Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 4-10 துப்புடையாரை (10 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
423ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 1
துப்புடை யாரை அடைவ தெல்லாம் சோர்விடத்துத் துணை யாவ ரென்றே
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால்
எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-1
அரங்கத்து,Arangaththu - திருவரங்கம் பெரிய கோயிலில்
அரவு அணை,Aravu Anai - திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல்
பள்ளியானே,Palliyanae - பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே!
துப்பு உடையாரை அடைவது,Thuppu Udaiyaarai Adaivathu - (அடியாரைக் காப்பதில்) ஸாமர்த்தியமுடைய தேவரீரை ஆஸ்ரயிப்பது
எல்லாம் சோர்வு இடத்து,Ellaam Sorvu Idaththu - ‘ஸர்வ இந்திரியங்களும் சிதிலமாய் விடுங்காலத்தில்
துணை ஆவர் என்றே,Thunai Aavar Endrae - தேவரீர் துணையாயிருக்கும் என்கிற எண்ணத்தினாலன்றோ?
ஒப்பு இலேன் ஆகிலும்,Oppu Ilaen Aagilum - (இவ்வாறு துணை செய்வதற்கு உரிய அதிகாரிகள் இன்னாரென்னு தேவர் திருவுள்ளத்திற் கொண்டிருக்கும் அவர்களோடு) அடியேன் ஒப்பற்றவனாயினும்,
நீ ஆனைக்கு அருள் செய்தமையால்,Nee Aanaikku Arul Seithamaiyaal - தேவர் கஜேந்திராழ்வானைக் காத்தருளியவராதலால்
நின் அடைந்தேன்,Nin Adaindhaen - (அவரைப் போல் அடியேனையுங் காத்தருள்வீரென்று) தேவரைச் சரணம் புகுந்தேன்
எய்ப்பு,Eyppu - (வாத பித்த ச்லேஷ்மங்களினால் நெருக்குண்கையா லுண்டாகக் கடவதான) இளைப்பானது
என்னை,Ennai - அடியேனை
வந்து நலியும் போது,Vanthu Naliyum Podhu - கிட்டி வருந்துங்காலமாகிற
அங்கு,Angu - அந்த சரம தசையில்
நான்,Naan - அடியேன்
உன்னை,Unnai - தேவரீரை
ஏதும்,Aedhum - க்ஷண காலமாயினும்
நினைக்க மாட்டேன்,Ninaikka Maattaen - நினைக்க முடியாதவனாவேன்
இப்போதே,Eppodhe - (கரண களேபரங்கள் தெளிவு பெற்றிருக்கிற) இப்போதே
சொல்லி வைத்தேன்,Solli Vaiththaen - (என்னுடைய பிரார்த்தனையை) விண்ணப்பஞ் செய்து கொண்டேன்
424ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 2
சாமிடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய் சங்கொடு சக்கர மேந்தினானே
நாமடித்து என்னை அனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன் தமர்கள்
போமிடத்து உன் திறத்து எத்தனையும் புகா வண்ணம் நிற்பதோர் மாயை வல்லை
ஆமிடத்தே உன்னைச் சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-2
சங்கொடு,Sangodu - ஸ்ரீபாஞ்சஜந்யத்தையும்
சக்கரம்,Chakkaram - ஸ்ரீஸுதர்சனாழ்வானையும்
ஏந்தினானே,Aendhinaanae - திருக் கையில் அணிந்து கொண்டுள்ளவனே
அரங்கத்து அரவு அணை பள்ளியானே!,Arangaththu Aravu Anai Palliyanae - திருவரங்கம் பெரிய கோயிலில் திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல் பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே!
அனேக தண்டம் செய்வதா நிற்பா,Anaega Thandam Seivathaa Nirpaa - பல வகைகளால் தண்டிக்க நினையா நின்றவர்களாய்
போம் இடத்து,Pom Idaththu - இழுத்துக் கொண்டு போம் போது
உன் திறத்து,Un Thiraththu - (என்னுடைய நெஞ்சானது) உன் விஷயத்தில்
எத்தனையும்,Eththanaikum - சிறிதாயினும்
புகா வண்ணம்,Pugaa Vannam - அவகாஹிக்க மாட்டாதபடி
நிற்பது ஓர் மாயை வல்லை,Nirpathu Or Maayai Vallai - மறைந்து நிற்கையாகிற ஒப்பதொரு மாயையைச் செய்வதில் (நீ) வல்லவனாக யிரா நின்றாய்
நமன் தமர்கள்,Naman Thamargal - யம படர்கள்
நா மடித்து,Naa Madiththu - (மிக்க கோபத்தோடு) நாக்கை மடித்துக் கொண்டு
என்னை,Ennai - (மஹா பாபியான) அடியேனை
ஆம் இடத்தே,Aam Idaththae - (ஆதலால்) ஸர்வேந்திரயங்களுடங் தெளிவு பெற்றிருக்கை யாகிற இக் காலத்திலேயே
சாம் இடத்து என்னை குறிக்கோள் கண்டாய் என்று,Saam Idaththu Ennai Kurikkol Kandhaai Endru - “சரீர வியோக ஸமயத்தில் (உன்னை நினைக்க மாட்டாத) அடியேனைத் திருவுள்ளம் பற்றி யருள வேணும்”
உன்னை,Unnai - உன்னைக் குறித்து
சொல்லி வைத்தேன்,Solli Vaiththaen - விண்ணப்பஞ் செய்து கொண்டேன்.
425ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 3
எல்லையில் வாசல் குறுகச் சென்றால் எற்றி நமன் தமர் பற்றும் போது
நில்லுமி னென்னும் உபாய மில்லை நேமியும் சங்கமும் ஏந்தி னானே
சொல்லலாம் போதே உன் நாம மெல்லாம் சொல்லினேன் என்னைக் குறிக் கொண்டு என்றும்
அல்லல் படா வண்ணம் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-3
நேமியும்,Naemiyum - திருவாழியையும்
சங்கமும்,Sangamum - ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தையும்
ஏந்தினானே,Aendhinaanae - கையில் அணிந்து கொண்டுள்ளவனே
வாசல் குறுகச் சென்றால்,Vaasal Kurugach Sendraal - (யம புரத்துக்குப்) போம் பழியைக் கிட்டப் புகுந்தால்
நமன் தமர்,Naman Thamar - யம கிங்கரர்கள்
ஏற்றி,Aettri - அடித்து
பற்றும் போது,Patrum Podhu - பிடிக்குங் காலத்தில்
நில்லுமின் என்னும்,Nillum In Enum - “கடக்க நில்லுங்கள்” என்ற (அவர்களைக் கிட்ட வர வொட்டாமல்) தடுக்கும் படியான
உபாயம் இல்லை,Upaayam Illai - ஓரு உபாயமும் (என் கையில்) இல்லை;
சொல்லலாம் போதே,Sollalaam Podhae - வாய் விட்டுச் சொல்லுகைக்கு உரிய இப்போதே
அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!,Arangaththu Aravu Anaip Palliyanae - திருவரங்கம் பெரிய கோயிலில் திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல் பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே!
எல்லையில்,Ellaiyil - (அடியேனுடைய வாழ் நாளின்) எல்லையாகிய சரம தசையில்
உன்,Un - உன்னுடைய
நாமம் எல்லாம்,Naamam Ellaam - திரு நாமங்களை யெல்லாம்
சொல்லினேன்,Sollinaen - சொன்னேன்;
என்னை,Ennai - அடியேனை
குறிக் கொண்டு,Kurik Kondu - திருவுள்ளத்திற் கொண்டு
என்றும்,Endrum - எப்போதும்
அல்லல் படா வண்ணம்,Allal Padaa Vannam - அநர்த்தப் படாதபடி
காக்க வேண்டும்,Kaakka Vendum - ரக்ஷித்தருள வேணும்.
426ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 4
ஒற்றை விடையனும் நான் முகனும் உன்னை யறியாப் பெருமை யோனே
முற்ற உலகெல்லாம் நீயேயாகி மூன்றெழுத்தாய முதல்வனேயா
அற்றது வாணாள் இவற்கென் றெண்ணி அஞ்ச நமன் தமர் பற்ற லுற்ற
அற்றைக்கு நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-4
ஒற்றை விடையனும்,Otrai Vidaiyanum - ஒப்பற்ற ரிஷப வாஹநனானன ருத்ரனும்
நான்முகனும்,Naanmuganum - ப்ரஹ்மாவும்
உன்னை,Unnai - உன்னை
அறியா,Ariyaa - (உள்ளபடி) அறிய வொண்ணாமைக்கு உறுப்பான
பெருமை யோனே,Perumai Yoanae - பெருமை பொருந்தியவனே!
நமன் தமர்,Naman Thamar - யம கிங்கரர்கள்
இவற்கு வாழ் நாள் அற்றது என்று எண்ணி,Evarkku Vaazhnal Atrathu Endru Enni - இவனுக்கு ஆயுள் காலம் முடிந்தது என்று நினைத்து
முற்ற உலகு எல்லாம்,Muttra Ulagu Ellaam - ஒன்றொழியாதபடி எல்லா உலகங்களும்
நீயே ஆகி,Neeyae Aagi - நீயே ஆய்
மூன்று எழுத்து ஆய,Moonru Ezhuththu Aaya - மூன்று அக்ஷரமான பிரணவ ஸ்வரூபியானவனும்
ஓ முதல்வனே,O Mudhalvane - ஸர்வ காரண பூதனுமானவனே!
அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!.,Arangaththu Aravu Anaip Palliyanae - திருவரங்கம் பெரிய கோயிலில் திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல் பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே!
அஞ்ச,Anja - (பிடிக்கிற பிடியில்) அஞ்சும்படி
பற்றல் உற்ற அற்றைக்கு,Patral Utra Atraiyukku - பிடிக்கப் புகுகிது அன்றைக்கு
நீ என்னை காக்க வேண்டும்.,Nee Ennai Kaakka Vendum - ரக்ஷித்தருள வேணும்.
427ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 5
பைய ரவினணைப் பாற்கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி
உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான் முகனை
வைய மனிசரைப் பொய் யென்றெண்ணிக் காலனையும் உடனே படைத்தாய்
ஐய இனி என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளியானே–4-10-5
பால்கடலுள்,Paal Kadalul - திருப் பாற் கடலில்
பை அரவ இன் அணை,Pai Arava In Anai - (பரந்த) பாடல்களை யுடைய திருவனந்தாழ்வானகிய இனிய படுக்கையின் மீது
பள்ளி கொள்கின்ற,Palli Kolginra - திருக் கண் வளர்ந்தருளா நின்ற
பரம மூர்த்தி,Parama Moorththi - பரம சேஷியானவனே !
உய்ய,Uyya - (எல்லா வுயிர்களும் தன்னை அடைந்து) உஜ்ஜிவிக்கும்படி
உலகு,Ulagu - லோகங்களை
படைக்க வேண்டி,Padaikka Veendi - ஸ்ருஷ்டிக்க விரும்பி
உந்தியில்,Undhiyil - திரு நாபிக் கமலத்தில்
நான் முகனை,Naan Muganai - பிரமனை
தோற்றினாய்,Thotrinai - தோற்று வித்தவனே!
வையம்,Vaiyam - பூமியிலுள்ள
மனிசர்,Manisar - மனுஷ்யர்கள்
பொய் என்று எண்ணி,Poi Endru Enni - (நமது கட்டளையாகிய சாஸ்த்தர மரியாதையில் நிற்கமாட்டாது) க்ருத்ரிமராய் நடப்பவர்களென்று நினைத்து (அந்த விபரீதாசரணத்துக்கு தக்க தண்டம் நடத்துதற்காக)
காலனையும்,Kaalanaiyum - யமனையும்
உடனே,Udanae - கூடவே
படைத்தாய்,Padatthaai - ஸ்ருஷ்டித்தருளினவனே!
ஐய,Aiyaa - பரம பந்துலானவனே!
அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!,Arangaththu Aravu Anaip Palliyanae - திருவரங்கம் பெரிய கோயிலில் திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல் பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே!
இனி என்னைக் காக்க வேண்டும்,Eni Ennaik Kaakka Vendum - இவர் என்னை காக்க வேண்டும்
428ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 6
தண்ணென வில்லை நமன் தமர்கள் சாலக் கொடுமைகள் செய்யா நிற்பர்
மண்ணொடு நீரும் எரியும் காலும் மற்றும் ஆகாசமு மாகி நின்றாய்
எண்ணலாம் போதே உன் நாம மெல்லாம் எண்ணினேன் என்னைக் குறிக்கொண்டு
என்றும் அண்ணலே நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-6
மண்ணொடு,Mannodu - பூமியும்
நீரும்,Neerum - ஜலமும்
எரியும்,Eriyum - தேஜஸ்ஸும்
காலும்,Kaalum - வாயுவும்
ஆகாசமும்,Aakaasamum - ஆகாசமும் (ஆகிய பஞ்ச பூதங்களும்)
மற்றும் ஆகி நின்றாய்,Matrum Aagi Nindraai - மற்றுமுள்ள பதார்த்தங்களுமாய் நின்றவனே!
அண்ணலே,Annaley - ஸர்வ ஸ்வாமி யானவனே!
அரக்கத்து அரவணைப் பள்ளியானே;,Arakkaththu Aravanaip Palliyanae - திருவரங்கம் பெரிய கோயிலில் திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல் பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே!
நமன் தமர்கள்,Naman Thamargal - யம கிங்கரர்கள்
தண்ணென வில்லை,Thannena Villai - இரக்க மற்றவர்களாய்க் கொண்டு
சால,Saala - மிகவும்
கொடுமைகள்,Kodumaigal - கொடிய சிஷைகளை
செய்யா நிற்பர்,Seiyaa Nirpar - பண்ணுவர்கள்;
எண்ணலாம் போதே,Ennalaam Podhae - (அப்படிப்பட்ட சிஷைகளுக்கு ஆளாகா தொழியும்படி.) அநுஸந்கைக்கு உரிய காலத்திலேயே
உன் நாமம் எல்லாம்,Un Naamam Ellaam - உன்னுடைய திருநாமங்களை யெல்லாம்.
எண்ணினேன்,Enninaen - அநுஸந்தித்தேன் (ஆதலால்)
என்னை,Ennai - அடியேனை
நீ,Nee - நீ
குறிக் கொண்டு,Kurik Kondu - நினைவுள்ளத்தில் கொண்டு
என்றும்,Endrum - எப்போதும்
காக்க வேண்டும்,Kaakka Vendum - காத்தருள வேணும்
429ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 7
செஞ்சொல் மறைப் பொருளாகி நின்ற தேவர்கள் நாயகனே எம்மானே
எஞ்சலி லென்னுடை யின்னமுதே ஏழுலகு முடையாய் என்னப்பா
வஞ்ச வுருவின் நமன் தமர்கள் வலிந்து நலிந்து என்னைப் பற்றும் போது
அஞ்சலமென்று என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளியானே–4-10-7
செம் சொல்,Sem Sol - ருஜுவான சொற்களை யுடைய
மறை,Marai - வேதத்துக்கு
பொருள் ஆகி நின்ற,Porul Aagi Nindra - அர்த்தமாயிருப்பவனும்
தேவர்கள்,Thaevargal.Devargal - நித்திய ஸூரிகளுக்கு
நாயகனே,Naayagane - தலைவனுமானவனே!
எம்மானே,Emmaanae - எம்பெருமானே!
எஞ்சல் இல்,Enjal Il - குறை வற்ற
இன்,En - பரம போக்யமான
உன்னுடை அமுதே,Unnudaiya Amudhe - எனக்கு (ரஸ்யமான) அம்ருதம் போன்றவனே!
ஏழு உலகும் உடையாய்,Ezh Ulagum Udaiyaai - உலகங்களுக் கெல்லாம் ஸ்வாமி யானவனே!
என் அப்பா,En Appa - எனக்கு உபகாரகனானவனே!
அரங்கத் தரவணைப் பள்ளியானே!;,Arangathth Aravanaip Palliyanae - திருவரங்கம் பெரிய கோயிலில் திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல் பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே!
வஞ்சம்,Vanjam - வஞ்சனை பொருந்திய
உருவின்,Uruvin - ரூபத்தை யுடையவரான
நமன் தமர்கள்,Naman Thamargal - யம கிங்கரர்கள்
என்னை,Ennai - அடியேனை
வலிந்து,Valindhu - பலாத்கரித்து
நலிந்து,Nalindhu - ஹிம்ஸித்துக் கொண்டு
பற்றும் போது,Patrum Podhu - பிடிக்கும் போது
அஞ்சல் என்று என்னை காக்க வேண்டும்,Anjal Endru Ennai Kaakka Vendum - அஞ்ச வேண்டா என்று என்னை காக்க வேண்டும்
430ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 8
நான் ஏதும் உன் மாய மொன்ற றியேன் நமன் தமர் பற்றி நலிந்திட்டு இந்த
ஊனே புகே யென்று மோதும் போது அங்கேதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்
வானேய் வானவர் தங்க ளீசா மதுரைப் பிறந்த மா மாயனே என்
ஆனாய் நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-8
வான் ஏய்,Vaan Ey - பரம பதத்திற் பொருந்தி யிரா நின்ற
வானவர் தங்கள்,Vaanavar Thangal - நித்ய முக்தர்களுக்கு
ஈசா,Eesaa - தலைவனே!
மதுரை,Mathurai - திரு வட மதுரையில்
பிறந்த,Pirantha - அவதரித்த
மா மாயனே,Maa Maayaney.Mayane - மிக்க ஆச்சரிய சக்தியை யுடையவனே!
என் ஆனாய்,En Aanaai - (பாகனுக்கு வசப்பட்டொழுகுகின்ற) யானை போல் எனக்கு வசப்பட்டிருப்பவனே!
அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!,Arangaththu Aravu Anaip Palliyanae - திருவரங்கம் பெரிய கோயிலில் திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல் பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே!
நான்,Naan - அடியேன்
உன் மாயம்,Un Maayam - உன் மாயைகளில்
ஏது ஒன்றும்,Aethu Ondrum - யாதொன்றையும்
அறியேன்,Ariyaen - அறிய மாட்டேன்;
நமன் தமர்,Naman Thamar - யம கிங்கரர்கள்
பற்றி,Patri - (என்னைப்) பிடித்து
நலிந்திட்டு,Nalindhittu - (இந்தச் சரீரத்தோடே) பண்ண வேண்டிய ஹிம்ஸைகளை யெல்லாம் பண்ணி விட்டு, (பின்பு,)
இந்த ஊன் புகு என்று,Endha Oon Pugu Endru - ‘இந்த யாதநா சரீரத்தினுள்ளே பிரவேசி’ என்று
மோதும் போது,Modhum Podhu - அடிக்கும் போது
அங்கு,Angu - அவ் விடத்தில்
உன்னை நான் ஒன்றும் நினைக்க மாட்டேன்;,Unnai Naan Ondrum Ninaikka Maattaen - உன்னை நான் ஒன்றும் நினைக்க மாட்டேன்;
நீ என்னை காக்க வேண்டும்.,Nee Ennai Kaakka Vendum - நீ என்னை காக்க வேண்டும்.
431ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 9
குன்றெடுத்து ஆநிரை காத்த ஆயா கோ நிரை மேய்த்தவனே எம்மானே
அன்று முதல் இன்றறுதியாக ஆதியஞ் சோதி மறந்தறியேன்
நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்து வலிந்து என்னைப் பற்றும் போது
அன்றங்கு நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே–4-10-9
குன்று,Kundru - கோவர்த்தந மலையை
எடுத்து,Eduththu - (குடையாக) எடுத்து (ப்பிடித்து)
ஆநிரை,Aanirai - பசுக்களின் திரளை
காத்து,Kaaththu - ரஷித்தருளின
ஆயா,Aayaa - ஆயனே (கோபாலானே!)
கோ நிரை,Ko Nirai - மாடுகளின் கூட்டத்தை
மேய்த்தவனே,Maeyththavaney - மேய்த்தருளினவனே!
எம்மானே,Emmaanae - எனக்கு ஸ்வாமி யானவனே
அரங்கத்து அரவணைப் பள்ளியானே,Arangaththu Aravanaip Palliyanae - திருவரங்கம் பெரிய கோயிலில் திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல் பள்ளி கொள்ளா நின்றுள்ள எம்பெருமானே!
அன்று முதல்,Andru Mudhal - (உமக்குப் பல்லாண்டு பாடுமவனாக்கக் கொண்ட) அந்நாள் தொடங்கி
இன்று அறுதி ஆக,Indru Arudhi Aaga - இன்றளவாக
ஆகி,Aagi - ஸர்வ காரண பூதனான உன்னுடைய
அம் சோதி,Am Sothi - விலக்ஷண தேஜோ ரூபமான திவ்ய மங்கள விக்ரஹகத்தை
மறந்து அறியேன்,Marandhu Ariyaen - (அடியேன்) மறந்ததில்லை
நன்றும் கொடிய,Nandrum Kudiya - மிக்க பொறுமை பொருந்திய
நமன் தமர்கள்,Naman Thamargal - யம கிங்காரர்கள்
என்னை,Ennai - என்னை
நலிந்து,Nalindhu - ஹிம்ஸித்து
வலிந்து,Valindhu - பலாத்கரித்து
பற்றும் போது அன்று,Patrum Podhu Andru - பிடிக்கும் அத் தருணத்தில்
அங்கு,Angu - அவ் விடத்தில்
நீ என்னைக் காக்க வேண்டும்,Nee Ennaik Kaakka Vendum - நீ என்னைக் காக்க வேண்டும்
432ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - துப்புடையாரை (அந்திமகாலத்தில் கடாக்ஷிக்கும்படி அப்போதைக்கு இப்போதே பெரியபெருமாள் திருவடிகளில் சரணம் புகுதல்.) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 10
மாயவனை மது சூதனன் தன்னை மாதவனை மறையோர்க ளேத்தும்
ஆயர்களேற்றினை அச்சுதனன் தன்னை அரங்கத் தரவணைப் பள்ளி யானை
வேயர் புகழ் வில்லி புத்தூர் மன் விட்டுசித்தன் சொன்ன மாலை
பத்தும் தூய மனத்தனராகி வல்லார் தூ மணி வண்ணனுக் காளர் தாமே–4-10-10
மாயவனை,Maayavanai - ஆச்சரிய சக்தி யுடையவனும்
மதுசூதனனை,Mathusoothananai,Madusothanai - மது என்ற அசுரனை ஒழித்தருளினவனும்
மாதவனை,Maadhavanai,Madhavanai - பெரிய பிராட்டியார்க்கு வல்லபவனும்
மறையோர்கள்,Maraiyorgal - வைதிகர்கள்
ஏத்தும்,Eaththum - துதிக்கப்படுமவனும்
ஆயர்கள் ஏற்றினை,Aayargal Eatrinai - இடையர்களுக்குத் தலைவனும்
அச்சுதனை,Achchuthanai - (அடியாரை ஒரு நாளும்) நழுவ விடாதவனும்
அரங்கத்து,Arangaththu - கோயிலில்
அரவு அணை,Aravu Anai - சேஷ சயநத்தில்
பள்ளியானை,Palliyanaai - கண் வளர்த்தருள்பவனுமான எம்பெருமானை நோக்கி
வேயர்,Vaeyar - தாம் திருவவதரித்த குடியிலுள்ள ரெல்லோராலும்
புகழ்,Pugazh - புகழப் பட்டவரும்
வில்லிபுத்தூர்,Villipuththur - ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு
மன்,Mann - நிர்வாஹருமான
விட்டுசித்தன்,Vittuchiththan - பெரியாழ்வார்
சொன்ன,Sonna - அருளிச் செய்த
மாலை,Maalai - சொல் மாலையான
பத்தும்,Paththum - இப் பத்துப் பாசுரங்களையும்
தூய மனத்தனர் ஆகி,Thooya Manaththanar Aagi - நிர்மலமான நெஞ்சை யுடையராய்க் கொண்டு
வல்லார் தாம்,Vallaar Thaam - ஓத வல்லார்கள்
தூய மணி,Thooya Mani - பழிப்பற்ற நீலமணி போன்ற வடிவை யுடைய எம்பெருமானுக்கு
ஆளர்,Aalar - அடிமை செய்யப் பெறுவர். (ஏ அசை.)