திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1248 | பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ மாதவன் தான் உறையுமிடம்- ரசிகனானவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம் ஸ்ரீ பிராட்டியும் தானுமாக ஸ்ரீ சித்ர கூடத்திலே வர்த்தித்தால் போலே) 1 | போதலர்ந்த பொழில் சோலைப் புறம் எங்கும் பொரு திரைகள்
தாதுதிர வந்தலைக்கும் தடமண்ணித் தென் கரை மேல்
மாதவன் தான் உறையுமிடம் வயல் நாங்கை வரி வண்டு
தேதென என்று இசை பாடும் திருத் தேவனார் தொகையே –4-1-1 | பதவுரை Show / Hideபோது அலர்ந்த பொழில் சோலை புறம் எங்கும், Pothu Alarntha Pozhil Solai Puram Engum - புஷ்பங்கள் மலரப்பெற்ற பெரிய சோலைகளுள்ளவிடங்கள் முழுதும். தாது உதிர, Thadu Uthira - பூக்களின் தாதுகள் உதிரும்படியாக பொரு திரைகள் வந்து அலைக்கும், Poru Thiraigal Vandu Alaikkum - செறிந்த அலைகள் வந்து வீசப்பெற்ற தடம் மண்ணி, Thadam Manni - பெரியமண்ணியாற்றினுடைய தென் கரைமேல், Then Karaimel - தெற்குக் கரையின் மேலே, மாதவன் தான் உறையும் இடம், Madhavan Thaan Uraiyum Idam - மாதவப்பெருமாள் நித்ய வாஸம் செய்தருளுமிடம் (எதுவென்றால்,) வயல் நாங்கை, Vayal Naangkai - கழனிகள் சூழ்ந்த திருநாங்கூரில் வரி வண்டு தேதென என்று இசைபாடும், Vari Vandu Thethen Endru Isai Paadum - ரேகைகளையுடைய வண்டுகள் தென்ன தென்னவென்று இசைபாடப்பெற்ற. திருத்தேவனார் தொகை, Thiruththevanar Thogai - திருத்தேவனார் தொகையென்னுந் திருப்பதியாம். |
| 1249 | பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சிருஷ்டி சம்ஹாரங்களுக்கு கடவரான ப்ரஹ்மாதிகளுக்கும் அந்தராத்மாவாவாய்ப் புக்கு நின்று அவ்வவ கார்யங்களை நடத்திக் கொடுத்தும்-ஸ்வேன ரூபேண நின்று பாலனத்தை நடத்தியும் போருகையாலே மூவரும் நிற்கிறான் தானே என்று சொல்லாம்படியாய்-மூர்த்தி சப்தம் ஸ்வரூப வாசியாய் – அவர்களுக்கும் காரண பூதனாய் பிரதானவன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்) 2 | யாவரும் யாவையுமாய் எழில் வேதப் பொருள்களுமாய்
மூவருமாய் முதலாய மூர்த்தி யமர்ந்து உறையும் இடம்
மாவரும் திண் படை மன்னை நின்றி கொள்வார் மன்னு நாங்கைத்
தேவரும் சென்று இறைஞ்சு பொழில் திருத் தேவனார் தொகையே –4-1-2 | பதவுரை Show / Hideயாவரும் ஆய், Yaavarum Aay - சேதனப் பொருள்கள் எல்லவற்றையும் சரீரமாகக் கொண்டவனாய் (- (அமர்ந்து உறையும் இடம்-;) (திருத்தேவனார் தொகையே -.)) யாவையும் ஆய், Yaavaiym Aay - அசேதனப் பொருள்கள் எல்லாவற்றையும் சரீரமாகக் கொண்டவனாய் எழில் வேதம் பொருள்களும் ஆய், Ezhil Vedham Porulgalum Aay - அழகிய வேதங்களின் அர்த்தமும் தானாய் மூவரும் ஆய், Moovaarum Aay - (பிரமன், விஷ்ணு, ருத்ரன் என்று) மூன்று வடிவுகள் கொண்டவனும் தானேயாய் முதல் ஆய, Muthal Aay - முழுமுதற் கடவுளான மூர்த்தி, Moorthy - எம்பெருமான் மா வரும், Maa Varum - குதிரை மேல் ஏறிவருகிற திண் படை, Thin Padai - திடமான ஆயுதங்களையுடைய மன்னை, Mannai - ராஜலோகத்தை வென்றி கொள்வார், Vendri Kolvaar - தோற்கடித்து வெற்றிபெறும் மந்தணர்கள் மன்னு, Mannu - நித்யவாஸம் பண்ணுகிற நாங்கை, Naangkai - திருநாங்கூரில் உள்ளதாய், தேவரும் சென்று இறைஞ்சு, Thevarum Sendru Irainju - நித்யஸூரிகளும் வந்து வணங்கப் பெற்றதாய் பொழில், Pozhil - சோலைகளை யுடைத்தான |
| 1250 | பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துகளுக்கும் தனக்கு பிரகாரமாய் புறம்பு ஒருவர் இன்றிக்கே உபய விபூதியும் தன் நிழலிலே ஒதுங்கும்படி இருக்கையாலே தலைவனானவன் வந்து நித்ய வாசம் பண்ணுகிற தேசம்) 3 | வானாடும் மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும்
தானாய வெம்பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம்
ஆனாத பெரும் செல்வத்து அருமறையோர் நாங்கை தன்னுள்
தேனாரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே –4-1-3 | பதவுரை Show / Hideவான் நாடும் மண் நாடும் மற்று உள்ள பல் உயிரும், Vaan Naadum Mann Naadum Matru Ulla Pal Uyirum - நித்ய விபூதியும் லீலாவிபூதியும் அவ்வவ்விடங்களிலுள்ள பல வகைப்பட்ட ஜீவராசிகளும் (- (எம்பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம் -;) (நாங்கை தன்னுள் – ;) (திருத்தேவனார் தொகையே.)) தான் ஆய, Thaan Aaya - ஆகிய அவையெல்லாம் தானேயாயிருக்கப்பெற்ற ஆனத, Aanadha - அழிவில்லாத பெரு செல்வத்து, Peru Selvaththu - மிக்க ஐச்வரியத்தையுடையராய் அருமறையோர், Arumaraivor - அருமையான வேதங்களை ஓதினவர்களுமான அந்தணர் வாழ்கிற தேன் ஆரும் மலர் பொழில் சூழ், Then Aarum Malar Pozhil Soozh - தேன் நிறைந்த பூக்களையுடைய சோலைகள் சூழ்ந்த |
| 1251 | பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தாம்தாம் அதிகாரத்துக்கு பாதகம் உள்ளவர் ஈச்வரோஹம் என்று இருப்பவர்கள் எங்களுக்கு ஸ்வாமியான நீ எங்கள் பக்கலிலே பிரசாதத்தை பண்ணி அருள வேணும் -என்ன அவர்கள் உடைய அதிகாரங்களை நடத்திக் கொடுக்கைகாக வந்து நின்று அருளுகிற தேசம் இப்படி ஒரு கார்யப் பாட்டால் அன்றிக்கே சோலை வாய்ப்புக் கண்டு விடாதே வர்த்திக்கிற தேசம் ஆய்த்து) 4 | இந்த்ரனும் இமையவரும் முனிவர்களும் எழில் அமைந்த
சந்தமலர்ச் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும்
எந்தை எமக்கு அருள் என்ன நின்று அருளும் இடம் எழில் நாங்கை
சுந்தர நற் பொழில் புடை சூழ் திருத் தேவனார் தொகையே –4-1-4 | பதவுரை Show / Hideஇந்திரனும், Indiranum - தேவேந்திரனும் (- (திருத்தேவனார் தொகையே–.)) இமையவரும், Imaiyavarum - மற்றுமுள்ள தேவர்களும் முனிவர்களும், Munivargalum - (ஸநகர் முதலிய) மஹர்ஷிகளும் எழில் அமைந்த, Ezhil Amaindha - ப்ராஹ்மண லக்ஷ்மி பொருந்தியவனாய் சந்தம், Sandham - வேதங்களை நிரூபகமாகவுடையனாய் மலர், Malar - தாமரைப்பூவினின்று தோன்றினவனாய் சதுமுகனும், Sathumuganum - பிரமனும் கதிரவனும், Kathiravanum - ஸூரியனும் சந்திரனும், Chandiranum - சந்திரனும் எந்தை, Endhai - ‘எமக்குஸ்வாமியானவனே! எமக்கு, Emakku - எங்கள் விஷயத்திலே அருள், Arul - கிருபைபண்ணவேணும்’ என, En - என்று பிரார்த்திக்க நின்று, Ninru - அதற்கு இசைந்து நின்று அருளும் இடம், Arulum Idam - (அப்படியே) கிருபை பண்ணுமிடம் (எதுவென்றால்) எழில் நாங்கை, Ezhil Nangkai - திருநாங்கூரில் சுந்தரம் நல்பொழில், Sundaram Nalpozhil - மிகவுமழகிய சோலைகளாலே புடை சூழ், Pudai Soozh - நாற்புறமும் சூழப்பட்ட |
| 1252 | பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரளய ஆபத்திலே திரு வயிற்றிலே வைத்து நோக்கின உபகாரகன் வர்த்திக்கிற தேசம் சிம்ஹம் வர்த்திக்கும் முழஞ்சு என்னுமா போலே ஒருவரால் ஜெயிக்க ஒண்ணாத பெரு மிடுக்கை உடையராய் இருக்கிறவர்கள் நெருங்கி வர்த்திக்கிற தேசம்) 5 | அண்டமும் இவ்வலை கடலும் அவனிகளும் குலவரையும்
உண்ட பிரான் உறையும் இடம் ஒளி மணி சந்தகில் கனகம்
தெண் திரைகள் வரத் திரட்டும் திகழ் மண்ணித் தென் கரைமேல்
திண் திறலார் பயில்நாங்கைத் திருத் தேவனார் தொகையே — –4-1-5 | பதவுரை Show / Hideஅண்டமும், Andamum - ஆகாசமும் (- (திகழ்மண்ணி தென் கரைமேல் –;) (திருத்தேவனார் தொகை-.)) அலை இக்கடலும், Alai Ikkadalum - அலையெறிகின்ற இக்கடல்களும் அவனிகளும், Avanigalum - (நாவலந்தீவு முதலிய) தீவுகளும் குலம் வரையும், Kulam Varaiyum - (ஹிமவான் முதலிய) குலபர்வதங்களும் ஆகிய இவற்றையெல்லாம் உண்ட, Unda - (பிரளயகாலத்தில்) திரு வயிற்றில்கொண்ட பிரான், Piran - உபகாரகனான எம்பெருமான் உறையும் இடம், Uraiyum Idam - வாழுமிடம் (எதுவென்றால்) ஒளி, Oli - ஒளிபொருந்திய மணி, Mani - ரத்நங்களையும் சந்து, Sandhu - சந்தன மரங்களையும் அகில், Akil - அகில் கட்டைகளையும் கனகம், Kanagam - பொன்களையும் தெண் திரைகள் வர, Then Thiraigal Vara - தெளிந்த அலைகளின் வழியே வரும்படியாக திரட்டும், Thirattum - ராசி ராசியாகக் குவிக்கின்ற திண் திறாலர், Thin Thiralaar - மிக்க பலசாலிகள் பயில், Payil - நித்யவாஸம் பண்ணுகிற நாங்கை, Naangkai - திருநாங்கூரிலுள்ளதான |
| 1253 | பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூமிப் பரப்பை அடைய அமுது செய்து ஸ்ரீ சர்வேஸ்வரனை அபரிச் சேத்யன்-என்று அறியக் கடவ வேதங்களுக்கும் எட்ட ஒண்ணாத படியான பாலகனாய் ஆலிலையில் பள்ளி கொள்ளும் பரமன் இடம் அதிமாநுஷ சேஷ்டிதத்தை உடையனாய் ஒரு பவனான ஆலிலையிலே கண் வளர்ந்து அருளுகிற சர்வா திகன் வர்த்திக்கிற தேசம்) 6 | ஞாலம் எல்லாம் அமுது செய்து நான்மறையும் தொடராத
பாலகனாய் ஆலிலையில் பள்ளி கொள்ளும் பரமன் இடம்
சாலிவளம் பெருகி வரும் தட மண்ணித் தென் கரை மேல்
சேலுகளும் வயல் நாங்கைத் திருத் தேவனார் தொகையே— –4-1-6 | பதவுரை Show / Hideநால் மறையும் தொடராத, Naal Maraiyum Thodaraadha - (பெருமைபொருந்திய) நான்கு வேதங்களாலும் எட்டிப்பிடிக்க முடியாத (- (தடமண்ணித் தென்கரை மேல்;) (திருத்தேவனார் தொகையே)) பாலகன் ஆய, Paalagan Aaya - இளங்குழந்தையாய்க்கொண்டு ஞாலம் எல்லாம், Njaalam Ellam - பூமிமுழுவதையும் அமுது செய்து, Amuthu Seidhu - விழுங்கி ஆல் இலையில், Aal Ilaiyil - ஆலந்தளிரில் பள்ளி கொள்ளும், Palli Kollum - திருக்கண்வளர்ந்தருளுகிற பரமன், Paraman - எம்பெருமானுடைய இடம், Idam - திருப்பதி (எதுவென்றால்), சாலி, Saali - செந்நெற் பயிர்களினுடைய வளம், Valam - செழிப்பானது பெருகிவரும், Perugivaram - அதிகப்பட்டு வராநிற்பதாய் சேல் உகளும், Seyl Ugalum - மீன்கள் துள்ளி விளையாடப் பெற்றதான வயல், Vayal - கழனிகளையுடைய நாங்கை, Naangkai - திருநாங்கூரில் சாலி, Saali - தற்சமவடசொல் |
| 1254 | பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாட்டில் நடையாடாத ஸ்ரீ நரசிம்ஹ வேஷத்தை பரிக்ரஹித்து ஹிரண்யன் இடைய முரட்டு உடலிலே வியாபாரியா நிற்கச் செய்தேயும்-வாடக் கடவதல்லாத கூரிய திரு உகிராலே-ஓன்று செய்தானாய் விடுகை அன்றிக்கே உதிரம் அளைந்த கையேடு இருந்தானை -பெரியாழ்வார் திருமொழி -4-1-1–என்கிறபடியே சிறுக்கன் மேலே சீறினவன் பக்கலிலே தனக்கு சீற்றம் மாறாமையாலே பிளந்து பின்னை அளைந்து இருந்த வ்யாமோஹம்) 7 | ஓடாத வாள் அரியின் உருவாகி இரணியனை
வாடாத வள்ளுகிரால் பிளந்து அளைந்த மாலதிடம்
ஏடேறு பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள்
சேடேறு மலர்ப் பொழில் தழுவு திருத் தேவனார் தொகையே –4-1-7 | பதவுரை Show / Hideஓடாத ஆள் அரியின் உரு ஆகி, Oadaadha Aal Ariyin Uru Aagi - நாட்டில் நடமாடாமல் அபூர்வமான நரஸிம்ஹ மூர்த்தியாகி (- (நாங்கை தன்னுள்;) (திருத்தேவனார் தொகையே)) வாடாத வள் உகிரால், Vaadaadha Val Ughiraal - வளையாத கூர்மைமிக்க நகங்களினால் இரணியனை பிளந்து அளைந்த மாலது, Iraaniyanai Pilandhu Alaintha Maalathu - ஹிரண்யாஸுரனைக் கிழித்து (ரத்தப்பெருக்கிலே) அளைந்து கொண்டிருந்த எம்பெருமானுடைய இடம், Idam - திருப்பதி (எதுவென்றால்) ஏடு ஏறு பெரு செல்வத்து, Aedu Aeru Peru Selvaththu - புத்தகங்களிலே எழுதி வைக்கத்தக்க மிகுந்த ஐச்வரியத்தை யுடையராய் எழில் மறையோர், Ezhil Maraiyor - அழகிய வைதிகர்களான அந்தணர் வாழ்கிற சேடு ஏறு பொழில் தழுவு, Sedu Eru Pozhil Thazhuvu - இளமை பொருந்தி சோலைகளோடு கூடிய |
| 1255 | பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை மணம் புணருகைக்காக வயிரம் பற்றி ஒருவரால் சலிப்பிக்க ஒண்ணாது இருக்கிற வில்லை முறித்த உபமான ரஹிதமான பருவத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம்) 8 | வாராரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான்
காரார் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம்
ஏராரும் பெரும் செல்வத் தெழில் மறையோர் நாங்கை தன்னுள்
சீராரும் மலர்ப் பொழில் சூழ் திருத் தேவனார் தொகையே –4-1-8 | பதவுரை Show / Hideவார் ஆரும் இளகொங்கை மைதிலியை, Vaar Aarum Ilakongai Maithiliy - கச்சையிட்டுத் தாங்க வேண்டும்படியான இளமுலைகளையுடைய ஸீதாபிராட்டியை (- (நாங்கை தன்னுள்–;) (திருத்தேவனார் தொகையே–.)) மணம் புணர்வான், Manam Punarvan - விவாஹம் செய்து கொள்வதற்காக கார் ஆர் தின் சிலை இறுத்த, Kaar Aar Thin Silai Irutha - வயிரம்பற்றித் திண்ணிதான வில்லை முறித்த தனி காளை, Thani Kaalai - விலக்ஷண யௌவநபுருஷன் கருதும் இடம், Karudum Idam - திருவள்ளம்பற்றின திவ்யதேசம் (எதுவென்றால்) ஏர் ஆரும் பெரு செல்வத்து எழில் மறையோர், Aer Aarum Peru Selvaththu Ezhil Maraiyor - அழகு பொருந்திய மிக்க ஐச்வரியத்தை யுடையராய் விலக்ஷண வைதிகர்களான அந்தணர் வாழ்கிற சீர் ஆரும் மலர் பொழில் சூழ், Seer Aarum Malar Pozhil Soozh - அழகு விஞ்சிய பூக்களையுடைய சோலைகளாலே சூழப்பட்ட |
| 1256 | பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மனோஹாரியான சேஷ்டிதத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம்) 9 | கும்ப மிகுமத யானை பாகனோடும் குலைந்து வீழக்
கொம்பதனைப் பறித்து எறிந்த கூத்தன் அமர்ந்தது உறையும் இடம்
வம்பவிழும் செண்பகத்தின் மணம் கமழும் நாங்கை தன்னுள்
செம்பொன் மதிள் பொழில் புடை சூழ் திருத் தேவனார் தொகையே –4-1-9 | பதவுரை Show / Hideமிக கும்பம் மதம் யானை, Miga Kumbam Matham Yaanai - பெருத்த மத்தகத்தையுடைய (குவலயா பீடமென்கிற) மதயானையானது (- (அமர்ந்து உறையும் இடம்;) (நாங்கை தன்னுள்;) (திருத்தேவனார் தொகையே.)) பாகனொடும் குலைந்து வீழ, Bhaganodum Kulainthu Veela - தனது பாகனோடுகூட பங்கப்பட்டு பழியும்படியாக அதன் கொம்பை, Adhan Kombai - அவ்யானையின் தந்தத்தை பறித்து எறிந்த, Parithu Erindha - பிடுங்கிப் பொகட்ட கூத்தன், Kooththan - திவ்ய சேஷ்டிதங்களையுடைய பெருமான் வம்பு அவிழும் செண்பகத்தின் மணம் கமழும், Vambu Avizhum Senbagaththin Manam Kamazhum - அப்போதலர்ந்த செண்பகப் பூவிமுடைய வாஸனை வீசப்பெற்ற செம்பொன் மதிள் பொழில் புடை சூழ், Sembon Mathil Pozhil Pudai Soozh - செவ்விய பொன்னால் செய்யப்பட்ட திருமதில்களும் சோலைகளும் சுற்றிலும் சூழ்ந்திருக்கப் பெற்ற |
| 1257 | பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்-நன்மை மிக்க அவதி இன்றிக்கே இருக்கிற ஸ்ரீ வைகுண்டத்திலே ஸ்ரீ திருவடி ஸ்ரீ திரு வநந்த ஆழ்வான் உடன் ஒரு கோவையாய் நச புன ஆவர்த்தத்தே -என்கிறபடி ஒருநாளும் பிரியாதே இருக்கப் பெறுவர்) 10 | காரார்ந்த திருமேனிக் கண்ணன் அமர்ந்து உறையும் இடம்
சீரார்ந்த பொழில் நாங்கைத் திருத் தேவனார் தொகை மேல்
கூரார்ந்த வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார்
ஏரார்ந்த வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே –4-1-10 | பதவுரை Show / Hideகார் ஆர்ந்த திருமேனி கண்ணன், Kaar Aarntha Thirumeeni Kannaan - மேகத்தோடொத்த திருமேனியை யுடைய கண்ணபிரான் (- (கூர் ஆர்ந்த வேல் கலியன்;)) அமர்ந்து உறையும்; இடம், Amarnthu Uraiyum Idam - பொருந்தி வாழும் திருப்பதியாய், சீர் ஆர்ந்த பொழில் நாங்கை, Seer Aarntha Pozhil Naangkai - அழகு பொருந்திய சோலைகளை யுடைய திருநாங்கூரிலுள்ளதான திருத்தேவனார் தொகைமேல், Thiruththevanar Thogaimel - திருத்தேவனார் தொகை யென்னும் திவ்யதேசம் விஷயமாக கூறு, Kooru - அருளிச்செய்த தமிழ் பத்தும், Tamil Padhum - இத்தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும் வல்லார், Vallar - ஓதவல்லவர்கள் ஏர் ஆர்ந்த வைகுந்தத்து, Aer Aarntha Vaikundhathu - நன்மை மிக்க ஸ்ரீவைகுண்டத்தில் இமையவரோடு இருப்பார், Imaiyavarodu Iruppaar - நித்யஸூரிகளோடு கூடி யிருக்கப் பெறுவார்கள் |