திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1308 | பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பய பிரசங்கம் இல்லாத தேசத்திலே இருக்கிற நிருபாதிக பந்துவே புறம்பு புகல் உண்டு என்று இருக்கில் அன்றோ ஆறி இருக்கலாவது-அநந்ய கதியாய் இருக்கிற என் இடரைக் களையாய் – இவ்வடிவை அனுபவிக்கையை இழக்கப் போமோ) 1 | கண்ணார் கடல் போல் திருமேனி கரியாய்
நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னு நாங்கூர்த்
திண்ணார் மதிள் சூழ் திரு வெள்ளக் குளத்து
வண்ணா வடியேன் இடரைக் களையாயே –4-7-1 | பதவுரை Show / Hideகண் ஆர் கடல் போல் திருமேனி கரியாய், Kan Aar Kadal Pol Thirumeni Kariyai - இடமுடைத்தான கடல்போலே திருமேனி கறுத்திருக்கப்பெற்றவனே! நண்ணார் முனை, Nannaar Munai - சத்துருக்களுடைய யுத்தத்திலே வென்றி கொள்வார், Vendri Kolvaar - வெற்றிபெறுமவர்களான அந்தணர்கள் மன்னு, Mannu - வாழ்கிற நாங்கூர், Naangoor - திருநாங்கூரில் திண் ஆர் மதிள் சூழ், Thin Aar Mathil Soozh - திடமான மதிளாலே சூழப்பட்ட திருவெள்ளக்குளத்துள், Thiruvellakkulathul - திருவெள்ளக்குளமென்னுந் திருப்பதியில் எழுந்தருளியிருக்கிற அண்ணா, Anna - அண்ணனே! அடியேன் இடரை களையாய், Adiyen Idarai Kalaiyai - அடியேனுடைய துன்பங்களை ஒழித்தருள வேணும் |
| 1309 | பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷணத்துக்கு வளையம் வைத்து இருக்கிறாயே-விச்சேதியாதே சாவதி அன்றிக்கே இருந்துள்ள புகழை உடைய பிராமணர் உடைய ஸ்ரீ திரு நாங்கூர்-அவ் ஊரில் உள்ளார் படி உனக்கு வேண்டாவோ) 2 | கொந்தார் துளவ மலர் கொண்டு அணிவானே
நந்தாத பெரும் புகழ் வேதியர் நாங்கூர்ச்
செந்தாமரை நீர்த் திரு வெள்ளக் குளத்துள்
எந்தாய் அடியேன் இடரைக் களையாயே –4-7-2 | பதவுரை Show / Hideகொந்து ஆர் துவளம் மலர் கொண்டு அணிவானே, Kondhu Aar Thuvazham Malar Kondo Anivane - பூங்கொத்துக்கள் நிறைந்திருக்கிற திருத்துழாய் மலர்களை அணிந்துகொண்டிருக்குமன்னே!, நந்தாத பெரு புகழ் வேதியர் நாங்கூர், Nandhaadha Peru Pugazh Vedhiyar Naangoor - ஒருநாளும் குறையாத பெரிய புகழையுடையரான வைதிகர்கள் வாழ்கிற திருநாங்கூரில், செந்தாமரை நீர், Senthamarai Neer - செந்தாமரைப் பூக்களையுடைய நீர்நிலைகளையுடைத்தான திருவெள்ளக் குளத்துள், Thiruvellak Kulathul - திருவெள்ளக்குளத்தி லெழுந்தருளியிருக்கிற எந்தாய், Endhaai - என் ஸ்வாமியே! அடியேன் இடரை களையாய், Adiyen Idarai Kalaiyai - அடியேனுடைய துன்பங்களை ஒழித்தருளவேணும். |
| 1310 | பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மழையில் அகப்பட்ட இடையர் இடருக்கும் என் இடருக்கும் வாசி பார்த்துக் கொள்ளாய் துரியோதனன் தானும் தன்னுடைய பரிகரமுமாக தம் தாம் வசம் அன்றிக்கே வணங்கினார்கள் சேஷி முன்பு சேஷ பூதர் அனுகூலிக்கக் கடவோம் அல்லோம் -என்னும் வ்யவஸ்தை அப்படியே சென்றார் எல்லாரும் வணங்கா நின்ற திரு வெள்ளக் குளத்துள் நின்றாய் ஸ்வரூப ரூபகுணங்களால் எல்லை காண ஒண்ணாதவனே இரண்டு தலையும் ஒக்க ஆற்றாமை உண்டாகில் அன்றோ ஆறி இருப்பது) 3 | குன்றால் குளிர் மாரி தடுத்து உகந்தானே
நன்றாய பெரும் புகழ் வேதியர் நாங்கூர்
சென்றார் வணங்கும் திரு வெள்ளக் குளத்துள்
நின்றாய் நெடியாய் அடியேன் இடர் நீக்கே –4-7-3 | பதவுரை Show / Hideகுளிர்மாரி குன்றால் தடுத்து, Kulirmaari Kunraal Thadhu - (திருவாய்ப்பாடியை) வவ்வலிடப்ப பண்ணின மழையைக் கோவர்த்தன மலையினால் தடைசெய்து (- (திருவெள்ளக்குளத்துள்;)) ஊகந்தானே, Oogandhaane - திருவுள்ளம் மகிழ்ந்தவனே! நன்று ஆய பெரு புகழ் வேதியர், Nandru Aaya Peru Pugazh Vedhiyar - விலக்ஷணமான மிக்க கீர்த்தியையுடைய வைதிகர்கள் வாழ்கிற நாங்கூர், Naangoor - திருநாங்கூரில் சென்றார் வணங்கும், Senraar Vanangum - வருவார் போவாரெல்லாரும் வணங்கப்பெற்ற நின்றாய், Nindraai - நின்றருள்கின்ற நெடியாய், Nedhiyaai - ஸர்வேச்வரனே!, அடியேன் இடர் நீக்கு, Adiyeen Idar Neekku - அடியேனுடைய துன்பங்களைப் போக்கியருள். |
| 1311 | பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (செல்ல நின்றதுவும்-வர நின்றதுவும்-ஆகர்ஷமாய் இருக்கைக்கும் கிட்டினார் குற்றம் காணாக் கண் இட்டு இருக்கும்படி யாலேயும் -ஆனாய் -என்கிறார்) 4 | கானார் கரி கொம்பு ஒசித்த களிறே
நா நா வகை நல்லவர் மன்னிய நாங்கூர்
தேனார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள்
ஆனாய் அடியேனுக்கு அருள் புரியாயே –4-7-4 | பதவுரை Show / Hideகான் ஆர் கரி கொம்பு அது ஒசித்த களிறே, Kaan Aar Kari Kombu Adhu Osiththa Kalire - காட்டிலே வளர்ந்து கொழுப்படைந்திருந்த (குவலயாபீடமென்னும்) யானையினுடைய தந்தங்களை முறித்தொழித்த யானைபோல் செருக்குற்ற பெருமானே! நானாவகை நல்லவர், Naanavagai Nallavar - (குலம் கல்வி முதலிய) பலவகைகளினால் நன்மை பெற்றவர்கள் மன்னிய, Manniya - பொருந்திவாழ்கிற நாங்கூர், Naangoor - திருநாங்கூரில் தேன் ஆர் பொழில் சூழ், Then Aar Pozhil Soozh - தேன் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட திருவெள்ளக் குளத்துள், Thiruvellak Kulathul - திருவெள்ளக்குளத்தில் எழுந்தருளியிருக்கிற ஆனாய், Aanaai - ஆனை போன்றவனே அடியேனுக்கு அருள்புரியாய், Adiyenukku Arulpuriyai - அடியேன் மீது கிருபை பண்ணவேணும் |
| 1312 | பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருமலையிலே மேவின விளக்கே-தன் ஸ்வரூப ரூப குணங்களுக்கு தானே பிரகாசன் ஆனவனே நீ எதிர் சூழல் புக்குத் திரியா நின்றால்-இறாயாதே -பார்ஸ்வத்தில் ஆம்படி -பாங்காக வருவேன்) 5 | வேடார் திருவேங்கடம் மேய விளக்கே
நாடார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்
சேடார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்தாய்
பாடா வருவேன் வினையாயின பாற்றே –4-7-5 | பதவுரை Show / Hideவேடு ஆர் திருவேங்கடம் மேய, Veedu Aar Thiruvaengadam Maeya - வேடர்கள் மலிந்திருக்கிற திருமலையிலே நித்யவாஸம் பண்ணுகிற விளக்கே, Vilakke - விளக்குப்போன்றவனே! நாடு ஆர் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர், Naadu Aar Pugazh Vedhiyar Manniya Naangoor - நாடெங்கும் நிறைந்த புகழையுடையரான வைதிகர்கள் நித்யவாஸம் பண்ணுகிற திருநாங்கூரில், சேடு ஆர் பொழில் சூழ், Sedu Aar Pozhil Soozh - திரண்டிருக்கின்ற சோலைகளால் சூழப்பட்ட திருவெள்ளக் குளத்தாய், Thiruvellak Kulaththai - திருவெள்ளக்குளத்தில் எழுந்தருளியிருப்பவனே!, பாடா வருவேன் வினை ஆயின பாற்று, Paadaa Varuveen Vinai Aayina Paatru - (உன்னைப்) பாடிக்கொண்டு வருகின்ற அடியேனுடைய பாவங்களென்று உள்ளவை எல்லாவற்றையும் சிதறவடிக்க வேணும். |
| 1313 | பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவித்யா கர்மா வாசனா ருசி பகவத் அபசாராதிகள் பிராரப்த கர்மம் இவை துடக்கமான எல்லா இடரும் கெடுமாறு அருளாயே) 6 | கல்லால் கடலை யணை கட்டி யுகந்தாய்
நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர்ச்
செல்வா திரு வெள்ளக் குளத்து உறைவானே
எல்லாவிடரும் கெடுமாறு அருளாயே –4-7-6 | பதவுரை Show / Hideகல்லால் கடலை அணை கட்டி உகந்தாய், Kallal Kadalai Anai Katti Uganthaa - கண்ட கற்களையுங்கொண்டு கடலிலே சேதுகட்டி மகிழ்ந்தவனே! நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர், Nallaar Palaar Vedhiyar Manniya Naangoor - விலக்ஷணரான பல வைதிகர்கள் நித்யவாஸம் பண்ணுகிற திருநாங்கூரில் திருவெள்ளக் குளத்து உறைவானே, Thiruvellak Kulaththu Uraivaane - திருவெள்ளக்குளத்தில் எழுந்தருளியிருப்பவனே! செல்வா, Selvaa - செல்வனே! எல்லா இடரும் கெடும் ஆறு அருளாய், Ella Idarum Kedu Aaru Arulai - (எனது) துன்பங்களெல்லாம் தீரும்படி அருள்புரிய வேணும். |
| 1314 | பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஈஸ்வரத்வ பிடாரால் அன்றிக்கே கையிலே கோலைக் கொண்டு ஜாதி உசிதமான வ்ருத்தியைச் செய்தாய் என்று இடைச் சாதியாக எழுதிக் கொடுத்து இருக்குமத்தாலே என்னை அனன்யார்ஹனாகப் பண்ணினவனே திரு வெள்ளக் குளத்திலே நிற்கிற பெரியோனே என்னால் பொறுக்க ஒண்ணாத பாபத்தை போக்கி அருளாய்) 7 | கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே
நாலாகிய வேதியர் மன்னிய நாங்கூர்
சேலார் வயல் சூழ் திரு வெள்ளக் குளத்துள்
மாலே யென வல் வினை தீர்த்து அருளாயே –4-7-7 | பதவுரை Show / Hideகோலால் நிரை மேய்த்த, Kolaal Nirai Meyththa - கோலைக்கொண்டு பசுக்கூட்டங்களை மேய்த்த எம்கோவலர் கோவே, Emkovalar Kove - எமது கோபால கிருஷ்ணனே! நாலாகிய வேதியர் மன்னிய நாங்கூர், Naalaagiya Vediyar Manniya Naangoor - நாலு வேதங்களையும் வல்லவர்கள் நித்யவாஸம் செய்கிற திருநாங்கூரில் சேல் ஆர் வயல் சூழ், Seyl Aar Vayal Soozh - மீன்கள் நிறைந்த கழனிகளால் சூழப்பட்ட திருவெள்ளக்குளத்துள், Thiruvellakkulathul - திருவெள்ளக்குளத்தில் எழுந்தருளியிருக்கிற மாலே, Maale - எம்பெருமானே! என் வல்வினை தீர்த்தருளாய், En Valvinai Theertharulai - என்னுடைய கொடிய பாவங்களை போக்கியருள வேணும். |
| 1315 | பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இடையர் உனது குணங்களில் மண்டி இருக்க-பிராமணர் வேதங்களில் மண்டி இருக்க நான் சம்சாரத்தில் மக்நன் ஆகி நிற்க-அருளாய் -என்கிறார்) 8 | வராக மதாகி யிம்மண்ணை யிடந்தாய்
நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்ச்
சீரார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள்
ஆராவமுதே யடியேற்கு அருளாயே –4-7-8 | பதவுரை Show / Hideவாராகம் அது ஆகி, Vaaragam Adhu Aagi - மஹாவராஹமாய்த் திருவவதரித்து (- (நாராயணனே!;) (திருவெள்ளக்குளத்துள்;)) இ மண்ணை இடந்தாய், I Mannai Idanthai - இப்பூமியை அண்டபித்தியில் நின்றும் ஒட்டுவிடுவித்தெடுத்தவனே!, நல்ல வேதியர், Nalla Vediyar - விலக்ஷணரான வைதிகர்கள் வாழ்கிற நாங்கூர், Naangoor - திருநாங்கூரில் சீர் ஆர் பொழில் சூழ், Seer Aar Pozhil Soozh - சிறந்த சோலைகள் சூழ்ந்த ஆரா அமுதே, Aaraa Amudhe - ஒருநாளும் த்ருப்தி பிறவாத அமிருதம் போன்றவனே! அடியேற்ரு அருளாய், Adiyerru Arulai - அடியேன்மீது கிருபை பண்ணு. |
| 1316 | பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூவிலே பிறந்தவள் பூ அடிக் கொதித்து விரும்பி அணைக்கும் படி மார்வு படைத்தவனே- பரம பதத்தில் நின்றும் வந்து சம்சாரிகள் பக்கலிலே உறைகையாலே தீப்யமாநனாய் இருக்கிறவனே சம்சாரத்தில் வர்த்திக்கிறான் ஐயோ ஐயோ என்று அருள் புரியாயே) 9 | பூவார் திரு மா மகள் புல்கிய மார்பா
நாவார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்த்
தேவா திரு வெள்ளக் குளத்து உறைவானே
ஆவா வடியான் இவன் என்று அருளாயே –4-7-9 | பதவுரை Show / Hideபூ ஆர், Poo Aar - தாமரைப் பூவில் பொருந்திவஹிக்கிற (- (திருவெள்ளக்குளத்து உறைவானே!–;) (என்று திருவுள்ளமிரங்க வேணும்.)) திரு மா மகள், Thiru Maa Magal - பெரிய பிராட்டியார் புல்கிய, Pulkiya - புணர்ந்த மார்பா, Maarbaa - திருமார்பை யுடையவனே!, நா ஆர் புகழ், Naa Aar Pugazh - (உலகத்தாருடைய) நாக்கிலே நிறைந்திருக்கிற கீர்த்தியையுடைய வேதியர், Vediyar - வைதிகர்கள் மன்னிய, Manniya - நித்யவாஸம் பண்ணுகிற நாங்கூர், Naangoor - திருநாங்கூரில், தேவா, Devaa - பெருமானே!, இவன் அடியான், Ivan Adiyan - “இந்த அடியவன் ஆ ஆ என்று அருளாய், Aa Aa Endru Arulai - ஐயோ! ஐயோ!! (ஸம்ஸாரத்தில் நோவு படுகிறானே”) |
| 1317 | பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வல்லவர்கள் நித்ய சூரிகளோடு ஒரு கோவை ஆவர்கள்) 10 | நல்லன்புடை வேதியர் மன்னிய நாங்கூர்ச்
செல்வன் திரு வெள்ளக் குளத்து உறைவானைக்
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை
வல்லர் யென வல்லவர் வானவர் தாமே — –4-7-10 | பதவுரை Show / Hideநுல் அன்பு உடைவேதியர் மன்னிய நாங்கூர், Nul Anbu Udaivediyar Manniya Nangoor - சிறந்த பக்தியையுடையரான வைதிகர்கள் நித்யவாஸம் பண்ணுகிற திருநாங்கூரில் திருவெள்ளக் குளத்து உறைவான் செல்வனை, Thiruvellak Kulathu Uraivaan Selvanai - திருவெள்ளக்குள மென்னுந்திருப்பதியிலே எழுந்தருளியிருக்கிற திருமால் விஷயமாக, கல்லின், Kallin - மலையைக் காட்டிலும் மலி, Mali - அதிசயித்த வலிவுள்ள தோள், Thol - புஜங்களை யுடையரான கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார் சொன்ன, Sonna - அருளிச்செய்த மாலை, Maala - இச் சொல்மாலையை வல்லர் என வல்லவர் தாம், Vallar En Vallarvar Thaam - ‘இவர்கள் ஸமர்த்தர்கள்’ என்று (அனைவரும்) சொல்லும்படியாக ஓதவல்லவர்கள் வானவர், Vaanavar - நித்யஸூரிகளோடு சோப்பெறுவர். வல்லரென வல்லவர், Vallarena Vallarvar - இவர் பெரிய திருமொழிப் புலவர்’ என்று பிறர் கொண்டாடும்படியாகக் கற்குமவர்கள் என்கை. |