திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 5-தரு துயரம் தடாயேல் (10 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
688பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 1
தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவ கோட்டு அம்மானே அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள் தன் அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே
பதவுரை Show / Hide
விரை குழுவும், Virai Kuzhuvum - பரிமளம் விஞ்சிய
மலர், Malar - புஷ்பங்களை யுடைய
பொழில் சூழ், Pozhil Soozh - சோலைகளாலே சூழப்பட்ட
வித்துவக்கோடு, Viththu Vakkodu - திருவித்துவக் கோட்டில் எழுந்தருளியிருக்கிற
அம்மானே, Ammaane - ஸ்வாமியே!
தரு துயரம், Tharu Thuyaram - (நீயே எனக்குத்) தந்த இத் துன்பத்தை
தடாய் ஏல், Thadai Ael - நீயே களைந்திடா விட்டாலும்
உன் சரண் அல்லால் சரண் இல்லை, Un Saran Allaal Saran Illai - உனது திருவடிகளை யன்றி (எனக்கு) வேறு புகலில்லை;
ஈன்ற தாய், Eendra Thaai - பெற்ற தாயானவள்
அரி சினத்தால், Ari Sinaththaal - மிக்க கோபங்கொண்டு அதனால்
அகற்றிடினும், Agaridinum - (தனது குழந்தையை) வெறுத்துத் தள்ளினாலும்
மற்று, Mattru - பின்பும்
அவள் தன் அருள் ஏ நினைந்து அழும், Aval Than Arul Ae Ninaindhu Azhum - அத்தாயினுடைய கருணையையே கருதி அழுகின்ற
குழவி யதுவே, Kuzhavi Yadhuve - இளங்குழந்தையையே
போன்று இருந்தேன், Pondru Irundhen - ஒத்திரா நின்றேன்.
வித்துவக்கோடு என்பதற்கு, Viththu Vakkodu Enbatharku - வித்வான்கள் கூடிய இடம் என்று காரணப் பொருள் கூறுவர்.
689பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 2
கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல விண் தோய் மதிள் புடை சூழ் வித்துவ கோட்டம்மா! நீ கொண்டு ஆளாய் ஆகிலும் உன் குரை கழலே கூறுவனே
பதவுரை Show / Hide
விண் தோய் மதில், Vin Thoy Madil - ஆகாயத்தை அளாவிய மதில்கள்
புடை சூழ், Pudai Soozh - எப்புறத்தும் சூழப் பெற்ற
வித்துவக்கோடு அம்மா, Viththu Vakkodu Amma - திருவித்துவக் கோட்டில் எழுந்தருவியிருக்கிற ஸ்வாமிந்!
காதலன் தான், Kaadhalan Thaan - கணவனானவன்
கண்டார் இதழ்வனவே செய்திடினும், Kandaar Idhalvanave Seithidinum - பார்ப்பவர்களனைவரும் இகழத் தக்க செயல்களையே செய்தாலும்
கொண்டானை அல்லால் அறியா, Kondaanai Allaal Ariya - (தன்னை) மணஞ் செய்து கொண்டவனான அக் கணவனையே யன்றி
குலம் மகள் போல், Kulam Magal Pol - உயர்நத குலத்துப் பிறந்த கற்புடைய மகள் போல்
நீ கொண்டு ஆளாய் ஆகிலும், Nee Kondo Aalai Aagilum - என்னை அடிமை கொண்டவனான நீ குறையும் தலைக் கட்டாமல் உபேக்ஷித்தாயாகிலும்
உன் குரை கழலே, Un Kurai Kazhale - ஒலிக்கின்ற வீரக்கழலை யுடைய உனது திருவடிகளையே
கூறுவன், Koovuvan - சரணமாகக் குறிக் கொள்வேன்
690பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 3
மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவ கோட்டு அம்மா ! என் பால் நோக்காய் ஆகிலும் உன் பற்று அல்லால் பற்றி இலேன் தான் நோக்காது எத் துயரம் செய்திடினும் தார் வேந்தன் கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே
பதவுரை Show / Hide
மீன் நோக்கும், Meen Nokkum - மீன்களெல்லாம் (தாம் வஸிப்பதற்கு மிகவும் தகுதியான இடமென்று)
நீள் வழல் சூழ், Neel Vazhalsuzh - விசாலமான கழனிகள் சூழ்ந்த
வித்துவக்கோடு, Viththu Vakkodu - திருவித்துவக் கோட்டில் எழுந்தருளியுள்ள
அம்மா, Amma - பெருமானே!
என் பால், En Paal - அடியேன் மீது
நோக்காய் ஆகிலும், Nokkaai Aagilum - நீ அருள் நோக்கம் செய்யாதிருந்தாலும்
உன் பற்று அல்லால் பற்று இலேன், Un Patru Allal Patru Ileen - உன்னைச் சரணமாகப் பற்றுதலை விட்டு வேறொருவரைச் சரணம் புக மாட்டேன்;
தார் வேந்தன், Thaar Vendan - (குடிகளைக் காப்பதற்கென்று) மாலை யணிந்துள்ள அரசன்
தான் நோக்காது, Thaan Nokkadhu - (அதற்கு ஏற்றபடி) தான் கவனித்துப் பாதுகாவாமல்
எத் துயரம் செய்திடினும், Eth Thuyaram Seithidinum - எப்படிப்பட்ட துன்பங்களைச் செய்தாலும்
கோல் நோக்கி வாழும், Kool Nokki Vaalum - அவனுடைய செங்கோலையே எதிர் பார்த்து வாழ்கிற
குடி போன்று இருந்தேன், Kudi Ponder Irundhen - ஒத்திருக்கின்றேன்
691பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 4
வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பல் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் மீளா துயர் தரினும் வித்துவ கோட்டு அம்மா ! நீ ஆளா வுனதருளே பார்ப்பன் அடியேனே
பதவுரை Show / Hide
வாளால் அறுத்து, Vaalal Aruthu - (வைத்தியன்) கத்தியைக் கொண்டு அறுத்தலும், (ஊசியைக் காய்ச்சிச்)
சுடினும், Sudinum - சூடு போடுதலுஞ் செய்தாலும்
மருத்துவன் பால் மாளாத காதல், Maruthuvan Paal Maaladha Kaadhal - அவ்வைத்தியனிடத்து நீங்காத அன்புடைய
நோயாளன் போல், Noyaalan Pol - நோயாளியைப் போல
மாயத்தால், Maayathaal - (உன்) மாயையினால்
நீ மீளா துயர் தரினும், Nee Meela Thuyar Tharinum - நீ நீங்காத துன்பத்தை (எனக்கு) விளைத்தாலும்
அடியேன், Adiyen - உனது அடியவனான நான்
ஆள் ஆக, Aal Aaga - அவ்வடிமை ஸித்திப்பதற்காக
உனது அருளே பார்ப்பன், Unathu Arule Paarppan - உன்னுடைய கருணையையே நோக்கி யிரா நின்றேன்
692பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 5
வெம் கண் திண் களிறு அடர்த்தாய் ! வித்துவ கோட்டு அம்மானே ! எங்கு போய் வுய்கேன் ? உன் இணை அடியே அடையல் அல்லால் எங்கும் போய் கரை காணாது எறி கடல் வாய் மீண்டேயும் வங்கத்தின் கூம்பேறும் மா பறவை போன்றேனே
பதவுரை Show / Hide
வெம் கண், Vem Kan - பயங்கரமான கண்களை யுடைய
திண் களிறு, Thin Kaliru - வலிய (குவலயாபீடமென்னும்) யானையை
அடர்த்தாய், Adartthai - கொன்றவனே!
உன் இணை அடியே அடையல் அல்லால், Un Inai Adiye Adaiyal Allal - உனது உபய பாதங்களையே (நான்) சரணமடைவ தல்லாமல்
எங்கு போய் உய்கேன், Engu Poi Uykeen - வேறு யாரிடத்திற் போய் உஜ்ஜிவிப்பேன்?
எறி, Eri - அலை யெறிகிற
கடல் வாய், Kadal Vaai - கடலினிடையிலே
எங்கும் போய் கரை காணாது, Engum Poi Karai Kaanadhu - நான்கு திக்கிலும் போய்ப் பார்த்து எங்கும் கரையைக் காணாமல்
மீண்டு, Meendu - திரும்பி வந்து
ஏயும், Eyum - (தான் முன்பு) பொருந்திய
வங்கத்தின், Vangathin - மரக் கலத்தினுடைய
கூம்பு ஏறும், Koombu Eerum - பாய் மரத்தின் மீது சேர்கிற
மா பறவை போன்றேன், Maa Paravai Ponderen - பெரியதொரு பக்ஷியை ஒத்திரா நின்றேன்
693பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 6
செந் தழலே வந்து அழலை செய்திடினும் செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கு அல்லால் அலராவால் வெந்துயர் வீட்டா விடினும் வித்து கோட்டு அம்மா ! உன் அந்தமில் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே
பதவுரை Show / Hide
செம் தழலே வந்து, Sem Thazhale Vandu - செந்நிறமுடைய நெருப்பு (தானாக) அருகில் வந்து
அழலை செய்திடினும், Azhalai Seithidinum - வெப்பத்தைச் செய்தாலும்
செம் கமலம் அந்தரம் சேர் வெம், Sem Kamalam Andharam Ser Vem - செந்தாமரைகள் வானத்தில் தோன்றுகிற வெவ்விய
கதிரோற்கு அல்லால், Kathirorku Allal - கிரணங்களை யுடைய ஸூர்யனுக்கு மலருமே யல்லது.
அலரா, Alaraa - (நெருப்புக்கு) மலர மாட்டா;
வெம் துயர், Vem Thuyar - அநுபவித்தே தீர வேண்டியவையான கொடிய (என்) பாவங்களை
வீட்டா விடினும், Veetta Vidinum - தீர்த்தருளா தொழிந்தாலும்
உன் அந்தம் இல் சீர்க்கு அல்லால், Un Andham Il Seerkku Allal - உனது எல்லையில்லாத உத்தம குணங்களுக்கே யல்லாமல்
அகம் குழைய மாட்டேன், Aham Kuzhaiya Maatten - (வேறொன்றுக்கு நான்) நெஞ்சுருக மாட்டேன்.
694பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 7
எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைம் கூழ்கள் மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் மற்றவை போல் மெய் துயர் வீட்டா விடினும் வித்துவ கோட்டு அம்மா! என் சித்தம் மிக வுன் பாலே வைப்பன் அடியேனே
பதவுரை Show / Hide
வான், Vaan - மேகமானது
எத்தனையும் வறந்த காலத்தும், Ethanaiyum Varandha Kaalaththum - எவ்வளவு காலம் மழை பெய்யாமல் உபேக்ஷித்தாலும்
பைங் கூழ்கள், Paing Kuzhgal - பசுமை தங்கிய பயிர்கள்
மைத்து எழுந்த மாமுகிலே பார்த்து இருக்கும், Maiththu Ezhundha Maamugile Paarthu Irukkum - கருநிறங் கொண்டு கிளம்புகின்ற பெரிய மேகங்களையே எதிர்பார்த்திருக்கும்;
அவை போல், Avai Pol - அப் பயிர்கள் போல.
மெய் துயர் வீட்டா விடினும், Mei Thuyar Veetta Vidinum - தவறாது அனுபவிக்கப்படுகிற என் துன்பங்களை நீ போக்காமல் உபேக்ஷித்தாலும்
அடியேன், Adiyen - உனக்கு தாஸனாகிய நான்
என் சித்தம் உன் பாலே மிக வைப்பன், En Sittam Un Paale Mika Vaippan - என் மநஸ்ஸை உன்னிடத்திலேயே மிகவும் செலுத்துவேன்.
695பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 8
தொக்கி இலங்கி ஆறெல்லாம் பரந்தோடி தொடு கடலே புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத மற்றவை போல் மிக்கு இலங்கு முகில் நிறத்தாய் ! வித்துவ கோட்டு அம்மா ! உன் புக்கு இலங்கு சீர் அல்லால் புக்கிலன் காண் புண்ணியனே !
பதவுரை Show / Hide
மிக்கு இலங்கு, Mikku Ilangu - மிகுதியாய் விளங்குகிற
முகில், Mugil - காளமேகம் போன்ற
நிறத்தாய், Niraththai - கரிய திருநிற முடையவனே!
புண்ணியனே, Punniyane - புண்ய ஸ்வரூபியா யுள்ளவனே!
தொக்கு இலங்குயாறு எல்லாம், Thokku Ilanguyaaru Ellam - (ஜல ப்ரவாஹம்) திரண்டு விளங்குகிற நதிகளெல்லாம்
பரந்து ஓடி, Parandhu Oodi - (கண்டவிடமெங்கும்) பரவியோடி (முடிவில்)
தொடு கடலே புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத, Thodu Kadale Pukku Andri Puram Nirka Maattadha - ஆழ்ந்த கடலிலே சென்று சேர்ந்தல்லது மற்றோரிடத்தே புகுந்து நிற்க மாட்டா;
அவை போல், Avai Pol - அவ்வாறுகள் போல,
புக்கு இலங்கு, Pukku Ilangu - (என் நெஞ்சினுள்ளே) புகுந்து விளங்குகிற
சீர் அல்லால், Seer Allaal - (உனது) கல்யாண குணங்கள் தவிர (மற்றோரிடத்தில்)
புக்கிலன், Pukkilan - ஆழ்ந்திடேன்.
696பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 9
நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே தான்  வேண்டும் செல்வம் போல் மாயத்தால் மின்னையே சேர் திகிரி வித்துவ கோட்டு அம்மா ! நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே
பதவுரை Show / Hide
வித்துவக்கோடு அம்மா!, Vithuvakkodu Amma - ;
நின்னையே வேண்டி, Ninnaiye Vendi - உன்னையே விரும்பி
நீள் செல்வம் வேண்டா தான் தன்னையே, Neel Selvam Venda Than Thannaiye - மிக்க ஸம்பத்தை விரும்பாதவனையே
தான் வேண்டும், Than Vendum - தானாகவே வந்து சேர விரும்புகிற
செல்வம் போல், Selvam Pol - அந்த ஐச்வரியம் போல,
மாயத்தால், Maayathaal - (உன்) மாயையினால் (நீ என்னை உபேக்ஷித்தாயாகிலும்)
அடியேன், Adiyen - உனது அடியவனான நான்
நின்னையே வேண்டி நிற்பன், Ninnaiye Vendi Nirpan - உன்னையே அடைய விரும்பி நிற்பேன்.
697பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 10
வித்துவ கோட்டு அம்மா ! நீ வேண்டாயேயா யிடினும் மற்றாரும் பற்றிலேன் என்று அவனை தாள் நயந்த கொற்ற வேல்  தானை குலசேகரன் சொன்ன நல் தமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே
பதவுரை Show / Hide
நீ வேண்டாயே ஆயிடினும், Nee Vendaaye Aayidinum - நீ (என்னை) உபேக்ஷித்தாயாகிலும்
மற்று ஆரும் பற்றிலேன் என்று, Mattru Aarum Patrilen Endru - வேறு எவரையும் நான் சரணடைய மாட்டேன்’
என்று, Endru - என்று (அத்யவஸாயத்தை வெளியிட்டு)
அவனை தாள் நயந்து, Avanai Thaal Nayandhu - அவ்வெம்பெருமானது திருவடிகளிலேயே ஆசை கொண்டு
கொற்றம் வேல் தானை குலசேகரன் சொன்ன, Kotrham Vel Thaanai Kulashekaran Sonna - வெற்றியைத் தரும் வேலாயுதத்தையும்
நல் தமிழ் பத்தும், Nal Tamil Pathum - நல்ல தமிழ்ப்பாடல்கள் பத்தையும்
வல்லார், Vallaar - ஓத வல்லவர்கள்
நரகம் நண்ணார், Naragam Nannaar - (கொடிய பாவங்கள் செய்திருந்தாலும்) நரகத்திற் சேர மாட்டார்கள்.