருக்கின்றார்;
கடலும் ஒப்பார், Kadalum Oppaar - ஸமுத்ரத்தையும் ஒத்திருக்கின்றார்;
கண்ணும் வடிவும் நெடியர்ஆய், Kannum Vadivum Nediyaraai - திருக்கண்களிலும் வடிவழகிலும் அளவிறந்தவராய்
என் ஆவி ஒப்பார் இவர், En Aavi Oppaar Ivar - என் உயிரை ஒத்திருக்கின்ற இவர்
1126பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவர் சொல்லுகிற வார்த்தை தான் பொல்லாது அல்ல இறே ஆகிலும் அவரையும் நம்மையும் பார்த்தவாறே அஞ்சா நின்றேன் அப் பெரியவனுக்கு இவ்வாற்றாமை உண்டாகக் கூடுமோ என்று அஞ்சா நின்றேன் ஒரு வசநம் கொண்டு ஈஸ்வரன் என்று அஞ்ச வேண்டா நீ அஞ்சாமைக்கு உன்னோடு சஜாதீயனாய் வந்து நிற்கிறவன் அன்றோ நான் என்கிறார்-ஒன்பதாம் பாசுரத்தில்) 9
தஞ்ச மிவர்க்கென் வளையும்நில்லா நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு, வஞ்சி மருங்குல் நெருங்கநோக்கி வாய்திறந் தொன்று பணித்ததுண்டு, நஞ்ச முடைத்திவர் நோக்கும்நோக்கம் நானிவர் தம்மை யறியமாட்டேன் அஞ்சுவன் மற்றிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே. –2-8-9
பதவுரை Show / Hide
தஞ்சம், Thanjam - நிச்சயமாக (- (ஆயினும் தாமே) (அட்டபுயகரத்தேன் என்றார்–.))
என் வளையும், En Valaiyum - எனது கைவளைகளும்
இவர்க்கு நில்லா, Ivarkku Nillaa - இவரை நோக்கி (என் கையில்) நிற்கின்றன வில்லை;
சிந்தித்தேற்கு, Sindhitheerkku - நான் ஆராயுமளவில்
நெஞ்சமும், Nenjamum - எனது மனமும்
தம்மதே, Thammathe - இவருடையதேயாம்;
வஞ்சி மருங்குல், Vanjji Marungul - வஞ்சிக்கொடிபோன்ற(எனது) இடையானது
நெருங்க, Nerunga - துவளும்படியாக
நோக்கி, Nookki - கடாக்ஷித்து
வாய் திறந்து, Vaai Thirandhu - தனது திருப்பவளத்;தைத் திறந்து
ஒன்று பணித்தது உண்டு, Onru Paniththathu Undu - ஒருவார்த்தை சொன்னது முண்டு;
இவர் நோக்கும் நோக்கம், Ivar Nookkum Nokkama - இவர் பார்க்கிற பார்வையானது
நஞ்சம் உடைத்து, Nanjam Udaiththu - விஷங்கலந்ததுபோலே கொடிதாயிருக்கின்று;
நான் இவர் தம்மை அறிய மாட்டேன், Naan Ivar Thammai Ariya Maatten - நான் இவருடைய படியை அறிகின்றிலேன்;
இவர் ஆர் கொல் என்ன, Ivar Aar Kol Enna - இவரார் என்று கேட்கவும்
அஞ்சுவன், Anjuvan - பயப்படுகின்றேன்;
1127பெரிய திருமொழி || (2-8–திரிபுரம்) (திருவட்டபுயகரம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உருவு வெளிப்பாட்ட்டாலே அனுபவித்து பிறருக்கு இருந்து சொல்ல வேண்டாதே நித்ய அனுபவம் பண்ணிக் களிக்கலாம் தேசத்திலே புகப் பெறுவர் என்கிறார் பத்தாம் பாசுரத்தில்) 10
மன்னவன் தொண்டையர் கோன்வணங்கும் நீள்முடி மாலை வயிரமேகன், தன்வலி தன்புகழ் சூழ்ந்தகச்சி அட்ட புயகரத் தாதிதன்னை, கன்னிநன் மாமதிள் மங்கைவேந்தன் காமரு சீர்க்கலி கன்றி,குன்றா இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை யேத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே. –2-8-10
பதவுரை Show / Hide
தொண்டையர்கோன், Thondaiyarkon - தொண்டை மண்டலத்திலுள்ளவர்கட்குத் தலைவனான
மன்னவன், Mannavan - அரசனாலே
வணங்கும், Vanangum - வணங்கப்பட்ட
நீள்முடி மாலை, Neelmuti Maalai - நீண்ட திருவபிக்ஷேகத்தையுடைய ஸர்வேச்வரனாயும்,
வயிரமேகன் தன் வலி, Vayiramegan Than Vali - வயிரமேகனென்னும் பிரபுவின் பராக்கிரமும் கீர்த்தியும் மலிந்த
புகழ் சூழ்ந்த கச்சி, Pugazh Soozhntha Katchi - காஞ்சிபுரியிலே
அட்டபுயகரத்து, Attapuyakarathu - திருவட்டபுயகரத்திருப்பதியிலே எழுந்தருளியிருப்பவனாயுமுள்ள
ஆதிதன்னை, Aadhithannai - முதல்வனான எம்பெருமானைக்குறித்து
கன்னி நல் மாமதிள் மங்கை வேந்தன், Kanni Nal Maamathil Mangai Vendan - அழிவற்ற நல்ல பெரிய மதிள்களையுடைய திரு மங்கைக்குத் தலைவரும்
காமரு சீர், Kaamaru Seer - விரும்பத்தக்க குணங்களையுடையவருமான
கலிகன்றி, Kalikanri - கலியன்
குன்றா இன் இசையால்  சொன்ன, Kundraa In Isaiyaal Sonna - குறைவில்லாத இனிய இசையுடனே அருளிச்செய்த
செம் சொல் மாலை, Sem Sol Maalai - அழகிய இச்சொல் மாலையைக்கொண்டு
ஏத்த வல்லார்க்கு, Aetha Vallarukku - (எம்பெருமானைத்) துதிக்க வல்லவர்களுக்கு
இடம் வைகுந்தம், Idam Vaikundham - இருப்பிடம் வைகுண்டமாகும்.