திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1198 | பெரிய திருமொழி || (3-6–தூவிரிய) (திருவாலி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அதில் ஒரு வண்டைக் குறித்துத் தூது விடுகிறாள் முதல் பாட்டில் – உனக்கு உன் கார்யம் குறை அற்று இருந்தது-எனக்கு என் கார்யம் குறை பட்டு இருக்கிறபடி -கண்டாயே எனக்கு குறை தீர்க்கைக்காக வந்திருக்கிற அவனுக்கு அறுவியாயோ- என்கிறாள்) 1 | தூவிரிய மலர் உழக்கித் துணையோடும் பிரியாதே
பூவிரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே
தீ விரிய மறை வளர்க்கும் புகழாளர் திருவாலி
ஏவரி வெஞ்சிலை யானுக்கு என் நிலைமை உரையாயே –3-6-1 | பதவுரை Show / Hideதூ விரிய மலர்உழக்கி துணையோடும் பிரியாதே, Thoo Virya Malaruazhakki Thunaiyodum Piriyadhe - சிறகு விரியும்படி இருந்து புஷ்பங்களே மிதித்து தன் துணைவியைவிட்டுப் பிரியாமலிருந்து பூ விரிய மது நுகரும், Poo Virya Madhu Nukarum - பூக்கள் விகஸிக்க, அவற்றிலுள்ள தேனைப் பானம் பண்ணுகிற பொறி வாயி சிறுவண்டே, Pori Vaayi Siruvandhe - புள்ளிகளையும் ரேகைகளை யுமுடைய சிறிய வண்டே அக்நி காரியங்கங்கள் விஸ்தாரமாகப் பரவும்படி வைதிக மரியாதைகளே வளர்க்கும் புகழ் ஆளர் திரு ஆவி, Valarkkum Pugazh Aalar Thiru Aavi - குறைவின்றி நடத்துகையால் வந்து கீர்த்தியையுடைய வைதிகரிகள் வாழ்கின்ற திருவாலியிலே நித்யவாஸம் பண்ணுகிற ஏ வரிவெம் சிலேயானுக்கு, Ea Varivem Sileyaanukku - அம்புகள் தொடுக்கப்பெற்று அழகியதாய் (சத்துருக்களுக்கு)க் கொடிதா யிருந்துள்ள வில்லை ஆளவல்ல எம்பெருமானுக்கு என் நிலைமை உரையாய், En Nilaimai Uraiyaai - என்னுடைய அவஸ்தையை சொல்லுவாயாக. |
| 1199 | பெரிய திருமொழி || (3-6–தூவிரிய) (திருவாலி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அறுகால-இரண்டு காலை உடையாரைப் போலே அன்றிக்கே-ஆறு கால் உடையார்க்கு கடுகப் போய் கார்யம் தலைக் கட்டலாம் இறே – நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம் – என்று சேர்ப்பார் காலே இறே இவர்கள் ஜீவனமாய் நினைத்து இருப்பது – என் ஜீவனம் கூடு பூரித்து கிடந்தபடி என்றான் -என்கிறாள் நீ சென்று –முறை கெட்டாகிலும் நீ முற்பட சென்று –அவன் தானே வர பெற இருக்குமதாயிற்று முறை – பயலை நோயை உரை –வாசா மகோசரம் இறே இவளுடைய வைவர்ண்யம் தான் வாக்குக்கு அவிஷயமான அவற்றுக்கும் பாசுரம் இட்டு சொல்லவற்றுக் காணும் இவை தான்) 2 | பிணியவிழும் நறு நீல மலர்கிழியப் பெடையொடும்
அணி மலர் மேல் மது நுகரும் அறுகால சிறு வண்டே
மணி கெழு நீர் மருங்கலரும் வயலாலி மணவாளன்
பணி யறியேன் நீ சென்று என் பயலை நோய் உரையாயே –3-6-2 | பதவுரை Show / Hideபிணி அவிழும் நறு நீலமலர்கிழிய, Pini Avizhum Naru Neelamalarkizhiya - கட்டு அவிழ்கின்ற மணம் மிக்க நீலோற்பல மலர்கள் கிழியும்படியாக பெடையோடும் அணி மலர்மேல் மது நுகரும், Pedaiyodum Ani Malarmel Madhu Nukarum - பேடையுடனே அழகிய அந்த மலர்களிலிருந்துகொண்டு மதுபானம் பண்ணுகிற அறுகால சிறு வண்டே, Arugala Siru Vande - ஆறு கால்களையுடைய சிறியவண்டே! மணி கெழுநீர்மருங்கு அலரும் வயல், Mani Kezhuneermarungu Alarum Vayal - அழகிய செங்கழுநீர்ப் பூக்கள் நாற்பக்கத்திலும் விகளிக்கப்பெற்ற கழனிகளையுடைய ஆலி, Aali - திருவாலியிலே யெழுந்தருளியிருக்கிற மணவாளன் பணி, Manavaalan Pani - மணவாளப்பிள்ளை போன்ற எம்பெருமானுடைய செய்தியை அறியேன், Ariyen - இன்னதென்று நானறிகின்றேனில்லை; என் பயலே நோய் உரையாய், En Payale Noi Uraiyaai - என்னுடம்பு வேறுபட்டிருந்தலாகிற நோயை சொல்லுவாயாக. |
| 1200 | பெரிய திருமொழி || (3-6–தூவிரிய) (திருவாலி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆசை இல்லாத ஜகத்தையும் தான் ஆசைப்படுமவன் -அவற்றை சொன்ன சொல் தன்னளவிலே வந்து பர்யவசிக்கும்படி நிற்கிற பெரும் பிச்சன் – அவனுடைய பிரணயித்வத்துக்கு விஷயம் ஆயிற்றிலோம் ஆகிலும் அவனுடைய கிருபைக்கு விஷயம் ஆகாது ஒழிவுதோமா- அவன் நைராச்யத்தை அறிந்து வந்து சொல் என்றதுக்கு கருத்து யாது என் என்னில் – நம் தசையை அறிவித்தால் நமக்கு தலை வேணும் -என்றான் ஆகில் நம் ஆற்றாமை பாராதே யாகிலும் நாம் ஜீவித்துக் கிடக்க வேண்டா -என்றான் ஆகில்-நாம் முடிந்து பிழைக்கும் படி —) 3 | நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நெடுமால் தன்
தாராய நறும் துளவம் பெருந்தகையேற்கு அருளானே
சீராரும் வளர் பொழில் சூழ் திருவாலி வயல் சூழும்
கூர்வாய சிறு குருகே குறிப்பறிந்து கூறாயே –3-6-3 | பதவுரை Show / Hideநீர்வானம் மண் எரி கால் ஆய் நின்ற நெடுமால், Neervaanam Mann Eri Kaal Aayi Nindra Nedumaal - பஞ்ச பூதங்களுக்கு நிர்வாஹகனா யிருக்கிற ஸர்வேச்வரன் தன் தார்ஆய நறு துளவம், Than Thaar Aaya Naru Thulavam - தன்னுடைய மாலையாகிய மணம்மிக்க திருத்துழாயை பெரும் தகையேற்கு அருளானே, Perum Thagayeerku Arulaanae - மிகவும் தகுதியையுடையளான எனக்கு கொடுத்தருள்கின்றானில்லையே; சீர்ஆரும், Seeraarum - சீர்மை பொருந்திய வளர் பொழில் சூழ், Valar Pozhil Soozh - வளர்கின்ற சோலைகளாலே சூழப்பட்ட திரு ஆலி, Thiru Aali - திருவாலிமாநகரில் வயல் வாழும் கூர்வாய சிறு குருகே, Vayal Vaalum Koovai Siru Kuruge - கழனியிலே வாழ்கின்ற கூர்மையான வாயலகையுடைய சிறிய கொக்கே! குறிப்பு அறிந்து, Kurippu Arindhu - (திருவாலி யெம்பெருனானுடைய) திருவுள்ளக் கருத்தை அறிந்து கொண்டு வந்து (எனக்குச்) சொல்லிவேணும். |
| 1201 | பெரிய திருமொழி || (3-6–தூவிரிய) (திருவாலி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு ஆய்ப்பாடியிலே சம்பத்தோடே-ஸ்ரீ திரு ஆலியில் சம்பத்தையும் அடைப்பாக்கினால் பின்னை அவனுக்கு நொந்தாரை ஐயோ என்ன அவசரம் உண்டோ-அறியாமை வாராது ஒழிந்தான் இத்தனை நீ போய் அவன் அறியும் படி போய் சொல்லு) 4 | தானாக நினையானேல் தன் நினைந்து நைவேற்கு ஓர்
மீனாய கொடி நெடு வேள் வலி செய்ய மெலிவேனோ
தேன் வாய வரி வண்டே திருவாலி நகராளும்
ஆனாயற்கு என்னுறு நோய் அறியச் சென்று உரையாயே –3-6-4 | பதவுரை Show / Hideதான் ஆக நினையான் ஏல், Thaan Aaga Ninaithaan Ael - அவன் தானாகவே என்னே நினையாதிருந்தாலும்; தன் நினைந்து நைவேற்கு, Than Ninaindhu Naiveerkku - அவன் தன்னையே நினைத்துக் கொண்டு மனம் தளர்ந்திருக்கிற என்னை ஓர்மீன் ஆய கொடி நெடுவேள் வலி செய்ய, Oormeen Aaya Kodi Neduveel Vali Seyya - மகரத்வஜனான மன்மதன் துன்பப்படுத்த மெலிவேனா, Meliveena - இப்படியும் நான் இளைத்துப் போவேனா? தேன் வாய வரி வண்டே, Then Vaai Vari Vande - தேன்போல் இனிய வாய்ப் பேச்சையும் ரேகையையுமுடைய வண்டே!, திரு ஆலி நகரி ஆளும், Thiru Aali Nagari Aalum - திருவாலி நகரியை ஆட்சி புரிகின்ற ஆன் ஆயற்கு சென்று, Aan Aayarku Sendru - கோபாலகிருஷ்ணன் பக்கலிலே போய் எனது உறு நோய், Enathu Uru Noi - எனது அதிகமான மனோவியாதியை அறிய உரையாய், Ariya Uraiyaai - தெளிவாகத் தெரிவிக்க வேணும். |
| 1202 | பெரிய திருமொழி || (3-6–தூவிரிய) (திருவாலி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அத்தலை இத்தலையாய்-தன்னைப் பெற வேண்டும் நான் ஆசைப்பட்டு நோவு படா நிற்க – தான் தன்னைத் தொட்டாரும் அகப்படுத்தினான் என்று சொல்லுங்கோள் என்று தூதர்க்கு வார்த்தை சொல்லப் புக்கு அது தான் போய் பாவனா பிரகர்ஷத்தாலே அவன் முன்னே நின்றனவாய் கொண்டு அவன் தனக்கு வார்த்தை சொல்லி செல்லுகிறது மேலில் பாட்டுக்களில் – ஸ்ரீ ராமாயணத்தின் படி போலே இருக்கிறதாயிற்று இதுவும் – தூதர்க்கு வார்த்தை சொல்லா நிற்க்ச் செய்தே பாவனா பிரகர்ஷத்தாலே அவன் சந்நிஹிதனாகக் கொண்டு அங்கு வார்த்தை சொல்லுகிறாள் இறே-ஷம பேதம் மஹீ பதே -என்னுமா போலே) 5 | வாளாய கண் பனிப்ப மென்முலைகள் பொன் அரும்ப
நாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு ஒ மண்ணளந்த
தாளாளா ! தண் குடந்தை நகராளா ! வரை எடுத்த
தோளாளா ! என் தனக்கு ஓர் துணையா ளானாகாயே ! –3-6-5 | பதவுரை Show / Hideஓ மண் அளந்த தாளாளா, O Mann Alandha Thaalala - பூமியை யளந்துகொண்ட திருவடிகளை யுடையவனே! ஓ தண் குடந்தை நகரி ஆளா, O Than Kudandhai Nagari Aalaa - குளிர்ந்த திருக்குடந்தையை ஆளுமவனே! ஓ வரை எடுத்த தோன் ஆனா, O Varai Edutha Thon Aanaa - கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்துப் பிடித்த திருத்தோள்களே யுடையவனே! வாள் ஆய கண் பனிப்ப, Vaal Aaya Kan Panippa - வாள்போன்ற (எனது) கண்கள் நீரைப்பெருக்கவும் மெல் முலைகள் பொன் அரும்ப, Mel Muligal Pon Arumba - மெல்லிய முலைகளில் நிற வேறுபாடு தோன்றவும் நாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு என்தனத்கு, Naal Naalum Nin Ninaindhu Naiveyarku Enthanathkku - நாள்தோறும் உன்னையே நினைத்துக்கொண்டு மனம் தளர்கின்ற எனக்கு ஓர்துணையாளன் ஆகாய், Oorthunaiyalan Aagaai - நீ சிறந்த துணைவனாக வேணும் |
| 1203 | பெரிய திருமொழி || (3-6–தூவிரிய) (திருவாலி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரமஹரமான வடிவைக் காட்டி பஞ்ச லஷம் குடியில் பெண்களை வளை கவர்ந்தவன் என் கையில் வளை பெறா விடில் உண்டது உருக் காட்டானாய் இரா நின்றான் –சமகாலத்தில் பிறவாதார் வளையும் கொள்ள வேணுமோ இவனுக்கு ஓர் ஊராக வளை கொண்டதுவும்-உண்டது உருக் காட்டுகிறது இல்லை காணும் இவள் கையில் வளை சேஷிக்கில்) 6 | தாராய தண் துளவ வண்டுழுத வரை மார்பன்
போரானைக் கொம்பு ஒசித்த புட் பாகன் என்னம்மான்
தேராரும் நெடு வீதித் திருவாலி நகராளும்
காராயன் என்னுடைய கனவளையும் கவர்வானோ –3-6-6 | பதவுரை Show / Hideதார் ஆய தண் துள்பம் வண்டு உழுத வரை மார்பன், Thaar Aaya Than Thulbam Vandu Uzutha Varai Marban - மாலையாகிய திருத்துழாயிலுள்ள வண்டுகளாலே (தேனும் கண்ணமுங்கொண்டு) சேறு செய்யப்பட்ட மலைபோன்ற திருமார்பையுடையவனும் போர்ஆனை கொம்பு ஒசித்த, Poraanai Kombu Osiththa - போர்புரிய நின்ற (கம்ஸனது) யானையினுடைய தந்தங்களை முறித்தொழித்தவனும் புள் பாகன், Pul Paagan - கருடனை வாஹநமாகக் முறித்தொழித்தவனும் என் அம்மான், En Ammaaan - எனக்கு ஸ்வாமியானவனும் தேர் ஆரும் நெடுவீதி, Ther Aarum Neduveethi - திருத்தேர் எழுந்தருள்வதற்குப் பாங்கான பெருமை பொருந்திய வீதிகளையுடைய திரு ஆலி நகரி ஆளும், Thiru Aali Nagari Aalum - திருவாலி நகரை ஆள்பவனுமான கார் ஆயன், Kaar Aayan - கரியகோலக் கண்ணபிரான் என்னுடைய, Ennudaiya - (வேறு புகலற்றிருக்கிற) என்னுடைய கனம் வளையும், Kaanam Valaiyum - பொன் வளைகளையும் கவர்வானை, Kavaruvaanai - அபஹரிப்பனோ! (அபஹரிப்பது தகுமோ). |
| 1204 | பெரிய திருமொழி || (3-6–தூவிரிய) (திருவாலி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மகா பலியாலே அபஹ்ருதமான பூமியை மீட்டு இந்தரனுக்கு கொடுத்த நீர் மையை உடையவனே- அந் நீர்மைக்கு பிற்பாடானாரும் இழவாமைக்கு ஆக ஆயிற்று திருவாலியிலே வந்து நிற்கிறது ஸ்ரீ திருப் பாற் கடலில் நின்றும் ஸ்ரீ வாமனனாய் அவதரித்து பூமியை அகப்படுத்திக் கொண்டால் போலே யாயிற்று ஸ்ரீ திருவாலியிலே வந்து நிற்கிற தன் யௌவனத்தைக் காட்டி இவரை அகப்படுதின படி) 7 | கொண்டு அரவத் திரை யுலவு குரை கடல் மேல் குலவரை போல்
பண்டு அரவின் அணைக் கிடந்தது பாரளந்த பண்பாளா !
வண்டு அமரும் வளர் பொழில் சூழ் வயலாலி மைந்தா !என்
கண் துயில் நீ கொண்டாய்க்கு என் கன வளையும் கடவேனோ! –3-6-7 | பதவுரை Show / Hideபண்டு அரவம் திரை உலவு குரை கடல்மேல், Pandhu Aravam Thirai Ulavu Kurai Kadalmel - முற்காலத்தில் பெரிய கோஷத்தையுடைய அலைகள் உலாவுகின்ற பரந்த திருப்பாற்கடலிலே கொண்டு, Kondhu - திருவுள்ளங்கொண்டு அரவு இன் அணை, Aravu In Anai - ஆதிசேஷனாகிற இனிய படுக்கையிலே குலம் வரை போல், Kulam Varai Pol - சிறந்த மலைபோலே கிடந்து, Kidandhu - பள்ளிகொண்டவனாயும் பார்அளந்த, Paaralanda - (திரிவிக்கிரமனாய்) பூமியை அளந்தவனாயுமுள்ள பண்பு ஆளா, Panbu Aalaa - தயாளுவானவனே! வண்டு அமரும் வளர் பொழில் சூழ், Vandu Amarum Valar Pozhil Soozh - வண்டுகள் படித்து ஓங்கின சோலைகளால் சூழப்பட்ட வயல், Vayal - கழனிகளையுடைய ஆலி, Aali - திருவாலியி லெழுந்தருளியிருக்கிற மைந்தா, Maindha - நித்ய யௌவனசாலியான பெருமானே; என் கண் துயில், En Kan Thuyil - எனது கண்ணுறக்கத்தை நீ கொண்டாய்க்கு, Nee Kondaaykku - போக்கடித்த உனக்கு என் கனம் வளையும், En Kanam Valaiyum - எனது பொன்வளைகளையும் கடவேனோ, Kadaveno - இழக்கக்கடவேனோ? |
| 1205 | பெரிய திருமொழி || (3-6–தூவிரிய) (திருவாலி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மன்றிலே குடக் கூத்தாடி தன் அலகை சர்வ ஸ்தானம் பண்ணினவன் பிற்பாடர் இழவாமைக்காக திருக் குடந்தையிலே சுலபன் ஆனான் என்றவாறே உறக்கம் குடி போயிற்றாய் ஆயிற்று அவன் பிரத்யாசன்னன் ஆனான் என்றவாறே உறக்கம் குடி போயிற்று ஆயிற்று இவளுக்கு- உறங்காமைக்கு இரண்டு லஷ்மணர்களைப் போலே யாயிற்று கண்கள் இரண்டும் – இளைய பெருமாள் பிறந்த முகூர்த்ததில் ஆயிற்று இவள் கண்களும் பிறந்தது) 8 | குயிலாலும் வளர் பொழில் சூழ் தண் குடந்தைக் குடமாடீ !
துயிலாத கண் இணையேன் நின் நினைந்து துயர்வேனோ !
முயலாலும் இள மதிக்கே வளை இழந்தேற்கு இது நடுவே
வயலாலி மணவாளா கொள்வாயோ மணி நிறமே ! –3-6-8 | பதவுரை Show / Hideகுயில் ஆலும் வளர் பொழில் சூழ்தண் குடந்தை, Kuyil Aalum Valar Pozhil Soozhthaan Kudandhai - குயில்கள் (களித்துத்) கூடத்தாடுமிடமான வளர்ந்த சோலைகளால் சூழப்பட்ட குளிர்ந்த திருக்குடந்தையிலே எழுந்தருளியிருக்கிற (- (வயலாலி மணவாளா!-;)) குடம் ஆடீ, Kudam Aadi - குடக் கூத்தாடின பெருமானே! துயிலாத கண் இணையேன், Thuyilaadha Kan Inaiyen - உறக்கங் கொள்ளாத கண்களே யுடைய அடியேன் நின் நினைந்து, Nin Ninaindhu - உன்னையே சிந்தித்துக் கொண்டு துயர்வேனோ, Thuyarveno - துக்கித்துக் கிடப்பேனோ! முயல் ஆலும் இள மதிக்கே, Muyal Aalum Ila Mathikke - (தன்னிடையிலே)முயல் துள்ளிவிளையாடப் பெற்ற பாலச்சந்திரனுக்கே வளை இழந்தேற்கு, Valai Izhandheirkku - வளைகளை இழந்தவளான என்னிடத்தினின்றும் இது நடுவே, Idhu Naduve - இத்தனை துக்கங்களினிடையே மணி நிறமே கொள்வாயோ, Mani Nirame Kolvaayo - அழகிய மேனிநிறத்தையும் கொள்ளை கொள்வாயோ? |
| 1206 | பெரிய திருமொழி || (3-6–தூவிரிய) (திருவாலி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிராமணர் பிச்சேறினாலும் ஒத்துச் சொல்லுமா போலே தலைமகளான சமயத்திலும் சேஷத்வ அநுரூப வ்ருத்தியையே ஆசைப்படுகிறாள் இறே உன்னை ஆஸ்ரயித்த மகா ராஜர் ஆர்த்தி போக்குகைக்காக மராமரங்களை எய்து மழு ஏந்தி கொடுததிலையோ – அவ் இழவை தீர்க்குகைக்கு அன்றோ திரு மெய்யத்திலே வந்து சாய்ந்து அருளிற்று) 9 | நிலையாளா ! நின் வணங்க வேண்டாயே யாகிலும் என்
முலையாள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாயே ?
சிலையாளா ! மரம் எய்த திறலாளா ! திரு மெய்ய
மலையாளா ! நீ யாள வளையாள மாட்டோமே –3-6-9 | பதவுரை Show / Hideசிலையாளா, Siliyaala - சாரங்க வில்லை அடக்கியாள்பவனே! மாம் எய்த திறாளா, Maam Eytha Thiraala - (ஸூக்ரிவனுடைய நம்பிக்கைக்காக) ஸப்தங்களால் வருஷங்களை வீழத்தொழித்த பெருமிடுக்கனே! திரு மெய்ய மலை ஆளா, Thiru Meyya Malai Aala - திருமெய்ய மென்னுந் திருப்பதியை ஆளுமவனே! நிலை ஆள் ஆ நின் வணங்க வேண்டாயே ஆகிலும், Nilai Aal Aa Nin Vananga Vendaaye Aagilum - நிலைபெறற் அடிச்சியாக விருந்து உன்னை நான் வணங்கும்படி திருவுள்ளம் பற்றாமற்போனாலும் ஒரு நாள், Oru Naal - ஒருநாளாகிலும் என் முலை ஆள, En Mulai Aala - எனது முலைகள் ஆட்செய்யும்படியாக உன் அகலத்தால் ஆளாய், Un Akalathaal Aalaai - உனது திருமார்பினால் அணைத்தருளுவேணும்; நீ ஆள, Nee Aala - உன்னுடைய ஆளுகையில் உட்பட்டிருக்குமளவில் வளை ஆன மாட்டோமே, Valai Aana Maattome - கையில் வளை தாங்காமல் துள்ளப்படவேண்டியதேயன்றோ எமக்குக் கதி. |
| 1207 | பெரிய திருமொழி || (3-6–தூவிரிய) (திருவாலி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெடுமாலை –தூது விடவும் வார்த்தை சொல்லவும் மாட்டாதே நிற்கிறான் போலே காணும் தூது விட மாட்டாத படி யாயிற்று அத்தலை பட்டுக் கிடக்கிறது – இத்தலை ஊர்த்த்வம் மாசான் நா ஜீவிஷ்யதே -என்றால்-ந ஜீவேயம் -என்னும் அத்தனை இறே அத்தலை – அவன் சேஷித்வ சூசகமாக திரு ஆழியைப் பிடித்தால் போலே ஆயிற்று இவர் சேஷத்வ சூசகமாக திரு வேலைப் பிடித்த படி -சேவகனுக்கு வேல் நிரூபகம் என்றது ஆயிற்று – சர்வேஸ்வரனைப் பிரிந்து தூது விடப் புக்கு-அது தானும் கூட மாட்டாதே படும் வியசனம் பட வேண்டா – இப்பத்தையும் அப்யசித்தாருக்கு தூது விடுவான் அவன் தான் ஆயிற்று) 10 | மையிலங்கு கருங்குவளை மருங்கலரும் வயலாலி
நெய்யிலங்கு சுடராழிப் படையானை நெடுமாலை
கையிலங்கு வேல் கலியன் கண்டுரைத்த தமிழ் மாலை
ஐயிரண்டும் இவை வல்லார்க்கு அருவினைகள் அடையாவே –3-6-10 | பதவுரை Show / Hideகை இலக்கு வேல் கலியன், Kai Ilakku Vel Kalyan - கையில் விளங்குகின்ற வேலையுடைய திருமங்கையாழ்வார், மை இலங்கு கரு குவளை, Mai Ilangu Karu Kuvalai - மைபோல் விளங்குகின்ற கறுத்த குவளை மலர்கள் மருங்கு அலரும் வயல், Marungu Alarum Vayal - ஸமீபங்களிலே விகஸிக்கப் பெற்ற கழனிகளையுடைய ஆலி, Aali - திருவாலியிலே இருக்கிற நெய் இலங்கு சுடர் ஆழி, Ney Ilangu Sudar Aazhi - நெய் பூசப்பட்டு விளங்குகின்றதும் சுடரையுடையதுமான படையானை, Padaiyaanai - சக்கரத்தை ஆயுதமாகக் கொண்டுள்ள நெடு மாலை, Nedu Maalai - ஸர்வேச்வரனை கண்டு உரைத்த, Kandu Uraitha - ஸேவித்துக் சொன்ன தமிழ் மாலை, Tamil Maalai - தமிழ்த் தொடைகளான இவை ஐ இரண்டும், Ivai Ai Irandum - இப்பத்துப் பாசுரங்களையும் வல்லார்க்கு, Vallarkku - ஓதவல்லவர்களுக்கு அரு வினைகள், Aru Vinaigal - துஷ்கருமங்கள் அடையா, Adaiyaa - சேரமாட்டா. |